சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

07 July 2011

இது எந்த ஊரு Dictionary..?? Part - 2

* Gift : நமக்கு திருப்பி குடுக்கறவங்களுக்கு
நாம தர்றது..

* Offer : ரெண்டு Waste பொருளை
ஒரே நேரத்துல விக்கறது

* லீவ் நாள் : ஆபீஸ்க்கு போகாம.,
வீட்ல இருந்துகிட்டு Wife சொல்ற
வேலைகளை செய்யற நாள்.

* அட்வைஸ் : நம்மளால Follow பண்ண
முடியாதை எல்லாம் அடுத்தவங்களுக்கு
சொல்றது..!

* Professor : நாம இன்னிக்கு கிளாஸ்ல
தெரிஞ்சிக்கிட்டதை., நேத்து நைட்டே
படிச்சி தெரிஞ்சிக்கிட்டவரு..

* ஓவர் ஸ்பீடு : நம்மளை ஓவர் டேக்
பண்ணி போறவங்க போற ஸ்பீட்

டிஸ்கி : " இது எந்த ஊரு Dictionary..?? Part - 1 "
படிக்க இங்கே க்ளிக்..

( " உஸ்ஸப்பா...! பழைய பதிவு ஒண்ண
படிக்க வெக்க எவ்வளவு மெனக்கெட
வேண்டி இருக்கு...? "
டைலாக் உபயம் : பன்னிகுட்டி ராம்ஸ். )
.
.

26 Comments:

படிக்காதீங்க.. (இந்திரா) said...

//( " உஸ்ஸப்பா...! பழைய பதிவு ஒண்ண
படிக்க வெக்க எவ்வளவு மெனக்கெட
வேண்டி இருக்கு...? "
டைலாக் உபயம் : பன்னிகுட்டி ராம்ஸ். )//


உண்மைதான் வெங்கட்..

பன்னிக்குட்டிக்கும் நன்றி.

(ஏன்னா அந்த கஷ்டம் எனக்கும் தெரியும்)

Niroo said...

//" உஸ்ஸப்பா...! பழைய பதிவு ஒண்ண
படிக்க வெக்க எவ்வளவு மெனக்கெட
வேண்டி இருக்கு...? "//

அப்போ இது பழைய Dictionaryஆ ??

Sen22 said...

எல்லாமே நல்லா இருக்கு.... :))

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல சொளுரங்கயா detail...வலைசரத்தில் இன்று ...
கண்ணை நம்பாதே

Mohamed Faaique said...

//" உஸ்ஸப்பா...! பழைய பதிவு ஒண்ண
படிக்க வெக்க எவ்வளவு மெனக்கெட
வேண்டி இருக்கு...?//

இப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க முடியாது.. உங்க புது பதிவையே படிக்கும் போது கண்ணை கட்டும்.. ஒர்ரே பதிவ இன்னொரு முறையா????

middleclassmadhavi said...

நல்லாயிருக்கு!

அருண் பிரசாத் said...

ஏன் இன்னைக்கு மண்டபத்துல எழுதி குடுக்க யாரும் கிடைக்கலையா?

RAMVI said...

ரொம்ப நல்லாயிருக்கு வெங்கட்.

வெங்கட் said...

@ இந்திரா.,

// ஏன்னா அந்த கஷ்டம் எனக்கும் தெரியும் //

பிளாக்கை தொலைச்சிட்டு நீங்க படற
கஷ்டம் எங்களுக்கும் தெரியும்..!!

மறுபடியும் மீண்டு வருவீங்க..

வெங்கட் said...

@ Niroo.,

// அப்போ இது பழைய Dictionaryஆ ?? //

இது புது Dictionary தாங்க.. லிங்க்
குடுத்தது தான் போன வருஷ Edition..!

வெங்கட் said...

@ Mohamed.,

// உங்க புது பதிவையே படிக்கும்
போது கண்ணை கட்டும்.. ஒர்ரே பதிவ
இன்னொரு முறையா???? //

இளைய சமுதாயத்துக்கு பல அருமையான
கருத்துக்களை சொல்லணுமேன்னு
நான் எங்க வீட்டு மொட்டை மாடில
இருக்குற டாங்க் மேல ஏறி உக்காந்து
யோசிச்சி., யோசிச்சி இதை எழுதறேன்..

உங்களுக்கு கிண்டலா போச்சா..!!

எஸ்.கே said...

அட்வைஸ் : நம்மளால Follow பண்ண
முடியாதை எல்லாம் அடுத்தவங்களுக்கு
சொல்றது..!//

ஆமாங்க இந்த அட்வைஸ் பண்ணுறவங்க தொல்லை தாங்க முடியாதுதான்! யாருக்குமே அட்வைஸ் பண்ணாதீங்க, இதான் நான் உங்களுக்கு பண்ணுற அட்வைஸ்!

பெசொவி said...

@ venkat

//கருத்துக்களை சொல்லணுமேன்னு
நான் எங்க வீட்டு மொட்டை மாடில
இருக்குற டாங்க் மேல ஏறி உக்காந்து
யோசிச்சி., யோசிச்சி இதை எழுதறேன்..//

நீங்க சொன்ன "லீவு" நாள்ல,உங்களை Tank-ஐ கழுவச் சொன்னா, அங்க உக்காந்து கண்டதையும் எழுதிக்கிட்டு இருக்கீங்களா?
இப்படிக்கு
வெங்கட் மனைவி

பெசொவி said...

