சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

03 September 2013

சென்னை பதிவர் திருவிழா " N " அலப்பறைகள் - 2
நேரா போயி AVM ஸ்டுடியோ வாசல்ல
இறங்கினோம்...

அங்கே பக்கத்துல இருந்த மரத்துல 
தொங்கிட்டு இருந்தது இந்த நோட்டீஸ்...

( நல்லவேளை இதையெல்லாம் பார்க்க 
வாலி இல்ல... )

Mr.A.R.முருகதாஸ்., Mr.கௌதம் மேனன் 
இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதீங்க..
ரொம்பவே பீல் பண்ணுவீங்க.., அம்புட்டுதான் 
சொல்லுவேன்..

அப்புறம்.. 

" அப்படியே எதிர்ல இருக்குற சந்துல 
வாங்க.. அங்கே MAKAFI-னு ஒரு லாட்ஜ்ல 
ரூம் போட்டிருக்கு "-னு சொன்னாங்க.. 

நான் அங்கே இருந்த பீடா கடையில 

" அண்ணே... இது முட்டு சந்தா..? " 

" இல்லதம்பி... ஏன் கேக்கறீங்க..? " 

" ஒண்ணுமில்லண்ணே.., சும்மா 
கேட்டேன்..! "

( நான் எப்பவுமே இப்படித்தான் உஷாரா
இருப்பேன்.. )

அப்படியே லாட்ஜை கண்டுபிடிச்சி 
போனோம்..

அங்கே ப்ளாக்கர்ஸ் ஸ்கூல்பையன்,
கோகுல், குடந்தை சரவணன் , ஜோதிஜி
எல்லோரும் இருந்தாங்க.. 

அன்பா வரவேற்று பேசி.. 

" இந்த ரூம் எடுத்துக்கோங்கனு " ஒரு ரூம் 
காட்டினாங்க..

அங்கே ஏற்கனவே திண்டுக்கல் தனபாலன் 
இருந்தாரு... 

நான் அவர்கிட்ட போயி..

" ஹாய்.. ஐயம் கோகுலத்தில் சூரியன் 
வெங்கட் " -னு கை குடுத்தேன்...

ஒரு பிரபல ப்ளாக்கர் நம்ம ரூம்க்கு 
வந்து இருக்காரேன்னு நினைச்சாரோ 
என்னவோ என்னை பார்த்ததும்.. 

அவருக்கு கை, கால் எல்லாம் நடுங்கி 
வேர்த்து ஊத்த ஆரம்பிச்சிடுச்சு..

கர்சீப் எடுத்து துடைக்கிறாரு, துண்டு எடுத்து 
துடைக்கிறாரு.... வேர்வை ஆறா ஓடுது..

சரி நாமளே அவரை கூல் பண்ணலாம்னு.. 

" சார் நானும் ஒரு சாதாரண ப்ளாக்கர் 
தான் ( தன்னடக்கம்... ப்ளீஸ் நோட் திஸ் ) 
என்னை பாத்து ஏன் இப்படி டென்ஷனாகறீங்க..? " 

ஒரு தடவை என்னை மேலயும் கீழயும் 
பார்த்தாரு...

" ஏய் வெண்ணை.. கரண்ட் போயி Fan ஓடல...!! " 

( ஹி., ஹி., ஹி.. கொஞ்சம் ஓவராத்தான் 
போயிட்டோமோ..?!! ) 

( தொடரும்... )
.
.

9 Comments:

கோவை நேரம் said...

தொடரட்டும்...திண்டுக்கல்லுக்கே வேர்க்குதுன்னா நீங்க பிரபலம் தான்

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா.... ஹா.... என்னா வெயிலு...!

வெங்கட் said...

@ கோவை நேரம்.,

// திண்டுக்கல்லுக்கே வேர்க்குதுன்னா நீங்க பிரபலம் தான் //

ம்ம்.. அப்படி சொல்லுங்க.. அவரு வேணும்னே கரண்ட் போயிடுச்சி, Fan ஓடலைன்னு மாத்தி மாத்தி பேசறாரு..

வெங்கட் said...

@ திண்டுக்கல் தனபாலன்.,

// ஹா.... ஹா.... என்னா வெயிலு...! //

எங்கே உங்களுக்கு வேர்த்து ஊத்தலைன்னு மட்டும் சொல்லுங்க பார்க்கலாம்.. சாட்சிக்கு குடந்தை சரவணன் இருக்காரு.. ஆமா.. :)

s suresh said...

கலக்கோ கலக்குன்னு கலக்கறீங்களே! வாழ்த்துக்கள்!

ஜீவன்சுப்பு said...

ஹா ஹா ஹா ...!

என் ராஜபாட்டை : ராஜா said...

தொடருங்க .. தொடருங்க ...

சேலம் தேவா said...

வேர்வையின் தாக்கத்தில் அவரு துண்ட புழிஞ்சத என் கண்ணால பாத்தேன் தல... :)

பிராட்வே பையன் said...

Currrnt cut aa chennaila???!!!

Ayyaho.