சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

11 July 2011

எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!!
























அனைத்துலக அப்பாவி கணவர்கள்
சார்பாக.. சில அப்பாவி கேள்விகள்..

கேள்வி No 1 :

கிட்டதட்ட 3 மணி நேரம்.,
259 புடவையை பாத்து.
அதுல இருந்து ஒரு புடவையை
Select பண்ணி எடுத்துட்டு வந்தாலும்...
வீட்டுக்கு வந்து..

" ஏங்க.. இந்த புடவை எனக்கு நல்லா
இருக்கான்னு " சந்தேகமா கேக்கறீங்களே..

இது உங்களுக்கே ஓவரா தெரியல.!?

கேள்வி No 2 :

நாங்க சீரியஸா கிரிக்கெட் மேட்ச்
பாத்துட்டு இருக்கும் போது..
" எப்ப பாரு இந்த கிரிக்கெட் தானா..?!
உங்களுக்கு Bore அடிக்காதுன்னு "
கேட்டுட்டு.. Remote-ஐ பிடுங்கி..

1032 வது தடவையா பார்க்குற
" முன்பே வா.. என் அன்பே வா..! "
Song-ஐ முதல் தடவை பார்க்குற
மாதிரி சீன் போடறீங்களே..

யப்பா.. இது உலக மகா நடிப்புடா சாமி..!

கேள்வி No 3 :

நகைகடைக்கு போனா...

" வனிதாவோட அக்காகிட்ட இருக்குற
நெக்லஸ் இந்த டிசைன் தான்..! "

துணிக்கடையில..

" ராணிகிட்ட இதே பார்டர்., இதே
டிசைன்ல லெவண்டர் கலர் Saree
ஒண்ணு இருக்கு..! "

இப்படி எல்லாத்தையும் ஞாபகம்
வெச்சி சொல்ற நீங்க... ரசத்துல
உப்பு போட மட்டும் மறந்துடறீங்களே..

ஏன்..?

கேள்வி No 4 :

எங்க பெரியம்மாவோட நாத்தனாரோட
கொழுந்தனாரோட சகலையோட
அக்கா பையனுக்கு கல்யாணமாம்..
நாம ரெண்டு பேரும் அவசியம்
போகணும்னு சொல்ற நீங்க..

3 வருஷம் கூட படிச்ச எங்க பிரண்டு
கல்யாணத்துக்கு கிளம்பும்போது
மட்டும்...

" ஏங்க நாம அவசியம் உங்க பிரண்டு
கல்யாணத்துக்கு போகணுமான்னு.? "
கேக்கறீங்களே..

இது நியாயமா..?!


கேள்வி No 5 :

இந்த செல்போன் வாங்கி 4 வருஷமாச்சு.,
Latest செல்போன் ஒண்ணு வாங்கலாம்னு
நாங்க சொன்னா..

" சும்மா பணத்தை கண்டபடி
Waste பண்ணாதீங்கன்னு.! "
எங்களுக்கு Advise பண்ணிட்டு..

" என் பட்டுசீலை ஜாக்கெட்டுக்கு
எம்ராய்டரி டிசைன் போட்டுக்கறேன்.
இதான்ங்க இப்ப Fashion-னு " சொல்லி
எம்ராய்டரிக்கு 1000 ரூபா செலவு
பண்றீங்களே..

உங்களுக்கு எங்களை எல்லாம் பாத்தா
பாவமா இல்ல..?!!

டிஸ்கி :
" மஞ்ச கயித்தை கையில கட்னா காப்பு.,
கழுத்துல கட்னா ஆப்புன்னு "
சும்மாவா சொன்னாங்க.?!!
.
.

49 Comments:

vinu said...

applause

மாலா said...

@ வினு.,

// applause //

எங்கே.? அவர் கன்னத்துலயா.?

இம்சைஅரசன் பாபு.. said...

ஹ .ஹா ..செம ..செம ....

Madhavan Srinivasagopalan said...

//பாத்தா பாவமாயில்ல..?!!"//

பாவமா இல்லை.. அதுக்கென்ன இப்போ ?
(பதிவப் படிக்காமலே போடப்பட்ட கமெண்டு)

பெசொவி said...

