சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

19 August 2010

சூப்பர் Captain..!!

















ஒரு அமெரிக்க Navy கப்பல்
கடல்ல போயிட்டிருந்தது..

அந்த கப்பலோட Captain
ரொம்ப புத்திசாலி..

( அதனால தானே அவ்ளோ
பெரிய கப்பலுக்கு Captain-ஆ
போட்டிருக்காங்க.. )

கப்பலோட மேல் தளத்துக்கு
வந்த அவரு பைனாகுலர் எடுத்து
கடலை ஒரு Look விடறாரு..

அப்படியே Shock ஆயிடறார்..

எதிர் திசையில இன்னொரு
கப்பல் வர்ற வெளிச்சம்
தெரியுது..

உடனே அவர் Master Brain
Quick-ஆ Calculation போடுது..

" Oh.. My God...!!
இப்படியே போனா
ரெண்டு கப்பலும் மோதிக்குமே..!! "

உடனே ரேடியோ மைக்கை எடுத்து
எதிர் திசையில இருக்கவங்க கூட
பேச ஆரம்பிக்கறாரு..

" ஹலோ Mike Testing... 1.,2.,3.. "

" ஹலோ..!! இங்கே என்ன
பொதுக்கூட்டமா நடக்குது..?
சொல்ல வந்ததை சொல்லுங்க சார்.."

" ம்ம்.. உங்க Direction-ஐ North பக்கமா
15 Degree Change பண்ணிக்கோங்க..
அப்பதான் மோதலை தவிர்க்க முடியும்..!! "

" முடியாது.., நீங்க உங்க Direction-ஐ
South பக்கமா 15 Degree Change
பண்ணிக்கோங்க.. "

" நீங்க யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்க
தெரியுமா..?!! "

" யாரா இருந்தாலும் இதுதாங்க
பதிலு..!! "

" நான் அமெரிக்க Navy Ship
Captain.., இப்ப சொல்லுங்க..,
உங்களால North பக்கம் 15 Degree
தள்ளி போக முடியுமா..? முடியாதா..?? "

" ஏய்.. லூசாப்பா நீ..?!!
சும்மா தள்ளிப்போ.,
தள்ளிப்போன்னு
சொல்லிட்டே இருக்கே..

நல்லா பாரு..
இது Light House..!! "


டிஸ்கி : 1995-ல U.S Navy Ship .,
Canada கரையோரமா போனப்ப
நடந்த உண்மை சம்பவம் இது..

அமெரிக்காகாரங்க இவ்ளோ
அதி புத்திசாலிகளா..??!!

சொல்லவே இல்ல....!!

( அது என்னமோ தெரியல..
அமெரிக்காகாரங்கள கலாய்ச்சா
மனசுக்கு சந்தோஷமா இருக்கு..!! )

ஹி., ஹி., ஹி..!!
.
.

38 Comments:

அருண் பிரசாத் said...

//அந்த கப்பலோட Captain
ரொம்ப புத்திசாலி..

( அதனால தானே அவ்ளோ
பெரிய கப்பலுக்கு Captain-ஆ
போட்டிருக்காங்க..//

அப்படியா... இங்க பலர் தன்னைதானே Captainனு சொல்லிகறாங்களே? அவங்களும் புத்திசாலியா!

Anonymous said...

//அமெரிக்காகாரங்க இவ்ளோ
அதி புத்திசாலிகளா..??!!//
என்ன இருந்தாலும் உங்க அளவுக்கு வரமுடியுமா அவங்க? :)

Chitra said...

அமெரிக்காகாரங்க இவ்ளோ
அதி புத்திசாலிகளா..??!!

சொல்லவே இல்ல....!!


..... அதை என்கிட்டே சொல்லி, உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க..... நான் நேத்து நேரம் சரியில்லை, இன்னைக்கு சொல்லலாம் என்று இருந்தேன், அதுக்குள்ளே நீங்களே கண்டுபிடிச்சிட்டீங்க......புத்திசாலி வெங்கட்!

வெங்கட் said...

இது தான் அந்த Actual radio conversation
between a US naval ship and Canadian authorities
off the coast of Newfoundland in October 1995.

The Radio conversation was released
by the Chief of Naval Operations on Oct. 10, 1995.

- Please change your direction 15 degrees
to the North to avoid a collision.

- Recommend you divert YOUR course 15 degrees
to South to avoid a collision.

- This is the Captain of a US Navy ship.
I say again, divert YOUR course.

- No. I say again, you divert YOUR course.

- THIS IS THE AIRCRAFT CARRIER ENTERPRISE,
WE ARE A LARGE WARSHIP OF THE US NAVY.
DIVERT YOUR COURSE NOW!

