சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

09 January 2012

தனுஷூக்கு கண்டனம்...!

" Why this கொலைவெறி " பாட்டுக்கு
பெண்கள் பலர் பயங்கர எதிர்ப்பு..

Why..? Why..?

பின்ன...,

அவங்களை கேவலப்படுத்தினா.,
பாத்துட்டு சும்மாவா இருப்பாங்க..

நிக்க வெச்சி நாக்கை பிடுங்கிக்கிற
மாதிரி கேப்பாங்கல்ல..

அந்த கோவத்துல ஒரு நியாயம்
இருக்குங்க..

அதனால தனுஷூக்கு என் கண்டனத்தை
தெரிவிச்சிக்கிறேன். ( ஐஸ்வர்யா.,
ஸ்ருதி அவங்கெல்லாம் விதிவிலக்கு )

பாட்டு எழுத தூண்டிவிட்டது.,
பாடும் போது கைதட்டினது..,
இதை தவிர அவங்க என்ன தப்பு
செஞ்சாங்க..? பாவம்..!

ஆனா..., இதுக்கு வெறும் கண்டனம்
மட்டும் போதுமா...?

இல்ல....

வீதில எறங்கி போராடி.., பஸ், கடை
மேல எல்லாம் கல்லு விட்டு எறிஞ்சி.,
கொடும்பாவி எதாச்சும் எரிக்கணுமான்னு..?
தீவிரமா யோசிச்சிட்டு இருக்கேன்..

ஆனா அதுக்கு முன்னாடி..

தினம் தினம் " பெண்களினின் பெருமையை "
உலகத்துக்கு பறைசாத்துதே.. இந்த
மெகா சீரியல்கள்..

அட அதாங்க...

" நாத்தனாரின் கணவனை கொலை
செய்ய கூலிப்படைய அனுப்பும் அண்ணி..! "

" தோழியின் கணவனை அடைய
துடிக்கும் தோழி..! "

" சொத்துக்காக மகளாக நடித்து.,
ஏமாற்றும் பெண்..! "

" பணத்திற்க்காக மருமகளை
கொடுமைப்படுத்தும் மாமியார்..! "

" நாத்தனாரின் குழந்தையை கடத்தி.,
மறைத்து வைக்கும் அண்ணி.! "

" ஒரு வயதானவருக்கு சின்னவீடாக
இருக்கும் பெண்..! ( அவர் குடும்பத்தை
பழிவாங்கவாம்.) "

" சொத்துக்காக அண்ணியின் கருவில்
இருக்கும் குழந்தையை அழிக்கும்
நாத்தனார்.! "

இப்படி பல " மங்கையர் திலகங்களை "
நம்ம வீட்டு வரவேற்பு அறைக்கே
கூட்டிட்டு வருதே மெகா சீரியல்கள்...

அதையெல்லாம் ஒண்ணு விடாம
பாத்து., ரசிச்சி., அதை சூப்பர் ஹிட்
ஆக்கறது யாருங்க..??!

36 Comments:

NAAI-NAKKS said...

Tv....illatha ulagathil
vazhvare vazhvar.....
Matravargal.....
Pithu pidithu
azhivar.....

Naveena kural...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆணாதிக்கவாதி வெங்கட் ஒழிக

சேலம் தேவா said...

//அதையெல்லாம் ஒண்ணு விடாம
பாத்து., ரசிச்சி., அதை சூப்பர் ஹிட்
ஆக்கறது யாருங்க..??!//

நோ..நோ..நோ...அதெல்லாம் நாம கேட்டா பெண்கள் வன்கொடுமை சட்டத்துல உள்ள போக வேண்டியதுதான்... :)

ViswanathV said...

எல்லா சீரியலு பார்த்து ரசிக்கும்
எங்கள் அண்ணன் வெங்கட் அவர்களுக்கு
சீரியல் சீமான் என்ற
சிறப்புப் பட்டத்தை அளித்து கௌரவிக்கிறோம்;

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்கள் பதிவு கண்டு
கண்கள் கலங்கின
இதயன் இனித்தது
காது கிழிந்தது
வாய் வலித்தது
வயிறு கலக்கியது
அடுத்து....
ஆங்.... அதேதான்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// ( ஐஸ்வர்யா.,
ஸ்ருதி அவங்கெல்லாம் விதிவிலக்கு )/////


அப்போ இவங்களுக்கு நான் உங்க சார்பா கண்டனம் தெரிவிச்சுக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டெய்லி இத்தன சீரியல் பாக்குறீங்களே எப்படி குழப்பமே இல்லாம கரெக்டா ஸ்டோரி லைன் சொல்றீங்க?

Anonymous said...

இதே வேலை தானா உஙகலுக்கு எல்லா சீரீயலையும் சரியா சொல்லரிங்க,

மெகா சீரியலை விட பென்களை கேவலமக சித்தரிப்பது எதுவுமே இல்லை...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//அதையெல்லாம் ஒண்ணு விடாம
பாத்து., ரசிச்சி., அதை சூப்பர் ஹிட்
ஆக்கறது யாருங்க..??!


