சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

18 March 2013

சொல்லவே இல்ல....?!!!

அடுத்த மாசம் எங்க ஊர்ல பண்டிகை..
அதுக்காக துணி எடுக்க போனோம். 

கிட்டதட்ட ரெண்டு வருஷமாவே 
என் Wife " ரோஹிணி சில்க்ஸ் " தவிர 
வேற எங்கேயும் Sarees எடுக்கறது இல்ல.. 

இங்கே தான் விலை ரொம்ப கம்மியாம்.

( வேற கடையில 1500 ரூபாய்க்கு விக்கிற 
சேலை.. இங்கே வெறும் 1490 மட்டுமே... )

நேத்து ரோஹிணி சில்க்ஸ்ல்...

நான் போனதும் ஓரமா ஒரு பெஞ்ச்ல 
உக்காந்துகிட்டேன்... 

" ஏங்க.. உள்ளே வரலையா..? "

" இல்லம்மா... நீ போயி பாரு...! "

நான் டேபிள்ல இருந்த ஒரு கேட்லாக்கை 
எடுத்து பொம்மை பார்க்க ஆரம்பிச்சேன்....

" சரி.. அதுல எதாவது நல்லா இருக்கான்னு 
பாத்துகிட்டு இருங்க.. வந்துடறேன்..! "

என் Wife Sarees பார்க்க போயிட்டாங்க..
ஒரு 20 நிமிஷம் கழிச்சி வந்தாங்க...
கையில ஒரு Saree கூட இல்ல...

" இன்னும் ரெண்டு நாள்ல புது Stock
வருதாம்.. அப்ப வரலாம்க..! "

" ம்ம்.. சரி...! "

" இந்த கேட்லாக் பாத்தீங்களே.. இதுல
எதாவது நல்லா இருக்கா..? "

" ஒண்ணு., ரெண்டு ஓ.கே.. "

" எங்கே குடுங்க பார்க்கலாம்...! "

அந்த கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க,,

" ஏங்க... இந்த 17-ம் பக்கம் பாருங்க...
இது நல்லா இல்ல...? "

" ம்ஹூம்... நல்லா இல்ல..! "

" இந்த 32-ம் பக்கம்... இது எப்படி..? "

" சுமார் தான்....! "

கொஞ்ச நேரம் கழிச்சி..

" இந்த 59-ம் பக்கம் பாருங்க.. "

" ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை..
மூக்கு சப்பையா இருக்கு..! "

" என்னாது மூக்கு சப்பையா இருக்கா..? "

என் Wife முகத்துல ஒரு தீப்பொறி
தெரிஞ்சது..

" அப்ப இவ்ளோ நேரம் நீங்க இதுல
இருந்த பொண்ணுங்களதான் பாத்துட்டு
இருந்தீங்க..?? சேலையை பார்க்கல...?! "

" சேலையைதான் பார்க்கணுமா...?
அதை நீ சொல்லவே இல்ல.. அவ்வ்வ்..!! "
.
.

6 Comments:

vinu said...

அவ்வ்வ்..!! "

தமிழ்மகன் said...

கணனியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு ----- http://mytamilpeople.blogspot.in/2013/03/recover-deleted-files-from-hard-disk.html

vijaykumar coimbatore said...

என் இனமடா நீ

விஸ்வநாத் said...

//" ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை..
மூக்கு சப்பையா இருக்கு..! "//

கோழி குருடா இருந்தாலு கொழம்பு ருசியா இருக்கானுதா பாக்கனு

Vinodhini said...

அப்போ அந்த " ஒண்ணு., ரெண்டு ஓ.கே.. " அது சேலை இல்லையா???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

samhitha said...

irundhaalum unga dhairiyam ulagathula yaarukkume illa :)