சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

22 April 2011

" சிரிப்பு போலீஸ் " மறைத்த உண்மைகள்..!!

" சிரிப்பு போலீஸ் " ரமேஷ்,
சேலம் வந்து என்னை மீட் பண்ணினதை
பத்தி அவர் பிளாக்ல எழுதி இருந்தாரு..

ஆனா.. அந்த பதிவுல அவர் சொல்லாம
மறைச்ச உண்மைகள். இதோ..

ரமேஷ் : எப்படி இருக்கீங்க வெங்கட்..

நான் : இதுவரைக்கும் நல்லா தான்
இருந்தேன்..

ரமேஷ் : வெங்கட் எனக்கு ஒரு டவுட்..

நான் : என்ன சொல்லுங்க..?

ரமேஷ் : ஒரு வாரமா என்கிட்ட
ஒரு மாற்றம் தெரியுது..!

நான் : ஏன் யார்கிட்டேயும் ஓசி சாப்பாடு
வாங்கி சாப்பிடறதில்லையா..?

ரமேஷ் : மாற்றம் தெரியுதுன்னு தான்
சொன்னேன். திருந்திட்டேன்னா சொன்னேன்..

நான் : ஓ..,சரி என்ன விஷயம் சொல்லுங்க..

ரமேஷ் : தூக்கம் வருது.. ஆனா தூங்க
முடியல..!!

நான் : சரி.,

ரமேஷ் : பசிக்குது., ஆனா சாப்பிட முடியல

நான் : அடடா.. அப்படியா..?

ரமேஷ் : Work-ல சரியா Concentrate பண்ண
முடியல..

நான் : இது வேறயா..?

ரமேஷ் : இப்ப சொல்லுங்க வெங்கட்..
இதுக்கு பேருதான் லவ்வா..?

நான் : இல்ல ரமேஷு.., இதுக்கு
பேருதான் " பன்னி காய்ச்சல்..! "

ரமேஷ் : கலாய்க்காதீங்க வெங்கட்..
இந்த போட்டோவை பாருங்க.

( ரமேஷ் என்னிடம் காட்டிய அந்த
கேவலமான போட்டோ இது தான்.. )

ரமேஷ் : எங்க ஜோடி பொருத்தம் எப்படி..?

நான் : இதான் உங்க லவ்வரா..?

ரமேஷ் : ஏன் டவுட்டா கேக்கறீங்க..?
தோள் மேல கை போட்டிருக்கேனே.
கவனிக்கலை.?!!

நான் : அந்த பொண்ணு துப்பாக்கி
மேல கை வெச்சிருக்கே.. அதை
நீங்க கவனிக்கலை..?!!

ரமேஷ் : அதுவா..? அந்த பொண்ணுக்கு
தைரியம் ஜாஸ்தி..

நான் : அதான் இப்படி ஒரு Risk எடுக்குதா..?

ரமேஷ் : விளையாடாதீங்க..!!

நான் : நானா விளையாடுறேன்..?
நீங்க தான் ஒரு பொண்ணோட
வாழ்க்கையில விளையாடுறீங்க..

ரமேஷ் : சரி., இப்ப எனக்கு Help
பண்ண முடியுமா.? முடியாதா..?

நான் : ஓ.கே.. Cool., Cool..!!
சிங்கப்பூர்ல என் பிரண்ட் ஒருத்தன்
இருக்கான்.. உடனே அவனை போயி
பாருங்க.. அவன் உங்களுக்கு நிச்சயம்
Help பண்ணுவான்..

ரமேஷ் : அவர் பெயர் என்ன..? அங்கே
அவரு என்னவா இருக்காரு..?

நான் : அவன் பேரு ஹரிபிரசாத்.,
பைத்தியக்கார ஆஸ்பத்திரியில
டாக்டரா இருக்கான்..

டிஸ்கி : இப்ப தெரியுதா.. சிரிப்பு போலீஸ்
எதுக்காக சிங்கப்பூர் போனார்னு..
.
.

51 Comments:

இம்சைஅரசன் பாபு.. said...

// பைத்தியக்கார ஆஸ்பத்திரியில
டாக்டரா இருக்கான்.. //

அட போங்க பாஸ் .இனி சிங்கப்பூர் பத்தி பதிவு எழுதி எல்லோரையும் பைத்தியம் புடிக்க வைப்பான் என் நண்பன்

வெங்கட் said...