//
செருப்படி கேள்விகள் ...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

/
9 January 2012 10:19 AM
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

டெய்லி இத்தன சீரியல் பாக்குறீங்களே எப்படி குழப்பமே இல்லாம கரெக்டா ஸ்டோரி லைன் சொல்றீங்க?
//

இல்லனா சோறு கிடையாது

Madhavan Srinivasagopalan said...

// டெய்லி இத்தன சீரியல் பாக்குறீங்களே எப்படி குழப்பமே இல்லாம கரெக்டா ஸ்டோரி லைன் சொல்றீங்க? //

நான் சொல்ல நெனைச்சத முன்னாடியே சொன்ன பன்னியாருக்கு நன்றிகள்..

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே கண்ணுல தண்ணியா ஊத்துது அண்ணே....

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஒரு பாட்டு ஹிட் ஆனா எதிர்ப்பு வரும்...

நீங்க தினமும் சீரியல் பார்ப்பிங்க போல...

ராஜி said...

இத்தனை கேரக்டர்ஸ் சீரியல்ல வருதா? உங்களுக்கு எப்படி தெரியும் இதெல்லாம்?

இந்திரா said...

ரொம்ம்பவே ஜிந்திக்க வைக்கும் பதிவு..

இந்திரா said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆணாதிக்கவாதி வெங்கட் ஒழிக//ரமேஷ்.. குடும்பஸ்தராயிட்டீங்க..

மனசாட்சி said...

அப்படி போடு, அதானே...

ஹாலிவுட்ரசிகன் said...

என்ன இருந்தாலும் தமிழ் மெகா சீரியல்கள் போன்ற மிகவும் மட்டமான, கேவலமான ஒரு விடயத்தை வேறு எங்கும் பார்த்ததில்லை.

எப்படிங்க அவ்வளவு சீரீயல் கதைகளையும் ஃபிங்கர் டிப்ஸ்ல வச்சிருக்கீங்க???

Mohamed Faaique said...

///நிக்க வெச்சி நாக்கை பிடுங்கிக்கிற
மாதிரி கேப்பாங்கல்ல..///

இதெல்லாம் அனுபவம்....

Mohamed Faaique said...

நாத்தனார்’னா யாருங்க???

பொன்.செந்தில்குமார் said...

கலக்கோ கலக்குனு கலக்கிட்டிங்க,
நீங்க சீரியல் டைரடக்கரா ஆயிடலாம் பாஸ்...

பெசொவி said...

சிந்திக்க வைக்கும் பதிவாக இது அமைந்து விட்டதால் VKS உறுப்பினர் என்பதையும் கண நேரம் மறந்து வெங்கட்டுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

வெங்கட் said...

@ நக்கீரன்.,

// Tv....illatha ulagathil vazhvare vazhvar.....
Matravargal.....Pithu pidithu azhivar.....! "

Tv மேல என்னங்க தப்பு..?
டிவில மெகா சீரியல்ஸ் மட்டும்
தான் வருதா..?

டிஸ்கவரி சேனல் இருக்கு.,
ஹிஸ்டரி சேனல் இருக்கு..
எத்தனையோ நியூஸ் சேனல்ஸ் இருக்கு..

அட.. சாமிக்கு கூட சேனல் இருக்கு..
அதை பாத்தாலாவது புண்ணியம்
கிடைக்கும்..

அதெல்லாம் விட்டுட்டு இந்த
கொடுமையான சீரியல்ஸ்சை தான்
கட்டி அழுவேன்னு அடம் பிடிச்சா....

வெங்கட் said...

@ ரமேஷ்.,

// ஆணாதிக்கவாதி வெங்கட் ஒழிக //

ஹி., ஹி., ஹி.... கல்யாணம் பிக்ஸ்
ஆகிடுச்சாம்... அதான் பொண்ணுகளுக்கு
சப்போர்ட் பண்ணி நல்ல புள்ள இமேஜ்
கிரியேட் பண்றாராம்..!

வெங்கட் said...

@ சேலம் தேவா.,

// நோ..நோ..நோ...அதெல்லாம் நாம
கேட்டா பெண்கள் வன்கொடுமை
சட்டத்துல உள்ள போக வேண்டியதுதான்... :) //

அதனால தானே இப்படி தனியா ப்ளாக்ல
வந்து புலம்பிட்டு இருக்கோம்..

:)

வெங்கட் said...

@ விஸ்வநாதன்.,

// எல்லா சீரியலு பார்த்து ரசிக்கும்
எங்கள் அண்ணன் வெங்கட் //

நோ., நோ.. லஞ்ச்க்கு வரும் போது.,
நைட் டின்னர்க்கு வரும் போதுன்னு
டிவி பக்கம் லைட்டா கண்ணை
திருப்புவேன்..

அப்ப டிவில யாராவது ஒரு பெண்ணு
சும்மா நம்பியார் ரேஞ்ச்க்கு யாரையோ
பழி வாங்க திட்டம் போட்டுட்டு இருப்பாங்க..

