சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

14 April 2011

நாலு பேர் சந்தோஷமா இருக்கணும்னா..!


டிஸ்கி : இது ஒரு ஸ்பெஷல் பதிவு.

நான் வருஷம் தவறாம சித்திரை 1
அன்னிக்கு விநாயகர் கோவிலுக்கு
போறது என் வழக்கம்..

விநாயகர் எனக்கு கடவுள் மட்டுமல்ல.,
அவர் என் குரு., என் Friend..

இந்த வருஷம் என்ன நடந்ததுன்னா..

" ஹாய் விநாயகா.. எப்படி இருக்க.? "

" வந்துட்டியா.? சித்திரை 1 வர்றதுக்கில்ல..
உன் தொல்லையும்., சன் டிவிக்காரன்
தொல்லையும் தாங்க முடியல.. "

" ரொம்ப சலிச்சிக்கறியே.. நான் என்ன
தினமுமா உன்னை தொந்தரவு பண்றேன்..?
வருஷம் ஒரு தடவை. அதுவும்
என் Birthday அன்னிக்கு மட்டும் தானே..!! "

" ஆமாண்டா.. ஆனா அந்த ஒரு நாள்லயே
வருஷத்துக்கு ஆகற மாதிரி லிஸ்ட்
ஒப்பிச்சிட்டு போயிடறியே.. "

"ஏதோ என்னோட சின்ன சின்ன ஆசைகள்
உன்கிட்ட சொல்றேன்...அதை போயி... "

" போன வருஷம் " என்னை அமெரிக்க
ஜனாதிபதியாக்குன்னு " கேட்டியே அது
சின்ன ஆசையாடா..? "

" ஹி., ஹி., அது கொஞ்சூண்டு பெரிய
ஆசைதான்.. ஏன்.. நான் ஆகக்கூடாதா..? "

" நீதான் ஒரு வார்டு மெம்பர் Election-ல
கூட நிக்க மாட்டேங்குற... அப்புறம்
ஏன்டா என்னை தொந்தரவு பண்ற..? "

" சரி., சரி., அதை விடு.. போன வருஷம்
என் பிளாக்குக்கு 500 Followers வேணும்னு
சொன்னேனே.. ஏன் சேர்த்து விடல..? "

" நீ ஈஸியா சொல்லிட்டு போயிட்ட.,
நான் யாராவது பிளாக்கர் கனவுல போயி
உனக்கு Follower-ஆ சேர சொன்னா..
அடுத்த நாள்ல இருந்து என் கோவிலுக்கு
அவங்க வர மாட்டேங்குறாங்கடா.. "

" அப்ப நீ ஒருத்தரை கூட சேர்த்து விடலையா..?
உன் கூட " கா "... "

" என்னடா இப்படி சொல்லிட்ட.,
அந்த 300 Followers-ல நான் தான்டா
100 டம்மி ஐ.டில உனக்கு Follower-ஆ
சேர்ந்து இருக்கேன்..!! "

" உஷ்..!! இதெல்லாம் சத்தம் போட்டு
சொல்லக்கூடாது..!! என் இமேஜ் பாதிக்கும்..!! "

" டேய் அடங்குடா..!! சரி., இந்த வருஷம்
என்னடா லிஸ்ட் வெச்சு இருக்க..? "

" இந்த வருஷம் லிஸ்ட் எதுவும் இல்ல.. "

" பின்ன..? "

" எல்லா மக்களையும் சந்தோஷமா
வெச்சுக்க.. அது போதும்.. "

" அது என்னால முடியாது.. உன்னால
தான் முடியும்.. "

" புரியலையே.. "

" நீ பிளாக் எழுதறதை நிறுத்து.. அது போதும்..! "

" கிர்ர்ர்ர்ர்ர்ர்..!! "

பின் டிஸ்கி : 300வது Follower-ஆ சேரணும்னு
இவ்ளோ நாளா Wait பண்ணி 300வது Follower-ஆ
Join பண்ணின Samhitha-க்கு வாழ்த்துக்கள்..!!
.
.

62 Comments:

கலாநேசன் said...

300க்கு வாழ்த்துக்கள்.

சேலம் தேவா said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் தல..!!

ராஜி said...