- This is a lighthouse. Your call.

என்னது நானு யாரா? said...

தலைவரே! சொல்லவே இல்ல! நீங்க எப்போ கனாடா நாட்டு Light Houseல வேலைக்கு சேர்ந்தீங்க?

ஜில்தண்ணி said...

ஹலோ உங்ககிட்ட எதாவது புத்தகம் இருக்கா,எங்கேர்ந்து புடிக்கிறீங்க இதெல்லாம் :)

லைட் ஹவுசாஆ செம காமெடி :)

Madhavan Srinivasagopalan said...

அமெரிக்க காப்டன் அதி புத்திசாலிதான்.. அது 'லைட்'-ஹவுஸ்தானே.. (ஸ்)'லைட்டா' இடிச்சா ஒன்னும் ஆகாதுன்னு நெனைச்சிருப்பாரு..

//Chitra ..... அதை என்கிட்டே சொல்லி, உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க..... நான் நேத்து நேரம் சரியில்லை, இன்னைக்கு சொல்லலாம் என்று இருந்தேன், அதுக்குள்ளே நீங்களே கண்டுபிடிச்சிட்டீங்க..//

VKSல செர்ந்துட்டாமாதிரி இருக்குது ?

செல்வா said...

//அது என்னமோ தெரியல..
அமெரிக்காகாரங்கள கலாய்ச்சா
மனசுக்கு சந்தோஷமா இருக்கு..!!///
எனக்கு VKS காரங்களா கலாய்க்கணும் போல இருக்கு ..!!

கருடன் said...

//" நான் தான் அமெரிக்க Navy Ship
Captain.., இப்ப சொல்லுங்க
உங்க Direction-ஐ North பக்கமா
15 Degree Change பண்ண
முடியுமா முடியாதா..?? "//

ஹ ஹ ஹ.... இப்போ VKSல இவரையும் சேர்த்து ஆறு மெம்பர்ஸ்...

Mohamed Faaique said...

"ஒரு அமெரிக்க Navy கப்பல்
கடல்ல போயிட்டிருந்தது."

மத்ததெல்லாம் என்ன? road 'லையா போய்கிட்டிருந்தது... என்ன தல சறுக்கிட்டீங்க?

அருண் பிரசாத் said...

//அந்த கப்பலோட Captain
ரொம்ப புத்திசாலி..//

உங்கள மாதிரியே!

//அதனால தானே அவ்ளோ
பெரிய கப்பலுக்கு Captain-ஆ
போட்டிருக்காங்க..//

அதனால தானே நீங்களே உங்களை ஆதரிக்கும் சங்கத்துக்கு தலைவரா இருக்கீங்க

வெங்கட் said...

@ அருண்.,

// இங்க பலர் தன்னைதானே
Captainனு சொல்லிகறாங்களே..?
அவங்களும் புத்திசாலியா..? //

நீங்க யாரை சொல்றீங்க..?!
நம்ம Cricket Team கேப்டனையா..?
VKS Team கேப்டனையா..?

சந்தேகமேயில்லாம
அதுல ஒருத்தர் புத்திசாலி..!!

வெங்கட் said...

@ பாலாஜி.,

//அமெரிக்காகாரங்க இவ்ளோ
அதி புத்திசாலிகளா..??!! //

// என்ன இருந்தாலும் உங்க அளவுக்கு
வரமுடியுமா அவங்க? //

ஹி., ஹி., ஹி..!!
நீங்க என்னை ரொம்பதான் புகழ்றீங்க..

வெங்கட் said...

@ என்னது நானு யாரா..,

// நீங்க எப்போ கனாடா நாட்டு
Light House-ல வேலைக்கு சேர்ந்தீங்க? //

என்னாது வேலைக்கு சேர்றதா..?!!

நமக்கு சொந்தமா அங்கிட்டு
நாலு Light House இருக்குப்பா..

வெங்கட் said...

@ ஜில்தண்ணி.,

// உங்ககிட்ட எதாவது புத்தகம் இருக்கா,
எங்கேர்ந்து புடிக்கிறீங்க இதெல்லாம் //

ஆஹா.., அதை சொல்லிபுட்டா
அப்புறம் நான் எதை வெச்சி
Blog எழுதறதாம்..?!!

இந்த மேட்டர் நெட்ல பார்த்தேன்.

வெங்கட் said...

@ மாதவன்.,

// அது 'லைட்'-ஹவுஸ்தானே..
(ஸ்)'லைட்டா' இடிச்சா ஒன்னும்
ஆகாதுன்னு நெனைச்சிருப்பாரு.. //

இருக்கும்., இருக்கும்..