@ பாபு.,

// இனி சிங்கப்பூர் பத்தி பதிவு எழுதி
எல்லோரையும் பைத்தியம் புடிக்க
வைப்பான் என் நண்பன் //

அமைதி., அமைதி..!!
யாரும் பயப்பட தேவையில்ல...

அந்த ஆஸ்பத்திரியில லேப்டாப்.,
Net Connection எல்லாம் இல்லையாம்.
விசாரிச்சுட்டேன்..

Jey said...

அடப்பாவி, சிங்கப்பூருக்கு வேற விசயமா இல்லா போறதா சொன்னான். பயபுள்ள் பொய் சொல்லிட்டாம்போல....

விக்கி உலகம் said...

இப்பதான்யா புரியுது........ ஹிஹி!

samhitha said...

//அந்த பொண்ணு துப்பாக்கி
மேல கை வெச்சிருக்கே.. அதை
நீங்க கவனிக்கலை..?!!
//
சும்மாவா??முறைச்சிட்டே வேற இருக்காங்க ;)
போன் பேசுற சுவாரஸ்யத்துல ஆள கவனிக்கல போல ;)

//ரமேஷ் : அதுவா..? அந்த பொண்ணுக்கு
தைரியம் ஜாஸ்தி..

நான் : அதான் இப்படி ஒரு Risk எடுக்குதா..?
//
செம காமெடி ஹா ஹா ஹா

//: இப்ப தெரியுதா.. சிரிப்பு போலீஸ்
எதுக்காக சிங்கப்பூர் போனார்னு..//
ஒஹ்ஹ்ஹ்ஹ் இதுக்கு தானா? :D
இனிமே உங்கள தேடி வரவங்க கொஞ்சம் ஜாக்கிரதையா தான் வரணும் போல :)
நல்லா டேமேஜ் பண்றீங்க ;)

ரசிகன் said...

//சிங்கப்பூர்ல என் பிரண்ட் ஒருத்தன் இருக்கான்.பைத்தியக்கார ஆஸ்பத்திரியில டாக்டரா இருக்கான்.. //
ஏன் இந்த தன்னடக்கம் சிங்கப்பூர் பைத்தியக்கார ஆஸ்பத்திரி டாக்டர் மட்டுமா உங்களுக்கு தெரியும், ரஷ்யால இருந்து அரேபியா வரை, அமெரிக்கால இருந்து ஆஸ்திரேலியா வரை உள்ள சர்வதேச பைத்திய வைத்திய டாக்டர்ஸையும் உங்களுக்கு தெரியும்னும், அவங்களுக்கு ஒரு சவால விளங்கறவர் நீங்கன்னும் எங்களுக்கு நல்லாவே தெரியும்..

middleclassmadhavi said...

:-))

Mohamed Faaique said...

en NHM Writter not working. so, konja nearam free'ya irunga..... sari senjutu vanthu kummurean...

Sen22 said...

//ரசிகன் said...
//சிங்கப்பூர்ல என் பிரண்ட் ஒருத்தன் இருக்கான்.பைத்தியக்கார ஆஸ்பத்திரியில டாக்டரா இருக்கான்.. //
ஏன் இந்த தன்னடக்கம் சிங்கப்பூர் பைத்தியக்கார ஆஸ்பத்திரி டாக்டர் மட்டுமா உங்களுக்கு தெரியும், ரஷ்யால இருந்து அரேபியா வரை, அமெரிக்கால இருந்து ஆஸ்திரேலியா வரை உள்ள சர்வதேச பைத்திய வைத்திய டாக்டர்ஸையும் உங்களுக்கு தெரியும்னும், அவங்களுக்கு ஒரு சவால விளங்கறவர் நீங்கன்னும் எங்களுக்கு நல்லாவே தெரியும்..//

repeattuuuuu :)))))))))

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//////ரமேஷ் : ஏன் டவுட்டா கேக்கறீங்க..?
தோள் மேல கை போட்டிருக்கேனே.
கவனிக்கலை.?!!

நான் : அந்த பொண்ணு துப்பாக்கி
மேல கை வெச்சிருக்கே.. அதை
நீங்க கவனிக்கலை..?!!////////

this is classic

nice funny post

samhitha said...

