28 January 2010
தலைக்கு மேல வேலை
தலைக்கு மேல வேலை வந்தாலே.,
நான் Tension ஆயிடுவேன்..
மாசம் ஒரு தடவை
சலூனுக்கு போகணுமே.,
அதை சொன்னேன்..
இதெல்லாம் கஷ்டமான்னு
சில பேர் கேட்பாங்க..
" ஒரு ஆம்பளையோட கஷ்டம்.,
இன்னொரு ஆம்பளைக்கு தான்
தெரியும்..!! "
நான் சலூனுக்கு போற அன்னிக்கு தான்
ஊர்ல பாதி பேருக்கு முடி வெட்டிக்கலாம்னு
தோணும் போல..
எனக்கு முன்னாடியே வந்து
உட்கார்ந்து இருப்பாங்க..
அங்கே ஒரு நியூஸ் பேப்பர் இருக்கும்..,
அதை நான் படிக்கிறதே இல்லை..
( எப்படியும் எல்லோரும்
பிச்சி எடுத்ததுபோக.,
எனக்கு " வரி விளம்பரம் "
இருக்கிற பக்கம் தான் கிடைக்கும்.. )
அங்கே சின்ன பசங்களை கூட்டிட்டு
வர்ற அப்பாக்கள் பண்ணுற
ரவுசு இருக்கே.. அப்பப்பா..!
கத்திரி தேய தேய வெட்டினாலும்
" இங்க வெட்டுங்க..,
அங்கே வெட்டுங்கன்னு "
ஒரே இம்சைதான்.
அதுக்கு பேசாம " மொட்டை அடின்னு "
சொல்லிட்டா ஒரே வேலையா
போயிடும்ல..
அப்புறம் இந்த பெருசுங்க..
உள்ளூர் அரசியல்ல இருந்து
ஒபாமா வரைக்கும்
அலசுவாங்க பாருங்க..
நொந்து Noodles ஆகவேண்டியது தான்.
2-மணி நேரம் கழிச்சி தான்
என் முறை வரும்..
அப்ப நம்ம சலூன்காரர்
" சார்.. ஒரு டீ குடிச்சிட்டு வந்திடறேன்னு..! "
ஒரு அரை மணி நேரம் " எஸ் " ஆயிடுவார்..
அப்பல்லாம் எனக்கு
இப்படி தோணும்..
" எப்படிதான் இந்த பொண்ணுங்க
அடிக்கடி பியூட்டி பார்லர்
போறாங்களோ..!? "
.
.
Tweet
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
really all your jokes very good...
ஒரு ஆம்பளையோட கஷ்டம்.,
இன்னொரு ஆம்பளைக்கு தான் தெரியும்.! "
a new proverb!!!!!!!!???
anyhow, what you have narrated in this article is ture...everyone must have experienced..no exceptional...
Thanks for ur Comments
அன்பின் வெங்கட்
உண்மை - முடி திருத்தகத்துக்குச் செல்வது - ஒரு அனுபவம் தான். இதற்கும் ஒரு இடுகை போடலாம் என்று புரிந்து கொண்டேன். தவறில்லை
நல்வாழ்த்துகள் வெங்கட்
Post a Comment