தீபாவளிக்கு முதல் நாள்
எங்க காலேஜ் களை கட்டும்..!
கிளாஸ் நடந்துட்டு இருக்கும்
போது திடீர்னு காலேஜ்ல
எதோ ஒரு மூலையில
பட்டாசு வெடிக்கும்..
எங்களுக்கு செம ஜாலியா
இருக்கும்.. அடுத்த பட்டாசு
எப்ப வெடிக்கும்னு ஆவலா
எதிர்பாத்துட்டு இருப்போம்..
( என்னாது.. அப்ப கிளாஸை
எப்ப கவனிப்பீங்களாவா..?!
அந்த மாதிரி தீய பழக்கங்கள்
எல்லாம் எங்களுக்கு எப்பவுமே
கிடையாது.. )
லஞ்ச் பிரேக் வந்துட்டா போதும்.
காம்பவுண்ட் சுவர்., டாய்லட்.,
சைக்கிள் ஸ்டேண்ட், கேண்டீன்னு
எங்கே பார்த்தாலும் " டமார் டமார் "
தான்..
எங்க பிரின்சிபாலும் இதை தடுக்க
நிறைய முயற்சி பண்ணினார்..
ஆனா முடியல..
அதனால அடுத்த வருஷம் ரொம்ப
Strict-ஆ இருந்தார்...
முக்கியமான இடத்துல எல்லாம்
வாட்ச்மேன்., லேப் அசிஸ்டெண்ட்ஸ்.,
ப்யூன்., P.T மாஸ்டர்னு நிறைய
உளவாளிகளை நிக்க வெச்சிட்டார்..
பிரின்சிபாலும் அங்கிட்டு, இங்கிட்டு
சுத்திட்டு செம ரவுண்ட்ஸ்ல இருந்தாரு,,
அதனால.. எங்க பசங்களால
பட்டாசு வெடிக்க முடியல..
மதியம் வரைக்கும் ஒரு சின்ன
ஊசி பட்டாசு சத்தம் கூட இல்ல..
வெறுத்து போச்சு..
திடீர்னு " பட பட படன்னு "
ஒரு 1000 வாலா வெடிக்கிற சத்தம்..
எங்கடா பட்டாசு வெடிக்குதுன்னு
எல்லோரும் ஓடி போயி பாத்தா...
யாரோ ஒரு நல்லவன்
எங்க பிரின்சிபால் ரூம்ல
பட்டாசை கொளுத்தி போட்டு
இருந்தான்..
ஸ்டூடண்ட்ஸ் பவர்..
ஹி., ஹி., ஹி..
டிஸ்கி :
மாட்டிக்கொள்ளாமல் பட்டாசு
வைப்பது எப்படி..?
கமெண்ட் நம்பர் 13 படிக்கவும்.
.
. Tweet
39 Comments:
///தீபாவளிக்கு முதல் நாள்
எங்க காலேஜ் களை கட்டும்..!////
அடுத்த நாளெல்லாம் எத கட்டும்???
தூக்கம் வர்ர நேரம் பாத்து போஸ்ட் போட்டா, யாரும் கலாய்க்க மாட்டாங்க’னு ஒரு நல்லென்னத்துல போட்டிருக்கீங்க போல...
இப்போ போரேன்.... ஆனா... திரும்பி வருவேன்.....
/////தீபாவளிக்கு முதல் நாள்
எங்க காலேஜ் களை கட்டும்..!////
அது விவசாயக் கல்லூரிங்களா?
////கிளாஸ் நடந்துட்டு இருக்கும்
போது திடீர்னு காலேஜ்ல
எதோ ஒரு மூலையில
பட்டாசு வெடிக்கும்..//////
தீபாவளுக்கு மொத நாள் கிளாஸ் நடக்குதா? அநியாயமா இருக்கே?
/////( என்னாது.. அப்ப கிளாஸை
எப்ப கவனிப்பீங்களாவா..?!
அந்த மாதிரி தீய பழக்கங்கள்
எல்லாம் எங்களுக்கு எப்பவுமே
கிடையாது.. )/////
நம்புறோம், நம்புறோம், நீங்க காலேஜ் போனேன்னு சொன்னதையே நம்பிட்டு இருக்கோம், இதையெல்லாம் நம்ப மாட்டோமா?
//////லஞ்ச் பிரேக் வந்துட்டா போதும்.
