மங்குனிகிட்ட இருந்து போன்..
" ஹலோ., வெங்கட் என்ன பண்ணிட்டு
இருக்க..?! "
" இப்பத்தான் லஞ்ச் முடிச்சிட்டு
வர்றேன்.! "
" இப்பத்தான் சமைச்சிட்டு வர்றேன்னு
சொல்லு..! "
" நோ.,நோ., சாப்பிட்டுட்டு வர்றேன்..! "
" சமைக்காத மாதிரியே பேசறான்யா..!
ஆமா.. லஞ்சுக்கு என்ன ஸ்பெஷல்..? "
" வஞ்சரம் மீன் குழம்பு..! "
" சேலத்துல வஞ்சரம் மீனா..?
ஆச்சரியமா இருக்கே..!!! "
" இது மேட்டூர் Dam வஞ்சரம்..! "
" என்னாது வஞ்சரம் மீன் Dam-லயா.???!
" ஏன் இருக்காதா..? "
" ம்ஹூம்... அது கடல் மீன்யா
Dam-ல எல்லாம் வளராது..! "
" ஆஹா ஏமாத்திட்டானுகளா..?!! "
" இதுக்குதான் மீன் வாங்கும்போதே
ஒரிஜினல் வஞ்சரமான்னு செக் பண்ணி
வாங்கணும்கறது..! "
" அது எப்படி செக் பண்றது..?!! "
" அப்படி கேளு..."
" சரி சொல்லுங்க..! "
" நல்லா நோட் பண்ணிக்க.. இனிமே
எப்ப மீன் வாங்கினாலும் முதல்ல
அதை ஒரு கையில தூக்கி..."
" ம்ம்...! "
" அது மூஞ்சிக்கு நேரா கேளு..
What is Your Name..? "
" ??!!?!!?!?!?!?! "
( ஐயோ ராமா..! என்னை ஏன் இந்த மாதிரி
பசங்ககூட எல்லாம் கூட்டுசேர வைக்கிற.? )
.பசங்ககூட எல்லாம் கூட்டுசேர வைக்கிற.? )
. Tweet
28 Comments:
////நேத்து மதியம் 3 மணிக்கு
மங்குனிகிட்ட இருந்து போன்..///
இதுவர நீங்க சொந்த செலவுல போன் பண்ணினதா சரித்திரமே கிடையாதா????
///" ஹலோ., வெங்கட் என்ன பண்ணிட்டு
இருக்க..?! "///
சாப்பிடுவாரு... இல்ல.. தூங்குவாரு...
///" இப்பத்தான் சமைச்சிட்டு வர்றேன்னு
சொல்லு..! "
" நோ.,நோ., சாப்பிட்டுட்டு வர்றேன்..! " ///
சமையல் முன்னாடியே முடிஞ்சுது... இப்போ சாப்பிட்டுட்டு வர்ராரு,...
@ Mohamed.,
// இதுவர நீங்க சொந்த செலவுல
போன் பண்ணினதா சரித்திரமே
கிடையாதா???? //
ஆஹா.. எதையெல்லாம் நோட்
பண்றாங்க.!? அடுத்த பதிவுல
மாத்திட வேண்டியது தான்..!
///
" ஏன் இருக்காதா..? "
" ம்ஹூம்... அது கடல் மீன்யா
Dam-ல எல்லாம் வளராது..! "
" ஆஹா ஏமாத்திட்டானுகளா..?!! "///
ஒரு வேளை கடல்ல டேம் கட்டினா????
///
" அது மூஞ்சிக்கு நேரா கேளு..
What is Your Name..? "
" ??!!?!!?!?!?!?! "////
நம்ம ஊரு மீனுக்கு இங்கிலீசு தெரிஞ்சிருக்குமா மை லாட்????
ஹா ஹா ஹா....
:-)
Nalla velai...nenga nandunnu-athanga crabe-nu
sollalai....
