சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

10 August 2010

ஜாவா...!!!

























டிஸ்கி : இது ஜாவா பத்தின Technical
பதிவு அல்ல.. காரணம்..??

1.இது Indli-ல நகைச்சுவை Categary-ல
தான் இணைக்கப்பட்டு இருக்கு..

2. தலைப்பை நல்லா பாருங்க
" ஜாவா..!!! " ( 3 ஆச்சரியக்குறி )

-----------------------------------------

அது எனக்கு MCA-ல கடைசி செமஸ்டர்..
இன்னும் ஒரே ஒரு Project மட்டும் தான்
பாக்கி..

Project Duration 5 மாசம்..

MCA-ல என்னோட Overall Percentage 80%
வரணும்னா...  அந்த Project-ல
நான் Centum அடிச்சே ஆகணும்..

அதுக்கு என்ன பண்ணனும்..?

சிங்கம் ( நான் தான் ) ஒரு Master Plan
போட்டது..

அது Java வந்த புதுசு..

அப்ப எங்க Class-ல யாருக்குமே
Java தெரியாது..

Step 1 : Java கத்துகறது..
( C++ தெரியும்கறதால அது
நமக்கு Easy-ஆ இருக்கும்.. )

Step 2 : Java-லயே Project பண்றது..

இது தான் அந்த Master Plan.

இதை நம்பி நாங்க 4 பேர்
சென்னைக்கு போயி Java Course
சேர்ந்தோம்..

4 மாசத்திலயே நாங்க நல்லா
தெரிஞ்சிக்கிட்டோம்..

Java கத்துக்கறதே கஷ்டம்..
அதுல Project பண்றது
கஷ்டமோ கஷ்டம்னு..

Project Submit பண்ண சொல்லி
College-ல இருந்து Letter வேற
வந்துடுச்சி..

இது ஆகற வேலை இல்ல..,
வேற எதாவது ரூட் இருக்கான்னு
தேடினோம்..

வேற ஒரு Computer Centre-ல
4000 ரூபாய்க்கு Java Project
தர்றதா ஒரு ரகசிய நியூஸ்..

என் Friends மனசு மாறிட்டாங்க..
நான்தான் ஒத்துக்கல..

4000 ரூபா குடுத்து ஒரு Dummy Project-ஐ
வாங்கிட்டு போனா.., இந்த உலகம்
நம்மள பத்தி என்ன நினைக்கும்..??

முடியவே முடியாது..

3000 ரூபாய்க்கு பேசிப் பார்க்கலாம்னு
சொல்லிட்டேன்..

அடுத்த நாள்..

3000 ரூபா Deal ஓ.கே..

அவங்க ஆளுக்கு ஒரு Project
Floppy-யும்.,

"சாமி சத்தியமா இந்த Project-ஐ
இவன் தான் பண்ணினான்னு..! "
ஒரு Certificate-ம் குடுத்தாங்க..

சந்தோஷமா ஊருக்கு வந்தாச்சு..

Print Out எடுக்கலாம்னு Floppy-ஐ போட்டா...

என்னோட Floppy மட்டும் புஸ்...

என் வளர்ச்சியை தடுக்க
மறுபடியும் ஒரு தடைகல்..

( தொடரும்...)

2nd Part " ஜாவா++ " படிக்க க்ளிக்..
.
.

52 Comments:

சேலம் தேவா said...

"என் Friends மனசு மாறிட்டாங்க..
நான்தான் ஒத்துக்கல..

4000 ரூபா குடுத்து
ஒரு Dummy Project-ஐ
வாங்கிட்டு போனா..,
இந்த உலகம் நம்மள
பத்தி என்ன நினைக்கும்..??

முடியவே முடியாது.."

நாங்க கூட ஒரு நிமிஷத்துல நீங்க ரொம்ப நல்லவரோன்னு நெனச்சிட்டோம்!!!ஆனா,அப்டியெல்லாம் தப்பா நெனக்காதீங்கன்னு காட்டிட்டீங்க!!
VKS காரங்க வறுத்தெடுப்பாங்க!!

Unknown said...

தடைக்கல்ல படிக்கல்லா மாற்றிட்டேனு அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க

சேலம் தேவா said...

