சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

19 July 2011

சப்பாத்தி கல்லும், சாணக்கிய தந்திரமும்.!

















எங்க வீட்டு Kitchen-ஐ ஆல்டர் பண்ணிட்டு
இருக்கோம்.. Kitchen Slab-காக எடுத்துட்டு
வந்த கிரானைட் கல்லுல 2 அடி மிச்சமாயிடுச்சு..

அதை என்ன பண்ணலாம்னு நானும்.,
என் Wife-ம் Discuss பண்ணிட்டிருந்தோம்..
( இதெல்லாம் சும்மா Formality.. எப்படியும்
கடைசில நான் சொல்றது தான் நடக்காது..! )

" ஏங்க... வீட்டுக்கு வெளியில இருக்குற
Steps-க்கு போடலாமாங்க..? "

" வேணாம்.. ஈரமா இருந்தா வழுக்கி
விட்டுடும்..! "

" டைனிங் ஹால்ல ஒரு Slab போட்டுக்கலாம்ங்க..?
ஊறுகா பாட்டில் எல்லாம் வைக்க வசதியா
இருக்கும்.! "

" வேணாம்.. டைனிங் ஹால் ஏற்கனவே
ரொம்ப சின்னதா இருக்கு.. அப்புறம்
இடைஞ்சலா போயிடும்..! "

" சப்பாத்தி கல்லாவது பண்ணலாம்க...! "

" வேணாம்.. Next..? "

" சப்பாத்தி நல்லா வரும்க..! "

" அதான் வேணாம்னு சொல்றேன்ல..! "

இதை பாத்துட்டு கிரானைட் ஒட்டி
குடுக்க வந்தவன்..

" சார்..அதான் மேடம் ஆசைப்படறாங்கல்ல..
சப்பாத்தி கல்லே செஞ்சி குடுங்க..! "

( டேய்.... சப்பாத்தி கல்லு
Wood-ல பாத்து இருப்ப..,
Steel-ல பாத்து இருப்ப.,
Stainless Steel-ல பாத்து இருப்ப...
எங்கயாவது கிரானைட்ல பாத்து இருக்கியா..?
அதுவும் கறுப்பு கிரானைட்ல பாத்து இருக்கியா..?

தூக்கி அடிச்சா ஒன்ரை கிலோ வெயிட்டுடா..

என் நிலைமை புரியாம படுத்தாதே )

என் Wife என்கிட்ட ரகசியமா..
" நீங்க எதுக்கோ பயப்படற மாதிரி தெரியுதே..! "

" ஹி., ஹி., ஹி... இல்லையே..! "
( அவ்ளோ வீக்காவா இருக்கோம்..?! )

" சரி., உன் ஆட்டோகிராப் இந்த பேப்பர்ல
போட்டு குடேன்னு " சொல்லி ஒரு வெத்து
ஸ்டாம்ப் பேப்பர்ல என் Wife -கிட்ட
ஒரு கையெழுத்து வாங்கிட்டு
சப்பாத்தி கல்லு செஞ்சி தர சொல்லிட்டேன்..

அப்புறமா அதுல " இந்த சப்பாத்தி கல்லுல
என் Husband-ஐ அடிக்க மாட்டேன்னு "
நானே Fill பண்ணிகிட்டேன்..

நாங்கல்லாம் சாணக்கியனுக்கே ஐடியா
சொல்றவங்க.. எங்ககிட்டயேவா..?!!

சப்பாத்தி கல்லு செஞ்சி வந்தது..
அதை தூக்கி பாத்த என் Wife...

" ரொம்ப வெயிட்டா இருக்குங்க..! "

" அப்பாடி...! இதை உன்னால தூக்க
முடியாது., தூக்கினாலும் அடிக்க
முடியாது.. Thank God..! "

" இதை தூக்க முடியலைன்னா என்ன..
சப்பாத்தி கட்டையை ஈஸியா தூக்க
முடியும்ல...! "

" அடிப்பாவி...! "
( நமக்கு இன்னும் பயிற்சி தேவையோ..?!! )
.
.