" நீ பிளாக் எழுதறதை நிறுத்து அது போதும்..! "
>>>>>>>>>>>
விநாயகருக்கு நன்றி! நன்றி !
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

வைகை said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்... போலிசுக்கு ஒரு ஓசி சோறு பார்சல்!

சி.பி.செந்தில்குமார் said...

300 வது ஃபாலோயர்க்கு இது தான் முத பிளாக் ஃபாலோ அப் போல.. பாவம்.. ஹி ஹி ( எனக்கென்னவோ நீங்களே கிரியேட் பண்ணி டுமீல் விடறீங்க போல )

சி.பி.செந்தில்குமார் said...

>>சேலம் தேவா said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் தல..!!

என்னது தலயா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Suresh Kumar M said...

திரு.வெங்கட்,
உங்களை எதுக்கு follow பண்ணனும்?!... நீங்க என்ன போபர்ஸ் ஊழல கலந்துகிட்டேன்களா?... இல்ல ஹவால மோசடியில கலந்துகிட்டேன்களா?... இல்ல 2G ஊழலையவது பங்கேடுதிங்களா?... அவனவன் கடமைய (வோட்டு) செய்யவே காந்திய எதிர்பாக்குறான், நீங்க எனடானா!?!?... கட்சிகாரங்க தரமாதிரி நீங்களும் ஒரு follower'ருக்கு எதாவது செஞ்சிங்கன லட்சக்கணக்கான follower'sஆ உங்களுக்காக நான் கூடிட்டுவரேன்... இதுக்குப்போய் பிள்ளையார்கிட்ட பேசிகிட்டு!?!?... ஹய்யோ... ஹய்யோ...

மாலா said...

Happy Birth Day !!!!

Vijay Anand said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் & தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
அந்த ராமராஜன் ஷர்ட் எங்க, எந்த கடைல இருக்கு ?

Raja=Theking said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ரசிகன் said...

பிறந்த நாள் சிறந்த நாளாக அமைய வாழ்த்துக்கள்.
சித்திரைத் திரு நாள் நல் வாழ்த்துக்கள்...

Mohamed Faaique said...

///டிஸ்கி : இது ஒரு ஸ்பெஷல் பதிவு.///
இது ஒரு பதிவு’னு சொன்னாலே vas தவிர வேறு யாரும் நம்ப மாட்டாங்க....

///நான் வருஷம் தவறாம சித்திரை 1
அன்னிக்கு விநாயகர் கோவிலுக்கு
போறது என் வழக்கம்..//
அன்றுதான் உங்க ஊர் கோயில்’ல அன்னதானம்’ஆ?

///" வந்துட்டியா.? சித்திரை 1 வர்றதுக்கில்ல..
உன் தொல்லையும்., சன் டிவிக்காரன்
தொல்லையும் தாங்க முடியல.. "///

அவருக்காவது பரவாயில்ல.. சித்திரை 1 மாத்திரம்தான். நம்மளுக்கு, வருடம் பூரா வந்து தொல்லை குடுக்குரீங்களே!!

Mohamed Faaique said...

///
" ரொம்ப சலிச்சிக்கறியே.. நான் என்ன
தினமுமா உன்னை தொந்தரவு பண்றேன்..?
வருஷம் ஒரு தடவை. அதுவும்
என் Birthday அன்னிக்கு மட்டும் தானே..!! "///

ஆமா!!! 70 வருசமா அவர தொந்தரவு குடுத்தா, அவருக்கு சலிப்பு வராதா?

///போன வருஷம் " என்னை அமெரிக்க
ஜனாதிபதியாக்குன்னு " கேட்டியே அது
சின்ன ஆசையாடா..? "

" ஹி., ஹி., அது கொஞ்சூண்டு பெரிய
ஆசைதான்.. ஏன்.. நான் ஆகக்கூடாதா..? "

" நீதான் ஒரு வார்டு மெம்பர் Election-ல
கூட நிக்க மாட்டேங்குறியேடா.. அப்புறம்
எதுக்குடா என்னை தொந்தரவு பண்ற..? "

" சரி., சரி., அதை விடு.. போன வருஷம்
என் பிளாக்குக்கு 500 Followers வேணும்னு
சொன்னேனே.. ஏன் சேர்த்து விடல..? "///
அதுக்கு நீங்க ஒரு பதிவு கூட எழுத மாட்டேங்குரீங்களே!!!! அப்புறம் ஏன் தொந்தரவு பண்ரீங்க?