//ரசத்துல
உப்பு போட மட்டும் மறந்துடறீங்களே..
//

உப்பு போடாத ரசத்தை குடிச்சே, இப்படின்னா, உப்பு போட்டு சாப்டா என்ன கேள்வி கேப்பீங்க?
இப்படிக்கு
வெங்கட் மனைவி

பெசொவி said...

//
" மஞ்ச கயித்தை கையில கட்னா காப்பு.,
கழுத்துல கட்னா ஆப்புன்னு "
சும்மாவா சொன்னாங்க.?!!
.//

அதெல்லாம் சரி, துணியை எல்லாம் Iron பண்ணி மடிச்சு வச்சுட்டுத் தானே போஸ்ட் போட வந்தீங்க?

Suresh Kumar M said...

" மஞ்ச கயித்தை கையில கட்னா காப்பு.,
கழுத்துல கட்னா ஆப்புன்னு "
சும்மாவா சொன்னாங்க.?!!


இதுக்குதான் மோதிரமா மாட்டியிருந்தா ஆப்புக்கு அப்படிசிருக்கலாம்!...

சேலம் தேவா said...

உங்களை விட்டா தெகிரியமா இதை எல்லாம் தட்டி கேக்க அப்பாவி கணவர்களுக்கு வேற யாரும் இல்ல தல..நல்லா கேளுங்க தல..!!

அருண் பிரசாத் said...

இதே மாதிரி ஒரு போஸ்ட் ஏற்கன்வே உங்க பிளாக்ல பார்த்து இருக்கேன்... அதுக்கு உல்டா பதிவும் நான் கமெண்ட்ல போட்டு இருக்கேன்....

உங்க நல்ல நேரம் அது எதுனு என்னால கண்டு பிடிக்க முடிய்லை

உங்க கெட்ட நேரம்.... இன்னும் கொஞ்ச நேரத்துல இதுக்கு ஒரு உல்டா பதிவோட வரேன் இருங்க....

அருண் பிரசாத் said...

//கேள்வி No 1 :

கிட்டதட்ட 3 மணி நேரம்.,
259 புடவையை பாத்து.
அதுல இருந்து ஒரு புடவையை
Select பண்ணி எடுத்துட்டு வந்தாலும்...
வீட்டுக்கு வந்து..

" ஏங்க.. இந்த புடவை எனக்கு நல்லா
இருக்கான்னு " சந்தேகமா கேக்கறீங்களே..

இது நியாயமா..?!//

கேட்டுட்டா மட்டும் உடனே வாய்திறந்து ஆகா, அருமைனு பாராட்டிட்டு தான் மறுவேலை செய்வீங்க....
உங்க ரசனை பத்தி தெரியாதா? உங்களுக்கு சட்டை எடுக்க போனாலே அந்த “BLUE" கலர் தவிர வேற எதுவும் கண்ணுக்கு தெரியாது... இதுல உங்க சஜஷன் வேற கேட்டுட்டு...

நீங்க நல்லா இல்லைனு சொன்னாதான் ...அது நல்லா இருக்குனே அர்த்தம்... அதை புரிஞ்சிக்கோங்க

அருண் பிரசாத் said...

//கேள்வி No 2 :

நாங்க சீரியஸா கிரிக்கெட் மேட்ச்
பாத்துட்டு இருக்கும் போது..
" எப்ப பாரு இந்த கிரிக்கெட் தானா..?!
உங்களுக்கு Bore அடிக்காதுன்னு "
கேட்டுட்டு.. Remote-ஐ பிடுங்கி..

1032 வது தடவையா பார்க்குற
" முன்பே வா.. என் அன்பே வா..! "
Song-ஐ முதல் தடவை பார்க்குற
மாதிரி சீன் போடறீங்களே..