55 Comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஹலோ வெங்கட் இப்போ எந்த ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிருக்கீங்க?

HVL said...

பேசாம சப்பாத்தி போடற வேலையிலிருந்து சப்பாத்தி கல் தொடர்பான எல்லா பொறுப்பையும் நீங்களே எடுத்துகிட்டு, சப்பாத்தி கல்ல உங்க பொறுப்புல வச்சிக்கோங்க!

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// ஹலோ வெங்கட் இப்போ எந்த
ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிருக்கீங்க? //

ஹி., ஹி..!!

பல அரசியல் ராஜதந்திரங்களை
கரைச்சி குடிச்சவனாச்சே நானு..
அவ்ளோ Careless-ஆவா இருப்பேன்..

என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை
எதுத்து இருகேன்னு அடுத்த கமெண்ட்
பாத்து தெரிஞ்சிக்கோங்க..!

வெங்கட் said...

@ HVL.,

// பேசாம சப்பாத்தி போடற வேலையிலிருந்து
சப்பாத்தி கல் தொடர்பான எல்லா பொறுப்பையும்
நீங்களே எடுத்துகிட்டு, சப்பாத்தி கல்ல உங்க
பொறுப்புல வச்சிக்கோங்க! //

ம்ம்... அந்த சப்பாத்தி கட்டையை
என் பீரோ லாக்கர்ல வெச்சு பூட்டி.,
சாவியை கிணத்துல போட்டுட்டேன்..

இனிமே No Problem..!

ரசிகன் said...

//அந்த சப்பாத்தி கட்டையை
என் பீரோ லாக்கர்ல வெச்சு பூட்டி.,
சாவியை கிணத்துல போட்டுட்டேன்..//

என்னாஆஆ அறிவு.. !!!
அதுக்கு நேரா சப்பாத்தி கட்டையையே கிணத்துல போட்டுட வேண்டியது தானே..

Unknown said...

ஆகா .............இன்று முதல் நீங்கள் "சப்பாத்தி சாணக்கியர் " என்று எல்லோராலும் உதைக்க.........சீ கதைக்க படுவீராக

வெங்கட் said...

@ ரசிகன்.,

// என்னாஆஆ அறிவு.. !!!
அதுக்கு நேரா சப்பாத்தி கட்டையையே
கிணத்துல போட்டுட வேண்டியது தானே.. //

உங்கள மாதிரி சாமான்ய மக்களுக்கும்.
என்னை மாதிரி ஜீனியஸ்க்கும் இதான்
வித்தியாசம்..

சப்பாத்தி கட்டையை கிணத்துல
போட்டா.. அது மிதக்கும்ல..
வாளியை விட்டு எடுத்துப்பாங்களே..!

karthikkumar said...

சப்பாத்தி கட்டையை கிணத்துல
போட்டா.. அது மிதக்கும்ல..
வாளியை விட்டு எடுத்துப்பாங்களே.///

என்ன வர வர புத்திசாலி மாதிரி பேச ஆரம்பிச்சுட்டீங்க?.. என்கிட்டே ரெண்டு நாள்தான் பேசுனீங்க அதுக்கே உங்களுக்கு இந்தளவு அறிவா .. :))

ரசிகன் said...

சப்பாத்தி கட்டை , அரிக்கரண்டி, தோசை திருப்பி,மத்து, சீப்பு,பையனோட ஸ்கேலு இப்டி சேத்து சேத்து லாக்கர் நிரம்பி வழியுது பாருங்க.. ஏன் இவ்ளோ கஷ்டம்..ஒவ்வொரு தடவை ஒரு சாவிய கிணத்துல போட்டுகிட்டு... பேசாம நீங்களே டைரக்டா குதிச்சிட்டா என்ன?.. #காசா பணமா.. ஐடியாதானே.. இலவசமா நாலு தருவோம்.#

samhitha said...

