சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

03 November 2011

Facebook என்ன இளிச்சவாயா.?!














கொஞ்ச நாள் முன்னாடி ஒரு
ப்ளாக்ல ஒரு தத்துவம் படிச்சேன்..

" நன்றி - முகநூல் "-னு போட்டு
இருந்தது..

நானும் சரி முக நூல்னா. அது ஏதோ
அகநானூறு., புறநானூறு மாதிரி
சங்க இலக்கிய நூல் போலன்னு
கம்முன்னு விட்டுட்டேன்..

நேத்து தான் என் Friend ஜனா
சொன்னான்..

முகநூல் = Facebook-னு

அடப்பாவிகளா..

" Facebook is a Social Network..! "

அதாவது அது ஒரு சமூக தளம்..
Facebook-ங்கறது அதோட பெயர்..
பெயரை கூடவா மொழி பேப்பீங்க..?

புல்லரிக்குதுப்பா..!

அப்ப இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்
" Mr. Mark Butcher " -ஐ..

" திரு. மதிப்பெண் கறிக்கடைக்காரர் " னு
தான் சொல்லுவீங்களா...?!

நமக்கு இங்கிலீஷ்காரன் கண்டுபிடிச்ச
பொருள் வேணும்.. - ஆனா அதுக்கு
அவன் வெச்ச பேரு மட்டும் வேணாம்..!

என்னா நியாயம் சார் இது..?

இனிமேலாச்சும் யாரோ கண்டுபிடிச்ச
பொருளுக்கு தமிழ்ல பெயர் வெக்கறதை
விட்டுட்டு.. நாமளா எதாவது கண்டுபிடிச்சி..
அதுக்கு நல்ல தமிழ் பெயரா வெக்கலாம்..

அப்புறமா " நாங்க தமிழன் "னு..!
சட்டை காலரை தூக்கிவிட்டுக்கலாம்.
( ஆமா.. " காலர் "-க்கு தமிழ்ல என்ன..? )

இதுவரைக்கும் நிறைய பேர்
இது பத்தி தெரியாம " முகநூல்" னு
சொல்லியிருப்பீங்க..

பரவாயில்ல..!! இனிமே திருத்திக்கோங்க..!

ஆனா அதை விட்டுட்டு...

" நான் Facebook-ஐ முகநூல்னு தான்
சொல்லுவேன் " னு அடம்பிடிச்சீங்க..
அவ்ளோதான்...

பின்ன அதென்ன சார்.. Facebook
மட்டும்தான் இளிச்சவாயா..?

அப்ப இந்த ORKUT., GOOGLE., PICASA.,
TWITTER.,YAHOO., APPLE., iPhone., Sim Card
இதுக்கெல்லாம் தமிழ்ல என்னான்னு
சொல்லிட்டு போங்க.

ஆங்... மறந்துட்டேனே..
அப்படியே KARATE, Kung-Fu-க்கும்
என்னன்னு சொல்லிடுங்க..
( ஜப்பான், சைனீஸ் மொழி மட்டும்
விதிவிலக்கா என்ன..?!! )
.
.

33 Comments:

வெளங்காதவன்™ said...

//ஆமா.. " காலர் "-க்கு தமிழ்ல என்ன..?////

சட்டை சிண்டு...

வெளங்காதவன்™ said...

//
அப்ப இந்த ORKUT., GOOGLE., PICASA.,
TWITTER.,YAHOO., APPLE, iPhone
இதுக்கெல்லாம் தமிழ்ல என்னான்னு
சொல்லிட்டு போங்க.////

முடியல.... இப்பவே கண்ணக் கட்டுதே!

வெளங்காதவன்™ said...

//ஆங்... மறந்துட்டேனே..
அப்படியே KARATE, Kung-Fu-க்கும்
என்னன்னு சொல்லிடுங்க..///

ஓவராக் கண்ணக் கட்டுதே...

Madhavan Srinivasagopalan said...

"பக்கம் கீழே" -- இது யார/எதை குறிக்கும், தெரியுமா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அய்யா தங்கள் பதிவை கன்டு கன் களன்கினேன். எண் தவரை உணர்ன்துவிட்டேன். தமிள் வால்க

வெங்கட் said...

@ வெளங்காதவன்.,

// ஓவராக் கண்ணக் கட்டுதே... //

கராத்தே, குங்க்ஃபூ பத்தி பேசினதுக்கேவா.?
இன்னும் அதுல ரெண்டு அடி
கொடுத்தா எப்படி இருக்கும்.?!!

வெங்கட் said...

@ மாதவன்.,

// "பக்கம் கீழே" -- இது யார/எதை
குறிக்கும், தெரியுமா ?//

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் Side Bottom.!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// அய்யா தங்கள் பதிவை கன்டு
கன் களன்கினேன். எண் தவரை
உணர்ன்துவிட்டேன். தமிள் வால்க //

ரமேஷூ.., இதை யாரோ ஒன்னாவது
படிக்கிற பையங்கிட்ட எழுதி வாங்கிட்டு
வந்து இருக்கீங்க போல..