//அமெரிக்கால இருந்து ஆஸ்திரேலியா வரை உள்ள சர்வதேச பைத்திய வைத்திய டாக்டர்ஸையும் உங்களுக்கு தெரியும்னும், அவங்களுக்கு ஒரு சவால விளங்கறவர் நீங்கன்னும் எங்களுக்கு நல்லாவே தெரியும்..
//
ஆமா ஆமா அவங்களுக்கு தெரியாத நெறைய விஷயங்களை கண்டுபிடிக்கிறார் இல்ல அதான் ;)!!

வெங்கட் said...

@ ஜெய்.,

// அடப்பாவி, சிங்கப்பூருக்கு வேற
விசயமா இல்லா போறதா சொன்னான்.
பயபுள்ள பொய் சொல்லிட்டாம்போல. //

ஆமா.. அவரு பெரிய உகாண்டா அதிபரு..
சிங்கப்பூர்க்கு வாங்க.. அணுசக்தி ஒப்பந்தம்
போடலாம்னு கூப்பிட்டு இருப்பாங்க..

ரமேஷ் ஊருக்கு திரும்பி வந்ததும்
நான் வேணாம்னு தடுத்தாலும்., நீங்க
ரவுண்ட் கட்டி அடிக்காமயா விட போறீங்க..?

பாத்து.. நல்லா., பொறுமையா அடிங்க..
ஒண்ணும் அவசரமில்ல..

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// சும்மாவா?? முறைச்சிட்டே வேற
இருக்காங்க.. போன் பேசுற சுவாரஸ்யத்துல
ஆள கவனிக்கல போல ;) //

ஆமா.. ஆமா.. அந்த பொண்ணு
முறைக்கிறதை பாத்தா.. ரமேஷை
தூக்கி போட்டு மிதி மிதின்னு மிதிச்சு
இருக்கும் போல தெரியுது..!!

// இனிமே உங்கள தேடி வரவங்க
கொஞ்சம் ஜாக்கிரதையா தான் வரணும்
போல :) நல்லா டேமேஜ் பண்றீங்க ;) //

பின்ன., இந்திய இளைஞர்களுக்கு காஸ்டியூம்
விஷயத்துல ஒரு ரோல் மாடலா இருக்குற
என்னை பாத்து., என் சட்டையை பாத்து
" ராமராஜன் சட்டைன்னு " கிண்டல்
பண்ணினா சும்மா விட்டுடுவோமா.?!

karthikkumar said...

நான் : நீங்க என்னமோ ரமேச கலாய்ச்சிட்டதா இந்த பசங்கெல்லாம் பேசிக்கிறாங்களே ..

வெங்கட் : அது ஒண்ணுமில்ல கார்த்தி, VKS ஐயும் VKS மெம்பர்சை பத்தியும் எழுதாம வேற எதாச்சும் எழுதுனா ஹிட்ஸ் கெடைக்காது அதான்.

நான் : அதானே பார்த்தேன்.. என்னைக்கு நீங்களா திங்க் பண்ணி எழுதிருக்கீங்க.. எல்லாம் VKS புண்ணியத்துலதானே ஓடிகிட்டு இருக்கு..

வெங்கட் : ஹி ஹி ..அது எனக்கு தெரியாதா?.. VKS போட்ற கமென்ட் படிக்கதான் என் ப்ளாகுக்கு வர்றாங்கன்னு...

நான்: சரி சரி போங்க போங்க .. அடுத்த தடவையாவது VKS தயவு இல்லாம நீங்களா எதாச்சும் எழுதுங்க...
வெங்கட் : (அது தெரிஞ்சா எழுதமாட்டமா)... ஹி ஹி சரி கார்த்தி.. :))

வெங்கட் said...

@ ரசிகன்.,

// ஏன் இந்த தன்னடக்கம் சிங்கப்பூர்
பைத்தியக்கார ஆஸ்பத்திரி டாக்டர்
மட்டுமா உங்களுக்கு தெரியும்,
ரஷ்யால இருந்து அரேபியா வரை,
அமெரிக்கால இருந்து ஆஸ்திரேலியா
வரை உள்ள சர்வதேச பைத்திய வைத்திய
டாக்டர்ஸையும் உங்களுக்கு தெரியும்னும், //

ஹி., ஹி., ஹி..!!

ரமேஷ்க்கு சிங்கப்பூர் டாக்டரை
Recommend பண்ணினது வேறு..

