சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

22 January 2015

லைட்டா கை குளுக்கினப்ப...போன வாரம் எனக்கு லைட்டா கை
சுளுக்கிடுச்சி..

( ஓவரா இலக்கிய பணி ஆத்திட்டோமோ..?!! )

பிஸியோதெரபிஸ்ட்கிட்ட போனேன்..

" பயப்பட ஒண்ணுமில்ல.. ஒருவாரம்
ட்ரீட்மெண்ட்க்கு வாங்க சரியா போயிடும்னு "
சொன்னாரு..

சரினு நானும் 2 நாள் போனேன்..

கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட் தெரிஞ்சது..
இருந்தாலும் வலி இருந்தது..

3-வது நாள் போனப்ப..

என் ப்ரெண்ட் சரவணன் பைக்ல இருந்து
கீழே விழுந்து.. கை வலிக்குதுனு அங்கே
வந்திருந்தான்..

அவனுக்கும் அதே ஒரு வாரம் ட்ரீட்மெண்ட்னு
சொல்லிட்டாரு நம்ம பிஸியோ..

4-வது நாள் போனா..

நம்ம சரவணன் சும்மா ஜம்னு இருந்தான்..

" என்னடா.. ட்ரீட்மெண்ட் முடிஞ்சதா.? "

" இல்ல மச்சி..  சரியா போச்சு..!! "

" என்ன..? ஒரே நாள்லயா..? "

" ஆமா..!! "

( அப்ப நான் மட்டும் தான் இளிச்சவாயா..?!! )

எனக்கு இப்ப பிசியோதெரப்பிஸ்ட் மேல
பயங்கர கோவம்..

அதே கோவத்தோட அவர் ரூம்க்கு போனேன்..

போயி.....

" சார். இதெல்லாம் ரொம்ப அநியாயம்..
எவ்ளோ செலவானாலும் சரி..

அவனையும் ஒரு வாரம் வர்ற மாதிரி
பண்ணிவிடுங்க..!! "

# ஹி., ஹி.. யாம் பெற்ற...
.
.