யப்பா.. இது உலக மகா நடிப்புடா சாமி..!//

ஆமா, ஒரு கிரிகெட் மேட்சை பிட்ச் ரிப்போர்ட்ல இருந்து பிரசண்ட்டேஷன் முடியறை வரை பார்த்தா கூட பரவாயில்லை.... PRE match, Post match analysis, Highlights ம்ட்டும் இல்லாம நடௌவுல வர்ற விளம்பரத்தையும் சேர்த்து பார்த்து சாகடிக்கறீங்களே இது மட்டும் நியாயமா?

அருண் பிரசாத் said...

//கேள்வி No 3 :

நகைகடைக்கு போனா...

" வனிதாவோட அக்காகிட்ட இருக்குற
நெக்லஸ் இந்த டிசைன் தான்..! "

துணிக்கடையில..

" ராணிகிட்ட இதே பார்டர்., இதே
டிசைன்ல லெவண்டர் கலர் Saree
ஒண்ணு இருக்கு..! "

இப்படி எல்லாத்தையும் ஞாபகம்
வெச்சி சொல்ற நீங்க... ரசத்துல
உப்பு போட மட்டும் மறந்துடறீங்களே..

ஏன்..?//

பெ சோ வி கமெண்ட் ரிபீட்டு....
+
அது சரி இதை எல்லாம் நியாபகம் வெச்சிகற நீங்க.... பைக் கிட்ட போன பிறகு சாவி மறந்துட்டேன், மொபைல் மறந்துடேன், டிபன் பாக்ஸ் மறந்துட்டேன்னு சொல்லுறது

ஏன்...?

அருண் பிரசாத் said...

//எங்க பெரியம்மாவோட நாத்தனாரோட
கொழுந்தனாரோட சகலையோட
அக்கா பையனுக்கு கல்யாணமாம்..
நாம ரெண்டு பேரும் அவசியம்
போகணும்னு சொல்ற நீங்க..

3 வருஷம் கூட படிச்ச எங்க பிரண்டு
கல்யாணத்துக்கு கிளம்பும்போது
மட்டும்...

" ஏங்க நாம அவசியம் உங்க பிரண்டு
கல்யாணத்துக்கு போகணுமான்னு.? "
கேக்கறீங்களே..

இது உங்களுக்கே ஓவரா தெரியல.!?//

3 வருஷம் பழகனதுக்கே இந்த பாசம்னா? 30 வருஷ பழக்கத்துக்கு போறதுல என்ன தப்பு?
+
உங்க மனைவி அவங்க பிரெண்ட்ஸ் கல்யாணத்துக்கு கூப்பிட்டா மட்டும் மாப்பிளை மாதிரி ரெடியாகி வர்றதை இதுவரை கண்டுகிட்டு இப்படி எல்லாம் கேள்வி கேட்டு இருகாங்களா என்ன?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மனைவியிடம் அடி வாங்கிக் கொண்டிருக்கும் வெங்கட் எங்கிருந்தாலும் வரவும்

அருண் பிரசாத் said...

//கேள்வி No 5 :

இந்த செல்போன் வாங்கி 4 வருஷமாச்சு.,
Latest செல்போன் ஒண்ணு வாங்கலாம்னு
நாங்க சொன்னா..

" சும்மா பணத்தை கண்டபடி
Waste பண்ணாதீங்கன்னு.! "
எங்களுக்கு Advise பண்ணிட்டு..

" என் பட்டுசீலை ஜாக்கெட்டுக்கு
எம்ராய்டரி டிசைன் போட்டுக்கறேன்.
இதான்ங்க இப்ப Fashion-னு " சொல்லி
எம்ராய்டரிக்கு 1000 ரூபா செலவு
பண்றீங்களே..

உங்களுக்கு எங்களை எல்லாம் பாத்தா
பாவமா இல்ல..?!!//

நீங்க புது மொபைல் கேகற மாதிரி புது பட்டு சீலையா கேகுறாங்க ... பழைய ஜாக்கெட்டுக்கு எம்பிராய்டரி போட்டு புதுசா ஆக்கிகறாங்க.... நீங்க வேணா பழைய மொபைல்க்கு புதுசா கவர் வாங்கி போட்டுகோங்க... யாரு தடுத்தா?