அடுத்த தடவை காசு செலவானாலும்
பரவாயில்லன்னு பெரிய கிளாஸ் பசங்ககிட்ட
டிரை பண்ணுங்க.

வெளங்காதவன்™ said...

@சிரிப்பு போலீஸ்-

:-)

வெளங்காதவன்™ said...

//
ரமேஷூ.., இதை யாரோ ஒன்னாவது
படிக்கிற பையங்கிட்ட எழுதி வாங்கிட்டு
வந்து இருக்கீங்க போல..

அடுத்த தடவை காசு செலவானாலும்
பரவாயில்லன்னு பெரிய கிளாஸ் பசங்ககிட்ட
டிரை பண்ணுங்க.//

அதை, எழுதிக் கொடுத்தது, டெரர் பாண்டி என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்(ல்)கிறேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சபாஷ்...


இப்படியெல்லாம் கேள்வி கேட்டா எப்படிங்க..


பதிவுலக அரசியல் இதெல்லாம் சகஜமப்பா...

ஹேமா (HVL) said...

காலர்- அழைப்பவர்
ஆர்குட்- அல்லது நல்லது(or good)
கூகில்- கூவைக் கொல்லு
அல்லது கூ! போய் கொன்றுவிட்டு வா!

ஹேமா (HVL) said...

பிகாஸா- பன்னி காரணமா?(pig causeaa)
யாஹீ - யா என்பது யார்?
iphone- கண் தொலைபேசி அல்லது ஐ! தொலைபேசி

ஹேமா (HVL) said...

ட்விட்டர்- திட்டுபவர்
( twit- scold/insult)
ஆப்பிள்- இது இன்னும் தமிழ் வார்த்தைல சேரலையா?

ஹேமா (HVL) said...

karate, kungfu- ஜப்பானிய மொழியை படித்துவிட்டு சொல்கிறேன்.

குறையொன்றுமில்லை. said...

தமிழுக்கு அமுதென்று பேர்.ஹாஆ

Unknown said...

ஹி.ஹி..ஹி...யாரோ ஒரு புண்ணியவான் Facebook ஐ மூஞ்சிபுத்தகம்னு சொன்னதா ஞாபகம்....

ஆமா முகநூல்ன்னா Facethread தானே....

//இனிமேலாச்சும் யாரோ கண்டுபிடிச்ச
பொருளுக்கு தமிழ்ல பெயர் வெக்கறதை
விட்டுட்டு.. நாமளா எதாவது கண்டுபிடிச்சி..
அதுக்கு நல்ல தமிழ் பெயரா வெக்கலாம்..\\

எப்ப பாஸ் கண்டுபிடிச்சி.. எதை பாஸ் கண்டுபிடிச்சி...எப்படி பாஸ் தமிழ்ல பேர் வக்கிறது...அதுவும் போயும்போயும் நாமளா பாஸ்..ஹி..ஹி..போங்க பாஸ் உங்களுக்கு எப்பவும் விளையாட்டுதான்...

ஸ்வர்ணரேக்கா said...

//நாமளா எதாவது கண்டுபிடிச்சி..
அதுக்கு நல்ல தமிழ் பெயரா வெக்கலாம்..//

அதுக்கு வாய்ப்பு இருக்கறாப்ல்ல தெரியலயே!!!!

பாலா said...

//( ஆமா.. " காலர் "-க்கு தமிழ்ல என்ன..? )//

காலர் - கழுத்துப் பட்டை

முகப்புத்தகம் னு சொல்றதுக்கும் ஆள் இருக்கு...
twitterஐ ’கீச்சு’னு சூப்பரா மொழி பெயர்த்துட்டாங்க நம்ம ஆளுங்க...

Sen22 said...

முடியல.... :)))))

வெங்கட் said...

@ ஹேமா.,

// பிகாஸா- பன்னி காரணமா?(pig causeaa)
யாஹீ - யா என்பது யார்?
iphone- கண் தொலைபேசி அல்லது
ஐ! தொலைபேசி //

யப்பா.. என்னா Translation..!!!!

தமிழை வளர்க்க உங்கள மாதிரி
நாலு பேர்... வேணா வேணா..
நீங்க ஒருத்தரே போதும்னு
நினைக்கிறேன்..

:)

வெங்கட் said...

@ ஏமரா மன்னன்.,

// எப்ப பாஸ் கண்டுபிடிச்சி.. எதை பாஸ்
கண்டுபிடிச்சி...எப்படி பாஸ் தமிழ்ல பேர்
வக்கிறது...அதுவும் போயும்போயும் நாமளா
பாஸ்..ஹி..ஹி..போங்க பாஸ் உங்களுக்கு
எப்பவும் விளையாட்டுதான்... //

&

@ ஸ்வர்ணரேக்கா..
// நாமளா எதாவது கண்டுபிடிச்சி..
அதுக்கு நல்ல தமிழ் பெயரா வெக்கலாம்.. //

// அதுக்கு வாய்ப்பு இருக்கறாப்ல்ல
தெரியலயே!!!! :) //

என்னாங்க பொசுக்குன்னு இப்படி
சொல்லிட்டீங்க..