Mohamed Faaique said...

//" எல்லா மக்களையும் சந்தோஷமா
வெச்சுக்க.. அது போதும்.. "

" அது என்னால முடியாது.. உன்னால
தான் முடியும்.. "

" புரியலையே.. "

" நீ பிளாக் எழுதறதை நிறுத்து அது போதும்..! "///

ரிப்பீட்டு

///பின் டிஸ்கி : 300வது Follower-ஆ சேரணும்னு
இவ்ளோ நாளா Wait பண்ணி 300வது Follower-ஆ
Join பண்ணின Samhitha-க்கு வாழ்த்துக்கள்..!!///

இவ்ளோ நாள் இருந்த பொண்ணு. இன்னும் 500வது, 600வது’னு காலம் கடத்தி இருக்கலாம். பாவம். வெங்கட் குடுக்குர இலவச சேலை, ட்.வி’ய நம்பி Follower ஆயிடுச்சு... ஆழ்ந்த அனுதாபங்கள்...

Mohamed Faaique said...

70வது பிறந்த தின வாழ்த்துக்கள்.
உங்க ப்லாக்’ல இருக்குற நீல வண்ண ராமராஜன் கலர் சட்டையில் சுமார் 40 வயசுல போட்டோல இருக்குரது உங்களுடைய எந்த மகனுடையது ஸார்? கோகுல்? சூர்யா?

அருண் பிரசாத் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல....

http://terrorkummi.blogspot.com/2011/04/blog-post.html

உங்களை வாழ்த்தி (அட நம்புங்க) பதிவு போட்டு இருக்கேன்.... வந்து மரியாதையை ஏத்துக்கோங்க

Uma said...

பிறந்தநாள் & தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

Chitra said...

HAPPY BIRTHDAY, Venkat!

Jaleela Kamal said...

300 க்கு வாழ்த்துக்கள், இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Sen22 said...

பிறந்தநாள் & தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் Boss..

samhitha said...

//நீ பிளாக் எழுதறதை நிறுத்து அது போதும்..!//
ha ha avarukke therinjirukku pola ;)

//300வது Follower-ஆ சேரணும்னு
இவ்ளோ நாளா Wait பண்ணி 300வது Follower-ஆ
Join பண்ணின Samhitha-க்கு வாழ்த்துக்கள்..!!//
tnk u tnk u tnk u!!

//இவ்ளோ நாள் இருந்த பொண்ணு. இன்னும் 500வது, 600வது’னு காலம் கடத்தி இருக்கலாம். பாவம். வெங்கட் குடுக்குர இலவச சேலை, ட்.வி’ய நம்பி Follower ஆயிடுச்சு.//

:( கொஞ்சம் யோசிச்சி இருக்கலாமோ??
அச்சோ அப்போ அதெல்லாம் தர மாட்டாரா???
வெங்கட் faaique சொல்றது பொய்னு நிரூபிக்க என்ன பண்ண போறீங்க??
அந்த n-series mobile ;) ha ha ha
இல்ல blackberry கூட ஓகே தான்... ;)

//இது தான் முத பிளாக் ஃபாலோ அப் போல...//
ஆமா செந்தில் சார், கடைசியும் இது தான்...
வெங்கட் ப்ளாக்-கு பக்கத்துல எதுவுமே நிக்க முடியாது!!
(ஓவரா இருக்கோ??? :D)

வெங்கட் என்னே உங்க பெருந்தன்மை !!
VKS கூட உங்க பிறந்த நாளைக்கு சந்தோஷமா இருக்கணும்னு உங்கள நீங்களே கலாய்ச்சி போஸ்ட் போடுறீங்களே!!chanceless!!

wish u a very happy b'day to u !!
may god always give you
peace in ur mind
smile n ur lips
money n ur pocket(அப்போவாவது கிப்ட் தருவீங்க இல்ல ;))
power n ur hands
love n ur heart

TERROR-PANDIYAN(VAS) said...

