சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

12 March 2013

தெய்வமே...! நீங்க எங்கேயோ போயிட்டீங்க...!!

நாங்க புதுசா 2 ஜரிகை மிஷின் 
வாங்கினோம்.. அதை மெயிண்டெய்ன் 
பண்ணிக்கறது என் பொறுப்பு..


அதுல எனக்கு ஒரு பிரச்னை...

அந்த மிஷினை ஓட்றவன் ஒரு 
நார்த் இந்தியன்.

அவனுக்கு ஹிந்தி மட்டும் தான் தெரியும்..

ஆனா 15 மொழியில சரளமா எழுத., 
படிக்க தெரிஞ்ச எனக்கு அந்த பாழாபோன 
ஹிந்தி மட்டும் தான் தகராறு.. 

ஆரம்பத்துல அவன்கிட்ட கம்யூனிகேட் 
பண்ண கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. 
ஆனா போக போக சரியா போச்சு.. 
( ஹி., ஹி., அவன் தமிழ் கத்துகிட்டான்.. )

ஒரு நாள் Evening... நானும் , 
என் அசிஸ்டெண்ட் பிரபுவும் 
Factory-க்கு போனோம்... 

Factory கதவு திறந்து இருந்தது., 
மிஷின் ஓடிட்டு இருந்தது, ஆனா 
அவனை காணோம்..

நான் பிரபுவை குழப்பமா பாக்க...

" பாஸ்... அவன் டீ சாப்பிட போயி 
இருப்பான்னு நினைக்கிறேன்..! " 

" உள்ளே இருபதாயிர ரூபா Materials
இருக்கு.. இவனை நம்பி விட்டுட்டு போனா 
இப்படியா கதவை திறந்து வெச்சிட்டு போறது...? "

" நானும் நாலஞ்சு தடவை சொல்லி 
பாத்துட்டேன் பாஸ்.. மறுபடி மறுபடி 
இப்படிதான் பண்றான்...! "

" ஓஹோ... சரி அவனுக்கு போனை போடுங்க...! " 

பிரபு போனை போடவும்.... Factory-க்கு 
உள்ளே இருந்து ரிங்டோன் வந்தது..

" பாஸ்.. அவன் மொபைல் இங்கே தான் 
இருக்கு...! "

உடனே எனக்கு டக்னு ஒரு சூப்பர் ஐடியா (!?!)..

" பிரபு., அவன் மொபைலை எடுத்துகிட்டு 
உங்க வீட்டுக்கு போயிடுங்க...! சுவிட்ச் ஆப் 
பண்ணி வெச்சிக்கோங்க... ஒரு மணி நேரம் 
கழிச்சி அவன்கிட்ட குடுங்க.... "

" எதுக்கு பாஸ்..? " 

" இது நான் அவனுக்கு குடுக்கிற 
ஷாக் ட்ரீட்மெண்ட்... அப்புறம் பாருங்க 
ரிசல்ட்டை...! "

" புரியலையே...! "

" நம்ம Materials காணாம போனா 
அது அவனை பெருசா பாதிக்காது.. 
ஆனா.. அவன் மொபைல் காணோம்னா..?! "

இதை கேட்டு பிரபு புல்லரிச்சி போயிட்டார்..

( தெய்வமே...! நீங்க எங்கேயோ போயிட்டீங்க... )

நாங்க Plan பண்ணின மாதிரியே நடந்தது..

ஒரு வாரம் கழிச்சி. 

பிரபு Factory-ல இருந்து போன் பண்ணினார்.... 

" பாஸ்... உங்க ஷாக் ட்ரீட்மெண்ட் ரிசல்ட்
கிடைச்சிடுச்சு... "

" குட்.. குட்... இப்ப Factory கதவை பூட்டிட்டு
போயிருப்பானே...!?! "

" இல்ல பாஸ்.. கதவு திறந்துதான் இருக்கு..
ஆனா மொபைலை மட்டும் எடுத்துட்டுகிட்டு
போயிருக்கான்..! "

" ??!?!??!!?!? "
.
.

9 Comments:

Easy (EZ) Editorial Calendar said...

ஹி.....ஹி.....மிக நல்லா இருக்கு......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா...ஹா...

தமிழ்மகன் said...

உலகின் முதல் இருபது இணைய தளங்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/most-popular-websites-on-internet.html

selvam said...

இதுக்கு நீங்க அவங்க கிட்ட நேரா போயே சொல்லி இருக்கலாம்!

Madhavan Srinivasagopalan said...

// தெய்வமே...! நீங்க எங்கேயோ போயிட்டீங்க... //

அதான் வந்துட்டீங்களே இந்தமாதிரி இந்தமாதிரி பிளேடு போட..

இராஜராஜேஸ்வரி said...

இல்ல பாஸ்.. கதவு திறந்துதான் இருக்கு..
ஆனா மொபைலை மட்டும் எடுத்துட்டுகிட்டு
போயிருக்கான்..!

தெய்வமே...!
எங்கேயோ போயிடுச்சு...!!"

middleclassmadhavi said...

:-)). Oru vElai, materials eduththu olichchu vaicha, aduththa mural antha poruppum vantha vidumo ennamo!??

Gnanam Sekar said...

அறிவாளி .

Meera said...

சூப்பர். தெய்வம் மொபைலை எடுத்துக் கொண்டு எங்கேயோ போயிருச்சு.