டிஸ்கி : இது " 7-ஆம் அறிவு "
பட விமர்சனம் அல்ல.
போன வாரம் எங்க பையன்
ஸ்கூல்ல Parents Meeting-க்கு
நாங்க போயிருதோம்.
மீட்டிங் முடிஞ்சி வெளியே
வரும்போது அங்கே ஒரு
Long Size Note வெச்சி இருந்தாங்க.
Parents அவங்க Suggestions எழுதவாம்...
சரி நாமளும் அந்த Note-ல
எதாவது எழுதலாமேன்னு போனா..
அங்கே ஒரு 4th Std பொண்ணோட
அப்பா எதோ எழுதிட்டு இருந்தாரு..
சரி. அவர் எழுதட்டும்னு நான்
Wait பண்ணினேன்.
பண்ணினேன்..பண்ணினேன்..
Wait பண்ணிட்டே இருந்தேன்.
5 நிமிஷம் ஆகியும் Note என் கைக்கு
வரலை.... அப்படி என்னதான்டா
எழுதறார்னு லைட்டா எட்டி பாத்தேன்..
அரை பக்கத்துக்கு மேல இங்கிலீஷ்ல
எதோ எழுதிட்டு இருந்தாரு..
( ஓ.. இவரு.. நம்ம ஸ்கூல்ல படிச்சி
இருக்க மாட்டார் போல..!!)
மறுபடியும் Wait பண்ணினேன்..
2 நிமிஷம் ஆச்சு..
இப்ப அவரு முக்கால் பக்கத்தை
தாண்டிட்டாரு..
அப்புறம் என் Wife என்னை
தேடி வரவும்., அவரு Note-ஐ
என்கிட்ட தந்துட்டு போகவும்
சரியா இருந்தது..
" மாலா.. அவரை நல்லா பாத்துக்கோ..! "
" யாருங்க அவரு..? "
" இந்த அப்பாடக்கர்.. அப்பாடக்கர்னு
சொல்றாங்கல்ல.. அந்த ' அப்பா-டக்கர் '
இவர் தான்.."
என் Wife ஓண்ணும் புரியாம முழிக்க..,
அவர் எழுதின Note-ஐ காட்டினேன்..
அதை பாத்துட்டு என் Wife..
" படிச்சவங்களை பாத்தா உங்களுக்கு
ஏங்க இவ்ளோ காண்டு...?! "
" என்னாது படிச்சவங்களா..? அப்ப
நாங்கல்லாம் மாடு மேய்ச்சவங்களா..?
நீ ஒரு MCA Gold Medalist -கிட்ட பேசிட்டு
இருக்க. Mind It..! "
" அந்த Gold Medal., AVR Jewellers-ல
வாங்கினதுன்னு உங்க பாட்டி
என்கிட்ட சொல்லிட்டாங்க..! "
" ஹி., ஹி., சொல்லிட்டாங்களா..? "
( கர்ர்ர்ர்ர்ர்...! )
" சரி., உங்க MCA அறிவை Use
பண்ணி அவர் எழுதின மாதிரி
English-ல எழுதுங்க பார்க்கலாம்..! "
நோட்டை வாங்கி அவர் எழுதின
இங்கிலிபீசை ஒரு தடவை
லுக் விட்டேன்...
" ப்பூ.. இதென்ன பிஸ்கோத்து மேட்டரு..!
இப்புடு சூடூ........"
பேனாவை எடுத்து..,
டக்னு எழுதினேன்...
" REPEATUUUUUUU..! "
.
.
Tweet
31 October 2011
Subscribe to:
Post Comments (Atom)
31 Comments:
அட காலக்கொடுமையே!
//" REPEATUUUUUUU..! "//
சரி சரி அந்த " REPEATUUUUUUU..! "க்கு ஸ்பெல்லிங் உங்க மனைவிதான் சொல்லிதந்தாங்க....
நாமா வாங்குற அஞ்சு பத்துக்கு இது தேவையா?
:-)
நல்ல சமாளிகிறேங்க
Neenga pattukkum repetuuuu-nu
ezhthitteenga.....
Antha all vanthu theruppi
muthalla irunthu
ezhthaporaru.....
Konjam....athai repeted-a
check pannavum.....
@venkat
//"இது விமர்சனம் அல்ல"//
ஆமா, இது விமரிசனம் இல்ல. ஆனா, உங்க இங்கிலீஷ் பத்தி நீங்களே விளக்கி இருக்கீங்க, அதுனால இது சுயவிமரிசனம்
///போன வாரம் எங்க பையன்
ஸ்கூல்ல Parents Meeting-க்கு
நாங்க போயிருதோம்.///
நீங்க உங்க பையன் ஸ்கூல் Parents Meeting’க்கு நீங்கதானே போகனும்..ஏதோ நீங்க காலேஜ் போனமாதிரி இதையெல்லாம் போய் பெருமையா சொல்லிக் கிட்டு.....