உங்களுக்கு
ரஷ்யால இருந்து அரேபியா வரை,
அமெரிக்கால இருந்து ஆஸ்திரேலியா
வரை உள்ள சர்வதேச பைத்திய
வைத்திய டாக்டர்ஸை Recommend
பண்ணினது வேறு..

ஏன்னா.. ஒவ்வொரு கேஸ்க்கு.,
ஒவ்வொரு பீலிங்..சாரி.. ட்ரீட்மெண்ட்..

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// ஆமா ஆமா அவங்களுக்கு தெரியாத
நெறைய விஷயங்களை கண்டுபிடிக்கிறார்
இல்ல அதான் ;)!! //

ஆஹா., நோபல் பரிசு குடுக்குற கமிட்டி
சேர்மன் என்னை பத்தி அவர் நண்பரிடம்
சொன்ன அதே வார்த்தை..!!

பெசொவி said...

// வெங்கட் said...

ஆஹா., நோபல் பரிசு குடுக்குற கமிட்டி
சேர்மன் என்னை பத்தி அவர் நண்பரிடம்
சொன்ன அதே வார்த்தை..!!//

அடக் கடவுளே, உங்களுக்கு ட்ரீட்மென்ட் குடுக்க இந்த உலகத்தில இருக்கற எந்த டாக்டராலேயும் முடியாது போலிருக்கே!

பெசொவி said...

//ரமேஷ் : வெங்கட் எனக்கு ஒரு டவுட்..

நான் : என்ன சொல்லுங்க..?

ரமேஷ் : ஒரு வாரமா என்கிட்ட
ஒரு மாற்றம் தெரியுது..!
//


உங்ககிட்ட வந்து டவுட் கேக்கும்போதே தெரியுது, போலீஸ்க்கு என்னவோ ஆயிடுச்சுன்னு! அதுனால அவரை ஒரு பைத்தியக்கார டாக்டரிடம் அனுப்பியது சரிதான். ஆனா உங்க பேச்சைக் கேட்டு ஒரு டாக்டர்கிட்ட போனா அவரோட கதி?

I pity you Ramesh!

பெசொவி said...

//ரமேஷ் : தூக்கம் வருது.. ஆனா தூங்க
முடியல..!!

நான் : சரி.,

ரமேஷ் : பசிக்குது., ஆனா சாப்பிட முடியல

நான் : அடடா.. அப்படியா..?

ரமேஷ் : Work-ல சரியா Concentrate பண்ண
முடியல..

நான் : இது வேறயா..?

ரமேஷ் : இப்ப சொல்லுங்க வெங்கட்..
இதுக்கு பேருதான் லவ்வா..?
//

இல்ல இதுக்குப் பேரு வெங்கட் ப்ளாக் படிச்சோபோபியா. நாலு நாள் உங்க ப்ளாக் பக்கம் வராம இருந்தாலே போதும், சரியாயிடும்.

Mohamed Faaique said...

//ரமேஷ் : எப்படி இருக்கீங்க வெங்கட்..///

நான் : இதுவரைக்கும் நல்லா தான்
இருந்தேன்..என் ப்லாக் படிச்ச எல்லோரும்தான் ரொம்ப கவலைக்கிடமா இருக்காங்க....

///ரமேஷ் : ஒரு வாரமா என்கிட்ட
ஒரு மாற்றம் தெரியுது..!

நான் : ஏன் யார்கிட்டேயும் ஓசி சாப்பாடு
வாங்கி சாப்பிடறதில்லையா..? ///

ரமேஸுக்கு சாப்பாடு குடுக்கனுமே’னு எவ்ளோ பயந்திருக்கீங்கன்னு இப்போதான் புரியுது....

சாப்பிட்டதும் நீங்கதான் அந்த ஹோட்டல்ல மாவாட்டினீங்களாமே!!!!

///ரமேஷ் : பசிக்குது., ஆனா சாப்பிட முடியல///

நான் : அடடா.. அப்படியா..? சாப்பாட்டு செலவு மிச்சம்... (இப்படிதானே யோசிச்சீங்க...)

Mohamed Faaique said...

///
ரமேஷ் : Work-ல சரியா Concentrate பண்ண
முடியல.. //

ப்லாக் எழுதுரவன் யார்தான் Work-ல சரியா Concentrate பண்ராங்க....

///ரமேஷ் : சரி., இப்ப எனக்கு Help
பண்ண முடியுமா.? முடியாதா..? //

நீங்கதான் அந்த சேலம் சித்த வைத்தியரா?

