22 December 2011
ஏம்பா.., நான் சரியாதான் பேசறேனா.?!!
" ஈரோடு சங்கமம் 2011 " நிகழ்ச்சிக்கு
நானும். சேலம் தேவாவும் பஸ்ல
சேர்ந்து போறதா Plan.
ஆனா அவரு முதல் ஸ்டாப்பிங்ல
ஏறுவாரு.. நான் 5-வது ஸ்டாப்பிங்ல
தான் ஏற முடியும்...
மணி சரியா 8.30. தேவாகிட்ட
இருந்து போன்...
" சார்.. நான் பஸ் ஏறிட்டேன்..! "
" அப்படியா..? பஸ் நம்பரு..? "
" 59 சார்.."
" ஓ.கே.. நான் பாத்துக்கறேன்..! "
பஸ் ஸ்டாப்ல..
நான் 10 நிமிஷமா Wait பண்ணிட்டு
இருக்கறதை பாத்த எனக்கு பக்கத்துல
இருந்த ஒரு ஆள்..
" எங்கே சார் போகணும்..? "
" ஈரோடு..! "
" ஓ.. அதோ வர்ற அந்த பஸ் கூட
ஈரோடு தான் போகுது.. வாங்க
போலாம்..!! "
நான் அந்த பஸ்சை பாத்தேன்..
அது ஒரு Private Bus.. " SNB "
" இல்ல சார்.. நீங்க போங்க.. நான்
அடுத்த பஸ்ல போயிக்கிறேன்..! "
" சீட் கூட காலியாத்தான் இருக்கு..! "
" இருக்கட்டும் சார்.. நீங்க ஏறிக்கோங்க..! "
அவரு ஏறிக்கிட்டாரு.. கூட 4 பேர்
ஏறினாங்க.. பஸ் ஸ்டார்ட் ஆகி
கிளம்பிடுச்சி..
அப்ப பஸ் உள்ள இருந்து ஒரு குரல்..
" வெங்கட் சார்.. சீக்கிரம் வாங்க..
இந்த பஸ்தான் ஏறுங்க.. ! "
யார்ரா அதுன்னு பாத்தா..
நம்ம சேலம் தேவா.. உடனே..
" ஸ்டாப்.. ஸ்டாப்.. ஸ்டாப்..!! "
ஒரு 30 அடி ஓடி போயி மூச்சு
வாங்க பஸ்ல ஏறினா..
அந்த ஆள் என்னை கொலைவெறில
பார்த்தாரு.. லைட்டா முகத்தை
திருப்பினா இந்தாண்ட கண்டக்டர்..
அவரும் அதே கொலைவெறி பார்வை..
ஹி., ஹி., ஹினு ஒரு வழி வழிஞ்சிட்டு.,
எஸ் ஆகி.. தேவாகிட்ட வந்து..
" உஸ்ஸப்பா.. வேற பஸ் மாத்தி
ஏறினா ஒரு போன் பண்ண மாட்டீங்களா.? "
" நான் மாத்தி ஏறலையே..! "
" ????!!!! "
" நீங்க இந்த பஸ் நம்பர் ப்ளேட்
பார்க்கலையா..? TN 52B - 059 "
" அடப்பாவிகளா..? Govt பஸ்ல ஏறினா
நம்பர் சொல்ல சொன்னா.. Private பஸ்ல
ஏறிட்டு நம்பர் ப்ளேட் நம்பர் எல்லாமா
சொல்லுவீங்க..?!!! "
டிஸ்கி : நாங்கள் ஈரோடு சங்கமத்தில்
கலந்து கொண்ட அழகை படிக்க
விரும்புகிறவர்கள்.. க்ளிக் பண்ணவும்
" ஈரோடு சங்கமம் " - வெளிவராத செய்திகள்..!
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
26 Comments:
ha.ha.ha ...nice....
டிக்கெட் எடுத்தது தேவாவோ?
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டிக்கெட் எடுத்தது தேவாவோ?///
ஓசி சோத்துக்கு ஒரு ஆளு, ஓசி டிக்கட்டுக்கு ஒரு ஆளு...
போங்கையா!!!!
:-)
அதென்ன போட்டோ ல எங்க ஊர் பஸ்ஸ போட்டு இருகிங்க...... ஈரோடு, பொள்ளாச்சிக்கும் சேதுமடைக்கும் இடைல இருக்கா? ஐயோ எனக்கு தெரியாம போச்சே!!!!!!!!!!!
நல்லா சொல்றீங்களே டீடெயிலலு!
பஸ்ல டிக்கெட் எடுத்தீங்களா இல்லியா?
Hello,,,,,
neenga ennai innum
pirabalam
aakkalai.....
Comeon...quick.....
Illai poramaiya....????????
ஹா..ஹா.... வருகையே பயங்கர ரிஸ்க்கா இருக்கே...
வாசிக்க:
முல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரையில் கடைகள் முழுஅடைப்பு, ஆட்டோக்கள் ஓடவில்லை.
சரி சண்ட போடாதீங்கய்யா!
போச்சுடா ஆரம்பமே பல்பா...?
@ ரமேஷ்.,
// டிக்கெட் எடுத்தது தேவாவோ? //
இல்லையே நான் தான் டிக்கெட்
எடுத்தேன்.. அப்புறம்.