பட்!!உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!!

Deepa said...

//4000 ரூபா குடுத்து
ஒரு Dummy Project-ஐ
வாங்கிட்டு போனா..,
இந்த உலகம் நம்மள
பத்தி என்ன நினைக்கும்..??

முடியவே முடியாது..

3000 ரூபாய்க்கு பேசிப் பார்க்கலாம்னு
சொல்லிட்டேன்..
// LOL!!

ரசிகன் said...

கட்டுக்கோப்பான கட்டமைப்பும்,
கடமை தவறாத தலைமையும்,
சமீபத்துலதான் உருவாச்சுன்னாலும்,
VKS காலம் காலமா,
இருந்துகிட்டுதான் இருந்திருக்கு..
அந்த computer center
தோழர்களோட mail id குடுங்க ..
Blog link forward பண்ணலாம்..
அது சரி..
(AB) 'C'ம் '+'(-*)ம்
ஒண்ணாப்பு teacher
கத்து தர்றப்ப நீங்க,
ஐஸ் ஃப்ரூர் சாப்பிட‌
எஸ் ஆகிட்டதா
ஜகன் சொன்னாரே...
அப்புறம் எப்போ கத்துகிட்டீங்க..???

Anonymous said...

// 4 மாசத்திலயே நாங்க
நல்லா தெரிஞ்சிக்கிட்டோம்..
Java கத்துக்கறதே கஷ்டம்..
அதுல Project பண்றது
கஷ்டமோ கஷ்டம்னு..//

கஷ்டம்கிரதையே தெரிஞ்சுக்க 4 மாசம்.. ம்
கிரேட் வெங்கட் நீங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என்னோட Floppy மட்டும் புஸ்...//

டெரர் கிட்ட ஐடியா கேட்டா தல Floppy-யா xerox எடுத்து வச்சிருந்திருக்கலாம்ல அப்டின்னு சொல்லிருப்பாரே!!!

செல்வா said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//என்னோட Floppy மட்டும் புஸ்...//

டெரர் கிட்ட ஐடியா கேட்டா தல Floppy-யா xerox எடுத்து வச்சிருந்திருக்கலாம்ல அப்டின்னு சொல்லிருப்பாரே!!!

///
இந்த மாதிரி மொக்க ஐடியா சொல்றதுக்கு நாங்க ஒண்ணும் VKS கிடையாது ..!!

பெசொவி said...

//MCA, JAVA, C++, Computer....//

தொரை இங்க்லீஸ்லாம் பேசுது...............!

//Print Out எடுக்கலாம்னு
Floppy-ஐ போட்டா...

என்னோட Floppy மட்டும்
புஸ்...//

நீங்க பேரம் பேசி ப்ராஜெக்ட் ரேட்டைக் கொறைச்சா மாதிரி அவங்களும் floppy-யை ரேட் கொறைச்சு வாங்கியிருப்பாங்களோ!அதான் புட்டுகிச்சோ!

//கே.ஆர்.பி.செந்தில் said...

தடைக்கல்ல படிக்கல்லா மாற்றிட்டேனு அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க//

ஹி....ஹி.....எங்காளு அப்டீலாம் கிடையாது.
தடைக் கல்லை எடைக் கல்லாக்கி கடையில விக்க முடியுமான்னுதான் பாத்திருப்பாரு!

Madhavan Srinivasagopalan said...

//Java கத்துக்கறதே கஷ்டம்..
அதுல Project பண்றது
கஷ்டமோ கஷ்டம்னு..//

பேசாம, 'JAVA' கத்துக்குறதே 'A BIG POJECT'ன்னு 'GO' ரிலீஸ் பண்ணிடலாமா ?

அருண் பிரசாத் said...

//இந்த மாதிரி மொக்க ஐடியா சொல்றதுக்கு நாங்க ஒண்ணும் VKS கிடையாது ..!! //

விடுங்க ரமெஷ், கார்பன் பேப்பர் வெச்சி எழுதறவுங்களுக்கு Floppy, Xerox னு புதுசு புதுசா சொன்னா இப்படிதான் சமாளிப்பாங்க

அருண் பிரசாத் said...