நீங்க அங்க எட்மிட் ஆகி இருக்கும் போது, பிரண்ட் ஆயிட்டாரா?

////அந்த ஆஸ்பத்திரியில லேப்டாப்.,
Net Connection எல்லாம் இல்லையாம்.
விசாரிச்சுட்டேன்..///
சேலம் Branch’ல மாத்திரம் எப்படிங்க, லேப்டாப்.,
Net Connection எல்லாம் உங்களுக்கு கிடைக்குது?

Mohamed Faaique said...

///பின்ன., இந்திய இளைஞர்களுக்கு காஸ்டியூம்
விஷயத்துல ஒரு ரோல் மாடலா இருக்குற
என்னை பாத்து., என் சட்டையை பாத்து
" ராமராஜன் சட்டைன்னு " கிண்டல்
பண்ணினா சும்மா விட்டுடுவோமா.?!///

ஆமாங்க... உண்மைதான்.. நீங்கதான் இந்திய இளைஞர்களுக்கு காஸ்டியூம்
விஷயத்துல ஒரு ரோல் மாடல்.. உங்களை பார்த்துதானே, ராமராஜனே அப்படி Dress பண்ணினாரு..
டிஸ்கி:- இது 1975’ல நடந்தது...

Mohamed Faaique said...

///ரமேஷ் : வெங்கட் எனக்கு ஒரு டவுட்..//

இப்படி கேட்கும் போதே உங்கள வெச்சு காமெடி பண்ண போராருண்ணு புரியலயா? உங்க ஓவர் பில்ட் அப், ஓவர் இம்மெஜினேஷன்’தான் தல உங்களுக்கு எதிரி.

//நான் : ஏன் யார்கிட்டேயும் ஓசி சாப்பாடு
வாங்கி சாப்பிடறதில்லையா..?//
அவர் சொன்ன ”மாற்றம்” உங்க கிட்ட இல்லீங்க..அவர் கிட்ட..

///ரமேஷ் : தூக்கம் வருது.. ஆனா தூங்க
முடியல..!! //
உங்க பதிவ படிக்க சொல்லுங்க.. இனிமேல் தூக்கமே வராது...

Mohamed Faaique said...

ரமேஸ்.. இத நீங்க சும்மா விட கூடாது.. வெங்கட்’அ எதிர்த்து நீங்களும் ஒரு பதிவு போடனும்.. இப்பவே...
(ஹி..ஹி.. பதிவுலக்துல, சண்டை தானாக உருவாகுரதில்ல.. நாங்கதான் உருவாக்கனும்.. அப்போதான் நமக்கு டைம் பாஸ் ஆகும்.

வெங்கட் said...

@ கார்த்தி.,

// VKS போட்ற கமென்ட் படிக்கதான்
என் ப்ளாகுக்கு வர்றாங்கன்னு... //

சரியா சொல்லுங்க.. VKS போட்ற
கமெண்ட்டா.. இல்ல நாங்க VKS ‍‍‍ஐ
( தலையில நாலு ) போடற கமெண்ட்டா..!

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// அடக் கடவுளே, உங்களுக்கு ட்ரீட்மென்ட்
குடுக்க இந்த உலகத்தில இருக்கற எந்த
டாக்டராலேயும் முடியாது போலிருக்கே! //

ஜீனியஸா இருந்தா.. இது ஒரு பிராப்ளம்.

தலைவலி., காய்ச்சல் ட்ரீட்மென்டுக்கு
போனா.. " உங்களுக்கு தெரியாத மருந்தா
சார்னு.! " எல்லா டாக்டர்களும் ஒரே மாதிரி
சொல்றாங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் : ஓ.கே.. Cool., Cool..!!
சிங்கப்பூர்ல என் பிரண்ட் ஒருத்தன்
இருக்கான்.. உடனே அவனை போயி
பாருங்க.. அவன் உங்களுக்கு நிச்சயம்
Help பண்ணுவான்..///

இத நீங்க சொல்லனுமா? உங்க பிரண்டுனாலே பைத்தியகாரனா இல்லைன்னா பைத்தியகார டாக்டராத்தான இருப்பாங்க..

வெங்கட் said...