கூட்டி கழிச்சி பாத்தா.. இதே தான் எல்லா
சீரியல்லயும் நடக்குது.. நடிக்கிறது
வேற வேற ஆளுங்க.. அதான் வித்யாசம்.

ரசிகன் said...

சொத்துக்காக அண்ணன கொல்ல முயலும் தம்பி.. இரண்ரே இரண்டு திருமணம் மட்டுமே மட்டும் செய்து கொண்ட தெய்வ நிகர் ஐயாக்கள்னு மனித‌ருள் மாணிக்கங்களும் வருவாங்க அந்த வரவேற்பறைக்கு.. பாத்து பயன் பெறாம ப்ளாக் போட்டு கலாய்ச்சிக்கிட்டு.. Very bad.. Very bad..

suganthiny said...

இந்த வீணா போன சீரியல் பாக்கிறதால எங்க ஊட்ல தினமும் சண்டை வந்து விடும்
அது எப்படிங்க பெண்களை மட்டும் அப்டி சொல்லலாம்? இதுக்கு விடை சொல்லுங்க
இல்லாட்டி உங்க வீட்டு கண்ணாடி ஜன்னல் எல்லாம் மிட் நைட் ல பட பட பட என்று
அடிக்கும், நாய் ஊளையிடும் சத்தம் போட்டு எழும்பி பார்த்தா ஆ கனவு..... என்று சொல்வீங்க.

வெங்கட் said...

@ பன்னிக்குட்டி.,

// அப்போ இவங்களுக்கு நான் உங்க
சார்பா கண்டனம் தெரிவிச்சுக்கிறேன்! //

உஸ்ஸு... இப்படி எல்லாம் பப்ளிக்ல
பேசப்படாது.. அப்புறம் பெண்களை
மதிக்கறதில்லன்னு கிளம்பிடுவாங்க..!

வெங்கட் said...

@ எனக்கு பிடித்தவை.,

// மெகா சீரியலை விட பெண்களை
கேவலமக சித்தரிப்பது எதுவுமே இல்லை... //

இருக்கே... சீரியலுக்கு நடு நடுவே
வருமே " விளம்பரங்கள்.. "

வெங்கட் said...

@ மனோ.,

// அண்ணே கண்ணுல தண்ணியா
ஊத்துது அண்ணே.... //

கம்பியூட்டர் Screen-னுக்கும்
உங்க கண்ணுக்கும் குறைஞ்சது
1.5 அடி கேப் இருக்கணும்.. இல்லன்னா
இப்படி தான்..!

வெங்கட் said...

@ suganthiny.,

// இந்த வீணா போன சீரியல் பாக்கிறதால
எங்க ஊட்ல தினமும் சண்டை வந்து விடும்
அது எப்படிங்க பெண்களை மட்டும் அப்டி
சொல்லலாம்? இதுக்கு விடை சொல்லுங்க //

ஹி., ஹி., ஹி... ஒத்துக்கறேன்...

சில ஆண்கள் சீரியல் பார்க்கறாங்க
ஒத்துக்கறேன்.. ஆனா அவங்க ஏன்
அதை பார்க்கறாங்க...

ஏன்னா சீரியல்ல தான் பொண்ணுங்க
எப்ப பார்த்தாலும் அழுதுட்டே இருப்பாங்க..

நம்மள அழ வெக்கறவங்க ( பொண்ணுங்க )
அழறதை பாத்தாலே ஒரு ( அல்ப ) சந்தோஷம்
இல்லையா.?

ஐயோ.. நான் ஆம்பளைங்க ரகசியத்தை

வெங்கட் said...

@ Mohamed.,

// நாத்தனார்’னா யாருங்க??? //

கணவரின் தங்கை and அக்கா.

suganthiny said...

இப்டி நீங்க ஆம்பளைங்க ரகசியத்தை எல்லாம் உளறிட்டீங்க. நீங்க உலகமே அழிஞ்சாலும் நீங்க மட்டும்..........

வெங்கட் said...

@ suganthiny.,

// இப்டி நீங்க ஆம்பளைங்க ரகசியத்தை
எல்லாம் உளறிட்டீங்க. //

எல்லாமா உளறிட்டேன்..?!?!
இல்லையே.. இன்னும் எவ்வளவோ
ரகசியங்கள் இருக்கே.. அதையெல்லாம்...

( அட அருவாளை கீழே போடுங்கப்பா..
பொசுக். பொசுக்குனு கோவப்படறானுங்களே.. )

எங்கே விட்டேன்.. ஆங்.. ரகசியங்களை
எல்லாம் பத்திரமா வெச்சிக்கறேன்னு
சொல்ல வந்தேன்.. போதுமா.!!

பொன்.செந்தில்குமார் said...

தனுஷுக்கு ஏன் கொலைவெறி வந்துச்சின்ன்னா அனேகமா அவர்
உங்க ப்ளாக்க தெரியாத்தனமா
படிச்சிருப்பார் போல...