டிஸ்கி : இது எனக்கு மெயில்ல
வந்தது..
நம்ம முதல்வர் கலைஞரோட
திடீர் மனமாற்றத்துக்கு
காரணம் ஒரு Letter தான்னு
நம்ம உளவுத்துறை சொல்லுது...
Blog வரலாற்றிலேயே
முதன் முறையாக...,
அந்த Letter உங்கள்
பார்வைக்கு..
To
முதல்வர் கலைஞர்.,
தலைமை செயலகம்.,
சென்னை
ஐயா.,
செம்மொழி மாநாடு நடத்துனீங்க..
எங்கும் தமிழ்., எதிலும் தமிழ்னு
சொன்னீங்க...
ஆனா ஒரு இடத்துல மட்டும்
சுத்தமா தமிழ் இல்லைங்களே..
அங்கிட்டு எல்லாமே இங்கிலீஷ்ல
தாங்க இருக்கு..
அதை நினைக்க நினைக்க
செம பீலிங் ஆவுதுங்க..
நீங்கதான் சீக்கிரம் இதுக்கு
ஒரு நல்ல முடிவா எடுக்கணும்..
அந்த இடம் - நம்ம டாஸ்மாக்
அங்கே இருக்கிற சரக்குக்கு
எல்லாம் தமிழ்ல பேர் வெச்சி
தமிழை வளர்க்கணும்க..
நானே சில பேர் யோசிச்சி
வெச்சிருக்கேன்..
உங்களுக்கு திருப்தி இல்லைன்னா
ஒரு குழு அமைச்சி நல்ல., நல்ல
பேரா வைங்க..
மிடாஸ் கோல்ட் - தங்க மகன்
நெப்போலியன் - ராஜராஜ சோழன்
கோல்கொண்டா - கங்கைகொண்டான்
வின்டேஜ் - அறுவடை தீர்த்தம்
ஆபீஸ்ர்ஸ் சாய்ஸ் - அலுவலர் தேர்வு
சிக்னேச்சர் - கையெழுத்து
ஓல்டு மாங்க் - மகா முனி
ஜானி வாக்கர் - வெளிநடப்பு
கார்டினல் - பொதுக் குழு
மானிட்டர் - உளவுத் துறை
மேன்சன் ஹவுஸ் - உறுப்பினர் விடுதி
ஹோவர்ட்ஸ் 5000 - ஓட்டுக்கு 5000
ராயல் சேலஞ்ச் - நாற்பதும் நமதே
இப்படிக்கு
தமிழ் " குடி " மகன்,
டாஸ்மாக்,
தமிழ்நாடு
செய்தி : தமிழ்நாட்டில் மதுவிலக்கை
அமல் படுத்த தமிழக அரசு பரிசீலனை.
இன்று ஒரு தகவல் :
---------------------------
பால் லிட்டர் 28 ரூபாதான்.,
குவாட்டரோ 80 ரூபா.. - அதுக்காக
பால் குடிக்கிறவன் மதிப்பு
குறைஞ்சி போயிடாது..,
குவாட்டர் அடிக்கிறவன் மதிப்பு
ஏறிப்போயிடாது...
.
.
Tweet
04 August 2010
Subscribe to:
Post Comments (Atom)
36 Comments:
டாஸ்மாகன்ரீங்க, சரக்கன்ரீங்க.... இதெல்லாம் என்னதுங்க... கேள்விபட்டதே இல்லையே.
@ ஜெய்.,
// டாஸ்மாகன்ரீங்க, சரக்கன்ரீங்க....
இதெல்லாம் என்னதுங்க...
கேள்விபட்டதே இல்லையே. //
போச்சுடா...!
உங்களுக்கும் என்னை மாதிரியே
இதெல்லாம என்னான்னு தெரியாதா..?!!
இப்படி பதிவா போட்டா
யாராவது விளக்கம்
சொல்லுவாங்கன்னு பார்த்தா...
இப்படி அயிடுச்சே..
//ஹோவர்ட்ஸ் 5000 - ஓட்டுக்கு 5000//
Fantastic..toppu..
btw, is the following better?
'oldmonk' = 'முதியமுனி'
டாஸ்மார்க்னா, பாஸ்மார்க்கிற்கு opposite .....
சரக்குனா, bads க்கு opposite ......
அப்படியும் வச்சுக்கலாம்னு கலைஞர் சொல்லிட்டாராம்....
தமிழ் குடிதாங்கிக்கு அனுப்பி சம்மதம் வாங்கியாச்சா?
// ராயல் சேலஞ்ச் - நாற்பதும் நமதே
ஹோவர்ட்ஸ் 5000 - ஓட்டுக்கு 5000 //
செம சூப்பரு!