@ பெ.சொ.வி.,

// உங்ககிட்ட வந்து டவுட் கேக்கும்போதே
தெரியுது, போலீஸ்க்கு என்னவோ ஆயிடுச்சுன்னு!
அதுனால அவரை ஒரு பைத்தியக்கார டாக்டரிடம்
அனுப்பியது சரிதான். //

சேம் சைடு கோல்......!!

இப்ப எனக்கு என் பிரண்டு
டாக்டர் ஹரிபிரசாத்தை நினைச்சாதான்
ரொம்ப கவலையா இருக்கு..

அவன் க்ளீனிக் பக்கத்துலயே
ஒரு பெரிய ஷாப்பிங் மால் இருக்காம்..
அங்கே வேற வித விதமா நிறைய
பொண்ணுங்க பொம்மை இருக்காம்..

ரமேஷூ அந்த ஷாப்பிங் மால்க்கு
கேமராவ தூக்கிட்டு அடிக்கடி
" எஸ் " ஆயிடறாராம்..

வெங்கட் said...

@ Mohamed.,

// இதுவரைக்கும் நல்லா தான் இருந்தேன்..
என் ப்லாக் படிச்ச எல்லோரும்தான்
ரொம்ப கவலைக்கிடமா இருக்காங்க. //

" சிரிப்பு போலீஸ் " பத்தி பதிவு
போட்டிருக்கோம்ல.. அப்ப இப்படிதான்
இருக்கும்..

// சாப்பிட்டதும் நீங்கதான் அந்த
ஹோட்டல்ல மாவாட்டினீங்களாமே!!!! //

சே., சே.., நம்மளுது எப்பவுமே
கிரண்டர்க்கு சுவிட்ச் போடற
டிபார்ட்மென்ட் தான்..

ரமேஷ் பிளேட் கழுவனதை பத்தி
நாம எதுவும் இங்கே பேச வேணாம்..
பாவம்.. பிளேட்டை நல்லா கழுவலைன்னு
ஹோட்டல்காரன்கிட்ட ரெண்டு அடி வேற
வாங்கினாரு..!

வெங்கட் said...

@ Mohamed.,

// நீங்கதான் அந்த சேலம்
சித்த வைத்தியரா? //

இல்ல அவருக்கு பக்கத்துல
உக்காந்து உருண்டை உருட்டி
குடுத்துட்டு இருக்கேன்..

நல்லா கேக்கறாங்கய்யா டீடெய்லு..!!

Mohamed Faaique said...

///ரமேஷ் பிளேட் கழுவனதை பத்தி
நாம எதுவும் இங்கே பேச வேணாம்..
பாவம்.. பிளேட்டை நல்லா கழுவலைன்னு
ஹோட்டல்காரன்கிட்ட ரெண்டு அடி வேற
வாங்கினாரு..! ///

உங்க அளவுக்கு அவருக்கு அனுபவம் இல்ல பாஸ்.. இன்னும் கல்யாணம் ஆகல்லையே!! அப்புறம் பாருங்க.....

ராஜி said...

எப்ப பாரு சின்னப்புள்ளைய பிடிச்சுக் கலாய்ச்சுக்கிட்டு. இதெல்லாம் உங்க தகுதிக்கும், தராதரத்துக்கும் நல்லாவா இருக்கு வெங்கட் சார்!!!

பெசொவி said...

//Mohamed Faaique said...
///ரமேஷ் பிளேட் கழுவனதை பத்தி
நாம எதுவும் இங்கே பேச வேணாம்..
பாவம்.. பிளேட்டை நல்லா கழுவலைன்னு
ஹோட்டல்காரன்கிட்ட ரெண்டு அடி வேற
வாங்கினாரு..! ///

உங்க அளவுக்கு அவருக்கு அனுபவம் இல்ல பாஸ்.. இன்னும் கல்யாணம் ஆகல்லையே!! அப்புறம் பாருங்க.....
//

கன்னாபின்னா ரிப்பீட்டு!

samhitha said...

