சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

13 December 2013

டு இன் ஒன்..!!

எனக்கு சாதாரணமா கோவம் வராது....
வந்துட்டா அவ்ளோதான்...

இன்னிக்கு காலையில....

" நிர்மலா..!! நிர்மலா..!!! "

" அடடடா.. ஏன் இப்படி கரடி மாதிரி
கத்தறீங்க..?!! "

" யேய்.. கரடி இப்படித்தான் இனிமையான
வாய்ஸ்ல கத்துமா..?! "

" சாரிங்க.. அன்னிக்கி அனிமல் ப்ளேனட்ல
இதே மாதிரி எதோ கத்திட்டு இருந்தது...
அப்ப அது  கரடி இல்லையா...?!! "

" பிச்சிபுடுவேன் பிச்சி.... "

" சரி, சரி இப்ப எதுக்கு கூப்பிட்டீங்க..?! "" உனக்கு எத்தனை தடவை சொல்லி
இருக்கேன்.. என் ஷேவிங் க்ரீம் கலர்ல
பேஸ்ட் வாங்கதேன்னு... "

" அதுக்கு என்ன இப்போ...? "

" மாறி போச்சு.... "

" இதுக்கு தான் எப்பவும் Facebook-ல
ஸ்டேடஸ் போடற நெனப்பாவே
இருக்க கூடாதுன்னு சொல்றது.. "

"ஏய்.. நான் என்ன கேட்டுட்டு இருக்கேன்..
நீ என்ன சொல்லிட்டு இருக்க.. "

" சரி., சரி., ஒரு நாள் பேஸ்ட்டை  வெச்சு
ஷேவிங் பண்ணிட்டீங்க.. விடுங்க..
விடுங்க... "

" ஹி., ஹி., ஹி... அப்படி பண்ணியிருந்தா தான்
பரவாயில்லையே... "

" அப்படின்னா...????!! அட பாவி மனுஷா...!! "
.
.

5 Comments:

RAJATRICKS - RAJA said...

தல உங்களுக்கு மச்சினி இல்லாத வீட்டில் தான் பொண்ணு எடுக்கணும்

RAJATRICKS - RAJA said...

அய்யயோ ... பல்லுல முடி முளைக்க போகுது

சேக்காளி said...

//அய்யயோ ... பல்லுல முடி முளைக்க போகுது//
ஏம்மா நிர்மலா நீதான் வேற நிறத்துல பற்பசை வாங்கேன்.என்னவெல்லாம் சொல்லி பயமுறுத்துராங்க பாரு.

ஜீவன் சுப்பு said...

:)

அமர்க்களம் கருத்துக்களம் said...

கலக்கல் .

அமர்க்களம் கருத்துக்களம்
www.amarkkalam.net
பயனுள்ள தகவல்களின் தொகுப்பு
ஒரு முறை வந்து பாருங்கள்.