//1.இது Indli-ல நகைச்சுவை Categary-ல
தான் இணைக்கப்பட்டு இருக்கு..

2. தலைப்பை நல்லா பாருங்க
" ஜாவா..!!! " ( 3 ஆச்சரியக்குறி )//

சரி,
1. எங்கே நகைச்சுவை? பதிவுல அப்படி ஒண்ணுமே தெரியலையே!
2. !!! - 3 ஆச்சரியக்குறி போட்டா டெக்னிக்கல் பதிவுல சேர்க்க மாட்டங்களா?

கருடன் said...

@வெங்கட்
//சிங்கம் ( நான் தான் )//

நீங்க வேற சிங்கம் வேறைய? இத எதுக்கு பிராக்கெட் போட்டு சொல்றிங்க... ஒஒஒ.... புரிஞ்சிடுத்து அந்த 5
பேருக்கு புரியாது இல்ல...

//ஒரு Master Plan போட்டது..//

அட plan அப்படின்னு சொன்ன போதும்.... ஏன்ன நீங்க நினச்சாலும் உங்களால சாதாரண பிளான் போடா முடியாது... Master Plan மட்டும்தான் உங்க மைண்ட்ல வரும்... (இதும் அந்த 5 பேருக்காக)

கருடன் said...

@வெங்கட்
//என்னோட Floppy மட்டும்
புஸ்...//

அப்பவே VKS சதி அரம்பிச்சிடுத்தா??

கருடன் said...

சேலம் தேவா said...
//VKS காரங்க வறுத்தெடுப்பாங்க!!//

அட நீங்க வேற சார் அவங்களும்தான் ரொம்ப நாளா முயற்சி பண்றாங்க.... எதாவது நல்ல யோசனை இருந்த அவங்களுக்கு சொல்லி கொடுங்க...

Mamathi said...

thala super thala asathunga

சிநேகிதன் அக்பர் said...

என்னா ஒரு நேர்மை :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//விடுங்க ரமெஷ், கார்பன் பேப்பர் வெச்சி எழுதறவுங்களுக்கு Floppy, Xerox னு புதுசு புதுசா சொன்னா இப்படிதான் சமாளிப்பாங்க //

ஆமா அருண். இந்த டெரர் பையனுக்கு கார்பன் காப்பின்னா என்னனு கூட தெரியாது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அட plan அப்படின்னு சொன்ன போதும்.... ஏன்ன நீங்க நினச்சாலும் உங்களால சாதாரண பிளான் போடா முடியாது... Master Plan மட்டும்தான் உங்க மைண்ட்ல வரும்... (இதும் அந்த 5 பேருக்காக)//

ஆமா ஹோட்டல்ல Master-ரா இருந்தவர் பிளான் போட்டா அது Master plan ஆயிடுமா?

அனு said...

//அது எனக்கு MCA-ல கடைசி செமஸ்டர்..//

எத்தனையாவது கடைசி செமஸ்டர்??

//சிங்கம் ( நான் தான் )
ஒரு Master Plan போட்டது..//

இதுல ஒரு எழுத்து மிஸ் ஆகி இருக்குறத பத்தி நான் ஒன்னுமே சொல்ல மாட்டேன்...

//அவங்க ஆளுக்கு ஒரு
Floppy-யும்.,//

Floppy-யா??? அப்படின்னா என்ன தாத்தா???

அனு said...

'தமிழில் ஜாவா'-ன்னு எனக்கு வந்த மெயில்...
-------------------------------

பொது வகுப்பு கூடிகும்மிஅடிப்பு
{
பொதுவான நிரந்திரமான ஒன்னுமில்லாத முக்கியமான (கம்பி வாக்குவாதங்கள்[])
{
மிதத்தல் அ;
கம்பி ஆ;
ஒருவேளை(அ==0)
{
ஆ="முட்டை";
}
இல்லாங்காட்டி
{
ஆ="முட்டையில்லை";
}
திரும்பிப்போ;
}
}

-------------------------------
அப்படியே காப்பி பண்ணி போட்டிருக்கேன்.. எனக்கு தெரிஞ்சே இதுல ரெண்டு மிஸ்டேக் இருக்கு.. கண்டுபிடிங்க பார்க்கலாம் :)
----------------------------------
புரியாதவங்களுக்கு:
public class kummi
{
public static void main(String args[])
{
float a,
String b,
if(a==0)
{
b="zero";
}
else
{
b="not zero"
}
return;
}
}

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// VKS காரங்க வறுத்தெடுப்பாங்க.!! //

வறுத்தெடுக்க நாங்க என்ன
முந்திரியா..??!!