//சார்..அதான் மேடம் ஆசைப்படறாங்கல்ல..
சப்பாத்தி கல்லே செஞ்சி குடுங்க..! //
vks ஏற்பாடு பண்ண ஆளோ?

//ஒரு வெத்து
ஸ்டாம்ப் பேப்பர்ல என் Wife -கிட்ட
ஒரு கையெழுத்து வாங்கிட்டு

அப்புறமா அதுல " இந்த சப்பாத்தி கல்லுல
என் Husband-ஐ அடிக்க மாட்டேன்னு "
நானே Fill பண்ணிகிட்டேன்..//
இதெல்லாம் forgery ipdiya veliya solradu adha??

//சப்பாத்தி கட்டையை ஈஸியா தூக்க
முடியும்ல...! "

" அடிப்பாவி...!//
இன்னுமா பயபடுறீங்க?? இந்நேரம் அதுல அடி வாங்கி அடிவாங்கி பழகிப்போய் இருக்கணுமே?? ;)

samhitha said...

//சப்பாத்தி கட்டையை கிணத்துல
போட்டா.. //
அத ஒரு கல்லோட கட்டி போடணும் பாஸ்
இன்னும் பயிற்சி தேவையோ..?! ;)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சப்பாத்திக் கல்லுன்னுதானே சொல்றாங்க, அப்போ கரெக்டாத்தான் பண்ணி இருக்காங்க....... பேசாம ஒத்துகுங்க வெங்கட், எப்படியும் நீங்கதான் சப்பாத்தி போட போறீங்க, வேலையாவது ஈசியா இருக்கும்ல?

samhitha said...

//. பேசாம நீங்களே டைரக்டா குதிச்சிட்டா என்ன?.. #காசா பணமா.. ஐடியாதானே.. இலவசமா நாலு தருவோம்.#//
:D :D
அப்டி எல்லாம் நடந்தா இந்தியாவ யார் காப்பாத்துறது???

வெளங்காதவன்™ said...

வந்துட்டுப் போனேன் மகராசா!

சேலம் தேவா said...

//உங்கள மாதிரி சாமான்ய மக்களுக்கும்.
என்னை மாதிரி ஜீனியஸ்க்கும் இதான்
வித்தியாசம்..
சப்பாத்தி கட்டையை கிணத்துல
போட்டா.. அது மிதக்கும்ல..
வாளியை விட்டு எடுத்துப்பாங்களே..!//

தல..என்னா அறிவு..!!கலக்கிட்டிங்க..!!

Sen22 said...

நானும் கமென்ட் போடலாமுனு வந்தா எல்லோரும் பிரிச்சி மேயராங்க...
அதனால ஒன்லி.. :)))

@ரசிகனோட கமென்ட்க்கு எல்லாம் ஒரு ரிப்பீட்டேய்....

RAMA RAVI (RAMVI) said...

வெங்கட்,உங்க வீட்டு போன் நம்பர் கொடுங்க கிராணைட்ல சப்பாத்தி கட்டை கிடைக்குதாம்,அது பற்றி உங்க மனைவி கிட்ட சொல்லனும்...

Madhavan Srinivasagopalan said...

சப்பாத்தி கல்லாலா அடிக்குறாமாதிரி ஜோக்கு படிச்சதில்லை..
சப்பாத்து உருட்டுற கட்டையால தான் அடிப்பாங்கன்னு ஜோக்கு படிச்சிருக்கேன்.. இதென்ன புதுசாருக்கு..

Unknown said...

//சப்பாத்தி கட்டையை கிணத்துல
போட்டா.. அது மிதக்கும்ல..
வாளியை விட்டு எடுத்துப்பாங்களே..!
//

பாஸ் ரொம்ப யோசிக்காதிங்க இருக்குற கொஞ்சம் மூளையும் கரஞ்சுட போகுது

Mohamed Faaique said...