அருண் பிரசாத் said...

//டிஸ்கி :
" மஞ்ச கயித்தை கையில கட்னா காப்பு.,
கழுத்துல கட்னா ஆப்புன்னு "
சும்மாவா சொன்னாங்க.?!!//

ஒரு மஞ்ச கயித்தை கட்டிட்டா என்ன கேள்வி வேணும்னாலும் கேப்பீங்களா? உங்களௌக்கு 4 நாள் சாப்பாடு கட்...

@ வெங்கட் மனைவி
இன்னுமாங்க மஞ்ச கயிறை கட்டிட்டு இருக்கீங்க... அது ஓல்டு பேஷன்.... இப்போ எல்லாம் தங்க செயின்ல தாலிய மாட்டிகறாங்க... விடாதீங்க அவரை

நாராயணா...நாராயணா...

Mohamed Faaique said...

////மனைவியிடம் அடி வாங்கிக் கொண்டிருக்கும் வெங்கட் எங்கிருந்தாலும் வரவும்////

அடி வாங்க கூட மனைவி இல்லாத ரமேசு’வை என்ன பண்ணலாம்...

///கிட்டதட்ட 3 மணி நேரம்.,
259 புடவையை பாத்து.
அதுல இருந்து ஒரு புடவையை
Select பண்ணி எடுத்துட்டு வந்தாலும்...
வீட்டுக்கு வந்து..//

எத்தனை 1000 கலர்’ல புடவை இருந்தாலும் நீங்க ராமராஜன் கலர்’லதான் எடுத்து வருவீங்கனு தெரியுமே!!!!!

Mohamed Faaique said...

///ரசத்துல
உப்பு போட மட்டும் மறந்துடறீங்களே..////

சமைக்கிரது நீங்க.. உப்பு போட மட்டும் அவங்க வரனுமா????? இதெல்லாம் ரொம்ப ஓவர்..

////3 வருஷம் கூட படிச்ச எங்க பிரண்டு
கல்யாணத்துக்கு கிளம்பும்போது
மட்டும்...////

இது நம்பும் படியா இல்லையே!!!

கேள்வி 1: நீங்க 3 வருசம் படிச்சீங்களா???? நம்ப முடியல...
கேள்வி 2: உங்க கூட 3 வருஷம் ஒருத்தருக்கு Friend Ship வச்சிருக்க முடியுமா???

பெசொவி said...

//" ஏங்க நாம அவசியம் உங்க பிரண்டு
கல்யாணத்துக்கு போகணுமான்னு.? "
கேக்கறீங்களே..
//

பிரெண்ட் கல்யாணம்கறீங்க, அங்க உங்க பிரெண்ட் நிறைய பேரு வருவாங்க, உங்க (டுடோரியல்)காலேஜ் வண்டவாளமெல்லாம் வெளிய வரும், அந்த கொடுமை வேணாமேன்னுதான் அப்படி கேக்கறாங்க, அது கூட புரியலையா?

Mohamed Faaique said...

///ஏங்க நாம அவசியம் உங்க பிரண்டு
கல்யாணத்துக்கு போகணுமான்னு.? "
கேக்கறீங்களே..////

ஏரியாலா, ஊர்ல, மாவட்டதுல நடக்குர எல்லா கல்யானத்துக்கும் “என் பிரண்டு கல்யாணம்”னு சொல்லி போய் விடுவீங்களாமே!!!! இப்படியெல்லாம் பண்ணினா யாருதான் வருவாங்க???

///" சும்மா பணத்தை கண்டபடி
Waste பண்ணாதீங்கன்னு.! "
எங்களுக்கு Advise பண்ணிட்டு..///

இப்படியே சொல்லி உங்க இண்டெர் நெட் லைன்’ஐயும் கட் பண்ணினா எவ்வளவு நல்லா இருக்கும்....

Mohamed Faaique said...