அப்படியே இடிச்சி இருந்தா
Petrol Tank பக்கத்தில
லைட்டா Fire வந்திருக்கும்..
அவ்ளோதானேனு நினைச்சிப்பாரு..

வெங்கட் said...

@ செல்வா.,

// எனக்கு VKS காரங்களா கலாய்க்கணும்
போல இருக்கு..!! //

ஹி., ஹி., ஹி..
அதுல தான் இப்ப 4 பேர்
ஊரைவிட்டே ஓடிட்டாங்களே..
இப்ப என்ன பண்ணுவீங்க..??!!

வெங்கட் said...

@ டெரர்.,

// ஹ ஹ ஹ.... இப்போ VKSல
இவரையும் சேர்த்து ஆறு மெம்பர்ஸ்... //

இல்ல.. இப்பவும் அஞ்சு பேர்தான்..
அந்த கேப்டன் வேற யாருமில்ல.,

" அமெரிக்க கப்பல் ஓட்டிய தமிழன் "
நம்ம அருண்பிரசாத்.

வெங்கட் said...

@ Mohamed.,

// மத்ததெல்லாம் என்ன.?
road 'லையா போய்கிட்டிருந்தது... //

ஆஹா.. எவ்ளோ ஜாக்ரதையா.,
Perfrect-ஆ போட்டாலும்
Over-க்கு ஒரு Ball மாட்டிகுதே..

Sixer அடிச்சிபுடறாங்களே..!!

செல்வா said...

///அதனால தானே நீங்களே உங்களை ஆதரிக்கும் சங்கத்துக்கு தலைவரா இருக்கீங்க
///
இங்கே உங்க லாஜிக் மிஸ் ஆகுதே ..? அவர ஆதரிக்கும் சங்கத்துக்கு அவருதானே தலைவரா இருந்தாகணும். இப்பத்தான் எனக்குத் தெரியுது ..? அந்தக் கப்பல ஓட்டின தமிழன் யாருன்னு ..?

R.Santhosh said...

எங்கிருந்துயா கிளம்பி வரீங்க

சேலம் தேவா said...

கப்பலை ஓட்டாம இப்படி பேசிட்ருந்தா அது ஏன் போய் இடிக்காது?

Unknown said...

என்ன இருந்தாலும் உங்க அளவுக்கு வரமுடியுமா அவங்க? :)

hilo avanga vera evanga vera..

no comparition..""ok.

eppadiku VAS new member..
varungala
valai ulaga
mudalvar siva

ethukuthan cholrathu..

kannadi potukitu pinakular pakanumnu..

அருண் பிரசாத் said...

@ செல்வா
//இங்கே உங்க லாஜிக் மிஸ் ஆகுதே ..? அவர ஆதரிக்கும் சங்கத்துக்கு அவருதானே தலைவரா இருந்தாகணும்//

திமுக னா கலைஞர் தலைவர், அம்மா பேரவைனா “அம்மா” தலைவரா இருக்க கூடாது. வேறயாராவது தான் இருக்கனு. அதுதான் லாஜிக்

அருண் பிரசாத் said...

@ வெங்கட்
//நீங்க யாரை சொல்றீங்க..?!
நம்ம Cricket Team கேப்டனையா..?
VKS Team கேப்டனையா..?//

உங்களுக்கு பொது அறிவு பத்தாது. கேப்டன்னா Stats சொல்லி டயலாக் பேசுறது, எல்லா படத்தலையும் போலிஸ்சா வர்றது, இப்ப கட்சிகூட ஆரம்பிச்சாரே அவருதான்

நான் அவரி காட்டி குடுக்க மாட்டேன்பா

அருண் பிரசாத் said...

//" அமெரிக்க கப்பல் ஓட்டிய தமிழன் "
நம்ம அருண்பிரசாத்.//

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்,
மொரிசியஸ் கப்பல் ஓட்டிய தமிழன்னு சொல்லுங்க.

எக்ஸ்கியூஸ்மி, கப்பல் ஓட்ட லைசன்ஸ் வேணுமா?

VELU.G said...

கலக்கல் கதைங்க

க.பாலாசி said...

மெய்யாலுமே சூப்பர் கேப்டன்தான் போலருக்கு... அப்டியே நம்ம கேப்டன் வாய்ஸ்ல படிச்சா சரி எபக்ட்...

என்னது நானு யாரா? said...

தல! அதெல்லாம் போகட்டும்! நீங்க எப்போ நம்ப கப்பலுக்கு வரபோறீங்க? ரொம்ப Interestingஆன விஷயம் ஒன்னு போட்டிருக்கோமில. இன்னிக்கு நல்ல நாள்ன்னு, மேலூர் குறிகாரன் சொன்னானே.