@ ரமேஷ்
////ஹலோ வெங்கட் இப்போ எந்த ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிருக்கீங்க?///

அவரு எப்பவுமே அட்மிட் ஆகுர ஹாஸ்பிடல்’தாங்க.. அவரு ரெகுலர் கஸ்டமர் ஆச்சே!!!

@HVL
///பேசாம சப்பாத்தி போடற வேலையிலிருந்து சப்பாத்தி கல் தொடர்பான எல்லா பொறுப்பையும் நீங்களே எடுத்துகிட்டு, சப்பாத்தி கல்ல உங்க பொறுப்புல வச்சிக்கோங்க!////

இந்த பதிவுல உள்குத்து இருக்கு நன்பரே!!. இந்தப் பதிவின் நோக்கமே மிஸ்டர் வெங்கட்’தான் வீட்டுல சமையல் பன்ரவர் என்பதை மறைப்பதற்கு எழுதப்பட்டதாகும்.

Mohamed Faaique said...

///
பல அரசியல் ராஜதந்திரங்களை
கரைச்சி குடிச்சவனாச்சே நானு..
///

சேலம் சித்த வைத்தியர் கிட்ட “ராஜ தந்திரம்”னு ஏதாவது லேகியம் இருக்கா..??? தெரிஞ்வங்க சொல்லுங்க....

//சப்பாத்தி கட்டையை கிணத்துல
போட்டா.. அது மிதக்கும்ல..
வாளியை விட்டு எடுத்துப்பாங்களே..!///

அனுபவத்துக்கு இணையான அறிவு எதுவும் இல்லை என்பது சரியே!!!!

Mohamed Faaique said...

@ ரஸிகன்

///.ஒவ்வொரு தடவை ஒரு சாவிய கிணத்துல போட்டுகிட்டு... பேசாம நீங்களே டைரக்டா குதிச்சிட்டா என்ன?.. #காசா பணமா.. ஐடியாதானே.. இலவசமா நாலு தருவோம்///

இந்த பேச்ச கேட்டு அவரு குதிச்சிட்டா ஒரு குடி நீர் கிணறு வேஸ்டாயிடும்.. ஊருக்க்கு ஒதுக்கு புறமா ஒரு கிணத்துல குதிக்க சொல்லுங்க பாஸ்..

Mohamed Faaique said...

////சப்பாத்தி கட்டையை கிணத்துல
போட்டா.. அது மிதக்கும்ல..
வாளியை விட்டு எடுத்துப்பாங்களே..!///

தண்ணியில்லாத கிணத்துல போட வேண்டியதுதானே.. அப்போ எப்படி ,மிதக்கும்????!!!
(கடவுளே ஏன்’தான் என்ன இவ்ளோ அறிவாளி’யா படச்சியோ!!!)

Mohamed Faaique said...

////எப்படியும்
கடைசில நான் சொல்றது தான் நடக்காது..//

கடைசில சொல்ல நினைக்கிரத முன்னாடியே சொல்லிட வேணிடியதுதானே!!!

///எங்கயாவது கிரானைட்ல பாத்து இருக்கியா..?
அதுவும் கறுப்பு கிரானைட்ல பாத்து இருக்கியா..?///

இங்குள்ள (டுபாய்) லேபர்ஸ் ஆளுங்க Construction Site'ல இருந்து Granite கல்லதான் எடுத்து வந்து சப்பாத்தி போடுராங்க... அடி விழாது’ங்குர தைரியம்தான்...

Mohamed Faaique said...

///என் Wife என்கிட்ட ரகசியமா..
" நீங்க எதுக்கோ பயப்படற மாதிரி தெரியுதே..! "///

ஏதோ இன்னைக்குதான் பயப்படர மாதிரி பில்ட் அப் குடுக்குரீங்க... கல்யாணம் ஆன நாள்’ல இருந்து அப்படித்தானே!!!