@ரசிகன்

/பிறந்த நாள் சிறந்த நாளாக அமைய வாழ்த்துக்கள்.//

எங்க தல பிறந்ததால இந்த நாள் ஏற்கனவே சிறந்த நாளா மாறிடுத்து... :)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ விநாயகர்

//" நீ ஈஸியா சொல்லிட்டு போயிட்ட.,
நான் யாராவது பிளாக்கர் கனவுல போயி
உனக்கு Follower-ஆ அவங்கள சேர சொன்னா..
அடுத்த நாள்ல இருந்து என் கோவிலுக்கு
வர மாட்டேங்குறாங்க.. "
//

VKS குழுமத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ venkat

//" என்னடா இப்படி சொல்லிட்ட.,
அந்த 300 Followers-ல நான் தான்டா
100 டம்மி ஐ.டில உனக்கு Follower-ஆ
சேர்ந்து இருக்கேன்..!! "
//

இப்படி சொன்னா மத்த 200 பேரும் டம்மி ஐ.டி. இல்ல, உண்மையான followers-னு நாங்க நம்பிடுவோமா?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பின் டிஸ்கி : 300வது Follower-ஆ சேரணும்னு
இவ்ளோ நாளா Wait பண்ணி 300வது Follower-ஆ
Join பண்ணின Samhitha-க்கு வாழ்த்துக்கள்..!!
//

அவங்க ஜாதகத்தில இப்பதான் சனி உச்சத்துல இருக்காரு போலிருக்கு! ஐயோ பாவம்!

அருண் பிரசாத் said...

//வருஷம் ஒரு தடவை. அதுவும்
என் Birthday அன்னிக்கு மட்டும் தானே..//

//300வது Follower//

ஏன் இந்த வெத்து தனக்கு தானே விளம்பரம்?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

" நீ ஈஸியா சொல்லிட்டு போயிட்ட.,
நான் யாராவது பிளாக்கர் கனவுல போயி
உனக்கு Follower-ஆ அவங்கள சேர சொன்னா..
அடுத்த நாள்ல இருந்து என் கோவிலுக்கு
வர மாட்டேங்குறாங்க.. "

" அப்ப நீ ஒருத்தரை கூட சேர்த்து விடலையா..?
உன் கூட " கா "... "

" என்னடா இப்படி சொல்லிட்ட.,
அந்த 300 Followers-ல நான் தான்டா
100 டம்மி ஐ.டில உனக்கு Follower-ஆ
சேர்ந்து இருக்கேன்..!! "

he.......he........

sema comedy....

and new year wishes nanpaa!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Gokulaththil sooriyaa...

please visit my area

Mahan.Thamesh said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் .
பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்களின் 301 வது
நபராக நான் இணைந்துள்ளேன் ;
எனது முகவரி http://mahaa-mahan.blogspot.com/

Uma said...

ஏன் இந்த வெத்து தனக்கு தானே விளம்பரம்?//

அருண், நான் கேக்கணும்னு நினைச்சேன், நீங்க கேட்டுட்டீங்க.

வெங்கட் said...

எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சொன்ன அனைவருக்கும் என்
அன்பு கலந்த நன்றிகள்..!!

எல்லோருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

வெங்கட் said...

@ ராஜி.,

// " நீ பிளாக் எழுதறதை நிறுத்து
அது போதும்..! " //

// விநாயகருக்கு நன்றி! நன்றி ! //

ஆமா.. ஒரு விஷயம் கேள்விப்பட்டேனே..

உங்க பிளாக் புகழ் மேல் லோகம்
வரைக்கும் பரவி இருக்காம்..!!

நரகத்துல அதிகபட்ச தண்டனையே
உங்க பிளாக்கை படிக்க வெக்கிறது
தானாம்... இதை எனக்கு விநாயகர்
தான்பா சொன்னாரு..!!

HVL said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Madhavan Srinivasagopalan said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள், நண்பரே..

Shalini(Me The First) said...

நீ உதித்ததால் இந்நாளை
தமிழன் தலை நிமிர்வாய்
புத்தாண்டாய் கொண்டாடுகிறானோ!

தமிழ் வாழும் வரை நிவீரும் வாழ்க
வளமனைத்தும் பெற்று!

என்றும் அழியா தமிழே
நீயும் வாழ்த்து உன் தலைமகனை!

வெங்கட் said...

@ சி.பி.,

// 300 வது ஃபாலோயர்க்கு இது தான்
முத பிளாக் ஃபாலோ அப் போல..
( எனக்கென்னவோ நீங்களே கிரியேட்
பண்ணி டுமீல் விடறீங்க போல ) //

அப்பாடா.. மீதி 299 Followers மேல
இவருக்கு எந்த சந்தேகமும் வரலை..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Shalini(Me The First) said...
நீ உதித்ததால் இந்நாளை
தமிழன் தலை நிமிர்வாய்
புத்தாண்டாய் கொண்டாடுகிறானோ!