நீராவில ரயில் ஓட்டலாம்னு
கண்டுபிடிச்சது வேணா
அவிங்களா இருக்கலாம்.. - ஆனா

நீராவில இட்லி அவிக்கலாம்னு
கண்டுபிடிச்சது நாமளாக்கும்..!

வெங்கட் said...

@ பாலா.,

// twitterஐ ’கீச்சு’னு சூப்பரா மொழி
பெயர்த்துட்டாங்க நம்ம ஆளுங்க... //

ஆஹா.. இது மட்டும் Twitter
கண்டுபிடிச்சவனுக்கு தெரிஞ்சா
கீச்சுபுடுவான்.. கீச்சி..!

thiyagarajan.s said...

காலர்-ன்னா கழுத்துபட்டைன்னு சொல்லலாம்ன்னு மௌஸ உருட்டிகிட்டே கீழ வந்தா...பாலா...காலர்ன்னா கழுத்துப் பட்டைன்னு சொல்லிட்டு போயிட்டாரு..அதனால நான் ஒன்னும் சொல்லல...

ராஜி said...

//
அப்ப இந்த ORKUT., GOOGLE., PICASA.,
TWITTER.,YAHOO., APPLE, iPhone
இதுக்கெல்லாம் தமிழ்ல என்னான்னு
சொல்லிட்டு போங்க.////
>>>
நல்லா கேளுங்க வெங்கட் சார். இந்த அநியாயங்களை தட்டிக் கேட்க உங்களை விட்டா வேற நல்ல தலைவர் யாரும் கிடைக்க மாட்டாங்க நம்ம ஊருல

Unknown said...

\\நல்லா கேளுங்க வெங்கட் சார். இந்த அநியாயங்களை தட்டிக் கேட்க உங்களை விட்டா வேற நல்ல தலைவர் யாரும் கிடைக்க மாட்டாங்க நம்ம ஊருல//

ஆமா ஆமா...நம்மவூர்லேயே நல்லவரு வல்லவரு நாலும் தெரிஞ்சரு...தன்னிகரில்லா தனிப்பெரும்தலைவரு..
தன்மானசிங்கம்...நடமாடும் டிஸ்கவரி சானலு...ம்ம்...
எல்லாமே இவருதாங்கோ
ராத்திரிலே டார்ச் லைட் அடிச்சி சூரியனை தேடிப்பாத்துட்டு.சூர்யனுக்கே டார்ச் லைட் அடிச்சவருன்னு இவரே சொல்லிப்பாரு..
இப்ப பாருவேன்..அவருக்கு கோவம் வரப்போகுது...கண் சிவக்கப்போவுது..
நெஞ்சு புடைக்கப்போவுது...அவரோட பாக்கெட்டெ அவரே கிழிச்சிக்கப்போறாரு...
ஏம்பா எல்லோரும் சேர்ந்து இப்படி உசுப்பேத்துறீங்க..

Mohamed Faaique said...

பாஸ்.... புல்லரிக்குது....

Mohamed Faaique said...

///
நமக்கு இங்கிலீஷ்காரன் கண்டுபிடிச்ச
பொருள் வேணும்.. - ஆனா அதுக்கு
அவன் வெச்ச பேரு மட்டும் வேணாம்..!///

சூப்பர் குட்டு....
இப்படியெல்லாம் பதிவெழுதினா, நானும் VAS’ல சேந்துடுவேன். ஜாக்ரத...

Mohamed Faaique said...

இவ்ளோ போசுரீங்களே!!! ஆர்னல்ட் ஸ்க்.......... இவரோட பேர கண்ண மூடி கிட்டு ஆங்கிலத்துல எழுதுங்க பார்ப்போம்... (இத எங்கயோ பார்த்த மாதிரி இருந்தா அதுக்கு நான் பொறுப்பில்ல...)

Dinesh said...

//இனிமேலாச்சும் யாரோ கண்டுபிடிச்ச
பொருளுக்கு தமிழ்ல பெயர் வெக்கறதை
விட்டுட்டு.. நாமளா எதாவது கண்டுபிடிச்சி..
அதுக்கு நல்ல தமிழ் பெயரா வெக்கலாம்.//

தமிழில் மொழி மாற்றம் செய்தால்தான், தமிழ் வாழும்னு பாரதி சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க !

Zero to Infinity said...

காமிடியா ஒரு சீரியஸ் பதிவு.....

Zero to Infinity said...

தமிழில் எழுத க்ளிக்....not working in Dubai,kindly check

வெங்கட் said...

@ Zero to Infinity

// தமிழில் எழுத க்ளிக்....not working in Dubai,kindly செக் //

அந்த லிங்க் சரியா வேலை செய்யலை..
இப்ப புது லிங்க் குடுத்து சரி பண்ணியாச்சுங்க..

தகவலுக்கு ரொம்ப நன்றி.!

:)