சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

10 September 2013

டீ கடை பெஞ்ச்..!!" ராமன் ஆண்டாலும்.,
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்ல..!!! "

ஹி., ஹி., ஹி.. ஒண்ணுமில்ல
டீ குடிக்கலாம்னு கடைக்கு போனப்ப
அங்கே டிவில இந்த பாட்டு ஓடிட்டு
இருந்தது..

டீயை வாங்கிட்டு பாத்தா..
பக்கத்து பெஞ்ச்ல தெரிஞ்சவரு ஒருத்தரு...

அவரு எப்ப பாத்தாலும் கட்சி., கட்சின்னே
சுத்திட்டு இருப்பாரு.. கட்சி பொறுப்புல
எல்லாம் இருந்தாரு..

அப்படியே நைசா அவர்கிட்ட பேச்சு
குடுத்தேன்...

" வணக்கம்ணே..!! "

" வணக்கம் தம்பி..! நல்லா இருக்கியா..? "

"  நல்லா இருக்கேன்ணே.. ஆமா இப்பவும்
கட்சில பொறுப்பு எதாவது குடுத்து
இருக்காங்களா..? "

" இல்லப்பா..! " ரொம்ப பீலிங்கா சொன்னாரு...

" அப்ப பொறுப்பில்லாம சுத்திட்டு
இருக்கீங்கன்னு சொல்லுங்க "னு
சொன்னேன்..

இதுக்கு போயி மொறைக்கிறரு...!!
.
.

2 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மொறைப்போட முடிச்சிக்கிட்டாரே...!@

வெங்கட் said...

@ திண்டுக்கல் தனபாலன்.,

அதுல உங்களுக்கு வருத்தம் போல
தெரியுதே..!!

:)