சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

22 May 2014

ஞாபகம் வருதே.., ஞாபகம் வருதே..!!!


இன்னிக்கு என் ஸ்கூல் ப்ரெண்டு பத்ரி
Whatsapp-ல 5th Std படிச்சப்ப எடுத்த ஸ்கூல்
க்ரூப் போட்டோவை ஸ்கேன் பண்ணி
அனுப்பினான்..

என்கிட்ட அந்த போட்டோ இல்ல...
பாத்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது..

" மச்சி.. அந்த ரெண்டாவது வரிசையில
ஏழாவதா நிக்கறது நம்ம சுதா தானே..? "

" ம்ம்.. ஆமாம்...! "

" அப்ப 3வது வரிசையில 10வது நிக்கறது..
அது R.உஷாவா..? "

" அப்படித்தான் நினைக்கிறேன்..! "

" ஓ.கே அப்புறம் அதே வரிசையில 14வதா
நிக்கறது S.உஷா... கரெக்டா...?! "

" சரியா தெரியல..."

ரெண்டு நிமிஷம் போட்டோவை பாத்துட்டு....

" ஆமா மச்சி... இந்த போட்டோல நீ எங்கே
இருக்கேனு " கேட்டேனா...

காறி துப்பிட்டு போய்ட்டான்..

# அப்படி என்ன நான் தப்பா கேட்டுட்டேன்
மக்கழே..?!!

:) :)
.
.

2 Comments:

‘தளிர்’ சுரேஷ் said...

ஹாஹாஹா! சூப்பர்!

Mohamed Faaique said...

///என்கிட்ட அந்த போட்டோ இல்ல...
பாத்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது..////

அப்போ உங்க Profile picture நீங்க 5ம் கிளாஸ் படிக்கும் போது எடுத்தது இல்லையா????