சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

16 January 2015

சேசிங்..!!!


நானும்., என் Wife-ம் பேக்கரில நின்னுட்டு
இருந்தோம்..

அப்பதான் அவன் எங்களை பைக்ல
கிராஸ் பண்ணி போனான்..

இவன்.. இவன்... ஆ.. அவனேதான்..?!!

" நிர்மலா... நிர்மலா... சீக்கிரம் வண்டில
ஏறு.. "

" ஏங்க என்ன ஆச்சு..?! "

" அதோ... அவனை பிடிக்கணும்..!! "

" யாருங்க அது..? "

" நீ ஏறு சொல்றேன்.. "

அப்புறம் ஒரு 2 கி.மீ பைக் சேஸ்...

டக்னு அவன் பைக் முன்னால போயி
என் வண்டியை குறுக்குல நிறுத்தினேன்..

என்னை பாத்ததும் ஒரு செகண்ட் ஷாக்
ஆகிட்டான்.. அப்புறம் சுதாரிச்சிட்டு
என்னை பாத்து...

" அண்ணே எப்படி இருக்கீங்க..? "

" டேய்.. இந்த டகால்டி வேலை எல்லாம்
என்கிட்ட வேணாம்... "

" நான் என்னணே பண்ணினேன்..? "

" ஏன்டா.. 3 மாசமா என் போஸ்ட்டுக்கு
லைக்கே போடல..?!!

( பின்னாடி " த்தூ "-னு ஒரு சவுண்ட் கேட்டுச்சு..
ஆனா.. நான் திரும்பவே இல்லையே..
ஹி., ஹி., ஹி...!!! )

# ஃபேஸ்புக் ரைட்டரா இருக்கறது
ரொம்ப குஷ்டமப்பா.. சே.., கஷ்டமப்பா..!!
.
.

4 Comments:

Umesh Srinivasan said...

இனிமே கண்டிப்பா உங்க போஸ்ட் எல்லாத்துக்கும் லைக் போடுறேன். இப்படி மொக்க பிளாக்கெல்லாம் போடாதீங்க, புண்ணியமாப் போகும்.

pari mala said...

2015 க்கு அப்புறம் எழுதலயா?? என்ன ஆச்சு??

வெங்கட் said...

எழுதிட்டு தான் இருக்கேன்... இப்ப ஃபேஸ்புக்ல... @Pari Mala

pari mala said...

தெரியும்.. சிரிப்பரங்கம் உங்க பேஜ் என்று