நல்ல நாளும் கிடைச்சிடுச்சு! அப்புறம் என்ன ரோசனை. கிளம்பி வா தல!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எனக்கு VKS காரங்களா கலாய்க்கணும் போல இருக்கு ..!!///

அடுத்தவங்களை சந்தோசமா வச்சிருக்கிறதுதான் VKS சோட வேலை.

பெசொவி said...

// அருண் பிரசாத் said...

//" அமெரிக்க கப்பல் ஓட்டிய தமிழன் "
நம்ம அருண்பிரசாத்.//

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்,
மொரிசியஸ் கப்பல் ஓட்டிய தமிழன்னு சொல்லுங்க.

எக்ஸ்கியூஸ்மி, கப்பல் ஓட்ட லைசன்ஸ் வேணுமா?//

நிச்சயம் வேணும் அருண். In fact வெங்கட்டை ஒட்டவே VKS கிட்டேயிருந்து லைசென்ஸ் வேணும்

Prabu said...

//அது என்னமோ தெரியல..
அமெரிக்காகாரங்கள கலாய்ச்சா
மனசுக்கு சந்தோஷமா இருக்கு..!!//

பாத்து... Flag Counter-ல இந்தியாவுக்கு அடுத்து அவுங்க தான் இருக்காங்க...

SANTHOSH said...

// Prabu said...
//அது என்னமோ தெரியல..
அமெரிக்காகாரங்கள கலாய்ச்சா
மனசுக்கு சந்தோஷமா இருக்கு..!!//

பாத்து... Flag Counter-ல இந்தியாவுக்கு அடுத்து அவுங்க தான் இருக்காங்க//


எப்ப என்னமா கவனிக்கிறாங்க ப்ளாக்ல ஒரு இன்ச் கூட விடாம அலசுராங்கப்பா

GSV said...

எப்ப எல்லா என்னக்கு அப்பு அடிக்கிற மீட்டிங் வைகிரன்களோ அப்பலாம் "வெங்கட்" மற்றும் இந்த ரொம்ப நல்லவன் ப்ளாக் படிக்கிற பழக்கத்தை வைத்துள்ளேன்....எல்லாரும் ட்ரை பண்ணுங்க... ரிசுல்டும் சொல்லுங்க... நான் பீல் பண்ணுறத நீங்களும் பண்ணுவீங்கநு நீனைகிறேன்....அந்த ஆந்தமே தனி .. இப்போதைக்கு "vks" சை வெளிலேந்து அதரவு தெரிவிக்க ரெடி.

dheva said...

Intersting...information ...!

ha ha hahah..!

வெங்கட் said...

@ அருண்.,

// திமுக னா கலைஞர் தலைவர்,
அம்மா பேரவைனா “அம்மா” தலைவரா
இருக்க கூடாது. வேறயாராவது தான்
இருக்கனு. அதுதான் லாஜிக் //

என்ன பெரிய லாஜிக்..??!!

கலைஞர், அம்மா.. இவங்கதான்
எதுக்கெடுத்தாலும் அளவு கோலா..??

எங்க வழி தனி வழி..!!

// எக்ஸ்கியூஸ்மி, கப்பல் ஓட்ட
லைசன்ஸ் வேணுமா? //

உங்களுக்கு வேணாம்.,

காகிதத்துல கப்பல் செஞ்சி
மழைதண்ணீல ஓட்ட போறீங்க..

இதுக்கு எதுக்கு லைசென்ஸ்..??!!

Santhosh said...

// // எக்ஸ்கியூஸ்மி, கப்பல் ஓட்ட
லைசன்ஸ் வேணுமா? //

உங்களுக்கு வேணாம்.,

காகிதத்துல கப்பல் செஞ்சி
மழைதண்ணீல ஓட்ட போறீங்க..

இதுக்கு எதுக்கு லைசென்ஸ்..??!! //


போற போக்க பாத அருண் பிரசாத்தை கலாய்ப்போர்னு ஒன்னு, ஆதரிப்போர்னு ஒன்னு வரும்போல இருக்கு....
ஏதாவது ஒரு சங்கத்துல என்னையும் சேத்துகங்கப்பா... சீட்டுக்கு எவ்ளோ செலவானாலும் பரவால்ல....

அருண் பிரசாத் said...

@ santhosh

//போற போக்க பாத அருண் பிரசாத்தை கலாய்ப்போர்னு ஒன்னு, ஆதரிப்போர்னு ஒன்னு வரும்போல இருக்கு...//
AKS ன்னு ஒன்னு வந்தா அதுக்கு நாந்தான் தலைவர். என்னா நம்ம வாய் அப்படி கலாய்ச்சிதான் பழக்கம், ஆதரிச்சி இல்லை