சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

18 January 2012

இந்தியன் கிரிக்கெட் டீம் Dictionary..!!

,


Trophy : போட்டோவுக்கு போஸ் கொடுக்கறப்ப
நைசா தொட்டு பார்க்கறது.

டெஸ்ட் மேட்ச் : அவங்க ஒரு தடவையும்,
நாம 2 தடவையும் Batting பண்ற ஆட்டம்.

கேப்டன் : தோத்ததுக்கு காரணம் சொல்றவர்..

துணை கேப்டன் : அடுத்த பலிகடா..

Opening Batsman : முதல் 2 ஓவர் விளையாடறவர்.

Middle Order Batsman : டிவி விளம்பரத்துல
நடிக்கிறவிங்க..

விக்கெட் கீப்பர் : எப்பவாவது பந்தை
பிடிக்கிறவரு..!

Fast பவுலர் : எதிர் டீமை தாக்கி பேட்டி
கொடுக்கறவரு.!

Spin  பவுலர்  : Pitch ஐ திட்றவரு..!

ஸ்லிப் பீல்டர் : தத்தி ப்ளேயர்.

பீல்டிங் : Catch-ஐ விட்டு பந்தை துரத்தறது.

ரன் : மெதுவாக நடந்து எடுக்கறது.

Four : Edge பட்டு போறது.

டிரா : மழை வந்தா ஏற்படறது.

Win : Toss பண்ணும்போது மட்டும்
சில சமயம் கிடைக்கறது.

லஞ்ச் பிரேக் : இந்தியாவோட முதல் இன்னிங்ஸ்
முடியற நேரம்.

செஞ்சுரி : எதிர் டீம் வீரர்கள் அடிக்கறது.

டபுள் செஞ்சுரி : நம்ம ரெண்டு இன்னிங்ஸ்
Scores-யும் கூட்டினால் வர்றது.
.
.

25 Comments:

ViswanathV said...

முதல் வடை;
அப்ப விரல் காமிக்கிறது ?

மனசாட்சி said...

சர்தான்......

NAAI-NAKKS said...

Ethir team-i oda oda...
Vittu....tired aakkuvathu....

Sna Ad said...

நல்லா சொல்ராங்கயா டீட்டைலு..!

Sna Ad said...

நல்லா irukku.

ஹாலிவுட்ரசிகன் said...

நல்ல காமெடி ... ஆல் மீனிங் கரெக்ட் பார் நௌவ்.

Madhavan Srinivasagopalan said...

டெஸ்ட் மேட்ச் : அவங்க 2 ஒரு தடவையும், நாம 1 தடவையும் Bowling பண்ற ஆட்டம்.

Madhavan Srinivasagopalan said...

// Opening Batsman : முதல் 2 ஓவர் விளையாடறவர். //

இதெல்லா ரொம்ப ஓவர்..
ரெண்டு பந்துகள்னு வந்திருக்கணும்..

//லஞ்ச் பிரேக் : இந்தியாவோட முதல் இன்னிங்ஸ்
முடியற நேரம்.//

T-Break : Just after india's innings.

Finally ::
வெங்கட் : நல்ல யோசிச்சு எழுதி நம்ம கிரிக்கெட் டீம கலாய்ப்பவர்

-------------------
செமையா இருக்கு.. வாழ்த்துக்கள்.

Yoga.S.FR said...

வணக்கம் சார்!அப்புறம்"நோபால்"(no ball)பத்தி சொல்லல?????

இந்திரா said...

//Win : Toss பண்ணும்போது மட்டும்
சில சமயம் கிடைக்கறது.//


அதுல கூட சில சமயம் தான். :((

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கிரிக்கெட்டுன்னா என்ன?

Bavan said...

ஹாஹா :D

Mohamed Faaique said...

சொந்த நாட்டு அணிக்கு எதிராக பதிவு போட்ட, வெங்கட்’ஐ எதிர்த்து எந்த சங்கங்கள், அமைப்புகளுமே போராட்டம் நடத்தலையா??.. வெங்கட்டின் உருவ பொம்மைகள் எரியலையா??.. அப்படியே யாரவது கம்ப்யூட்டரையும் எரிச்சுடுங்கப்பா???

Mohan said...

அழகா சொன்னிர்கள் நண்பரே . பதிவுக்கு நன்றி ...

வெங்கட் said...

@ விஸ்வநாத்.,

// அப்ப விரல் காமிக்கிறது ? //

அவுட் : பெவிலியன் எந்த பக்கம்னு
அம்பயர் வழி காட்றது..!

வெங்கட் said...

@ நாய் நக்க்ஸ்.,

// Ethir team-i oda oda...
Vittu....tired aakkuvathu.... //

ரைட்டு..!
:)

வெங்கட் said...

// வெங்கட் : நல்ல யோசிச்சு எழுதி
நம்ம கிரிக்கெட் டீம கலாய்ப்பவர் //

ஒரு கிரிக்கெட் ரசிகனா.. இது எனக்கு
கொஞ்சம் பீலிங்கா தான் இருக்கு..!

WorldCup Match ஆரம்பிக்க முன்னாடியே
இந்தியா தான் ஜெயிக்கும்னு தைரியமா
ப்ளாக்ல எழுதின ஆளு நானு..

என்னையவே இப்படி எழுதற மாதிரி
வெச்சிட்டாங்களே..!!

ராவி said...

Spin பவுலர் : Pitch ஐ திட்டுபவர்
I am a big Fan of Ashwin. But ....

ராவி said...

/*அப்ப விரல் காமிக்கிறது */
சிம்பு , அஜீத் பேசுற வசனத்திற்கு Demo காட்டுபவர்

ராஜி said...

உங்கக்கிட்டலாம் பேச்சு வாங்கனும்ன்னு இந்தியன் டீம் தலையெழுத்து போல. பாவம் இதுக்கு அவனுங்க டீமை கலைச்சுட்டு போகலாம்.

பொன்.செந்தில்குமார் said...

வெங்கட்_ இவர் மேட்ச் பார்த்தா இந்தியா கப்பை எதிர் டீமுக்கு விட்டுக் கொடுத்திடும்....

வெங்கட் said...

@ Mohamed.,

// வெங்கட்’ஐ எதிர்த்து எந்த சங்கங்கள்,
அமைப்புகளுமே போராட்டம்
நடத்தலையா?? வெங்கட்டின்
உருவ பொம்மைகள் எரியலையா?? //

விவரம் புரியாம இருக்கீங்களே..
இது இந்தியாங்க..!

கிரிக்கெட்ல தோத்தா.. வீரர்களோட
உருவபொம்மையை தான் எரிப்பாங்க..

வெங்கட் said...

@ ராவி.,

// Spin பவுலர் : Pitch ஐ திட்டுபவர் //

I Like this... உங்க அனுமதியோட
இதை நான் பதிவுல சேர்த்துக்கறேன்..!!

:)

( நான் எப்ப அனுமதி குடுத்தேன்னு
சண்டைக்கு வரப்படாது..! )

ஷைலஜா said...

காமெடியை ரசிச்சேன்:)

ViswanathV said...

இதுக்கு மேல யாரு அடிக்க வரமாட்டாங்க போலிருக்கு,
வெங்கட், அடுத்தப் பதிவப் போட்டுரும்மா.