" பிஸ்தாலே.."
பிச்சிபுடுவோம் பிச்சி...!!

வெங்கட் said...

@ KRP.,

// தடைக்கல்ல படிக்கல்லா மாற்றிட்டேனு
அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க //

ஹி., ஹி., ஹி..!!

என் அடுத்த பதிவோட
முதல் ரெண்டு Lines இதுதான்...

கருடன் said...

@ரமேஷ்
//ஆமா அருண். இந்த டெரர் பையனுக்கு கார்பன் காப்பின்னா என்னனு கூட தெரியாது... //

ஹலோ... Carbon ஒரு வாயு.. அதா வச்சி எப்படி காப்பி போடா முடியும்?? வேனும்ன ப்ரு காப்பி சொல்லுங்க வாங்கி தரோம்... நாங்க 8th Std பாஸ்...ஏமாத்த முடியாது...

கருடன் said...

@ரமேஷ்
//ஆமா ஹோட்டல்ல Master-ரா இருந்தவர் பிளான் போட்டா அது Master plan ஆயிடுமா?//

எலேய் 12 ருபாய் கொடுத்து மோர் குடிச்ச இப்படிதான் எப்பவும் ஹோட்டல் ஞாபகம் வரும்... இந்த லைன் படி... அடுத்த நாள் 3000 ரூபா Deal ஓ.கே.. அப்பவே எங்க தல பொருளாதார மேதை...

வெங்கட் said...

@ ரசிகன்.,

// (AB) 'C'ம் '+'(-*)ம் ஒண்ணாப்பு teacher
கத்து தர்றப்ப நீங்க, ஐஸ் ஃப்ரூர் சாப்பிட‌
எஸ் ஆகிட்டதா ஜகன் சொன்னாரே... //

ஆமா.. உண்மைதான்..
Actually அப்ப என்ன நடந்ததுன்னா...

மிஸ் : A, B, C..... " + " " - "

நான் : மிஸ்.., நான் இதெல்லாம்
Pre KG-லயே கத்துகிட்டேன்..

மிஸ் : சமத்து...உன்னை மாதிரியே
எல்லோரும் இருந்துட்டா நல்லா இருக்கும்.
இந்த ஜகன் பையனுக்கு எத்தனை தடவை
சொல்லி குடுத்தாலும் புரிய மாட்டேங்குதே...

நான் : அதுக்கு நான் என்ன மிஸ் பண்றது..?

மிஸ் : சரி., சரி.. இந்தா காசு..,
நீ வெளியே போயி ஐஸ் ஃப்ரூர் சாப்பிடு..

வெங்கட் said...

@ பாலாஜி.,

// கஷ்டம்கிரதையே தெரிஞ்சுக்க 4 மாசம்..
ம் கிரேட் வெங்கட் நீங்க... //

முயற்சி பண்ணாம.,
முடியலைன்னு சொல்ல கூடாதுல்ல..

அதான் 4 மாசம் முயற்சி பண்ணினோம்..
அப்புறம் முடியலைன்னு ஒத்துக்கிட்டோம்..

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// ஹி....ஹி.....எங்காளு அப்டீலாம் கிடையாது.
தடைக் கல்லை எடைக் கல்லாக்கி கடையில
விக்க முடியுமான்னுதான் பாத்திருப்பாரு.! //

நீங்களும் ரொம்ப நாளா
VKS தலைவர் பதவி வேணும்னு
கேட்டுட்டு இருக்கீங்க..

அதுக்காக எனக்கு ஐஸ் வெச்சி
புகழ்ந்து., புகழ்ந்து எல்லாம்
எழுதியிருக்கீங்க...!!

உங்க கோரிக்கை சீக்கிரமே
பரிசீலிக்கப்படும்..