///" அப்பாடி...! இதை தூக்கி உன்னால
அடிக்க முடியாது..! "

" இதை தூக்க முடியலைன்னா என்ன..
சப்பாத்தி கட்டையை ஈஸியா தூக்க
முடியும்ல...! "///

உங்கள தூக்கி சப்பாத்து கல்லுல கும்மளாமே!!!! ( நாங்க சாணக்கியனுக்கு ஐடியா குடுக்குரவருக்கே ஐடியா குடுக்குரவங்க...)

Jey said...

நான் வழக்கமா சப்பாத்திகல்லு+கட்டை ரெண்டையும் எடுத்து ஒழிச்சி வச்சிருவேன், உங்களுக்கு பரவாயில்லை சப்பாத்தி கட்டையை மட்டும் மறைச்சி வச்சா போதும் போலயே..., சந்தோஷப்படு மக்கா...சந்தோஷப்படு...

நம்மள மாதி அப்பாவிக எல்லாம் அடிக்கடி மீட்டிங் போட்டு ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல் சொல்லிக்க வேண்டியதுதான் வேறென்ன செய்யமுடியும்...

Uma said...

கன்னத்துல அப்ளாசா வா(வீ)ங்கறீங்க, போறாததுக்கு சப்பாத்திக் கல்/கட்டையால ஒத்தடம் வேற. உங்க நிலைமையை நினைச்சா ரத்தக்கண்ணீர் வருது வெங்கட்!

Uma said...

ஒவ்வொரு தடவை ஒரு சாவிய கிணத்துல போட்டுகிட்டு... பேசாம நீங்களே டைரக்டா குதிச்சிட்டா என்ன?.. //

இந்த பேச்ச கேட்டு அவரு குதிச்சிட்டா ஒரு குடி நீர் கிணறு வேஸ்டாயிடும்.. ஊருக்க்கு ஒதுக்கு புறமா ஒரு கிணத்துல குதிக்க சொல்லுங்க பாஸ்..//

சுபெர்ப்

முத்தரசு said...

கருத்துள்ள காமடி - கண்ணில் நீர் வர சிரித்து மகிழ்ந்தேன்

வெங்கட் said...

@ ராயல்.,

// ஆகா இன்று முதல் நீங்கள்
"சப்பாத்தி சாணக்கியர் " என்று
எல்லோராலும் உதைக்க. சீ கதைக்க
படுவீராக //

இன்னொரு பட்டமா..?

ஏற்கனவே அண்ணா யுனிவர்ஸிட்டி
குடுத்த " டாக்டர் " பட்டம்..

ஓஸ்மானியா யுனிவர்சிட்டி குடுத்த
" இஞ்சினியர் பட்டம் "

இந்திராகாந்தி யுனிவர்சிட்டி குடுத்த
" வக்கீல் " பட்டம்னு.. இந்த மாதிரி
1874 பட்டம் இருக்கு..

அதையே என்ன பண்றதுன்னு தெரியாம.
மொட்டை மாடில போட்டு வெச்சி இருக்கேன்.

வெங்கட் said...

@ கார்த்தி.,

// என்கிட்டே ரெண்டு நாள்தான் பேசுனீங்க
அதுக்கே உங்களுக்கு இந்தளவு அறிவா //

ஆமாம் மக்களே..

தென் நாட்டின் மைக்கேல் ஜாக்சன்.,
சே.. ஆல்வா எடிசன் திரு கார்த்தி அவர்கள்
தான் தண்ணில கட்டையை போட்டா
மிதக்கும் கண்டுபிடிச்சவரு..

எல்லோரும் இந்த வில்லேஜ் விஞ்ஞானிக்கு
ஒரு " ஓ " போடுங்க..!

வெங்கட் said...

@ ரசிகன்.,

// பேசாம நீங்களே டைரக்டா குதிச்சிட்டா
என்ன?.. //

என்னை கேனப்பயன்னு நினைச்சீங்களா.?
கிணத்துல குதிக்கணுமாம்ல., கிணத்துல.!