" தேவா... இனிமே காசு குடுத்து
வாங்கின டிக்கெட்டை இப்படி Careless-ஆ
கீழே எல்லாம் போடக்கூடாது"- ன்னு
அட்வைஸ் வேற பண்ணினேனே..!
@ வெளங்காதவன்.,
// ஓசி சோத்துக்கு ஒரு ஆளு,
ஓசி டிக்கட்டுக்கு ஒரு ஆளு...
போங்கையா!!!! //
யாரை பாத்து ஓசி டிக்கெட்னு
சொல்றீங்க..?!! பிச்சிபுடுவேன் பிச்சி..!
நான் அப்பவே 19 ரூபாய்க்கு செக்
போட்டு தேவா கையில குடுத்துட்டேனே..!
@ Mozhiinfys.,
// ஈரோடு, பொள்ளாச்சிக்கும் சேதுமடைக்கும்
இடைல இருக்கா? ஐயோ எனக்கு தெரியாம
போச்சே!!!!!!!!!!! //
ஹி., ஹி., ஹி... இதுக்கே இப்படி
ஷாக் ஆயிட்டீங்களே..!? இன்னும்
அந்த பஸ் சேலம் வந்து எங்களை
பிக்-அப் பண்ணிட்டு போன மேட்டர்
தெரிஞ்சா.. என்ன ஆவிங்களோ..!?
@ நாய் நக்ஸ்.,
// Hello,,,,, neenga ennai innum
pirabalam aakkalai.....
Comeon...quick..... //
இன்னும் ஒரு மாசம் கொஞ்சம்
பொறுமையா இருங்க சார்..
இப்ப தான் சன் டி.வி, விஜய் டி.வி,
ஜெயா டி.வின்னு 26 சேனல்ல
மெகா சீரியல் வர்ற டைமா பாத்து..
உங்க ப்ளாக்கை பத்தி விளம்பரம் போட
சொல்லி இருக்கேன்..
தாய்குலங்கள் மெகா சீரியல் பாக்குற
கெட்ட பழக்கத்தை அடியோடு
நிப்பாட்டிடுவாங்க.. அப்புறம் நீங்க
உலக பிரபலம் ஆயிடுவீங்க..
பதிவுலகில் பரபரப்பு,வெங்கட் காசு கொடுத்து டிக்கெட் வாங்கினார்-டைட்டில் ரெடி பண்ணிட்டு பார்த்தா வாங்குனது தேவா, அடச்சே வட போச்சே
உங்களோட ஈரோடு போனாரே தேவா. வாழ்க்கையே வெறுத்து சாமியாரா இமயமலை பக்கம் போய்ட்டதா கேள்வி
கெமரா வாங்கி குடுத்துடு ஓடினவரு எப்படித்தான் மறுபடி மாட்டிக்கிட்ட்டாரோ????
///" ஈரோடு சங்கமம் 2011 " நிகழ்ச்சிக்கு
நானும். சேலம் தேவாவும் பஸ்ல
சேர்ந்து போறதா Plan.///
ஏதோ சொந்தமா பஸ் வாங்கிட்டு போன மாதிரி பெருசா சொல்ரீங்க....
///ஆனா அவரு முதல் ஸ்டாப்பிங்ல
ஏறுவாரு.. நான் 5-வது ஸ்டாப்பிங்ல
தான் ஏற முடியும்...///
ஒரு வேளை பைசா கொஞ்சம் கம்மியா இருந்திருக்குமோ???
///மணி சரியா 8.30. தேவாகிட்ட
இருந்து போன்...////
ம்ம்... நீங்களா உங்க சொந்த செலவுலயா போன் பண்ணி இருக்க போரீங்க....
///
" ஓ.கே.. நான் பாத்துக்கறேன்..! "//
///நான் அந்த பஸ்சை பாத்தேன்..///
சரியாத்தான் பேசுரீங்க...
///ஒரு 30 அடி ஓடி போயி மூச்சு
வாங்க பஸ்ல ஏறினா..///
இன்னும் கொஞ்சம் இருந்திருந்தா, ஈரோடு’க்கு பை வாக்’லயே பஸ் பின்னாடி ஓடி போயிர இருந்திச்சு... பஸ் காசாவது மிச்சம்..
//அந்த ஆள் என்னை கொலைவெறில
பார்த்தாரு.. லைட்டா முகத்தை
திருப்பினா இந்தாண்ட கண்டக்டர்..
அவரும் அதே கொலைவெறி பார்வை..///
வெறும் பார்வை மட்டும்தானா??? ஏதாவது, ஆக்ஷன் எடுத்திருந்தாங்கன்னா நல்லா இருந்திருக்குமே!!!
///
" அடப்பாவிகளா..? Govt பஸ்ல ஏறினா
நம்பர் சொல்ல சொன்னா.. Private பஸ்ல
ஏறிட்டு நம்பர் ப்ளேட் நம்பர் எல்லாமா
சொல்லுவீங்க..?!!! "///
நல்ல வேளை டிக்கட் நம்பர சொல்லாம இருந்தாரே!!!
பாவம் சார் நீங்க, எப்படி இவங்கள எல்லாம் சமாளிக்கிரிங்க???
Vinodhini said...
பாவம் சார் நீங்க, எப்படி இவங்கள எல்லாம் சமாளிக்கிரிங்க???
ஹலோ தேவா.. உங்களை தான் கேக்கறாங்க
Post a Comment