சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

04 September 2013

சென்னை பதிவர் திருவிழா " N " அலப்பறைகள் - (பைனல்ஸ்)

டிபன் சாப்பிடறதுக்காக நடந்து ஒவ்வொரு
ஹோட்டலா பாத்துட்டே வந்தோம்..
திடீர்னு ஒரு ஹோட்டலை பாத்ததும்
ஷாக் ஆகிட்டேன்..

அது...


" அச்சச்சோ... பேசிட்டே அடையார் வரை 
வந்துட்டோம் போல இருக்கே தேவா..! " 

" சார்.. அது ஹோட்டல் பேரு..! " 

" அப்படியா...? வடபழனில வந்து 
' அடையார் '-னு பேரு வெச்சி இருக்காங்க..
சுத்த லூசுப்பசங்களா இருப்பாங்களோ..?!! " 

இதை கேட்டு தேவா ஒருமாதிரி சிரிச்சாரு...
ஏன் அப்படி சிரிச்சாருன்னு தான் தெரியல..

அப்புறம் மீட்டிங் ஹாலுக்கு போனோம்..


அங்கே KRP செந்தில்., பிரபு கிருஷ்ணா, 
ப்ளாக்கர் நண்பன், ரஹீம் கஸாலி, 
கோவை நேரம் எல்லோரும் என்னை 
அடையாளம் கண்டுகிட்டு அன்பா பேசினாங்க..

ஆனா..... 

வந்தவங்களுக்கு Fanta குடுத்த 
" காணாமல் போன கனவுகள் " ராஜி 
மட்டும் எனக்கு பக்கத்தில் இருந்தவர் 
வரை குடுத்துட்டு அப்புறம் காணாம 
போயிட்டாங்க..

எனக்கு செம டென்ஷனா போச்சு.. 

அவங்களை தேடி பிடிச்சி.. 

" ஏங்க எனக்கு மட்டும் Fanta குடுக்கலை..! " 

" உங்களுக்கு ஏன் குடுக்கணும்..? நீங்க மட்டும் 
என் ப்ளாக்ல வந்து லைக்., கமெண்ட்டா 
போடறீங்க..? "

எனக்கு வந்துச்சே கோவம்..

அது ஒரு மொக்கை ப்ளாக் ( என் ப்ளாக்கே
பரவாயில்ல.. ) அதுல கமெண்ட் போட்டா தான் 
Fanta கிடைக்கும்னா.. நான் Coca Cola கம்பெனியவே 
இந்தியாவ விட்டு தள்ளி வெக்கிறேன்டா..

இதான்டா என்ர தீர்ப்பு..!!

மதியம் வரை நான் பயங்கர கோவத்துல 
தான் இருந்தேன்.. 

ஆனா லஞ்ச் டைம்ல பிரியாணி பரிமாறும் போது.. 
எல்லோருக்கும் ரெண்டு சிக்கன் பீஸ் வெச்ச 
கேபிள் சங்கர்... எனக்கு மட்டும் மூனு பீஸ் 
வெச்சாரா...

என் கோவம் பறந்து போச்சு...

ம்ம்.. நெக்ஸ்ட்...

பெரியவங்ககிட்ட மரியாதையா இருக்கோணும்னு 
என் சிஷ்யபுள்ள சிவசங்கருக்கு அட்வைஸ்
பண்ணியிருந்தேன்...

( குரு பேச்சை தட்டாத என் சிஷ்யன் 
சிறப்பு விருந்தினர் திரு.பாமரனுடன் )

டிஸ்கி 1 : அடையாளம் தெரியக்கூடாதுன்னு 
பன்னிக்குட்டி ராம்சாமி வேற பதிவர் பெயர்ல 
வந்திருந்தாரு.. அவரை யாருக்கும் அடையாளம் 
தெரியல.. 

டிஸ்கி 2 : மங்குனி அமைச்சரும் கூலிங்கிளாஸ் 
போட்டுட்டு , கன்னத்துல மச்சம் வெச்சிட்டு
மாறுவேஷத்துல வந்திருந்தாரு.. ஆனா 
அவரை எல்லோரும் மண்டப வாட்ச்மேன்னு 
நினைச்சிட்டாங்க..
.
.

9 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியான தீர்ப்பு... டிஸ்கி இரண்டும் உண்மையா...?

சக்கர கட்டி said...

ம்ம் 3 பீஸா என்ஜாய்

சேலம் தேவா said...

தல..முடிஞ்சிடுச்சா..?! :(

கோவை நேரம் said...

இன்னும் வருமா...?

வெங்கட் said...

@ திண்டுக்கல் தனபாலன்.,

// டிஸ்கி இரண்டும் உண்மையா...? //

சந்தேகமா இருந்தா அவங்களையே வந்து கன்பார்ம் பண்ண சொல்லட்டுமா..?

:)

வெங்கட் said...

@ சேலம் தேவா, கோவை நேரம்.,

// தல..முடிஞ்சிடுச்சா..?! :( //

இன்னும் நிறைய பதிவு எழுதலாம்...
நிறைய பெயர் விட்டு போச்சு தான்..
ஆனா அதுக்குள்ள அடுத்த பதிவர் சந்திப்பே வந்துடுமேன்னு தான் முடிச்சாச்சு..

Madhavan Srinivasagopalan said...

டெர்ரர் பாண்டியனைப் பற்றி ஒரு டிஸ்கி போடாததை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

s suresh said...

சுவையான தகவல்கள்! டிஸ்கி ஆச்சர்யப்பட வைத்தது!

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹா ஹா.... அடியாருக்கு போயிடிங்களா?

போங்க சார் எப்பவும் காமெடி பண்ணிக்கிட்டு...


உங்களை சந்திச்சதில் மிக்க மகிழ்ச்சி வெங்கட்..