//செய்தி : தமிழ்நாட்டில் மதுவிலக்கை
அமல் படுத்த தமிழக அரசு பரிசீலனை.//
இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சி VKS ல எல்லாரும் நம்ப ஜெய் கூட பூக்குழி இறங்கராங்கலம்..
8pm, King Fisher, Black piper, bacardi cherry, bacardi berry, bacardi lemon, bacardi mint, bacardi apple, passport, red label, black label, blue label, Johar, kutti sark, ballantines.... இப்படி பல ப்ரண்ட் குறையுது...இன்னும் பயிற்சி தேவையோ...
பெயர் எல்லாம் தெரிந்து வைத்து இருக்கிறே எப்படி....கோமாளி செல்வா சொல்லுப்பா....
அடடா, என்னே தமிழ்ப் பற்று, கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த 'குடி' தமிழ்க் 'குடி' என்பதை ஒப்புக் கொள்கின்றேன். மிக நேர்த்தியான சிந்தனை, நல்ல தேர்வு, எதற்கும் தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில் சமர்பித்தால் ஆய்வு கட்டுரையாக வெளிவரும் ! என் கருத்தையும் கணக்கில் கொள்ளவும்.
டாஸ்மாக் மாத்திரம் தமிழ் பேரா பாஸ் :)
இந்த கோரிக்கைக்கு என் முழு ஆதரவையும் தெரிவிக்கிறேன்
///பால் லிட்டர் 28 ரூபாதான்.,
குவாட்டரோ 80 ரூபா.. - அதுக்காக
பால் குடிக்கிறவன் மதிப்பு
குறைஞ்சி போயிடாது..,
குவாட்டர் அடிக்கிறவன் மதிப்பு
ஏறிப்போயிடாது...////
எப்டி சொன்னோம் பாத்தீங்களா ..
அதான் எங்க வெங்கட் அண்ணாவோட திறமை ..
அதுதான் VAS ல இருக்கறதுல பெருமை ...!!
/// சௌந்தர் said...
பெயர் எல்லாம் தெரிந்து வைத்து இருக்கிறே எப்படி....கோமாளி செல்வா சொல்லுப்பா....
////
பெயர் தெரிஞ்சவங்க எல்லோரும் குடிக்கரவங்களும் இல்ல பெயர் தெரியாதவங்க எல்லோரும் குடிக்காதவங்க இல்லை ..!!
ஏன்னா லைசென்ஸ் வச்சிருக்கரவங்க எல்லோரும் வண்டி ஓட்டுறது இல்ல அதே மாதிரி வண்டி ஒட்டுரவுங்க எல்லோரும் லைசென்ஸ் வச்சிருக்கறதும் இல்ல .. என்ன குழம்பிட்டீங்களா ..?
//அக்பர் said...
டாஸ்மாக் மாத்திரம் தமிழ் பேரா பாஸ் :) //
tasmac = டாஸ்மாக் = பூவாதலையா மதிப்பெண் (டாஸ் = பூவாதலையா மா(ர்)க் = மதிப்பெண்) எப்படி?
@ ப.செல்வக்குமார்
//என்ன குழம்பிட்டீங்களா ..?//
இதுல குழம்ப என்ன இருக்கு? VAS Memberங்கறத prove பண்றீங்க, அவ்ளோதான?
@ Terror @ செளந்தர்
//பல ப்ரண்ட் குறையுது...இன்னும் பயிற்சி தேவையோ...//
//பெயர் எல்லாம் தெரிந்து வைத்து இருக்கிறே எப்படி...//
Terror உங்க ஊரு பாண்டிச்சேரிதான, ஊர் பேரை காப்பாத்திட்டீங்க
//செய்தி : தமிழ்நாட்டில் மதுவிலக்கை
அமல் படுத்த தமிழக அரசு பரிசீலனை.//
டாஸ்மாக் கடைகளை ஒழிக்கணும்னு சொன்ன மருத்துவர் ஐயா, டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகளைப் பத்தி பரிஞ்சு பேசறாரு, அதே நேரத்தில, டாஸ்மாக் மூலமா வந்த (வர்ற) வருமானத்தை வச்சு இலவசங்களை வழங்குகிற அரசு, மதுவிலக்கு கொண்டு வரப் போவதா பூச்சாண்டி காமிக்குது.
இதுதான்(டா மானங்கெட்ட) அரசியல்
"இந்த நாடும் மக்களும் நாசமாய்ப் போகட்டும்" - இப்படி சொன்னது PSV (பெயர் சொல்ல விருப்பமில்லை அல்ல - P S வீரப்பா)
@ டெரர்.,
// 8pm, King Fisher, Black piper, bacardi cherry,
bacardi berry, bacardi lemon, bacardi mint,
bacardi apple, passport, red label, black label,
blue label, Johar, kutti sark, ballantines.... //
இதெல்லாம் என்ன..?