தமிழ் வாழும் வரை நிவீரும் வாழ்க
வளமனைத்தும் பெற்று!

என்றும் அழியா தமிழே
நீயும் வாழ்த்து உன் தலைமகனை!
//

ரொம்ப நாளா ஆளையே காணோம், வெங்கட் காசு அனுப்ப மறந்துட்டாரா?
இப்ப கூவறத பார்த்தா, அடுத்த ஜன்மத்துக்கும் சேர்த்து செக் அனுப்பிட்டாரு போலிருக்கு!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெங்கட் said...

அப்பாடா.. மீதி 299 Followers மேல
இவருக்கு எந்த சந்தேகமும் வரலை..
//

பதிவுலதான் உங்களை நீங்களே வாரிக்கறீங்கன்னு பார்த்தா, பின்னூட்டத்திலும் எங்கள் வேளையில் தலையிடுகிறீர்கள்!இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//வெங்கட் said...
@ ராஜி.,

நரகத்துல அதிகபட்ச தண்டனையே
உங்க பிளாக்கை படிக்க வெக்கிறது
தானாம்... இதை எனக்கு விநாயகர்
தான்பா சொன்னாரு..!!
//

அப்போ நரகத்துல கூட வெங்கட் ப்ளாகைப் படிக்கிறதில்லையா? அவ்ளோ மோசமாவா எழுதறாரு?

suthan said...

பிறந்தநாள் & தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

வெங்கட் said...

@ விஜய்.,

// அந்த ராமராஜன் ஷர்ட் எங்க,
எந்த கடைல இருக்கு ? //

அந்த பிங்க் கலர் சட்டையா..?

அது Imported From France..
இந்தியாவுல எல்லாம் கிடைக்காது..

nellai அண்ணாச்சி said...

300 ------- 3000 ஆக வாழ்த்துக்கள்

வெங்கட் said...

@ சுரேஷ்.,

// கட்சிகாரங்க தரமாதிரி நீங்களும்
ஒரு follower'ருக்கு எதாவது செஞ்சிங்கன
லட்சக்கணக்கான follower'sஆ உங்களுக்காக
நான் கூடிட்டுவரேன்... //

No., இப்படி காசு குடுத்து Followers
சேர்க்கணுமா..? அது எங்களுக்கு
வேணாம்..!!

( Mind Voice.. )
இப்பவே மாச பட்ஜெட் 3 லட்சத்தை
தொடுது ( 300 x Rs 1000 ).. இதுல
லட்சக் கணக்கான Followers வேறயா..??

வெங்கட் said...

@ Mohamed.,

// இது ஒரு பதிவு’னு சொன்னாலே VAS
தவிர வேறு யாரும் நம்ப மாட்டாங்க. //

" உலகம் உருண்டைன்னு " சொன்னப்ப
கூடத்தான் ஆரம்பத்துல யாரும் நம்பல..
அதுக்காக உலகம் உருண்டை இல்லன்னு
ஆயிடுமா.?!

// அன்றுதான் உங்க ஊர் கோயில்’ல
அன்னதானம்’ஆ? //

கரெக்டா சொல்றீங்களே.. என் பிறந்த நாளை
முன்னிட்டு சிறப்பு அன்னதானம் VAS
சார்பா செய்யறோம்..

ராஜி said...

வெங்கட் said...

@ ராஜி.,

// " நீ பிளாக் எழுதறதை நிறுத்து
அது போதும்..! " //

// விநாயகருக்கு நன்றி! நன்றி ! //

ஆமா.. ஒரு விஷயம் கேள்விப்பட்டேனே..

உங்க பிளாக் புகழ் மேல் லோகம்
வரைக்கும் பரவி இருக்காம்..!!

நரகத்துல அதிகபட்ச தண்டனையே
உங்க பிளாக்கை படிக்க வெக்கிறது
தானாம்... இதை எனக்கு விநாயகர்
தான்பா சொன்னாரு
>>
ரொம்ப கரெக்ட் அனால், நரகத்துல கூட உங்க பிளக்கு தகுதி இல்லைனு வெளிய தள்ளிட்டதா கேள்விப்பட்டேன்.