///அது சரி இதை எல்லாம் நியாபகம் வெச்சிகற நீங்க.... பைக் கிட்ட போன பிறகு சாவி மறந்துட்டேன், மொபைல் மறந்துடேன், டிபன் பாக்ஸ் மறந்துட்டேன்னு சொல்லுறது
ஏன்...?////

அப்படி இல்ல...
பைக் சாவிய மரக்காம எடுத்துடு பஸ்ல போயி பக்கத்து அபீஸ்;ல புகுந்து எங்கையா என் அபீஸ காணல’னு சத்தம் போட்டு, Ambulance’கு போன் பன்ர பார்ட்டி நம்ம தல...

முத்தரசு said...

கேட்டாயே கேள்வி சந்தேக பாணியில் - பதில் ???????????

டிஸ்கி :
" மஞ்ச கயித்தை கையில கட்னா காப்பு.,
கழுத்துல கட்னா ஆப்புன்னு "
சும்மாவா சொன்னாங்க.?!!

ரசிகன் said...

// ஏங்க.. இந்த புடவை எனக்கு நல்லா
இருக்கான்னு " சந்தேகமா கேக்கறீங்களே//
கட்டிக்க போற புடவையாவது 4 பேருக்கு பிடிச்சாப்ல இருக்கட்டுமேன்ற ஆதங்கம் தான்..

வெங்கட் said...

@ மாலா ( என் Wife )

// எங்கே.? அவர் கன்னத்துலயா.? //

என் பதிவை பாத்துட்டு எங்க வீட்ல
எனக்கு நிறைய Applause கிடைக்கும்னு
சொன்னப்ப நீங்க எல்லாம் நம்பல இல்ல..

இப்ப பாருங்க இதான் அந்த Applause..!!

வெங்கட் said...

@ மாதவன்.,

// பாவமா இல்லை.. அதுக்கென்ன இப்போ ? //

You are Really Great Sir..!

உங்க பொண்டாட்டி ஊருக்கு போயிருந்தா
எங்கேயிருந்து தான் உங்களுக்கு
இவ்ளோ தைரியம் வருதோ..!!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// உப்பு போடாத ரசத்தை குடிச்சே,
இப்படின்னா, உப்பு போட்டு சாப்டா
என்ன கேள்வி கேப்பீங்க?
இப்படிக்கு
வெங்கட் மனைவி //

அதென்னங்க அப்பிடி சொல்லிட்டீங்க..
எங்க வூட்டுக்காரரு உப்பு போட்டு தான்
சாப்பிடறாரு.. அதுக்காக என்னை
எதிர்த்து பேசிடுவாரா என்ன..?!
இப்படிக்கு
பெ.சொ.வியின் மனைவி

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// அதெல்லாம் சரி, துணியை எல்லாம்
Iron பண்ணி மடிச்சு வச்சுட்டுத் தானே
போஸ்ட் போட வந்தீங்க? //

ஹி., ஹி., ஹி..!! ஆமா..

அது சரி நீங்க அந்த பாத்திரத்தை
எல்லாம் கழுவிட்டு தானே இங்கே
கமெண்ட் போட வந்தீங்க..?!!

வெங்கட் said...

@ சுரேஷ்.,

// இதுக்குதான் மோதிரமா மாட்டியிருந்தா
ஆப்புக்கு அப்படிசிருக்கலாம்!... //

அதான் இல்ல...

நம்ம கையில போட்டா அது ரிங்கு..
பொண்ணுங்க கையில போட்டா..
அது சங்கு..!

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// உங்களை விட்டா தெகிரியமா
இதை எல்லாம் தட்டி கேக்க
அப்பாவி கணவர்களுக்கு வேற யாரும்
இல்ல தல.. நல்லா கேளுங்க தல..!! //

இப்படி உசுப்பேத்தி., உசுப்பேத்தி தான்
உடம்பு ரணகளமா இருக்கு.. அப்பவும்
விடமாட்டாங்க போல இருக்கே..!!

அவ்வ்வ்வ்வ்...!!

வெங்கட் said...

@ அருண்.,

// இதே மாதிரி ஒரு போஸ்ட் ஏற்கன்வே
உங்க பிளாக்ல பார்த்து இருக்கேன்... //

நீங்க சொல்றது உள்குத்து
இந்த பதிவா இருக்கும்னு நினைக்கிறேன்..

