சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

29 January 2010

பல்ப் வாங்கலியோ..?

.
சில சமயம் நம்மளை சுத்தி
நடக்கிற விஷயங்கள்
சுவாரசியமா இருக்கும்..
அதையெல்லாம் ரசிக்க பழகணும்..
அது நாம பல்ப் வாங்கினதா இருந்தாலும்..,


பல்ப் : 1
---------
என் நண்பனிடம் நான்...

நான் : " டேய்.. என் ஆட்டோகிராப்
வேணும்னா இப்பவே வாங்கிக்க.,
அப்புறம் நான் பாப்புலர்
ஆன பின்னாடி வருத்தபடாதே..!"

நண்பன் : " அப்படி ஒரு நிலைமை வந்தா..,
நான் தற்கொலை பண்ணிக்குவேன்டா..! "

பல்ப் : 2
----------
பேச்சு போட்டிக்கு என் மகனுக்கு பயிற்சி
கொடுத்த போது..

நான் : " இதுக்கே நீ இப்படி தடுமாறினா..,
அப்புறம் முக்கியமானதை எல்லாம்
எப்படிடா சொல்ல போற..? "

மகன் : " அப்ப முக்கியமானதை எல்லாம்
விட்டுட்டு., இதை எதுக்குப்பா
சொல்லி குடுத்திட்டு இருக்கே..!"

பல்ப் : 3
----------

காலேஜ் படிக்கும் போது நடந்தது..
ஹால் டிக்கெட்டை கையில் வாங்கியவுடன்.,
ஹால் டிக்கெட் நம்பரை கூட்டி பார்த்தேன்..

நான் : " பரீட்சை நல்லா எழுதிடலாம்..!
என் லக்கி நம்பர் " 5" வந்து இருக்கு..! "

நண்பன் : அப்ப பரீட்சை பேப்பர்ல
உன் ஹால் டிக்கெட் நம்பரை மட்டும்
எழுதிட்டு வா., பாஸ் ஆகறியான்னு
பார்க்கலாம்..!
.
.

3 Comments:

Theju said...

பரவாயில்ல.. வாங்கினாலும் எல்லாம் 100 watts bulb தான் வாங்கி இருக்கிங்க‌.

cheena (சீனா) said...

வெங்கட்டு - இப்பிடித்தான் மகன் கிட்டே பல்பு வாங்கணும் - அதான் சூபர் பல்பு

வெங்கட் said...

சீனா சார்..,
நன்றி..,
நான் பல்ப் வாங்கினா
மட்டும் நிறைய பேரு
சந்தோஷப்படறாங்கப்பா..!