சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

30 January 2012

உஸ்ஸப்பா.. இப்பவே கண்ணை கட்டுதே.!



போன சனிக்கிழமை என் பையன்
ஸ்கூல்ல Parents Meeting..

ஓவ்வொரு Parents Meeting-மே
ஒரு கண்டம் தான்..

ஸ்கூலுக்கு போன உடனே
எங்க பையனோட க்ளாஸ் மிஸ்ஸு
கண்ணுல சிக்கிட்டோம்..

உடனே அவங்களும் என் பையனோட
அருமை ( ?! )., பெருமைகளை (?! )
மூச்சு விடாம பேச ஆரம்பிச்சிட்டாங்க..

" உங்க பையனை என்னால Control
பண்ணவே முடியல சார்..! "

" ஏன் மேடம்..?! என்ன ஆச்சி "

" 1. க்ளாஸ்ல ஒழுங்கா ஒரு இடத்துல
உக்கார்றதே இல்ல.. அங்கே , இங்கே
தாவிட்டே இருக்கான்..

2. பக்கத்துல இருக்குற பசங்களை
க்ளாஸ் கவனிக்க விடாம சும்மா
தொண தொணன்னு பேசிட்டே இருக்கான்...

3. திடீர்னு எந்திரிச்சு " டவுட் மிஸ்னு "
Subject-க்கு சம்பந்தமே இல்லாம
எடக்கு மடக்கா கேள்வி கேக்கறான்..

4. மிரட்டினாலும் பயப்பட மாட்டேங்குறான்.!

5.அடிச்சாலும் அடங்க மாட்டேங்குறான்..!

நான் என்னதான் சார் பண்றது..?!! "

" உஸ்ஸப்பா.. Same Complaint..! "

" Same Complaint-ஆ..? என்ன சார்
சொல்றீங்க..?! "

" டீச்சர் மாறிட்டாங்க.. ஆனா
Complaint மட்டும் மாறலைன்னு சொல்ல
வந்தேன்..! "

" ஓ.. போன வருஷம் 3rd Std மிஸ்ஸும்
இதே தான் சொன்னாங்களா..?! "

" ஹி., ஹி., ஹி... இல்லங்க மேடம்..
நான் படிக்கிறப்ப., எங்க க்ளாஸ் மிஸ்ஸும்
இதே Complaint தான் எங்கப்பாகிட்ட
சொல்லுவாங்க..! "

" ??!?!?!!! "
.
.

25 Comments:

Avargal Unmaigal said...

அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கு....நல்ல நகைச்சுவை

விஸ்வநாத் said...

ரண்டு தட்டு தட்டுங்க பாஸ்
..
..
..
அந்த மிஸ் ஸ;
என்ன சின்னபுள்ளதனமா இருக்கு;

Madhavan Srinivasagopalan said...

// " ஹி., ஹி., ஹி... இல்லங்க மேடம்..
நான் படிக்கிறப்ப., எங்க க்ளாஸ் மிஸ்ஸும்
இதே Complaint தான் எங்கப்பாகிட்ட
சொல்லுவாங்க..! " //

Heredity

சேகர் said...

எனக்கும் சின்ன வயதுள இதே நிலைமை தான் நண்பரே...

குறையொன்றுமில்லை. said...

ஹா ஹா அப்பா பெயரை தப்பாம காப்பத்துரானே பிள்ளை. குட்.

கூடல் பாலா said...

அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது...ஹி..ஹி.

vinu said...

he he he he

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////" ஏன் மேடம்..?! என்ன ஆச்சி "////

இப்படி அப்பாவியா கேட்டிருக்காரே வெங்கட், அப்பவே அப்பீட் ஆகி இருக்கவேணாம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////" 1. க்ளாஸ்ல ஒழுங்கா ஒரு இடத்துல
உக்கார்றதே இல்ல.. அங்கே , இங்கே
தாவிட்டே இருக்கான்../////

சேச்சே வெங்கட் இப்படில்லாம் பண்ணி இருக்க மாட்டார்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///2. பக்கத்துல இருக்குற பசங்களை
க்ளாஸ் கவனிக்க விடாம சும்மா
தொண தொணன்னு பேசிட்டே இருக்கான்...////