வெங்கட் said...

@ அருண்.,

// உங்களை வாழ்த்தி (அட நம்புங்க)
பதிவு போட்டு இருக்கேன்....
வந்து மரியாதையை ஏத்துக்கோங்க //

உங்க வாழ்த்து பதிவை ஏத்துக்கிட்டு
உங்களுக்கு நல்லா ட்ரீட் கொடுக்க
போறேன்.. (அட நம்புங்க )

வெங்கட் said...

@ Mohamed.,

// அதுக்கு நீங்க ஒரு பதிவு கூட
எழுத மாட்டேங்குரீங்களே!!!! //

உங்களுக்கெல்லாம் பயம் விட்டுடுச்சு..

வாரம் ரெண்டு பதிவு எழுதிட்டு
இருக்கும் போதே இப்படி இருக்கு,,

ம்ம்.. பழையபடி தினமும் ஒரு பதிவு
போட வேண்டியது தான் போல...

Vijay Anand said...

//@ விஜய்.,

// அந்த ராமராஜன் ஷர்ட் எங்க,
எந்த கடைல இருக்கு ? //

அந்த பிங்க் கலர் சட்டையா..?

அது Imported From France..
இந்தியாவுல எல்லாம் கிடைக்காது..//

I am in Singapore, Is it available ? or Only in France.

karthikkumar said...

வாழ்த்துகள் தல .....:))

karthikkumar said...

Shalini(Me The First) said...
நீ உதித்ததால் இந்நாளை
தமிழன் தலை நிமிர்வாய்
புத்தாண்டாய் கொண்டாடுகிறானோ!

தமிழ் வாழும் வரை நிவீரும் வாழ்க
வளமனைத்தும் பெற்று!

என்றும் அழியா தமிழே
நீயும் வாழ்த்து உன் தலைமகனை!////இதை எழுதி வாங்கத்தான் அங்க மண்டபத்துல ஒருத்தர்கிட்ட சண்ட போட்டுட்டு இருந்தீங்கலாம்?.....:))

அப்பாவி தங்கமணி said...

//என் Birthday அன்னிக்கு மட்டும் தானே//
ஹாப்பி பர்த்டே'ங்க... :)))

//என்னை அமெரிக்க ஜனாதிபதியாக்கு//
அவர் பொழப்பு பாத்தா பாவமா இருக்குங்க...அதுக்கு நாம ப்ளாக்'ஏ எழுதலாம்...ஹா ஹா...;))

//நீ பிளாக் எழுதறதை நிறுத்து அது போதும்//
ஹா ஹா... என்கிட்டயும் நெறைய பேர் இதை சொல்றாங்க... but you know what? எனக்கு அந்த சமயத்துல மட்டும் selective-hearing'asia வந்துடுது... அதையே நீங்களும் maintain பண்ணுங்க...;)))

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// அந்த n-series mobile ;) ha ha ha
இல்ல blackberry கூட ஓகே தான்... ;) //

Blackberry..? What is Blackberry.?
எனக்கு ஸ்ட்ராபெர்ரி தான் தெரியும்..
அதுல வேணா ஒரு கிலோ வாங்கி
அனுப்பவா.?!!

// வெங்கட் ப்ளாக்-கு பக்கத்துல
எதுவுமே நிக்க முடியாது!!
(ஓவரா இருக்கோ??? :D) //

நோ.. நோ.. இப்ப தான் கரெக்ட்டா
இருக்கு.. ( 6 மாச Training-ல.. )

// money n ur pocket ( அப்போவாவது
கிப்ட் தருவீங்க இல்ல ;)) //

பர்த்டே எனக்குங்க. நான் Treat
தர்றேன்.. நீங்க தான் Gift குடுக்கணும்..

தேதி : 17.4.2011., 6.30 PM
இடம் : Taj Hotel, Mumbai..

மறக்காம கிப்டோட வந்துடுங்க..

வெங்கட் said...

@ டெரர்.,

// எங்க தல பிறந்ததால இந்த நாள்
ஏற்கனவே சிறந்த நாளா மாறிடுத்து... :) //

நன்றி டெரர்..!! பாத்தே ரொம்ப நாள்
ஆகுது.. ரொம்ப பிஸியோ..?

