சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

02 September 2013

சென்னை பதிவர் திருவிழா " N " அலப்பறைகள் - 1

பதிவர் திருவிழால கலந்துக்க நானும்., 
சேலம் தேவாவும் சென்னை கிளம்பினோம்.. 

டிரைன் சென்னைக்கு காலைல 5 மணிக்கு 
ரீச் ஆகும்.. அங்கே போயி எப்படி போறதுன்னு 
எந்த டீடெய்லும் தெரியாது.. 

உடனே தேவா..

" இருங்க சார்.. சங்கவிக்கு போன் பண்ணி 
தர்றேன்னு " போன் போட்டு குடுத்தாரு..!! 

" ஹலோ நான் வெங்கட் பேசறேன்..! "

" சொல்லுங்க.. நான் சங்கவி பேசறேன்..! " 

" என்ன சங்கவி திடீர்னு ஆம்பள வாய்ஸ்ல 
பேசறீங்க..?? " 

" யோவ்.. நான் ப்ளாக்கர் சதீஷ் சங்கவியா..? " 

" ஹி., ஹி., ஹி.. நான் நடிகை சங்கவியோன்னு 
நெனச்சேன்... " 

" நெனப்பீரு..! "

( வாட்..?!! என் நம்பர் உங்ககிட்ட இல்லையா 
வெங்கட்..??!!! ) 

" சரி.. எங்களை பிக்-அப் பண்ண கார் எதுனா 
அரேஞ்ச் பண்ணியிருக்கீங்களா..? " 

" கார் என்ன பஸ்சே அரேஞ்ச் பண்ணியிருக்கோம்..! "

" என்னாது பஸ்ஸா..? " 

" ஆமா.. ஸ்டேஷனுக்கு வெளியே 17E-னு 
ஒரு பஸ் நிக்கும் ஏறி வந்துடுங்க.. டிப்ஸ் கேட்டா 
12 ரூபா மட்டும் குடுங்க போதும்..!! "

( ம்ம்ம்ம்.. நல்லா சொல்றாங்கய்யா டீடெயிலு...!! )

" சரி எங்கே வரணும்..? "

" AVM ஸ்டுடியோ ஸ்டாப்பிங்..!! " 

ஓ.. AVM ஸ்டுடியோ முன்னாடிதான் 
பளாக்கர்ஸ்க்கு ரூம் போட்டிருக்கீங்களா.??

அப்ப காலைல முதல் வேலையா 
தமன்னா., அனுஷ்கா, சமந்தா 
யாராச்சும் வர்றாங்களான்னு 
பார்க்கணும்..

வந்தா... உடனே ஓடி போய் ஒரு போட்டோ 
எடுத்துகிட்டு, நம்ம ஆட்டோகிராப் ஒன்னு 
போட்டு குடுத்துட்டு வந்திடணும்.... 

ஆங்ங்...!!
( ஹி., ஹி., ஹி... அடங்க மாட்டோமில்ல.. )

( தொடரும்..)

டிஸ்கி :  மீட்டிங்குக்கு சங்கவி வராங்கன்னு 
என்னை ஏமாற்றி சென்னை வரவழைத்த 
ப்ளாக்கர் சங்கவி இவர்தான்... 


ஏமாத்திட்டீர்ல.. போட்டோ சின்னதாதான் போடுவேன்..
.
.

7 Comments:

Bagawanjee KA said...

ஓ..சங்கதி அப்படி போகுதா ?

வெங்கட் said...

ஆமாம் சார்.. ஏமாத்திட்டாங்க சார்... ஏமாத்திட்டாங்க...

திண்டுக்கல் தனபாலன் said...

நாம எப்பவுமே அடக்க மாட்டோமல்லே... ஹா.... ஹா....

என் ராஜபாட்டை : ராஜா said...

பாஸ் செம ஜாலியானா ஆளு பாஸ் நீங்க ...

ஜீவன்சுப்பு said...

ஓ..சங்க(தி)வி அப்படி போகுதா ?

ஹா ஹா ...வழமையான நக்கலுடன் நல்ல போஸ்ட் ..!

சங்கவி said...

வெங்கட் நாங்க ஏமாத்தல நீர் தான் ஏமாந்துட்டீங்க... நாங்க அனுஷ்கா பார்த்தேனா...

சேலம் தேவா said...

//தமன்னா., அனுஷ்கா, சமந்தா
யாராச்சும் வர்றாங்களான்னு
பார்க்கணும்...//

ஹன்சிகா உங்களுக்கு என்ன பாவம் பண்ணாங்க தல... :)