சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

31 January 2010

இதுகூட தெரியாதா..?














போன வாரம்
நாற்பதாயிரம் ரூபாய்க்கு
ஒரு செக் எழுதிட்டு இருந்தேன் .


அதுல
" Fourty Thousand "-ன்னு
எழுதி இருந்தேன்.,


இதை பார்த்த என் மனைவி

" Fourty " இல்லீங்க " Forty " .
அதுதான் Correct -ன்னு சொன்னாங்க..

உடனே எனக்கு கண்ணுக்கு மேல
கோபம் வந்துடுச்சி..
( ஏன்., எப்பவும் மூக்குக்கு

மேல தான் கோபம் வரணுமா..? )

" திருவள்ளுவருக்கே திருக்குறளா..? "

நானெல்லாம் பிளஸ் 2 -ல
கணக்குல 84 மார்க் ( 200 க்கு )
எடுத்தவனாக்கும்..!

உடனே என் நண்பனை போன்ல
கேட்டேன்..

நான் எழுதினது சரின்னு சொன்னான்..

Bank -க்கு போனவுடனே மானேஜரை
கேட்டேன்..

நானே இப்படித்தான் எழுதுவேன்னு
சொன்னாரு..


இதையெல்லாம் சொன்னாலும்
என் மனைவி ஒத்துக்கிறதா தெரியலை..

வேற வழியில்லாம
Dictionary -ஐ புரட்டி பார்த்தா..
" Forty "-ன்னு போட்டு இருந்தது..
( அடப்பாவிகளா.., மாத்திடீங்களா.,
சொல்லவேயில்ல...! )

இப்பல்லாம் நான் யாரை பார்த்தாலும்
கேட்கிற முதல் கேள்வி..,
" 40 " - இதை இங்கிலிஷ்ல எப்படி
எழுதுவீங்க..?

என்னை மாதிரி எத்தனை மாங்கா
இருக்குன்னு
தெரிஞ்சிச்கனும்ல..!

நீதி : நிறைய பேர் செய்வதால்
ஒரு விஷயம் சரின்னு ஆயிடாது..
சிகரெட் கூடத்தான் நிறைய பேர்
குடிக்கிறாங்க..
அதுக்காக அது சரியா..?
.
.

3 Comments:

Anonymous said...

kalakureenga poonga

cheena (சீனா) said...

எப்பா வெங்கட் மொக்கை மன்னா - ஃபார்ட்டி தான் சரி ஃபோர்ட்டி தப்புன்னு சண்டை போட்டு டிக்ஷ்னரில மாத்த வச்சதே நாந்தேன் - தெரியுமா

வெங்கட் said...

சீனா சார்..,
அது நீங்க தானா..?
உங்களை தான் தேடிட்டு
இருந்தேன்..