@ Venkat
//நான் எங்க வீட்டு மொட்டை மாடில
இருக்குற டாங்க் மேல ஏறி உக்காந்து
யோசிச்சி., யோசிச்சி இதை எழுதறேன்..
//

என்னது யோசிச்சு, யோசிச்சா? பொய் சொன்னா போஜனம் கிடைக்காது வெங்கட்!

இப்படிக்கு வெங்கட் மனசாட்சி

பெசொவி said...

// லீவ் நாள் : ஆபீஸ்க்கு போகாம.,
வீட்ல இருந்துகிட்டு Wife சொல்ற
வேலைகளை செய்யற நாள்//


"உங்களுக்கு இந்த வருஷம் எத்தனை நாள் லீவு"ன்னு நான் கேட்டப்ப, "எனக்கு வருஷம் பூரா லீவுதான்"னு சொன்னீங்களே, அதுக்கு இதுதான் அர்த்தமா?

பெசொவி said...

//"இது எந்த ஊரு Dictionary..?? Part - 2"
//
//" இது எந்த ஊரு Dictionary..?? Part - 1 "
படிக்க இங்கே க்ளிக்.//

உங்க "offer" சூப்பர்!

(Offer-க்கு மீனிங் உங்க போஸ்ட்லயே இருக்கு)

பெசொவி said...

//Gift : நமக்கு திருப்பி குடுக்கறவங்களுக்கு
நாம தர்றது..
//

அடப் பாவி, போன வாரம் என் Birthday-க்கு Gift அனுப்பி வச்சது இதுக்குத்தானா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் பதிவுதான் எஸ்.எம்.எஸ்ல வந்தது சரி வேற வழி இல்ல, டிஸ்கியாவது சொந்தமா போடக்கூடாது....? தொலச்சிபுடுவேன் தொலச்சி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////படிக்காதீங்க.. (இந்திரா) said...
//( " உஸ்ஸப்பா...! பழைய பதிவு ஒண்ண
படிக்க வெக்க எவ்வளவு மெனக்கெட
வேண்டி இருக்கு...? "
டைலாக் உபயம் : பன்னிகுட்டி ராம்ஸ். )//


உண்மைதான் வெங்கட்..

பன்னிக்குட்டிக்கும் நன்றி.

(ஏன்னா அந்த கஷ்டம் எனக்கும் தெரியும்)
////////

நீங்கதான் ரொம்ப பாவம், ப்ளாக்கையே தொலச்சிட்டீங்க....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////* லீவ் நாள் : ஆபீஸ்க்கு போகாம.,
வீட்ல இருந்துகிட்டு Wife சொல்ற
வேலைகளை செய்யற நாள்./////

எஸ்.எம்.எஸ்சா இருந்தாலும் உங்களுக்கேத்த மாதிரிதான் இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////* Professor : நாம இன்னிக்கு கிளாஸ்ல
தெரிஞ்சிக்கிட்டதை., நேத்து நைட்டே
படிச்சி தெரிஞ்சிக்கிட்டவரு..
//////////

கிளாசுக்கு போய் என்னமோ தெரிஞ்சுக்கிட்டாராம்... இதெல்லாம் ரொம்ப ஓவரு ஆமா...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டிஸ்கி : " இது எந்த ஊரு Dictionary..?? Part - 1 "
படிக்க இங்கே க்ளிக்..
//////

படிக்க மாட்டோமே..? இப்ப என்ன செய்வீங்க,இப்ப என்ன செய்வீங்க....?

வெங்கட் said...

@ அருண்.,

// ஏன் இன்னைக்கு மண்டபத்துல எழுதி
குடுக்க யாரும் கிடைக்கலையா? //

நான் என்ன தினமும் " மொய் லிஸ்ட்டா "
இங்கே எழுதி போட்டுட்டு இருக்கேன்..!?
மண்டபத்துல எழுதி குடுக்கலையான்னு
கேக்கறீங்க..??!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// நீங்க சொன்ன "லீவு" நாள்ல,
உங்களை Tank-ஐ கழுவச் சொன்னா,
அங்க உக்காந்து கண்டதையும் எழுதிக்கிட்டு
இருக்கீங்களா? //

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
யுவர் ஆனர்..

Tank-ஐ கழுவிட்டு., பிறகு தான் எழுத
ஆரம்பித்தேன் என்பதை தெரிவித்து
கொள்கிறேன்..

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// யோவ் பதிவுதான் எஸ்.எம்.எஸ்ல
வந்தது சரி வேற வழி இல்ல,
டிஸ்கியாவது சொந்தமா போடக்கூடாது....?
தொலச்சிபுடுவேன் தொலச்சி...! //

எவன் அவன்.. நான் பதிவு போடறதுக்குள்ள
அதை எஸ்.எம்.எஸ்ஸா அனுப்பறவன்..?!!

ஒண்ணை தவிர எல்லாமே சொந்த
சரக்குப்பா..!!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// படிக்க மாட்டோமே..?
இப்ப என்ன செய்வீங்க,
இப்ப என்ன செய்வீங்க....?//

அதை டெரர் கும்மில மீள் பதிவா
போடுவேனே..!
அப்ப என்ன செய்வீங்க,
அப்ப என்ன செய்வீங்க....?