துபாய் பிஸ்கட் பேரா..??!!
இங்கே Britania Milk Bikies, Goodday,
Sunfeast, Marie Gold, Tiger , 50 : 50 ,
Krack jack, Snacks இந்த மாதிரி
பிஸ்கட்ஸ் தான் இங்கே கிடைக்குது..
@ மார்க்கண்டேயன்.,
// மிக நேர்த்தியான சிந்தனை,
நல்ல தேர்வு, எதற்கும்
தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தில்
சமர்பித்தால் ஆய்வு கட்டுரையாக வெளிவரும் //
அது மட்டுமா..?
எனக்கு டாக்டர் பட்டம் குடுப்பாங்க.,
அடுத்த செம்மொழி மாநாட்ல
கலைஞர் விருது + 25 லட்ச ரூபா
பரிசு வேற குடுப்பாங்க..
நினைக்கும் போதே புல்லரிக்குதே...!!!
@ செல்வா.,
// லைசென்ஸ் வச்சிருக்கரவங்க
எல்லோரும் வண்டி ஓட்டுறது இல்ல
அதே மாதிரி வண்டி ஒட்டுரவுங்க
எல்லோரும் லைசென்ஸ் வச்சிருக்கறதும் இல்ல //
Yes.., சூப்பர்..., அப்படித்தான்...
எப்ப Convince பண்ண முடியலையோ
அப்ப Confuse பண்ணி விட்டுடணும்..!!
//அது மட்டுமா..?
எனக்கு டாக்டர் பட்டம் குடுப்பாங்க., //
அப்ப சீக்கிரமே கிளினிக் ஆரம்பிச்சுடுவீங்க.. அப்படித்தானே!!!
ஆகா ஆகா அற்புதம் - தமிழ்ப் பெயர்கள் வைத்தால் வரி தள்ளுபடியாகும் - விலை குறையும். செய்யலாமே !
5000 சூப்பர் - சும்மா சொல்லக்கூடாது - குவார்ட்டர் - கட்டிங்கெல்லாம் கிடையாதா
நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா
இங்கு எதோ சரக்கு,குடின்னு நமக்கு தெரியாத மேட்டர் ஓடிக்கிட்டு இருக்கு அதனால மீ த எஸ்கேப்பு :)
//ஜில்தண்ணி - யோகேஷ் said...
இங்கு எதோ சரக்கு,குடின்னு நமக்கு தெரியாத மேட்டர் ஓடிக்கிட்டு இருக்கு அதனால மீ த எஸ்கேப்பு :) //
அப்போ ஜில்-தண்ணிங்கறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?
//வெங்கட் said...
@ டெரர்.,
// 8pm, King Fisher, Black piper, bacardi cherry,
bacardi berry, bacardi lemon, bacardi mint,
bacardi apple, passport, red label, black label,
blue label, Johar, kutti sark, ballantines.... //
இதெல்லாம் என்ன..?
துபாய் பிஸ்கட் பேரா..??!!
இங்கே Britania Milk Bikies, Goodday,
Sunfeast, Marie Gold, Tiger , 50 : 50 ,
Krack jack, Snacks இந்த மாதிரி
பிஸ்கட்ஸ் தான் இங்கே கிடைக்குது.. //
என்ன நடக்குது இங்க, VASகுள்ளே கும்மிகிட்டா VKSக்கு வேலை இல்லாம போய்டாதா?
///Prabu said...
அப்ப சீக்கிரமே கிளினிக் ஆரம்பிச்சுடுவீங்க.. அப்படித்தானே!!! ///
கிளினிக் ஆரம்பிப்போம் ,, ஆனா VKS காரங்களுக்கு மட்டும்தான் ஊசி போடுவோம் .. மத்தவங்களுக்கு மாத்திரை மட்டும் தான் ..!!
//கிளினிக் ஆரம்பிப்போம் ,, ஆனா VKS காரங்களுக்கு மட்டும்தான் ஊசி போடுவோம் .. மத்தவங்களுக்கு மாத்திரை மட்டும் தான் ..!!//
ஒருத்தருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தா எல்லோரும் ஊசி போட கிளம்பிட்டீங்களா??..
///ஒருத்தருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தா எல்லோரும் ஊசி போட கிளம்பிட்டீங்களா??..///
VAS ல சேர்ந்தீங்கன்னா நீங்க கூட டாக்டர் தான்..!!
ஏன்னா VAS ல சேர்ந்தா அந்த திறமை உங்களுக்கு தன்னாலேயே வந்திடும் ..!!