Prabu said...

//எனக்கு தெரிஞ்சே இதுல ரெண்டு மிஸ்டேக் இருக்கு.. கண்டுபிடிங்க பார்க்கலாம் :)//

//if(a==0)//

1. a க்கு value assign பண்ணாமலேயே check பண்றது.. அதுவும் முழுஎண்
//public static void main(String args[])
....
....
return;
//
2. void type-னு சொல்லிட்டு return statement கொடுத்து இருக்கிறது.

சரிதானா?

இத தவிர னு பாத்தா இன்னும் நிறைய இருக்கு
(உதா:
//
...
float a,
String b,
//
comma - wrong
semicolon - needed)
..........
..........

அ.முத்து பிரகாஷ் said...

பிரபு சார் ..
எங்கே எப்போ வெச்சுக்கலாமுன்னு சொல்லுங்க ...
டியுஷனை சொன்னேன் ...

வெங்கட் said...

@ மாதவன்.,

// 'JAVA' கத்துக்குறதே 'A BIG PROJECT'ன்னு
'GO' ரிலீஸ் பண்ணிடலாமா ? //

அப்படி பார்த்தா நாங்க அதையும்
ஒழுங்கா பண்ணலையே..
JAVA கத்துகிட்டதும் அரைகுறை..

வெங்கட் said...

@ அருண்.,

// 1.எங்கே நகைச்சுவை.? பதிவுல அப்படி
ஒண்ணுமே தெரியலையே.! //

பதிவை படிச்சிட்டு சிரிப்பு வரலைன்னா....,
மறுபடியும் ஒருதடவை சிரிச்சிட்டே
படிச்சி பாருங்க..!!

// 2. !!! - 3 ஆச்சரியக்குறி போட்டா
டெக்னிக்கல் பதிவுல சேர்க்க மாட்டங்களா? //

ஆச்சரியமா இருக்கே.. அப்ப வெறும்
!!! - 3 ஆச்சரியக்குறி போட்டா கூட
டெக்னிக்கல் பதிவுல சேர்த்துப்பாங்களா..??

வெங்கட் said...

@ டெரர்.,

// அப்பவே VKS சதி அரம்பிச்சிடுத்தா?? //

But ஒண்ணுகூட Success
ஆகலையே...

ஹா., ஹா., ஹா ( வில்லன் சிரிப்பு )

VKS.., Better Luck Next Time..

வெங்கட் said...

@ அனு.,

// அப்படியே காப்பி பண்ணி போட்டிருக்கேன்.. //

பின்ன நீங்க சொந்தமா எழுதினேன்னு
ரீல் விட்டா யாரு நம்புவா..??!!

// எனக்கு தெரிஞ்சே இதுல ரெண்டு மிஸ்டேக்
இருக்கு.. கண்டுபிடிங்க பார்க்கலாம் :) //

என்ன ரெண்டு மிஸ்டேக் இருக்கா..??
எட்றா நம்ம Record Note-ஐ...

ஆமா இன்னிக்கு என்ன கிழமை..??
அட., புதன்கிழமையா...?!!

புதன்கிழமைல JAVA-ல தப்பு
கண்டுபிடிக்க கூடாது..
அது சாமி குத்தமாயிடும்னு
எங்க குருநாதர் சொல்லி இருக்காரே..!!

உங்களை Next Meet பண்றேன்..

ரசிகன் said...

@அனு
1. மாறிகள் துவங்கப்படவில்லை..
Variables not initialized

2. தேவையான நூலகங்கள் இணைக்கப்படவில்லை...

தல கேட்டு சொல்லாம இருக்க கூடாதுல்ல..
அதனால, என் கண்ணுல பட்ட 2 சொன்னேன்..
எப்படியோ.. நமக்கு javaல
கேள்வி கேட்கவும் தெரியும்,
பதில் சொல்லவும் தெரியும்னு,
எல்லாருக்கும் புரிய வச்சிடீங்க..
என்னே உங்க ராஜ தந்திரம்....

வெங்கட் said...

@ பிரபு & ரசிகன்..,

என்னலே நடக்குது இங்கே..??!!