அதான் படி இருக்குல்ல அதுல இறங்கி
குடுகுடுன்னு ஓடுவேன்..!

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// இன்னுமா பயபடுறீங்க?? இந்நேரம்
அதுல அடி வாங்கி அடிவாங்கி பழகிப்போய்
இருக்கணுமே?? ;) //

நானாவது பயப்படறதாவது..!!

அவ்ளோ Weight-ஐ தூக்கி அடிக்கணுமே.,
என் மனைவியோட பூ மாதிரி கை
வலிக்குமேன்னு சொல்ல வந்தேன்..!

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// அத ஒரு கல்லோட கட்டி போடணும்
பாஸ் இன்னும் பயிற்சி தேவையோ..?! ;) //

கிணத்துல இறங்கி அந்த கட்டையை
எடுக்கும் போது கூடவே கல்லும்ல வரும்..

அப்புறம் வர்ற கோவத்துல கட்டைக்கு
பதிலா கல்லை Use பண்ணிட்டா..
ரொம்ப Danger ஆகுடும்ல..

அதான்..ஹி., ஹி., ஹி..!!

HVL said...

//
அவ்ளோ Weight-ஐ தூக்கி அடிக்கணுமே.,
என் மனைவியோட பூ மாதிரி கை
வலிக்குமேன்னு சொல்ல வந்தேன்..!//

ஒன்னு பண்ணுங்க நீங்களே எடுத்து அடிச்சிக்கோங்க! அவங்களுக்கு கை வலிக்காது.

(நாங்கல்லாம் சாணக்கியருக்கே ஐடியா கொடுக்கறவங்க!)

HVL said...

உதவி வேணும்னா சொல்லுங்க! தயாரா இருக்கோம்!

இந்த மாதிரி நேரத்தில தான் அருமை நண்பர்களைப் பற்றி தெரிஞ்சுக்கலாம்!

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// பேசாம ஒத்துகுங்க வெங்கட், எப்படியும்
நீங்கதான் சப்பாத்தி போட போறீங்க,
வேலையாவது ஈசியா இருக்கும்ல? //

புரியாம பேசாதீங்க.. கிரானைட் கல்லுல
சப்பாத்தி உருட்டினா.. அது கல்லுல
ஒட்டிகிட்டு சரியாவே வராது..

தினமும் இட்லி. தோசையே செய்யற
உங்களுக்கு இதெல்லாம் எங்கே தெரிய
போகுது..?!

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// அப்டி எல்லாம் நடந்தா இந்தியாவ
யார் காப்பாத்துறது??? //

இதுல என்ன சந்தேகம்.. நானே தான்.!

கிணத்துல குதிச்சா அவ்ளோதானா.?
நீச்சல் தெரியும்க.. மறுபடியும் எந்திரிச்சி
வருவேன்..!

மாலா said...

@ மனசாட்சி.,

// கருத்துள்ள காமடி - கண்ணில்
நீர் வர சிரித்து மகிழ்ந்தேன் //

மனசாட்சி... நீங்க கொஞ்சம் கூட
மனசாட்சியே இல்லாம கமெண்ட்
போட்டு இருக்கீங்க.

ராஜி said...

வெங்கட் said...

@ HVL.,

// பேசாம சப்பாத்தி போடற வேலையிலிருந்து
சப்பாத்தி கல் தொடர்பான எல்லா பொறுப்பையும்
நீங்களே எடுத்துகிட்டு, சப்பாத்தி கல்ல உங்க
பொறுப்புல வச்சிக்கோங்க! //

ம்ம்... அந்த சப்பாத்தி கட்டையை
என் பீரோ லாக்கர்ல வெச்சு பூட்டி.,
சாவியை கிணத்துல போட்டுட்டேன்..