//உங்க அளவுக்கு அவருக்கு அனுபவம் இல்ல பாஸ்.. இன்னும் கல்யாணம் ஆகல்லையே!! அப்புறம் பாருங்க.....//
rotfl unga punch super faaique
adhaane "அனுபவ அறிவு " இருந்த நேக்கா கிரண்டர்க்கு சுவிட்ச் போடற
டிபார்ட்மென்ட்க்கு போய் இருப்பார்
ஆனாலும் ரமேஷ்க்கு அறிவு இல்லேன்னு இப்டி வெளிப்படையாவா சொல்றது ;)

//
ரமேஸுக்கு சாப்பாடு குடுக்கனுமே’னு எவ்ளோ பயந்திருக்கீங்கன்னு இப்போதான் புரியுது...//

ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்
பட் ரமேஷ பார்குறவங்க எல்லோருக்கும் ஒரே பீலிங் தான் போல ;)

//எப்ப பாரு சின்னப்புள்ளைய பிடிச்சுக் கலாய்ச்சுக்கிட்டு. //
u mean madurai chinnapillai raji?
enga avanga?

suresh said...

its my first comment to ur blog and i will try to give comments regularly...and i dont know how to type in tamil and sorry for that...
ur blog posts are so nice and realistic one...so i am like ur posts....today i was read all ur posts....but i have one doubt ,what is the meaning of "INDLY" ....will u explain sir...

Mohamed Faaique said...

@ samhitha

குடுத்த காச விட ஓவரா கோவி இருக்கீங்க.. இந்த மாச Follower of the month நீங்கதான்.கிஃப்ட் தபால்.ல வரும்’னு எதாச்சும் வெங்கட் பீலா விட்டாரா? அத நம்ம்ம்ம்ம்ம்பி எமாந்துராதீங்க....

samhitha said...

//குடுத்த காச விட ஓவரா கோவி இருக்கீங்க..//
என்ன இது VKS மாதிரி VAS-a நெனச்சிடீங்க...
இது அன்பால சேர்ந்த கூட்டம் ;)
//.கிஃப்ட் தபால்.ல வரும்’னு எதாச்சும் வெங்கட் பீலா விட்டாரா?//
எங்கங்க அவர் தான் 111 nu நாமம் போட்டுட்டாரே :(
சரி விடுங்க அவர் எழுதுற பதிவே பெரிய கிப்ட் இல்லையா?
ஸோ மன்னிச்சி விட்டுடலாம் ;)

Mohamed Faaique said...

////அவர் எழுதுற பதிவே பெரிய கிப்ட் இல்லையா?
ஸோ மன்னிச்சி விட்டுடலாம் ;)////

ஆமா!!! அவர் போடுர Self Sucide பதிவுகள படிச்சு கும்மு கும்முனு கும்மாடி நமக்கெல்லாம் டைம் பாஸ் ஆகுரதில்ல.. பதிவு போட்டு 4 நாள் ஆகியும் இன்னும் கொம்மண்ட் போட்டுடு இருக்கேன்’னா பாருங்களே!!!

Mohamed Faaique said...

///என்ன இது VKS மாதிரி VAS-a நெனச்சிடீங்க...
இது அன்பால சேர்ந்த கூட்டம் ;)////

சட்டைகலர்’ல மட்டுமில்ல.. அவர் மனதளவிலும் அவர் ஒரு ராமராஜன்’தான்..ஹி..ஹி..

வெங்கட் said...

@ Mohamed.,

// உங்க அளவுக்கு அவருக்கு அனுபவம்
இல்ல பாஸ்.. இன்னும் கல்யாணம்
ஆகல்லையே!! அப்புறம் பாருங்க..... //

இதெல்லாம் ஒரு சாக்கா..?

இப்ப உங்களுக்கு கூடத்தான் இன்னும்
கல்யாணம் ஆகலை.. ஆனா நீங்க எவ்ளோ
நல்லா ( ஹோட்டல் ) பிளேட் கழுவறீங்க..

வெங்கட் said...

@ ராஜி.,

// எப்ப பாரு சின்னப்புள்ளைய பிடிச்சுக்
கலாய்ச்சுக்கிட்டு. இதெல்லாம் உங்க
தகுதிக்கும், தராதரத்துக்கும் நல்லாவா
இருக்கு வெங்கட் சார்!!! //

இது பழிக்கு பழி..!!
காலத்தின் கட்டாயம்..!

பின்ன சிங்கத்தை சீப்பு வெச்சு
வாருனா., அது சிரிச்சிகிட்டா இருக்கும்..??

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// ஆனாலும் ரமேஷ்க்கு அறிவு இல்லேன்னு
இப்டி வெளிப்படையாவா சொல்றது ;) //

இப்ப மட்டும் இவரை ஜி.டி.நாயுடுன்னா
எல்லோரும் நினைச்சிட்டு இருக்காங்க..?!!

// ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு
பீலிங்., பட் ரமேஷ பார்குறவங்க
எல்லோருக்கும் ஒரே பீலிங் தான் போல ;) //

ஹி., ஹி., ஹி.. உண்மை தான்..!

வெங்கட் said...

@ சுரேஷ்.,

// its my first comment to ur blog and
i will try to give comments regularly...
ur blog posts are so nice and realistic one...
so i am like ur posts....today i was read all ur posts.... //

ஓ.. ரொம்ப நன்றி..!!

// i dont know how to type in tamil //

நம்ம பிளாக்ல Comment Box மேல
" தமிழில் எழுத க்ளிக் " ஒரு லிங்க்
இருக்கும் பாருங்க.. அதை க்ளிக் பண்ணி
தமிழ்ல எழுத ஆரம்பிங்க.. Its very Easy..!

// what is the meaning of "INDLY" //

" INDLY " இது ஒரு திரட்டி., நம்ம பதிவுளை
இங்கே போயி இணைக்கணும்.. அப்பதான்
நம்ம பதிவுகளை நிறைய பேர் பார்க்க வாய்ப்பு
ஏற்ப்படும்..

உங்களுக்கு இன்னும் எதாவது தெரியணும்னா.,
என்னை தயங்காம கேளுங்க.. எனக்கு Email
அனுப்புங்க.. என்னோட Email ID-க்கு
See My Profile.

வெங்கட் said...

@ Mohamed.,

// இந்த மாச Follower of the month நீங்கதான்.
கிஃப்ட் தபால்.ல வரும்’னு எதாச்சும்
வெங்கட் பீலா விட்டாரா? //

( Mind Voice.. )

" எவ்ளோ ஜாக்ரதையா., Strict-ஆ
இருந்தாலும்., இது மாதிரி Top Secret
Matters எல்லாம் எப்படி லீக் ஆகுது..?
முதல்ல அதை கண்டுபிடிக்கோணும்..!! "

வெங்கட் said...

@ ஷம்ஹிதா.,

// என்ன இது VKS மாதிரி VAS-a
நெனச்சிடீங்க... இது அன்பால
சேர்ந்த கூட்டம் ;) //

அப்படி போடுங்க அருவாளை..!

// அவர் எழுதுற பதிவே பெரிய
கிப்ட் இல்லையா? //

ஹி., ஹி., ஹி..!!
அது..................!

வெங்கட் said...

@ Mohamed.,

// பதிவு போட்டு 4 நாள் ஆகியும்
இன்னும் கொம்மண்ட் போட்டுடு
இருக்கேன்’னா பாருங்களே!!! //

உங்க ஆர்வத்தை மெச்சறேன்..

ஆனா யாருமே இல்லாத
" டீ கடையில " இப்ப யாருக்காக
நாம ரெண்டு பேரும் " டீ " ஆத்திட்டு
இருக்கோம்..?!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் நான் சிங்கப்பூர்ல இருந்து வாங்கிட்டு வந்த மருந்த கரக்டா சாப்புடுறீங்களா? சீக்கிரம் குணமாக வாழ்த்துக்கள்

கோமாளி செல்வா said...

தல ஒருத்தர் சிங்கப்பூர் போயிட்டு வந்திட்டார் .. மிச்சம் அஞ்சு பேரு எப்ப போகப்போறாங்க ?

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// நான் சிங்கப்பூர்ல இருந்து வாங்கிட்டு
வந்த மருந்த கரக்டா சாப்புடுறீங்களா?
சீக்கிரம் குணமாக வாழ்த்துக்கள் //

ம்ம்.. என்ன பண்றது..? நட்புக்காக
நடிக்க வேண்டி இருக்கு..

நான் மருந்து சாப்பிடற மாதிரி
பாவ்லா பண்ணினா தான் ரமேஷ்
அந்த மருந்தை சாப்பிடறாரு.. அதான்..

வெங்கட் said...

@ செல்வா.,

// தல ஒருத்தர் சிங்கப்பூர் போயிட்டு
வந்திட்டார்., மிச்சம் அஞ்சு பேரு
எப்ப போகப்போறாங்க ? //

எல்லோரும் இப்ப அங்கே தான்
இருக்காங்க., இவரு மட்டும் தப்பிச்சு
வந்துட்டார்.. அவ்ளோ தான்..!!

மாலதி said...

this is classic

nice ...