அவங்க பண்ற அநியாயத்தை எல்லாம்
ஒரே பதிவுல சொல்லி முடிக்க
முடியாதுபா..!

HVL said...

//எங்களை எல்லாம் பாத்தா பாவமாயில்ல..?!! //

இருக்கு, உங்க wifeஅ பார்த்தா!

வெங்கட் said...

@ அருண்.,

// உங்க நல்ல நேரம் அது எதுனு
என்னால கண்டு பிடிக்க முடிய்லை

உங்க கெட்ட நேரம்.... இன்னும் கொஞ்ச
நேரத்துல இதுக்கு ஒரு உல்டா பதிவோட
வரேன் இருங்க.... //

நேத்து இந்த பதிவோட டிராப்டை
Chat-ல காட்டினப்ப..

" நீ போடு மச்சி..! எங்க வீட்ல இதை
விட கொடுமை நடக்குதுன்னு "
சொல்லிட்டு இப்ப உல்டாவாவா
கமெண்ட் போடறீங்களா..?

உங்க நல்ல நேரம் அந்த Chat-ஐ
உங்க Wife பாக்காதது..

உங்க கெட்ட நேரம்.. இன்னும் கொஞ்ச
நேரத்துல அந்த Chat History-ஐ உங்க
Wife Email ID-க்கு அனுப்ப போறேன்..!!

வெங்கட் said...

@ அருண்.,

// நீங்க வேணா பழைய மொபைல்க்கு
புதுசா கவர் வாங்கி போட்டுகோங்க...
யாரு தடுத்தா? //

அதான்... 6 வருஷமா ஒரே மொபைலுக்கு
புதுசு புதுசா கவர் மட்டும் மாத்தி மாத்தி
போட்டுட்டு இருக்கீங்களா..?!!

middleclassmadhavi said...

பார்க்கப் போறது நீங்கதானேன்னு சாரி செலக்ஷன்ல கேட்டா தப்பா!

எப்பவோ பார்க்கற நகை டிசைன் நிச்சயமா ஞாபகம் இருக்கும், ரசம் தினம்தினம் செய்ய வேண்டியிருக்கே!!

லேட்டஸ்ட் டிசைனில் எல்லாம் செய்து சமுதாயத்தில் உங்கள் கவுரவத்தைக் காப்பாற்ற உங்கள் மனைவி பாடுபட்டால், நீங்க அதைப் புரிஞ்சுக்காம பதிவு போடறீங்க!! :-))

பின் புலம் said...

கிட்டதட்ட 3 மணி நேரம்.,
259 புடவையை பாத்து.
அதுல இருந்து ஒரு புடவையை
Select பண்ணி எடுத்துட்டு வந்தாலும்...
வீட்டுக்கு வந்து..

" ஏங்க.. இந்த புடவை எனக்கு நல்லா
இருக்கான்னு " சந்தேகமா கேக்கறீங்களே..

இது உங்களுக்கே ஓவரா தெரியல.!?

Unknown said...

wow super....
ரொம்பவே ரசித்தேன்.

ADMIN said...

ரொம்ப அனுபவப் பட்டிருப்பீங்க போல..

பதிவு சுவராஷ்யமாக இருந்தது..! வாழ்த்துக்கள்..!!

பாலா said...

//கேள்வி No 3 :// தஉபொசி :))
//டிஸ்கி:// செம செம.

தஉபொசி: தரைல உருண்டு பொரண்டு சிரிச்சேன்.

Jey said...