இனிமே No Problem..!
>>>>
ஹலோ Mrs. வெங்கட்
எங்க வீட்டுக்கிட்டக்க, கிணத்துல தவறி விழுந்த
பொருட்களை எடுக்குறதுல எக்ஸ்பெர்ட் ஒருத்தர் இருக்கார். அவரை அனுப்பவா?

சாந்தி மாரியப்பன் said...

//" இதை தூக்க முடியலைன்னா என்ன.. சப்பாத்தி கட்டையை ஈஸியா தூக்கமுடியும்ல...! "//

பேசாம சப்பாத்திக்கட்டையை நல்ல கனமான இரும்புல செஞ்சு கொடுத்துடுங்க.. ரொம்ப வசதியாயிருக்கும் :-))))

Unknown said...

ஹைய்யோ ஹைய்யோ இதுக்கெல்லாமா பயப்படுவீங்க!! ??

வெங்கட் said...

@ ராம்வி.,

// வெங்கட்,உங்க வீட்டு போன் நம்பர் கொடுங்க
கிராணைட்ல சப்பாத்தி கட்டை கிடைக்குதாம்,
அது பற்றி உங்க மனைவி கிட்ட சொல்லனும்... //

அச்சச்சோ..! இந்த விஷயம் உங்களுக்கு
தெரிஞ்சி இருக்கே.. பாவம்ங்க உங்க
வூட்டுக்காரரு..!

வெங்கட் said...

@ மாதவன்.,

// சப்பாத்து உருட்டுற கட்டையால தான்
அடிப்பாங்கன்னு ஜோக்கு படிச்சிருக்கேன்..
இதென்ன புதுசாருக்கு.. //

இதெல்லாம் உங்களுக்கு ஜோக்கா..?
ஒரு தடவையாவது வாங்கி பாத்தா
தெரியும்..!

Anonymous said...

நீங்கள் சகலகலா வல்லவர் போல...

வெங்கட் said...

@ Mohamed.,

// ஏதோ இன்னைக்குதான் பயப்படர மாதிரி
பில்ட் அப் குடுக்குரீங்க... கல்யாணம் ஆன
நாள்’ல இருந்து அப்படித்தானே!!! //

நல்லவேளை கல்யாணத்து முன்னால
ஆறுமாசம் நான் பயந்தது யாருக்கும்
தெரியல..!

வெங்கட் said...

@ Mohamed.,

// சேலம் சித்த வைத்தியர் கிட்ட
“ராஜ தந்திரம்”னு ஏதாவது லேகியம் இருக்கா..?
தெரிஞ்வங்க சொல்லுங்க.... //

இதெல்லாம் கேக்க வேண்டியவங்களை
கேக்கணும்..

என்ன Mr. ரமேஷ்.. அங்கே அப்படி
எதாவது லேகியம் இருக்கா..?!

ராவி said...

//ஏற்கனவே அண்ணா யுனிவர்ஸிட்டி
குடுத்த " டாக்டர் " பட்டம்..

ஓஸ்மானியா யுனிவர்சிட்டி குடுத்த
" இஞ்சினியர் பட்டம் "

இந்திராகாந்தி யுனிவர்சிட்டி குடுத்த
" வக்கீல் " பட்டம்னு.. இந்த மாதிரி
1874 பட்டம் இருக்கு..
//
அண்ணா யுனிவர்ஸிட்டி, இந்திராகாந்தி யுனிவர்சிட்டி ச‌ரி

ஓஸ்மானியா யுனிவர்சிட்டி இஞ்சினியர் பட்டம் கதை எல்லாம் தெரியுமா?

£€k#@ said...