///ஓ.. இவரு.. நம்ம ஸ்கூல்ல படிச்சி
இருக்க மாட்டார் போல..!!///
நீங்களும் உங்க ஸ்கூல்ல ”படிக்க”லதானே!!!!
/
" படிச்சவங்களை பாத்தா உங்களுக்கு
ஏங்க இவ்ளோ காண்டு...?! "////
இவருக்கு மட்டுமா காண்டு... இந்த VAS’ஏ இப்படித்தான் இருக்கு....
///" என்னாது படிச்சவங்களா..? அப்ப
நாங்கல்லாம் மாடு மேய்ச்சவங்களா..?///
ச்சீ...ச்சீ... அது நீங்க ஸ்கூல்’ல படிக்கும் போது, உங்க வகுப்பாசிரியர் செஞ்ச வேலை...
@ அருண் பிரசாத் said...
// //" REPEATUUUUUUU..! "//
சரி சரி அந்த " REPEATUUUUUUU..! "க்கு ஸ்பெல்லிங் உங்க மனைவிதான் சொல்லிதந்தாங்க...//
ரிப்பீட்டு....
///"7-ஆம் அறிவு..! ( இது விமர்சனம் அல்ல..! )"///
இந்த தலைப்புக்கும் போஸ்ட்’க்கும் எந்த சம்பந்தமும் இல்லையே!!!
//இந்த அப்பாடக்கர்.. அப்பாடக்கர்னு
சொல்றாங்கல்ல.. அந்த ' அப்பா-டக்கர் '
இவர் தான்.."//
அப்ப.........ஆங்கில அறிவைத்தான் 7 ம் அறிவுன்னு சொல்லுரீங்களா?
@ விக்கியுலகம்.,
// அட காலக்கொடுமையே! //
இதெல்லாம் சும்மா.. டிராமா சார்..!
என்னமோ Parents-கிட்ட Suggestion
கேட்டு தான் அவங்க ஸ்கூல்
நடத்துற மாதிரி...
@ அருண்.,
// அந்த " REPEATUUUUUUU..! "க்கு
ஸ்பெல்லிங் உங்க மனைவிதான்
சொல்லிதந்தாங்க.... //
என்னாது..?!!
எத்தனை " U " போட்டு இருக்கேன்.
கவனிச்சீங்கல்ல.. இந்த ஸ்பெல்லிங்
எங்க ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டில
சொல்லி தந்ததாக்கும்..
@Faaique
//"7-ஆம் அறிவு..! ( இது விமர்சனம் அல்ல..! )"
இந்த தலைப்புக்கும் போஸ்ட்’க்கும் எந்த சம்பந்தமும் இல்லையே!!! //
சம்பந்தம் இருக்குங்க...
Just Few Spelling mistakes...
7 க்கு பக்கத்துல ஒரு 1/2 விட்டுப் போச்சி..
இன் போடறதுக்கு பதிலா ஆம் போட்டுட்டார்..
ஹ்ம்ம்ம்... இவர் பதிவ படிக்கற தோஷத்துக்கு என்ன பரிகாரம்ன்னு எந்த சோசியரும் சொல்ல மாட்டுறாங்களே.. :(
@ வெளங்காதவன்.,
// நாம வாங்குற அஞ்சு பத்துக்கு
இது தேவையா? //
என்ன பண்றது...? எல்லாம்
நம்ம ரசிகர்களின் அன்புக்காக..
பின்ன என்கிட்ட ஆட்டோகிராப்
வாங்கத்தானே அந்த நோட்டே
வெச்சி இருந்தாங்க...!
@ நாய் நக்ஸ்.,
// Neenga pattukkum repetuuuu-nu
ezhthitteenga... Antha all vanthu
theruppi muthalla irunthu ezhthaporaru.. //
இல்ல சார்.. நான் வரும் போது
Check பண்ணிட்டு தான் வந்தேன்.
எனக்கு அப்புறம் வந்த ரெண்டு பேரும்
" :) " தான் போட்டுட்டு போனாங்க..
\\நீ ஒரு MCA Gold Medalist -கிட்ட பேசிட்டு இருக்க//
MCA ன்னா Mental Case Association
தானே தல...
நாங்க oxford காலேஜ்ல அப்படித்தான் சொன்னாங்க...
//இல்ல சார்.. நான் வரும் போது
Check பண்ணிட்டு தான் வந்தேன்.