ஆளாளுக்கு JAVA Class
எடுத்திட்டு இருக்கீங்க..!!?

என் Blog Image போயிடும்
போல இருக்கே..!!

வெங்கட் said...

@ ரசிகன்..,

// என்னே உங்க ராஜ தந்திரம்.... //

ம்ம்.. ஏன் நிறுத்தீங்க....

கூப்பிட்டு " பாரத ரத்னா " அவார்டு
குடுக்கறது..?

ஜில்தண்ணி said...

அட இதுவும் பில் கேட்சோட வேலையாத்தான் இருக்கும்னு நினைக்குறேன்

ஏன்னா இந்த ஜாவா அவனுகளுது கிடையாதுள்ள

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//எலேய் 12 ருபாய் கொடுத்து மோர் குடிச்ச இப்படிதான் எப்பவும் ஹோட்டல் ஞாபகம் வரும்... இந்த லைன் படி... அடுத்த நாள் 3000 ரூபா Deal ஓ.கே.. அப்பவே எங்க தல பொருளாதார மேதை...//

ஏய் ராசா அந்த மோர் கொண்டு வந்து வச்சிட்டு டிப்ஸ் க்கு தலைய சொறிஞ்சிகிட்டு நின்னது உங்க வெங்கட் தாம்லே....

அருண் பிரசாத் said...

@ வெங்கட்

Flag Counter ல Mauritius கொடி 96 வந்துடுச்சி, 100 போட்டவுடனே தனி மனிதனா வந்து 100 போட்ட சிங்கம்னு என்னை பத்தி ஒரு பதிவு போடல, VKS சார்பா நம்ம Terror தீக்குளிப்பார்

ரசிகன் said...

//கூப்பிட்டு " பாரத ரத்னா " அவார்டு
குடுக்கறது..? //

ஒரு உலக ரத்னாவுக்கு எப்படி
வெறும் பாரத ரத்னா த்ர்றது...??
ஹையோ... ஹையோ...

வெங்கட் said...

@ ஜில்தண்ணி.,

// அட இதுவும் பில் கேட்சோட
வேலையாத்தான் இருக்கும்னு நினைக்குறேன் //

ஒருவேளை அப்படி இருக்குமோ..!?

இருக்கும்.., இருக்கும்...!!
இந்த பில்கேட்ஸ்க்கு நம்ம கூட
விளையாடறதே வேலையா போச்சி..

இந்த விஷயத்துக்கு CBI Enquiry
வேணும்னு ஒரு போராட்டம்
பண்ணினா உண்மை தன்னால்
வெளியே வந்துட்டு போகுது....

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// ஏய் ராசா அந்த மோர் கொண்டு வந்து
வச்சிட்டு டிப்ஸ் க்கு தலைய சொறிஞ்சிகிட்டு
நின்னது உங்க வெங்கட் தாம்லே.... //

ஏன்.. ஏன்.. இத்தோட நிறுத்திட்டீங்க..,

டிப்ஸ் குடுக்க மட்டுமில்ல.,
பில் குடுக்கவே காசில்லாம
திரு திருன்னு முழிச்சது.,
அப்புறம் உள்ளே வந்து மாவாட்டினது
எல்லாத்தையும் சொல்ல வேண்டியது
தானே..!!

என் கால்ல விழுந்து கெஞ்சினதை
மட்டும் சொல்ல வேண்டாம்..

பெசொவி said...

//இந்த விஷயத்துக்கு CBI Enquiry
வேணும்னு ஒரு போராட்டம்
பண்ணினா உண்மை தன்னால்
வெளியே வந்துட்டு போகுது...//


இந்த CBI-னா Cracked Brainy Individuals தானே!

கருடன் said...