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// இப்படி சொன்னா மத்த 200 பேரும்
டம்மி ஐ.டி. இல்ல, உண்மையான
followers-னு நாங்க நம்பிடுவோமா?//

அந்த 200 பேர்ல VKS-காரங்க 6 பேர்.
அப்ப அந்த 6 ஐ.டி.யும் டம்மியா..?

" VKS ஒரு டம்மி பீஸ்னு " நாங்க
சொன்னப்ப நம்பாதவங்க., இப்ப
அதை தாராளமா நம்பலாம்..

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// அவங்க ஜாதகத்தில இப்பதான் சனி
உச்சத்துல இருக்காரு போலிருக்கு! //

சனி.. You mean Saturday..?

அப்படியே Sunday, Monday, Tuesday
எல்லாம் எங்கே இருக்குன்னு பாத்து
சொன்னா நல்லா இருக்கும்..

எந்த மரத்தடியில உக்காந்துட்டு
புது பிஸினஸ் ஆரம்பிச்சு இருக்கீங்க..?!

வெங்கட் said...

@ அருண் & உமா.,

// ஏன் இந்த வெத்து தனக்கு
தானே விளம்பரம்? //

இதுல என்ன விளம்பரம் இருக்கு..?!

நேருஜி தன்னோட பிறந்த நாள்
எதுன்னு சொல்லாம மனசுக்குள்ளயே
வெச்சிருந்தா இப்ப நாம " குழந்தைகள்
தினம் " கொண்டா முடியுமா..!!

வெங்கட் said...

@ ஷாலினி.,

// நீ உதித்ததால் இந்நாளை
தமிழன் தலை நிமிர்வாய்
புத்தாண்டாய் கொண்டாடுகிறானோ!

தமிழ் வாழும் வரை நிவீரும் வாழ்க
வளமனைத்தும் பெற்று!

என்றும் அழியா தமிழே
நீயும் வாழ்த்து உன் தலைமகனை! //

வாரே.. வா..!!

உங்க கவிதைக்கு நன்றி..!!

@ To All.,

யாரோ " தாமரைன்னு " ஒரு பொண்ணு
நல்ல நல்ல கவிதை / சினிமா பாட்டு
எல்லாம் எழுதறாங்களாமே.. இப்ப
அவங்க கூட போட்டி போட எங்ககிட்ட
ஒரு திறமைசாலி ரெடி..!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// ரொம்ப நாளா ஆளையே காணோம் //

ஷாலினி கிட்ட அடி வாங்க எவ்ளோ
ஆர்வமா இருக்கீங்க.. இருங்க Exams
முடியட்டும்.. வந்து பட்டைய கிளப்புவாங்க..

samhitha said...

//மறக்காம கிப்டோட வந்துடுங்க..//
ok ok sureeeee apram idhaan gifta?:P nu keka kudadhu k?
aama "vaanga, vaanga" nu sollitu flight ticket tharalena epdi??
seekiram anuppunga!!

//Blackberry..? What is Blackberry.? //
k np neenga kaasu kudunga naane vaangikiren
epdi cash? or DD?
hope u remember my a/c no ;)

வெங்கட் said...

@ விஜய்.,

// I am in Singapore, Is it available ?
or Only in France. //

அந்த பிங்க் கலர் சட்டை.,
இப்போதைக்கு France-ல மட்டும்
தான் Fashion-ஆ இருக்கு..

நான் இப்ப தானே அதை போட்டிருக்கேன்..
அது இனிமே உலக Fashion அயிடும்..
ஒரு ரெண்டு மாசம் பொறுங்க..

வெங்கட் said...

@ கார்த்தி.,

// இதை எழுதி வாங்கத்தான் அங்க
மண்டபத்துல ஒருத்தர்கிட்ட சண்ட
போட்டுட்டு இருந்தீங்கலாம்?.....:)) //

சே.. சே... மொய் பணம் Collect பண்ண
பையை ஆட்டைய போட்டுட்டு ஓடும்
போது.. மண்டபத்துல Friend-கிட்ட
யாராவது தமாஷா பேசிட்டு இருந்தா
இப்படிதான் தோணும் போல..

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// k np neenga kaasu kudunga naane
vaangikiren epdi cash? or DD? //

No Problem.. Cash-ஆவே குடுத்திடறேன்..

ஆமா அந்த Blackberry பழம் கிலோ
எவ்வளவு..? ஒரு 111 ரூபா இருக்குமா..?