எனக்கு அப்புறம் வந்த ரெண்டு பேரும்
" :) " தான் போட்டுட்டு போனாங்க..//
உங்க போஸ்டிங் பாத்து யத்தனை நாளைக்குதா அழுவுறது....? எழுத்துலயாவது சிரிக்கட்டுமே அது கூட பொறுக்காம திரும்ம்பி போய் பாத்துட்டு வந்துரிக்கீங்க.....................??????????? யன்னத்த்தை சொல்ல.......
\\நாங்க oxford காலேஜ்ல அப்படித்தான் சொன்னாங்க...\\
நாங்க oxford காலேஜ்ல படிக்கும்போது அப்படித்தான் சொன்னாங்க...
ஹி..ஹி...ஹி
உங்க பதிவுக்கு கருத்துபோடும்போது ஏதாச்சும் காணாம போயிடுது....
@ பெ.சொ.வி.,
// உங்க இங்கிலீஷ் பத்தி நீங்களே
விளக்கி இருக்கீங்க, அதுனால
இது சுயவிமரிசனம் //
Actually.. இந்த பதிவை கூட நான்
இங்கிலீஷ்ல தான் எழுதறதா இருந்தேன்..
ஆனா பாவம் நீங்க அதை படிச்சி
அர்த்தம் சொல்ல ஆளை தேடி
கஷ்டப்படுவீங்களேன்னு தான்
தமிழ்லயே எழுதியிருக்கேன்.!
@ Mohamed.,
// நீங்க உங்க பையன் ஸ்கூல்
Parents Meeting’க்கு நீங்கதானே
போகனும்.. இதையெல்லாம் போய்
பெருமையா சொல்லிக் கிட்டு..... //
அது எல்லா Parents-ம் போறதுதான்..
ஆனா பரிவட்டமும்., முதல் மரியாதையும்
எனக்கு மட்டும் தானே கிடைச்சது..
( ஹி., ஹி.. நான் தான் 1st Row
1st பெஞ்ச்ல உக்காந்து இருந்தேன்.)
போஸ்ட் எழுத ஐடியாவே இல்லேன்னு நெனைச்சேன்..
ஒரே ஒரு லயன்ல இந்தபதிவோட லிங்க கொடுத்துட்டு
ஒரே ஒரு வார்த்த "ரீப்பீட்டு"ன்னு போட்டு பப்ளிஷ் பன்னிடவேண்டியதுதான்..
முக்கிய அறிவிப்பு for VKS & VAS
என்னுடைய புத்தம் புதிய படைப்பு சூடச்சூட சூடாக...
பதிவு நாயகன் வெங்கட் கலக்கும்....
மரக்கல் மன்னன்...கோகுலத்தில் சூரியன்....
http://ponsenthilkumar.blogspot.com/2011/10/blog-post_31.html
@ Mohamed.,
// நீங்களும் உங்க ஸ்கூல்ல
”படிக்க”லதானே!!!! //
நாம தான் அடுத்தநாள் எடுக்கப்போற
பாடத்தை முதல் நாளே வீட்ல
படிச்சிடுவோமே..
அப்புறம் எதுக்கு ஸ்கூல்ல போயி
இன்னொரு தடவை படிக்கணும்..?!!
@ Mohamed.,
// ச்சீ...ச்சீ... அது நீங்க ஸ்கூல்’ல
படிக்கும் போது, உங்க வகுப்பாசிரியர்
செஞ்ச வேலை... //
ஓ.. இவரும்.. நம்ம ஸ்கூல்ல தான்
படிச்சி இருக்கார் போல..!!
:-)
@ ராம்வி.,
// அப்ப......... ஆங்கில அறிவைத்தான்
7 ம் அறிவுன்னு சொல்லுரீங்களா? //
இல்லங்க மேடம்...
அவரு அம்புட்டு கஷ்டப்பட்டு எழுதின
மேட்டரை நான் ஒத்தை வார்த்தையில
எழுதினேன் பாருங்க.. அதை சொன்னேன்.
//வெங்கட் said:
Actually.. இந்த பதிவை கூட நான்
இங்கிலீஷ்ல தான் எழுதறதா இருந்தேன்..
ஆனா பாவம் நீங்க அதை படிச்சி
அர்த்தம் சொல்ல ஆளை தேடி
கஷ்டப்படுவீங்களேன்னு தான்
தமிழ்லயே எழுதியிருக்கேன்.!//
Actually.. இந்த பதிவை மட்டும் இல்ல, இன்டர்நேஷனல் லெவல்ல ரீச் ஆகறதுக்காக அவரோட மொத்த (not மொக்க) ப்ளாக்கையும் ஏற்கனவே அவர் இங்கிலீஷ்ல translate பண்ணி வெச்சிருக்காரு: படித்து பயன் பெறவும்
ஹி ஹி ஹி உங்க அறிவுக்கு நிகர் நீங்களே..
neengalum nammalamathirithanaa...
Post a Comment