Appadi crabe kitta
per kettirunthaa.....
Enna aairukkum...????
Ulagathileye oru
azhgana...
Aal namakku
kidaichiruppar.....
Vadai pochee.....!!!!!
மங்குனி அமைச்சரை 2 நவம்பர் 2011அப்புறம் காணோம் ரொம்ப பீலிங்கா இருந்தது.
இன்று உங்கள் வலையில் மீனுடன் - செம செம.
மங்குனி ஒரு ஐடியா குடோன்றத அப்பப்பப நிரூக்கறாரு... :)
யோவ்... என்னோட கமண்ட ஸ்பேம்ல போட்டுட்டீரே????
#சரி... நான் ராவுல வந்து குத்துறேன்...
:-)
@ Mohamed.,
// ஒரு வேளை கடல்ல டேம் கட்டினா???? //
இதை இதை தான் எதிர்பார்த்தேன்..!
உங்களை மாதிரி நாலு பேர்..
வேணாம் நீங்க ஒருத்தர் மட்டும்
தமிழ்நாட்ல இருந்திருந்தா இந்த
முல்லை பெரியாறு பிரச்னை,
காவேரி பிரச்னை எல்லாம் வந்தே
இருக்காது..!!
@ நாய் நக்ஸ்.,
// Ulagathileye oru azhgana...
Aal namakku kidaichiruppar..... //
ஓ.. இன்னிக்கு உங்க ப்ளாக்ல
உங்களோட அழகான ஒரு போட்டோ
பார்த்தேன்.. அப்ப உங்க அழகின் ரகசியம்
நண்டு கடி தானா...?
@ மனசாட்சி.,
// மங்குனி அமைச்சரை 2 நவம்பர் 2011
அப்புறம் காணோம் ரொம்ப பீலிங்கா
இருந்தது. //
மங்குனி ப்ளாக்கை விட்டு Retire
ஆகிவிட்டார்.. இப்போதெல்லாம்
எங்கும் கமெண்ட் கூட போடுவதில்லை
( கை நடுங்குகிறதாம்..! )
அவர் ப்ளாக் வரும் ஜனவரி 2-ம் தேதி
ஏலத்துக்கு வருகிறது. வேண்டுவோர்
தொடர்பு கொள்க..
@ பன்னிகுட்டி ராமசாமி ( ஏல ஏஜண்ட் )
போன் : 09870000001
ஏலத் தொகை 10 பைசாவில் ஆரம்பிக்கிறது.
இது அதிகம் என்று நினைப்போர்
5 பைசாவில் கூட தொடங்கலாம்.
////நேத்து மதியம் 3 மணிக்கு
மங்குனிகிட்ட இருந்து போன்..////
3 மணிக்கே ஆரம்பிச்சிட்டாரா? (மங்கு எப்பவும் மப்புலதானே போன் பண்ணுவாரு?)
////" ம்ஹூம்... அது கடல் மீன்யா
Dam-ல எல்லாம் வளராது..! "
" ஆஹா ஏமாத்திட்டானுகளா..?!! "//////
அப்போ சமைக்கும் போது கூட தெரியலியா?
/////" அது எப்படி செக் பண்றது..?!! "
" அப்படி கேளு..."
" சரி சொல்லுங்க..! "
" நல்லா நோட் பண்ணிக்க.. இனிமே
எப்ப மீன் வாங்கினாலும் முதல்ல
அதை ஒரு கையில தூக்கி..."//////
தூக்கி......??
////
" அது மூஞ்சிக்கு நேரா கேளு..
What is Your Name..? "
" ??!!?!!?!?!?!?! "////
காதுக்கு நேராத்தானே கேட்கனும், அது என்ன மூஞ்சிக்கு நேரா?