அவிய்ங்க அப்படிதான் பாஸ் எப்பயும் நம்மள கொடுமைப் படித்திகிட்டே இருப்பாங்க... இதையெல்லாம் பப்ளிக்ல சொல்லக் கூடாது பாஸ்..., சூனாப் பானா யாரும் பாக்கலைனு அருண்மாதிரி வெளில காட்டிட்டுப் போய்ட்டே இருக்கணும்....

samhitha said...

ha ha
பாஸ் v2la இதுக்காக செம applause கெடச்சதா இல்லையா???
//நம்ம கையில போட்டா அது ரிங்கு..
பொண்ணுங்க கையில போட்டா..
அது சங்கு..!//
எப்டி பாஸ் இப்டி எல்லாம் பிடிக்கிறீங்க ?
நீங்க TR ரசிகரா? :D

//இப்படியே சொல்லி உங்க இண்டெர் நெட் லைன்’ஐயும் கட் பண்ணினா எவ்வளவு நல்லா இருக்கும்..//

என்ன தான் இருந்தாலும் நாட்டுக்கு இவ்ளோ பெரிய துரோகத்த அவர் மனைவி செய்ய மாட்டாங்க ;)

@faaique
//அடி வாங்க கூட மனைவி இல்லாத ரமேசு’வை என்ன பண்ணலாம்...//
"தன்னை அடிக்க மனைவி இல்லாத"னு சொல்லுங்க நீங்களே அவர உள்ள தள்ள ஏற்பாடு பண்ணிடுவீங்க போல ;)

//பைக் சாவிய மரக்காம எடுத்துடு பஸ்ல போயி பக்கத்து அபீஸ்;ல புகுந்து எங்கையா என் அபீஸ காணல’னு சத்தம் போட்டு, Ambulance’கு போன் பன்ர பார்ட்டி//

மூச்சு விடாம பேசுறத பார்த்த சொந்த அனுபவம் மாதிரி இருக்கே ????

@rasigan
//கட்டிக்க போற புடவையாவது 4 பேருக்கு பிடிச்சாப்ல இருக்கட்டுமேன்ற ஆதங்கம் தான்..//

அது மட்டும்தாங்க 4 பேருக்கு பிடிக்கணும்.. :D

//துணியை எல்லாம்
Iron பண்ணி மடிச்சு வச்சுட்டுத் தானே
போஸ்ட் போட வந்தீங்க?
நீங்க அந்த பாத்திரத்தை
எல்லாம் கழுவிட்டு தானே இங்கே
கமெண்ட் போட வந்தீங்க.//

ohh கல்யாணம் ஆனா பாய்ஸ் இதெல்லாம் செய்யணுமா?? இன்னும் என்ன என்ன செய்யணும்னு அடுத்த பதிவு போடுங்க :P

romba naalaikku apram vilundhu vilundhu sirika vacha kalakkal post and cmts :D :D :D

Mohamed Faaique said...

@ samhitha said...

////romba naalaikku apram vilundhu vilundhu sirika vacha kalakkal post and cmts :D :D :D ////

ரொம்ப நாளா உருப்படியா பதிவே போடல’னு தெளிவா சொல்லிடீங்க.. ஆனாலும் இது உருப்படியான பதிவு’னு பொஇ சொல்லி இருக்க கூடாது...

samhitha said...

//
ரொம்ப நாளா உருப்படியா பதிவே போடல’னு தெளிவா சொல்லிடீங்க.. //

இதோடா, நீங்க உங்க அம்மாகிட்ட இனிக்கு சமையல் சூப்பர் னு சொன்னா உடனே இதனை வருஷமா செஞ்சது நல்லா இல்லனு அர்த்தமா?
போங்க போய் வேற வேலைய பாருங்க :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கேள்வி No 1 :

கிட்டதட்ட 3 மணி நேரம்.,
259 புடவையை பாத்து.
அதுல இருந்து ஒரு புடவையை
Select பண்ணி எடுத்துட்டு வந்தாலும்...
வீட்டுக்கு வந்து..

" ஏங்க.. இந்த புடவை எனக்கு நல்லா
இருக்கான்னு " சந்தேகமா கேக்கறீங்களே..

