சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

18 October 2013

அஞ்சாறு பேருக்கு நல்லதுன்னா...


நேத்து மதியம்
என் ஆயிரக்கணக்கான ரசிகைகள்ல (?! )
ஒருத்தங்க கேட்டாங்க....

" வெங்கட்.. நீங்க இதுவரை சூசைட்
பண்ணிக்க போற யாரையாச்சும்
தடுத்து இருக்கீங்களா..? "

" தடுத்து இருக்கீங்களாவா...?! அஞ்சாறு
பேரை காப்பாத்தி இருக்கேங்க..! "

" வாவ்.. அஞ்சாறு பேரா..?! "

" ஆமா.. நானெல்லாம் இதை ஒரு
பொதுசேவையாவே பண்ணிட்டு
வர்றேன்னா.. பாருங்களேன்...!! "

" நிசமாத்தான் சொல்றீங்களா..?! எப்பவும்
போல இதுவும் பொய் சொல்லலையே..! "

" பொய்யா... அது எப்படி இருக்கும்..
கருப்பா..? சிகப்பா..?!! "

" ஹா.., ஹா.., நீங்க தான் Mr.அரிச்சந்திரன்
ஆச்சே...!! "

" ம்ம்.. நம்புனா சரி..!! "

" ஆமா என்ன சொல்லி அவங்களை
கேன்வாஸ் பண்ணுவீங்க.. கஷ்டமா
இருக்குமே..! "

" கஷ்டமா.. அதெல்லாம் ஒண்ணுமில்ல
சும்மா நாலு வார்த்தை சொல்லுவேன்..
உடனே மனசு மாறிடுவாங்க..! "

" அப்படி என்னங்க சொல்லுவீங்க..?! "

" சரி., சரி.. இனிமே போஸ்டிங் போடலை
போதுமா..? " இதான் சொல்லுவேன்..

" ஹா., ஹா., ஹா..!!! "
.
.

3 Comments:

Madhavan Srinivasagopalan said...

// " சரி., சரி.. இனிமே போஸ்டிங் போடலை
போதுமா..? " இதான் சொல்லுவேன்.. //

Venkat doesn't keep his promise..

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... செம ரகளை...!

s suresh said...

கலக்கல்! ஹா! ஹா! சிரிச்சு மாளலை!