//கிரானைட் கல்லுல
சப்பாத்தி உருட்டினா.. அது கல்லுல
ஒட்டிகிட்டு சரியாவே வராது.. //
ஒஹ்ஹ் அனுபவம் பேசி இருக்கு!!
இத நீங்க நேரடியா உங்க மனைவி கிட்டேயே சொல்லி இருக்கலாமே? :D

//அப்புறம் வர்ற கோவத்துல கட்டைக்கு
பதிலா கல்லை Use பண்ணிட்டா..
ரொம்ப Danger ஆகுடும்ல.. //
அடடா என்னமா யோசிக்கிறீங்க :D இது தான் தொலை நோக்கு பார்வையோ?

வெங்கட் said...

@ Mohamed.,

// தண்ணியில்லாத கிணத்துல போட
வேண்டியதுதானே.. அப்போ எப்படி ,
மிதக்கும்????!!! (கடவுளே ஏன்’தான்
என்ன இவ்ளோ அறிவாளி’யா படச்சியோ!!!) //

" இப்படி ஒருத்தரை படைச்சிட்டோமேன்னு "
கடவுளும் அதுக்கு தான் இப்ப பீல்
பண்ணிட்டு இருக்காராம்..

வெங்கட் said...

@ ஜெய்.,

// நம்மள மாதி அப்பாவிக எல்லாம்
அடிக்கடி மீட்டிங் போட்டு ஒருத்தருக்கொருத்தர்
ஆறுதல் சொல்லிக்க வேண்டியதுதான்
வேறென்ன செய்யமுடியும்...//

நாம ஏன் ஒரு சங்கம் ஆரம்பிச்சி.,

1. எங்களை ஒரு நாளைக்கு நாலு
தடவைக்கு மேல அடிக்க கூடாது..

2. அதுவும் அடிக்க சப்பாத்தி கட்டையை
Use பண்ண கூடாது..

இப்படி ஒரு 10 அம்ச கோரிக்கை வெச்சு,
கோட்டை வரை ஒரு நடை பயணம்
போனா என்ன..?!

வெங்கட் said...

@ உமா.,

// கன்னத்துல அப்ளாசா வா(வீ)ங்கறீங்க,
போறாததுக்கு சப்பாத்திக் கல்/கட்டையால
ஒத்தடம் வேற. உங்க நிலைமையை நினைச்சா
ரத்தக்கண்ணீர் வருது வெங்கட்!/

இதை பாத்தா ரத்தக்கண்ணீர் மாதிரி
தெரியலையே.. எதோ ஆனந்த கண்ணீர்
மாதிரியில்ல இருக்கு..!!

என்ன ஒரு வில்லத்தனம்..!

பெசொவி said...

//வெங்கட் said...
@ ஜெய்.,

// நம்மள மாதி அப்பாவிக எல்லாம்
அடிக்கடி மீட்டிங் போட்டு ஒருத்தருக்கொருத்தர்
ஆறுதல் சொல்லிக்க வேண்டியதுதான்
வேறென்ன செய்யமுடியும்...//

நாம ஏன் ஒரு சங்கம் ஆரம்பிச்சி.,

1. எங்களை ஒரு நாளைக்கு நாலு
தடவைக்கு மேல அடிக்க கூடாது..

2. அதுவும் அடிக்க சப்பாத்தி கட்டையை
Use பண்ண கூடாது..

இப்படி ஒரு 10 அம்ச கோரிக்கை வெச்சு,
கோட்டை வரை ஒரு நடை பயணம்
போனா என்ன..?!//

அதுவும் சரிதான், ஆனா இன்னி தேதியில நம்மளுக்கு (ஆண்களுக்கு) சாதகமா தீர்ப்பு வரும்றீங்க?

பெசொவி said...

//மனசாட்சி said...
கருத்துள்ள காமடி - கண்ணில் நீர் வர சிரித்து மகிழ்ந்தேன்
//

அவரு தன் கஷ்டத்தை சொல்லி புலம்பறாரு, நீங்க சிரிச்சேன்கறீங்க! உங்க பேருல இருக்கற மனசாட்சி உங்களுக்கு இருக்கா? :)

Rajan said...

ஹா ஹா வெடித்து சிரித்து ரசித்தேன்