காம்பவுண்ட் சுவர்., டாய்லட்.,
சைக்கிள் ஸ்டேண்ட், கேண்டீன்னு
எங்கே பார்த்தாலும் " டமார் டமார் "
தான்..//////
மத்த இடங்கள்ல சரி, அது என்ன டாய்லெட்டு? அங்கேயுமா?
/////முக்கியமான இடத்துல எல்லாம்
வாட்ச்மேன்., லேப் அசிஸ்டெண்ட்ஸ்.,
ப்யூன்., P.T மாஸ்டர்னு நிறைய
உளவாளிகளை நிக்க வெச்சிட்டார்..////
டாய்லெட்டுலேயுமா?
/////ஸ்டூடண்ட்ஸ் பவர்..
ஹி., ஹி., ஹி..
.
.//////
பவர் ஸ்டார்ஸ்.....???
கிளாஸ் நடந்துட்டு இருக்கும்
போது திடீர்னு காலேஜ்ல
எதோ ஒரு மூலையில
பட்டாசு வெடிக்கும்..///
ஏன் கிளாஸ் நடக்குது? பட்டாசு வெடிச்சதும் ஓடிருச்சா? :))
@ Mohamed.,
// அடுத்த நாளெல்லாம் எத கட்டும்??? //
நிறைய பட்டாசு வெடிச்சதால
குப்பை கொட்டும்..!
@ Mohamed.,
// இப்போ போரேன்.... ஆனா...
திரும்பி வருவேன்..... //
எதுக்கு..? எங்ககிட்ட செமயா
அடி வாங்கிட்டு. " பப்ளிக்., பப்ளிக்னு "
கெஞ்சறதுக்கா...?!
@ பன்னிகுட்டி.,
// அது விவசாயக் கல்லூரிங்களா? //
ஹி., ஹி., ஹி... ஆர்ட்ஸ் காலேஜ்..
( அப்ப அது ஓவியக் கல்லூரியான்னு
அடுத்த கேள்வியை கேக்காதீங்க...! )
@ பன்னிகுட்டி.,
// மத்த இடங்கள்ல சரி, அது என்ன
டாய்லெட்டு? அங்கேயுமா? //
ம்ம்.. எல்லா இடத்துலயும் தான்..
எல்லாமே டைம் பாம் தான்.
அதாவது பட்டாசு திரியில ஊதுபத்தியை
ஜாய்ன் பண்ணி.. ஊதுபத்தியை பத்த
வெச்சிட்டு வந்துடுவாங்க..
அது மெதுவா எரிஞ்சி., திரி பத்திக்க
எப்படியும் 10 நிமிஷம் ஆகும்..
ஆக பட்டாசு வெடிக்கும் போது
அதை பத்த வெச்சவன் கிளாஸ்ல
உக்காந்து நோட்ஸ் எடுத்துட்டு
இருப்பான்..
எல்லாம் கேடிப்பசங்க..!
அனுபவங்களின் கோர்வை அருமை கோகுல்.. பழசை எல்லாம் ஞாபகப்படுத்தீடீங்க
comments spammed
//ஆக பட்டாசு வெடிக்கும் போது
அதை பத்த வெச்சவன் கிளாஸ்ல
உக்காந்து நோட்ஸ் எடுத்துட்டு
இருப்பான்..
//
:D இந்த மாதிரி ஐடியா இது வரைக்கும் கேட்டதே இல்லையே!! இன்னும் ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க
யூஸ் ஆகும்
//யாரோ ஒரு நல்லவன்
எங்க பிரின்சிபால் ரூம்ல
பட்டாசை கொளுத்தி போட்டு
இருந்தான்..
//
ஹா ஹா இது தான் சூப்பர்!!
ஆமா அந்த நல்லவன் நீங்க தானாமே??? ;)
@ venkat
//ம்ம்.. எல்லா இடத்துலயும் தான்..
எல்லாமே டைம் பாம் தான்.
அதாவது பட்டாசு திரியில ஊதுபத்தியை
ஜாய்ன் பண்ணி.. ஊதுபத்தியை பத்த
வெச்சிட்டு வந்துடுவாங்க..
அது மெதுவா எரிஞ்சி., திரி பத்திக்க
எப்படியும் 10 நிமிஷம் ஆகும்..
ஆக பட்டாசு வெடிக்கும் போது
அதை பத்த வெச்சவன் கிளாஸ்ல
உக்காந்து நோட்ஸ் எடுத்துட்டு
இருப்பான்..