இது உங்களுக்கே ஓவரா தெரியல.!?///////

இதுக்குத்தான் முதல் புடைவய எடுத்து இது நல்லாருக்கான்னு கேட்கும்போதே சூப்பர்னு சொல்லிடனும், நீங்க என்னமோ தோட்டா தரணி ரேஞ்சுக்கு உங்களை நெனச்சுக்கிட்டு ஆயிரத்தெட்டு சஜசன் சொன்னா இப்படித்தான்.........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கேள்வி No 2 :

நாங்க சீரியஸா கிரிக்கெட் மேட்ச்
பாத்துட்டு இருக்கும் போது..
" எப்ப பாரு இந்த கிரிக்கெட் தானா..?!
உங்களுக்கு Bore அடிக்காதுன்னு "
கேட்டுட்டு.. Remote-ஐ பிடுங்கி..

1032 வது தடவையா பார்க்குற
" முன்பே வா.. என் அன்பே வா..! "
Song-ஐ முதல் தடவை பார்க்குற
மாதிரி சீன் போடறீங்களே..

யப்பா.. இது உலக மகா நடிப்புடா சாமி..!////////

கிரிக்கெட்டு பாக்கிறேன்னு சியர் கேர்ள்ச பாத்து ஜொள்ளு விடுறத கண்டுபுடிச்சிருப்பாங்க......... அதெல்லாம் நேக்கா பண்ணவேணாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கேள்வி No 3 :

நகைகடைக்கு போனா...

" வனிதாவோட அக்காகிட்ட இருக்குற
நெக்லஸ் இந்த டிசைன் தான்..! "

துணிக்கடையில..

" ராணிகிட்ட இதே பார்டர்., இதே
டிசைன்ல லெவண்டர் கலர் Saree
ஒண்ணு இருக்கு..! "

இப்படி எல்லாத்தையும் ஞாபகம்
வெச்சி சொல்ற நீங்க... ரசத்துல
உப்பு போட மட்டும் மறந்துடறீங்களே..

ஏன்..?///////

நீங்க அதை ரசம்னு கரெக்டா கண்டுபுடிக்க முடியுதே, அத விட வேற என்ன வேணும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கேள்வி No 4 :

எங்க பெரியம்மாவோட நாத்தனாரோட
கொழுந்தனாரோட சகலையோட
அக்கா பையனுக்கு கல்யாணமாம்..
நாம ரெண்டு பேரும் அவசியம்
போகணும்னு சொல்ற நீங்க..

3 வருஷம் கூட படிச்ச எங்க பிரண்டு
கல்யாணத்துக்கு கிளம்பும்போது
மட்டும்...

" ஏங்க நாம அவசியம் உங்க பிரண்டு
கல்யாணத்துக்கு போகணுமான்னு.? "
கேக்கறீங்களே..

இது நியாயமா..?!
////////

பிரண்டு கல்யாணத்துக்கு போனா சும்மாவா இருப்பீங்க..... ? பிரண்டுஸ், சோசியல் அது இதுன்னு சொல்லி நைசா ’தண்ணி’ காட்டிருவீங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கேள்வி No 5 :

இந்த செல்போன் வாங்கி 4 வருஷமாச்சு.,
Latest செல்போன் ஒண்ணு வாங்கலாம்னு
நாங்க சொன்னா..

" சும்மா பணத்தை கண்டபடி
Waste பண்ணாதீங்கன்னு.! "
எங்களுக்கு Advise பண்ணிட்டு..

" என் பட்டுசீலை ஜாக்கெட்டுக்கு
எம்ராய்டரி டிசைன் போட்டுக்கறேன்.
இதான்ங்க இப்ப Fashion-னு " சொல்லி
எம்ராய்டரிக்கு 1000 ரூபா செலவு
பண்றீங்களே..

உங்களுக்கு எங்களை எல்லாம் பாத்தா
பாவமா இல்ல..?!!/////////

பாவம் பார்த்ததுனாலதான் செல்போனே வெச்சிருக்கீங்க...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டிஸ்கி :
" மஞ்ச கயித்தை கையில கட்னா காப்பு.,
கழுத்துல கட்னா ஆப்புன்னு "
சும்மாவா சொன்னாங்க.?!!////////

இதையெல்லாம் ப்ளாக்ல போடுறீங்களே, உண்மையிலேயே நீங்க பெரிய தைரியசாலிதானுங்ணா......

இராஜராஜேஸ்வரி said...

அருமையான நகைசுவைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.