@ பெ.சொ.வி.,
// இதுதான்(டா மானங்கெட்ட) அரசியல் //
உங்களுக்கு நான் ஒரு " ஓ போடறேன் "
நீங்க சொன்னது 100% சரி..
எதை வேணா சொல்லலாம்.,
மாத்தி., மாத்தி பேசலாம்...
எல்லாத்துக்கும் இந்த மக்கள்
தலைய தலைய ஆட்டிட்டு..,
காசு வாங்கிட்டு ஓட்டு
போட்டுடுவாங்கன்னு தானே
எல்லா அரசியல்வாதிகளும்
நினைக்கறாங்க..
@ செல்வா..,
// கிளினிக் ஆரம்பிப்போம் ,,
ஆனா VKS காரங்களுக்கு
மட்டும்தான் ஊசி போடுவோம்.. //
என்னப்பா இது...?
எங்கிட்ட வார்த்தை கூட
கேட்காம இப்படி ஒரு
Statement விட்டுட்டே...
இப்போ அவ்ளோ பெரிய ஊசிக்கு
நான் எங்கே போவேன்..??!!!
//Selva said:
ஆனா VKS காரங்களுக்கு
மட்டும்தான் ஊசி போடுவோம்..//
//Venkat wrote:
இப்போ அவ்ளோ பெரிய ஊசிக்கு
நான் எங்கே போவேன்..??!!! //
இதை வன்மையாக கண்டித்து VKS நடத்தும் பந்த், அடிதடி ஊர்வலம் ஆகியவற்றில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என முன்னதாகவே அறிவிக்கிறேன்.
//
எதை வேணா சொல்லலாம்.,
மாத்தி., மாத்தி பேசலாம்...
எல்லாத்துக்கும் இந்த மக்கள்
தலைய தலைய ஆட்டிட்டு..,
காசு வாங்கிட்டு ஓட்டு
போட்டுடுவாங்கன்னு தானே
எல்லா அரசியல்வாதிகளும்
நினைக்கறாங்க.. //
நன்றி வெங்கட்!
ஆனா ஒரு விஷயம், மதுவிலக்குங்கறது ஏதோ அரசாங்கம் அறிவிச்சு அமுல் படுத்தற விஷயம் இல்லைன்னுதான் நான் நினைக்கிறேன். சொல்லப் போனா, ஒவ்வொரு "குடி"மகனும் (அல்லது "குடி"மகளும்) தனக்குத் தானே மதுவிலக்கு அறிவிச்சிகிட்டு அமுல் படுத்தினாலே போதும், இந்த மது அரக்கனைஒழிச்சுடலாம்.
@ வெங்கட்
// இப்போ அவ்ளோ பெரிய ஊசிக்கு
நான் எங்கே போவேன்..??!!!//
பெரிய ஆளுங்களுக்கு பெரிய ஊசிதான் போடணும்னு நினைச்ச உங்க மூளைக்கு சபாஷ்!
ஆனா ஊசியோட அளவைவிட மருந்தோட வீரியத்துக்குதான் நோய் கட்டுப் படும்ங்கற Basic தெரியலையே, உங்களுக்கு VAS தவிர வேறு யாரும் டாக்டர் பட்டம் தர மாட்டாங்க, ஐயோபாவம்!
///ஆனா ஊசியோட அளவைவிட மருந்தோட வீரியத்துக்குதான் நோய் கட்டுப் படும்ங்கற Basic தெரியலையே, உங்களுக்கு VAS தவிர வேறு யாரும் டாக்டர் பட்டம் தர மாட்டாங்க, ஐயோபாவம்! ///
நாங்க அத சொல்லல .. என்னதான் மருந்தோட பவர் அதிகமா இருந்தாலும் கொஞ்சமா போட்டா நோய கட்டுப்படுத்த முடியாதது அப்படின்னு தெரிஞ்சுதான் சொன்னோம் ..!!
//நாங்க அத சொல்லல .. என்னதான் மருந்தோட பவர் அதிகமா இருந்தாலும் கொஞ்சமா போட்டா நோய கட்டுப்படுத்த முடியாதது அப்படின்னு தெரிஞ்சுதான் சொன்னோம்/
அப்போ VKS ஐ சமாளிக்கறது அவ்வளோ கஷ்டமாவா இருக்குது உங்களுக்கு!
எந்த குடிமகன் (மகள்) குடிக்கறத நிறுத்துறேன்னு சொல்லுவான்?
Helmet போடுங்கடானு சொன்னா கேட்டாங்களா மக்கள். சட்டம் போட்டு, மாமாவுக்கு கப்பம் கட்டின பிறகே திருந்துனாங்க
eppadi sammi eppadi ellam
potu kalakurenga..
office ukkanthu yesipengolo.....
Post a Comment