எல்லாம் கேடிப்பசங்க..!//
எல்லாத்தையும் நீங்களே பண்ணிட்டு என்னமோ யாரோ பண்ண மாதிரி வந்துடுவாங்க.., இருப்பான்..-ன்னு சொல்றீங்களே, இது உங்களுக்கே ஓவரா தெரியலை?
//£€k#@ said...
//யாரோ ஒரு நல்லவன்
எங்க பிரின்சிபால் ரூம்ல
பட்டாசை கொளுத்தி போட்டு
இருந்தான்..
//
ஹா ஹா இது தான் சூப்பர்!!
ஆமா அந்த நல்லவன் நீங்க தானாமே???//
சான்ஸ் இல்ல, வெங்கட் பிரின்சிபால் ரூமில பட்டாசைக் கொளுத்த மாட்டார். அவர்கிட்ட மத்தவங்களைப் பத்தி கொளுத்திப் போடறதுதான் வழக்கம்
Seirathum senjippittu
evanovam....
//யாரோ ஒரு நல்லவன்
எங்க பிரின்சிபால் ரூம்ல
பட்டாசை கொளுத்தி போட்டு
இருந்தான்..//
ஹா..ஹா.. வெங்கட்,நல்ல பையனா இருக்கீங்களே! பிரின்சிபால் ரூம்லேயே இப்படி பட்டசை கொளுத்தி போட்டுடீங்களே?
அப்பறமா என்ன ஆச்சு அந்த பிரின்சிபாலுக்கு அதை பற்றி சொல்லுங்க.
மைக் டெஸ்டிங்...
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலே,
எம்.பி.யாக நிற்கும் "திரு.முனைவர்(தமிழ்) வெங்கட் எம்.ஏ., எம்.எல், எம்.டெக்(டெக்ஸ்டைல்), எம்.பி.ஏ(பைனான்ஸ்), எம்.எஸ்(நியூரோ சர்ஜன்..." அவர்களுக்கு தங்கள் பொன்னான வாக்குகளை இட்டு அறுதிப் பெரும்பான்மையில் வெற்றிபெறச் செய்யவேண்டுமாய் கேட்டுக் கொல்கிறோம்...
#தொல்லை தாங்க முடியலைப்பா... சும்மா ஒரு அஞ்சு வருஷம் பார்லிமென்ட் போங்க... நாங்க நிம்மதியா இருப்போம்....
எனது உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்...
ஏற்புரை வழங்க அண்ணன் "வெங்கட்" வருவதற்குள், எல்லாரும் தப்பித்து ஓடிவிடுமாறு கேட்டுக்'கொல்ல'ப்படுகிறார்கள்...
@ வெளங்காதவன்
// #தொல்லை தாங்க முடியலைப்பா... சும்மா ஒரு அஞ்சு வருஷம் பார்லிமென்ட் போங்க... நாங்க நிம்மதியா இருப்போம்...//
அதெல்லாம் சரி, ஆனா அங்க போயிட்டு வந்து "லோக் சபா ஸ்பீக்கர் ரூமில பட்டாசைக் கொளுத்திபோட்டு" அப்படின்னு ஆரம்பிச்சு இன்னொரு பதிவு தேத்திடுவாரே, என்ன செய்ய?
//
யாரோ ஒரு நல்லவன்
எங்க பிரின்சிபால் ரூம்ல
பட்டாசை கொளுத்தி போட்டு
இருந்தான்..//
நீங்கதான அது
இன்று என் வலையில்
அரசியல்வாதி ஆவது அப்படி ?
ஸ்டூடண்ட்ஸ் பவர்..
பவர்புல் வெடி!
பாராட்டுக்கள்..
எந்த காலேஜ்???
:-)
(என்ன பண்ணித்தொளையுறது பழகி தொலைச்சிட்டோம் )
என்னமோ இவரு மட்டும்தான் காலேஜு படிச்சிருக்கார் போல ???
அதாவது பட்டாசு திரியில ஊதுபத்தியை
ஜாய்ன் பண்ணி.. ஊதுபத்தியை பத்த
வெச்சிட்டு வந்துடுவாங்க..
அது மெதுவா எரிஞ்சி., திரி பத்திக்க
எப்படியும் 10 நிமிஷம் ஆகும்..
ஆக பட்டாசு வெடிக்கும் போது
அதை பத்த வெச்சவன் கிளாஸ்ல
உக்காந்து நோட்ஸ் எடுத்துட்டு
இருப்பான்..
///
என்னோட சின்ன வயசு சேட்டைகளெல்லாம் ஞாபகத்துக்கு வருது .