@ வெளங்காதவன்.,
// யோவ்... என்னோட கமண்ட
ஸ்பேம்ல போட்டுட்டீரே???? //
ஆமா இவரு பெரிய வைரமுத்து
அப்படியே " கருவாச்சி காவியம் "
எழுதிட்டாரு.. அதை நாங்க ஸ்பேம்ல
போட்டுட்டோம்..!
" ஹா., ஹா., ஹா..! " -னு ஒரு
டெம்ப்ளேட் கமெண்ட் போட்டதுக்கே
இவ்ளோ அலப்பறையா.?!
லாஞ்சுக்கு போய் பெரிய வஞ்சிரம் மீனை வாங்கி, மெலிசா ஸ்லைஸ் போட்டு, மசாலா தடவி ஊறவச்சி, கடாயில் நெய்யை ஊத்தி, பொரிச்சி(வட சுடுறமாதிரி) சாப்பிட்டு இருக்கீகளா யாராச்சும்...(நோயாளிகள் தவிர்க்கவும்)...
( ஐயோ ராமா..! என்னை ஏன் இந்த மாதிரி
பசங்ககூட எல்லாம் கூட்டுசேர வைக்கிற.? )
இங்கே கழிசடை என்ற வார்த்தை விடுபட்டதை அன்(வம்)போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
( ஐயோ ராமா..! என்னை ஏன் இந்த மாதிரி
பசங்ககூட எல்லாம் கூட்டுசேர வைக்கிற.? )
இங்கே கழிசடை என்ற வார்த்தை விடுபட்டதை அன்(வம்)போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
//What is Your Name..? "//
நான் வெஜ்ஜுங்க..
மங்குனி சார் சொன்னதை நிங்க சொன்னதாகவும், நீங்க சொன்னதை மங்குனி சார் சொன்னதாகவும் மாத்தி போடு ஒரு பதிவை தேத்திட்டீங்களோ
டவுட்டு - மீனுக்கு இங்கிலிபீசு எல்லாம் தெரியுமா????
//அவர் ப்ளாக் வரும் ஜனவரி 2-ம் தேதி
ஏலத்துக்கு வருகிறது. வேண்டுவோர்
தொடர்பு கொள்க..
//
தல நாம வாங்கிப்போடுவோமா ? இந்த VKS காரங்களுக்கு தமிழ் சொல்லிக்குடுக்கலாம்னு அன்னிக்கு பேசிக்கிட்டோமே ?
ஒருதடவ மன்மோகன் சிங் கூட நம்ம ப்ளாக் படிக்கிறதுக்கு தமிழ் கத்துக்குடுங்கனு கெஞ்சிட்டிருந்தாரே ? அதுக்காவது பயன்படும்ல.
ஏன் சொல்லுறேன்னா மங்குனி அண்ணனோட பதிவ காட்டி மிரட்டினா எவ்வளவு கஷ்டப்பட்டாவது தமிழ் கத்துட்டு ஓடிரலாம்னு உயிர் பயம் வரும்ல.. அதான் கேக்குறேன் ?
அப்புறம் நம்மளுக்கு இந்த பணத்தப்பத்திலாம் பிரச்சினை இல்லை. அதுக்குத்தான் நிறைய ஸ்பான்சர்ஸ் இருக்காங்களே (VKS)
"ஹலோ, மங்குனி"
"ஆமா, நான்தான் சொல்லு வெங்கட்"
"நீ சொன்ன மாதிரியே மீன் கடைக்கு போயி ஒரு மீனைப் பார்த்து, What is your nameனு கேட்டேன், பதில் சொல்லலை, நீ என்ன வகை மீன்? அப்படின்னு தமிழ்லையும் கேட்டேன் ஆனாலும் அது பத்தி சொல்லலை. அப்பத்தான் ஒரு உண்மையை புரிஞ்சுகிட்டேன்"
"என்னன்னு?"
"மீனுக்கு காது கேக்காது"
இனிமே மங்குனி வெங்கட்டுக்கு யோசனை சொல்வாரு?
:))
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.
Post a Comment