சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

17 September 2013

என்ன தப்பு பண்ணினான் என் கட்சிக்காரன்..?!!




என் ப்ரெண்ட் கடையில நின்னு பேசிட்டு
இருக்கும் போது.. பக்கத்துல இருந்த
ஒருத்தரு அவர் பையனை சரமரியா
திட்டிட்டு இருந்தாரு...

ஒட்டு கேட்டதுல அவனுக்கு மார்க்
கம்மியா  போச்சாம்..

அதான் பிரச்னை...

அப்படி எவ்ளோ கம்மி மார்க்யா
எடுத்துட்டான் என் கட்சிக்காரன்னு
களத்துல குதிச்சேன்....

அவங்க அப்பாவை பாத்து...

" எத்தனை மார்க்ணே எடுத்து இருக்கான்..! "

" 465 மார்க்...! "

" ஏண்ணே இது போயி கம்மியா..?
நானெல்லாம் 442 மார்க் தான் எடுத்தேன்..
இப்ப என்ன கெட்டு போச்சி..! "

" அட நீ வேற தம்பி... நான் சொன்னது
+2 மார்க்கு...! "

" ஹி., ஹி., ஹி..... நான் சொன்னதும்
+2 மார்க் தான்ணே..! "

" ??!??!?!?!?!?! "
.
.

6 Comments:

Madhavan Srinivasagopalan said...

+2 மார்க்கு.. = 2 marks only. (Needless to mention '+' sign for positive integer. It is implied.)

ஜீவன் சுப்பு said...

ஹா ஹா ..

Aba said...

Sir, this is a humble feedback. I 'was' a great fan of ur humorous posts. But for the last few months, ur posts are more frequent (which is a good thing) and are also more template. ur current posts are not naturally humorous, its like trying make people laugh. The comments are also (as usual, but more than usual) in a template. Please try to change this.

வெங்கட் said...

@ Abarajithan.,

உங்க Feedback-க்கு ரொம்ப நன்றி..
நீங்க சொல்றது ஒரு விதத்துல
உண்மை தான்.. ஏன் இப்படி ஆச்சுன்னு
யோசிச்சி பார்த்தேன்..

இப்பல்லாம் நிறைய நேரம்
ஃபேஸ்புக்ல தான் இருக்கேன். அங்கே
ஸ்டேடஸ் அப்டேட் தினமும் இருக்கு..

இந்த போஸ்ட்.. இதுக்கு முந்தின போஸ்ட்.. இன்னும் 4 -5 போஸ்ட் எல்லாம் ஃபேஸ்புக்ல ஸ்டேடஸா போட்டது தான்..

அதை இங்கே போஸ்ட்டா போடும்போது நீங்க சொன்ன மாதிரி டெம்ப்ளேட்டா இருக்கற மாதிரி தான் தெரியுது...

ஆனா.. ப்ளாக்குக்காக தனியா எழுதும் போது இப்படி இருக்காதுன்னு நினைக்கிறேன்.. பார்ப்போம்..

:)

Aba said...

Thanks a lot for considering my views sir. Keep writing..

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று வலைச்சர அறமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-3.html?showComment=1391564693744#c2417608614007617440

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-