சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

05 March 2013

" உங்க டூத்பேஸ்ட் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

" உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு
சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி
யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்...

அப்புறம்
" உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? " -னு
அனுஷ்கா கேட்டாங்க... அதனால அதையும்
வாங்கினேன்..

( ஹி., ஹி., அனுஷ்கா பீல் பண்ணினா
எனக்கு மனசு தாங்காதுல்ல... )

சரி மேட்டர்க்கு வருவோம்...

கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு
அது இருக்கா..? இது இருக்கான்னு
கேட்டாங்களே தவிர... அதுல நிக்கோடின்
இருக்குன்னு யாருமே சொல்லலை...

என்னாது நிக்கோடினா..?!!

( அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க 
கூட விட மாட்டீங்களா..?!!! )

DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research )
நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின் 
இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க.. 

( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும் )

Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி
24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 
7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது 
கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு.. 

ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின்
இருக்காம்.. ஆனா Colgate Herbal-ல
அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல
பல்லு விளக்கினா... அது 9 சிகரெட்
குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!

இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே 
வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு 
எதுவுமே தெரியாம பாத்துகிட்ட  நம்ம 
பத்திரிக்கை , டி.வி சேனல்களோட 
சேவையை எப்படிதான் பாராட்றது..?

" என்னங்க இது அநியாயமா இருக்கு..? 
நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு 
தானே கேக்க வர்றீங்க..? 

ம்ம்... என்னங்க பண்றது..? 

காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே 
சாராயம் விக்கிற நாடுங்க இது..

இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..!


Sources : 

9 Comments:

Madhavan Srinivasagopalan said...

தூங்கற ஆளுங்களுக்கு விழிப்புணர்வூட்டும் பதிவு

திண்டுக்கல் தனபாலன் said...

டூத்பேஸ்ட் மட்டும் தானா...?

மனிதன் மனமே...?!

இதெல்லாம் கொசுறு...

நன்றி...

கோவம் நல்லது said...

அப்போ, நியாயமா உங்க டூத்பேஸ்ட்ல பேஸ்ட் இருக்கான்னு தான் எல்லாரும் கேக்கணும்.

வெங்கட் said...

@ மாதவன்.,

// தூங்கற ஆளுங்களுக்கு விழிப்புணர்வூட்டும் பதிவு //

அதுசரி... விழிச்சதுக்கு அப்புறம் எந்த பேஸ்ட்
வெச்சி பல்லு விளக்கணும்னு கேட்டுபுடாதீங்க..
அது தெரியாம தான் நான் இப்ப தலையை
பிச்சிக்கிட்டு இருக்கேன்..

வெங்கட் said...

@ தனபாலன்.,

// இதெல்லாம் கொசுறு... //

சாருக்கு ஒரு டஜன் Colgate Herbal Toothpaste
பார்சல்...........

வெங்கட் said...

@ கோவம் நல்லது.,

// அப்போ, நியாயமா உங்க டூத்பேஸ்ட்ல
பேஸ்ட் இருக்கான்னு தான் எல்லாரும்
கேக்கணும். //

அதுக்கென்ன சார்.. இன்னும் அஞ்சோ.,
பத்தோ மேல போட்டு குடுத்தா சூர்யா
டிவில வந்து கேட்டுட்டு போக போறாரு...

thillanathillana said...

நல்லது ஆ ம் வே பேஸ்ட் -இல் நிகோட்டின் இரு க்கா
சார்

vinu said...

tnks for the info i shared this in twitter...

வெங்கட் said...

@ தில்லானாதில்லானா.,

// நல்லது ஆ ம் வே பேஸ்ட் -இல் நிகோட்டின் இருக்கா
சார் //

தெரியல சார்.. ஆனா அவங்க தான் எனக்கு இந்த தகவலை முதன்முதல்ல
சொன்னாங்க.. அப்புறம் தான் நான் நெட்ல தேடி பார்த்தேன்.. இவ்ளோ மேட்டர் கிடைச்சது..