ஆனா வெங்கட்னா அமைதியா மிஸ்சை பார்த்து ரசிச்சிட்டு இருந்திருப்பார்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////3. திடீர்னு எந்திரிச்சு " டவுட் மிஸ்னு "
Subject-க்கு சம்பந்தமே இல்லாம
எடக்கு மடக்கா கேள்வி கேக்கறான்../////

சம்பந்தமே இல்லாம வெங்கட் ப்ளாக் எழுதுற மாதிரி......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///4. மிரட்டினாலும் பயப்பட மாட்டேங்குறான்.!////

வெங்கட்ட பார்த்தே பயப்படாதவன், அப்புறம் மிஸ் மிரட்டியா பயப்படுவான்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////" ஹி., ஹி., ஹி... இல்லங்க மேடம்..
நான் படிக்கிறப்ப., எங்க க்ளாஸ் மிஸ்ஸும்
இதே Complaint தான் எங்கப்பாகிட்ட
சொல்லுவாங்க..! "/////

வெளங்கிரும்..... அந்த ஸ்கூலு......

நாய் நக்ஸ் said...

Intha complinte-i
unga
wife-kitta
solli irukkanum...

Apa therium seith....

வெளங்காதவன்™ said...

ரண்டு தட்டு தட்டுங்க பாஸ்
..
..
..
அந்த மிஸ் ஸ;
என்ன சின்னபுள்ளதனமா இருக்கு;

(c&P)

ரசிகன் said...

@venkat
உங்க டீச்சரும் இதே கம்ப்ளெயின்ட்ஸ் சொன்னாங்களா!!!!
நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை... இல்லை....
ஏன்னா.... அவங்க உங்க அப்பாவ பாத்து , "உங்க பையன் என் க்ளாஸ்லயா படிக்கறான்.. நான் பாத்ததே இல்லயே " ன்னு சொன்னதா தானே வரலாற்று குறிப்பேடுகள் தெரிவிக்குது...

ஹாலிவுட்ரசிகன் said...

எல்லாம் மரபணு பாஸ். அப்படித்தான் விடுங்க.

ராஜி said...

ஒண்ணும் சொல்றதுக்கில்லை

Faizal said...

பிள்ளை பதினாறு அடி பயவேன்டாமா?

சேலம் தேவா said...

இந்த டீச்சருங்களே இப்டிதான் தல.. :)

Mohamed Faaique said...

திரும்ம திரும்ப முருங்கை மரம் ஏறும் வேதாளம் போல், தானும் காலேஜ் போயிருக்கிறேன் அன் நிறுவப் பார்க்கும் இன்னொரு பதிவு... ஆனாலும் யாரும் நம்ப மாட்டேன்றீங்களே!!!!

Mohamed Faaique said...

///ஓவ்வொரு Parents Meeting-மே
ஒரு கண்டம் தான்..///

காலேஜ் பீஸ் கட்டல்லண்ணா இப்ப்டித்தான் இருக்கும்

பெசொவி said...

//" ஹி., ஹி., ஹி... இல்லங்க மேடம்..
நான் படிக்கிறப்ப., எங்க க்ளாஸ் மிஸ்ஸும்
இதே Complaint தான் எங்கப்பாகிட்ட
சொல்லுவாங்க..! //

உங்க கேஸ் பரவாயில்லையே, மூணாங்கிளாசுக்கு அப்புறம் அந்த கம்ப்ளெயின்ட் வரவே இல்லையாமே, ஆனா உங்க பையன் அப்படி இல்லை, மேல படிச்சு டிகிரி எல்லாம் வாங்கப் போறான். அதுனால உங்க பையனை கொஞ்சம் கண்டிச்சு தான் வளர்க்கணும்.

Unknown said...

\\உங்க கேஸ் பரவாயில்லையே, மூணாங்கிளாசுக்கு அப்புறம் அந்த கம்ப்ளெயின்ட் வரவே இல்லையாமே\\

என்னாது தல மூணாங்களாஸ் வரைக்கும் படிச்சிருக்காராஆஆஆஆ!!!??!?!?!!!

samhitha said...

//உங்க பையன் என் க்ளாஸ்லயா படிக்கறான்.. நான் பாத்ததே இல்லயே " ன்னு சொன்னதா தானே வரலாற்று குறிப்பேடுகள் தெரிவிக்குது//
adhu unmai dhaan, apo 3rd std padikira vayasu apdinaalum avaroda arivukku 10th class la dhaan irupaar