@அருண்
//Flag Counter ல Mauritius கொடி 96 வந்துடுச்சி, 100 போட்டவுடனே தனி மனிதனா வந்து 100 போட்ட சிங்கம்னு என்னை பத்தி ஒரு பதிவு போடல, VKS சார்பா நம்ம Terror தீக்குளிப்பார் //

வெங்கட் ப்ளாக் ல உங்கள பற்றி எழுதின உலகம்பூர famous ஆகலாம் நீங்க தெரிஞ்சி வச்சி இருக்கீங்க.. அதுக்காக வேற வேலை வெட்டி ஏதும் பாக்காம ஒரு தவம் மாதிரி வெங்கட் ப்ளாக் வந்து போறீங்க... ஏற்கனவே ஒபாமா, சச்சின், அமிதாப் இப்படி பலபேரு அவங்கள பத்தி எழுத சொல்லி கேட்டு லைன்ல நிக்கறாங்க.. but உங்களையும் மைண்ட்ல வச்சிக்க சொல்றேன்...

(யோ உனக்காக நான் தீ இல்ல டீ கூட குடிக்க மாட்டேன் உனக்கே தெரியும்... இருந்தாலும் இப்படி பப்ளிக்கா நம்ப எல்லாம் ஒன்னு காட்டிகிட்ட நீ VAS ஒற்றன் தெரிஞ்சி போய்டும்.. )

Prabu said...

//என் Blog Image போயிடும்
போல இருக்கே..!!//

கவலைப் படாதீங்க... ஒரு Exception Handler வைச்சு Catch பண்ணிடலாம்.

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

ஜாவா இவ்ளோ ஈசியாக் கத்துக்கலாமா ? பரவா இல்லையே ! எப்ப வரும் அடுத்த பகுதி

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா

ஆமா இப்ப எல்லாம் எப்பூடி - இன்னும் 4 - 3 கே தானா - இல்ல வெல கொறஞ்சிடுச்சா

வெங்கட் said...

@ சீனா சார்.,

// ஜாவா இவ்ளோ ஈசியாக் கத்துக்கலாமா ?
பரவா இல்லையே ! //

உண்மைய சொன்னா..
4 மாசத்துல ஓரளவாவது ஜாவா
கத்துக்கலாம்..
But நாங்க கத்துக்க முடியாம
போனதுக்கு காரணம்..

2 நாள் நாங்க லீவ் போடுவோம்..,
2 நாள் எங்களுக்கு Java சொல்லிகுடுக்கற Sir
லீவ் போடுவாரு..

அப்ப வாரத்துல 3 நாள் தான் Class-க்கு
போனீங்களான்னு கேட்ககூடாது..

அதான் சனி, ஞாயிறு
Computer சென்டர் லீவுல்ல...

// எப்ப வரும் அடுத்த பகுதி //

13.08.2010 ( வெள்ளி )

செல்வா said...

///Flag Counter ல Mauritius கொடி 96 வந்துடுச்சி, 100 போட்டவுடனே தனி மனிதனா வந்து 100 போட்ட சிங்கம்னு என்னை பத்தி ஒரு பதிவு போடல, VKS சார்பா நம்ம Terror தீக்குளிப்பார்
///
அடச்சே .. இங்க இவ்ளோ நடத்து போச்சா .!! கொஞ்சம் ஆணி இருந்தது ..!!
நாங்க(VAS) பீனிக்ஸ் பறவை மாதிரி .. தீக்குழிச்சாலும் திரும்பி வருவோம் ,,
ஆனா அருண் அண்ணா , உங்களுக்காக நாங்க என்ன வேணா செய்வோம் .. ஏன்னா VAS சார்பா எங்களுக்கு VKS பத்தி உங்களை விட யாராலும் வேவு பார்த்து சொல்ல முடியாது ..!!

Unknown said...

hi nanthan 50.....helmetai kalativitu
rasigargaluku sorry vasagarlkulu
annan venkat avargal mattaiyai vanam knokki...

supperana thodar...
kadisyila eppadiyachum pass paniduvenga anney..

Unknown said...

அனு
1. மாறிகள் துவங்கப்படவில்லை..
Variables not initialized---
hio hio

ethukuthan na enta blog pakkamey varamatenu chonne..

classlku pona anga vaitharnga thollai.

enga vantha evanga thollai..

sssssssss.mudialppa..

anna venkat anney pathu ethachum ciunga..

வால்பையன் said...

//என் வளர்ச்சியை தடுக்க
மறுபடியும் ஒரு தடைகல்..//


கிடைக்கிற கல்லையெல்லாம் சேர்த்து வைங்க, வீடு கட்ட உதவும்!