சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

17 February 2014

சிறு துளி.. பெரு வெள்ளம்...!


டிஸ்கி : என் மகன் சூர்யா வெங்கட்டப்பன் ( 6th Std )
பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றதும்., 
பேசியதும்...!!



இங்கே ஒரு சூப்பர் ஸ்டாரை போல
அமர்ந்து இருக்கும் ஆசிரியர்களே....

அமெரிக்காவின் ஜனாதிபதியாக கூட
வர தகுதி உடைய என் இனிய நண்பர்களே..

உங்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்...

" சிறு துளி.. பெரு வெள்ளம்...! "
அதை பத்தி நான் பேசப்போறேன்...

எங்க வீட்ல ஒரு மாமரம் இருக்கு...
அதோட பழத்தை..

நேத்து எங்கப்பா சாப்பிட்டாரு...
இன்னிக்கு நான் சாப்பிடறேன்...
நாளைக்கு என் தம்பி சாப்பிடுவான்...
ஆனா விதை...???

அது எங்க தாத்தா போட்டது...

இப்படித்தான் நானும் ஒரு தடவைக்கு
517 தடவை யோசனை பண்ணி
பாத்துட்டேன்..

இந்த உலகத்துத்துல இருக்குற எல்லா
பெரிய விஷயத்துக்கும்.. ஒரு சின்ன
விஷயம் தான் ஆரம்பமா இருக்கு..

ஒரு தடவை நியூட்டன் மரத்தடியில
உக்காந்தை யோசிச்சிட்டு இருக்கும் போது...
ஒரு ஆப்பிள்.. அவர் தலையில " நங் " னு
விழுந்தது...

நாமளா இருந்தா என்ன பண்ணியிருப்போம்..?
தோட்டக்காரன் வர்றதுக்குள்ள ஆப்பிளை
தூக்கிட்டு ஓடி போயிருப்போம்..!!

ஆனா நியூட்டன்..

ஆப்பிள் ஏன் கீழே விழுந்ததுன்னு ஆராய்ச்சி
பண்ணி.. புவியீர்ப்பு சக்தியை கண்டு பிடிச்சாரு...!

இன்னிக்கு நாம நிலாவுக்கே ராக்கெட் விடறோம்னா..
அதுக்கு காரணம் நியூட்டனுக்கு அன்னிக்கு
வந்த சின்ன சந்தேகம் தான்...

அறிவியலின் சிறுதுளி நியூட்டன்...!

அடுத்து


அன்னை தெரசா ஒரு தடவை இந்தியாவுக்கு
சுற்றுலா வந்தப்ப... நிறைய நோயாளிகள்
கஷ்டப்படறதை பாத்து

அவங்க கண்ணுல தண்ணி வந்துச்சி.,
அவங்களுக்கு சேவை பண்ணனும்னு
மனசு சொல்லிச்சி...

அவங்க எப்பவுமே இங்கே தோன்றதை
( மூளை ) சொல்வாங்க...
இங்கே சொல்றதை ( இதயம் ) செய்வாங்க...!

1948-ல கல்கத்தாவுக்கு மக்களுக்கு
சேவை பண்ண வந்தப்ப அவங்களுக்கு
வயசு 19..

அப்ப அவங்ககிட்ட இருந்ததெல்லாம்
அஞ்சு ரூபாயும்., மனசு முழுக்க அன்பும்தான்..

1952 முதல் ஆதரவற்றோர் இல்லம் ஆரம்பிச்சாங்க..
அது இன்னிக்கு 132 நாடுகள்ல., 500 இல்லமா
மாறி இருக்குன்னா.. அது காரணம் அன்னிக்கு
அன்னை தெரசா கண்ணுல வந்த சிறுதுளி கண்ணீர்...

அன்னை தெரசாவின் கண்ணீர் உப்பாக
இருக்கலாம்..ஆனால் அதுதான் பல
நோயாளிகளின் வாழ்க்கையை இனிப்பாக
மாற்றியது...

அடுத்து


6-வது வரை படித்தவர் தான்
பின் நாட்டையே படிக்க வைத்தார்....
அவர் தான் காமராஜர்..

அவர் தமிழ் நாட்டுக்கு முதலமைச்சரா
இருந்தப்ப நம்ம குழந்தைகள் நல்லா
படிக்கணும்னு ஆசைப்பட்டு 14000 பள்ளிகள்
திறந்தாரு...

ஆனா அப்ப நிறைய குழந்தைகள் வேலைக்கு
போயிட்டு இருந்தாங்க.. காரணம் வறுமை..

அதை பாத்துட்டு பள்ளியில சத்துணவு
திட்டத்தை ஆரம்பிச்சாரு..

நிறைய பேர் அவங்க குழந்தைகளை
பள்ளிக்கு சாப்பிட அனுப்பினாங்க..
சாப்பிட வந்த குழந்தைகள் படிக்கவும்
ஆரம்பிச்சாங்க..

அஞ்சே வருஷத்துல 7% இருந்த தமிழர்களின்
கல்வியறிவு 37% சதவீதமா மாறினது...
இப்ப அது 80%-ஆ வளர்ந்து இருக்கு...

மக்கள் சேவையில் சிறுதுளி காமராஜர்.

இதே மாதிரி..


அகிம்சையின் சிறுதுளி காந்தி.,
புரட்சியின் சிறுதுளி தந்தை பெரியார்...
உழைப்பின் சிறுதுளி அப்துல் கலாம்..

இப்படி சொல்லிட்டே போலாம்..

அதனால கடைசியா ஒண்ணே ஒண்ணு
மட்டும் சொல்லிக்கிறேன்..

நாமளும் ஒரு சிறுதுளி தான்...

" ஏர் ஓட்றமா., ஏரோப்பிளேன் ஓட்றமாங்கறது
முக்கியமில்ல., ஒழுங்கா ஒட்றமாங்கறது தான்
முக்கியம்...! "

இனி பாலைவனத்தில் வீழ்ந்தாலும்
ஈச்ச மரமாக முளைப்போம்..

நன்றி..!!

5 Comments:

இராஜராஜேஸ்வரி said...

சூர்யா வெங்கட்டப்பன் ( 6th Std )
பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றதற்கு இனிய வாழ்த்துகள் .. பாராட்டுக்கள்.!

பேசியதும் அருமையான
கருத்துகள்!!

வாழ்க வளமுடன் ..
வளர்க நலமுடன் ..!

middleclassmadhavi said...

Superb! Congrats!

திண்டுக்கல் தனபாலன் said...

அட்டகாசமான உரை...

சூர்யா வெங்கட்டப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Umesh Srinivasan said...

ஜூனியருக்கு வாழ்த்துக்கள் # புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

விஸ்வநாத் said...

அறிவுல பையன் அம்மாவப்போல போலிருக்கு, வாழ்த்துக்கள்.