சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

19 January 2014

மாப்ளே.... மாமோய்..!!!


நான் காலையில எந்திரிச்சதும்
என் தங்கச்சி மகன் அழற சத்தம்
கேட்டது...

அவன் 1வது படிக்கறான்.. ஒரு வாரம்
லீவ் முடிஞ்சி இன்னிக்கு ஸ்கூலுக்கு
போகணும்ல..

அதான் பயபுள்ள நேத்து நைட்ல இருந்து
சோகமா இருந்தானா...?!!

" ஆஆஆஆ.. நான் இன்னிக்கு ஸ்கூலுக்கு
போக மாட்டேன்... ஆஆஆஆ...!!! "

அவன் ரகளை பண்ணிட்டு இருந்தான்...
என் தங்கச்சி சமாதானம் பண்ணிட்டு
இருந்தா...

சரி நாமளும் நம்ம பங்குக்கு எதாவது
பண்ணலாம்னு போனேன்...

போயி...

" பார்ரா மாப்ள.. நீ ஒழுங்கா ஸ்கூலுக்கு
போயி., நல்லா படிச்சாதான்டா இந்த மாமா
மாதிரி பெரிய ஆளா வர முடியும்"

சொல்லி முடிக்கல... அழுகை சத்தம்
இன்னும் ஜாஸ்தியாச்சு...

என்ட்ரா இதுன்னு திரும்பி பாத்தா...

அழுதுட்டு இருந்தது என் தங்கச்சி...

( ஒரு வேளை ஆனந்த கண்ணீரா
இருக்குமோ..?!! )
.
.

2 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-3.html) சென்று பார்க்கவும்... நன்றி...

sathya nammalwar said...

கம்பெனி ரகசியசத்தை அடிச்சு கூட கேப்பாங்க... சொல்லாதிங்க பாஸ்....;)