பள்ளியில் படிக்கும் போது எல்லா வருசமும் இந்த காமெடி தவறாம நடக்கும் .ஆனா நாங்க உங்க அளவுக்கு பிரின்சிபால் ரூம்ல வைகற அளவுக்கு கேடிங்க இல்லை.
யாரோ ஒரு நல்லவன்
எங்க பிரின்சிபால் ரூம்ல
பட்டாசை கொளுத்தி போட்டு
இருந்தான்/////
அந்த நல்லவன் நீங்க தான
@ லேகா.,
// இந்த மாதிரி ஐடியா இது வரைக்கும்
கேட்டதே இல்லையே!! இன்னும் ஏதாவது
ஐடியா இருந்தா சொல்லுங்க //
ஓ.. நிறைய இருக்கு.. ஆனா டைம்
வரும்போது சொல்றேன்..!
( ஒண்ணுமே இல்லன்னாலும் இப்படி
தான் பில்டப்பா எதாச்சும் சொல்லணும்.
ஹி., ஹி., ஹி..!)
@ லேகா.,
// ஆமா அந்த நல்லவன் நீங்க
தானாமே??? ;) //
@ பெ.சொ.வி.,
// எல்லாத்தையும் நீங்களே பண்ணிட்டு
என்னமோ யாரோ பண்ண மாதிரி
வந்துடுவாங்க.., இருப்பான்..-ன்னு
சொல்றீங்களே, //
@ நாய் நக்ஸ்.,
// Seirathum senjippittu evanovam.. //
@ ராம்வி.,
// வெங்கட்,நல்ல பையனா இருக்கீங்களே!
பிரின்சிபால் ரூம்லேயே இப்படி பட்டசை
கொளுத்தி போட்டுடீங்களே? //
@ ராஜா.,
// நீங்கதான அது //
@ உதவாக்கரை.,
// ஆனா நாங்க உங்க அளவுக்கு
பிரின்சிபால் ரூம்ல வைகற அளவுக்கு
கேடிங்க இல்லை. //
ஐயோ..! அது நான் இல்ல..
அது நான் இல்ல..!
( இப்படி கோரஸா பாட்டு பாடி நம்மள
மாட்டிவிட்டுடுவாங்க போல இருக்கே..!
நல்லவேளை அன்னிக்கு பிரின்சிபால் கார்
டயர்ல காத்தை இறக்கிவிட்டதை பத்தி
நாம எதுவும் சொல்லலை..! )
///எதுக்கு..? எங்ககிட்ட செமயா
அடி வாங்கிட்டு. " பப்ளிக்., பப்ளிக்னு "
கெஞ்சறதுக்கா...?!///
அது போன பதிவு... நான் சொல்ரது இந்தப் பதிவு...
@ ராம்வி.,
// அப்பறமா என்ன ஆச்சு அந்த
பிரின்சிபாலுக்கு அதை பற்றி சொல்லுங்க. //
ஷாக் ஆயிட்டாரு.. அப்புறம்
வேற வழியில்லாம Last 1 Hour
கிரவுண்ட்ல பட்டாசு வெடிக்க
Permission குடுத்தாரு..
@ வெளங்காதவன்.,
// தொல்லை தாங்க முடியலைப்பா...
சும்மா ஒரு அஞ்சு வருஷம் பார்லிமென்ட்
போங்க... நாங்க நிம்மதியா இருப்போம்.... //
ஓ.கே.. கவலையை விடுங்க..
உங்க ஆசைப்படியே நான்
" தமிழ் ப்ளாக்கர்ஸ் துறை " மந்திரியாகி
தமிழ் ப்ளாக் உலகத்தை காப்பாத்தறேன்..
@ மங்குனி.,
// என்னமோ இவரு மட்டும்தான்
காலேஜு படிச்சிருக்கார் போல ???//
நீங்களும் தான் சார் படிச்சி இருக்கீங்க..
நான் இல்லன்னா சொன்னேன்..
இவரு சென்னைல
அண்ணா யுனிவர்சிட்டிக்கு பக்கத்துல
இருக்குற டுடோரியல் காலேஜ்ல
படிச்சவரு..
போதுமா..?!
@ ராஜேஸ்வரி.,
// எந்த காலேஜ்??? //
The Great... One and Only..,
Uncomparable...
" சௌடேஸ்வரி காலேஜ், சேலம்."
ஆமா.. இங்கே போயி நான் படிச்சது
உண்மையான்னு விசாரிக்க மாட்டீங்கல்ல..!
Post a Comment