சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

14 February 2013

பிப்ரவரி 14....!!


இன்னிக்கு பிப்ரவரி 14..

எனக்கு வேற முக்கியமான வேலை
ஒண்ணு இருக்கு.. ஹி., ஹி., ஹி....

எல்லாம் நம்ம ப்ரெண்ட் சுரேஷ்காக
தான்..

இருங்க.. ஒரு சின்ன ப்ளாஷ்பேக்...


ஜனவரி 24-ம் தேதி.. 

என் ப்ரெண்ட் சுரேஷ் என்னை கூப்பிட்டு 
ஒரு போட்டோவ காட்டினான்... 

" இது.....? "

" என்னோட அடுத்த செலக்சன்.. "

" அடுத்ததா.. அப்ப இப்ப இருக்கறது.. " 

" டேய்.. வாழ்க்கையை எஞ்சாய் பண்ணணும்டா.. 
புதுசு புதுசா போயிட்டே இருக்கணும்... "

" இப்பதானே 6 மாசம் முன்னாடி.... "

" ஸ்டாப்.... ஸ்டாப்... அட்வைஸ் பண்ணாதே..!  
பூமி வேகமா சுத்துது.. "

" என்னமோ போ...! " 

நானும் போட்டோவ பார்த்தேன்.. 

" டேய் சூப்பர்..!! ஆனா எதுக்கும் 
ஒண்ணுக்கு ரெண்டு தடவை நல்லா 
விசாரிச்சிக்கோ.. "

" அதெல்லாம் நான் பாத்துக்கறேன்.. 
வர்ற பிப்ரவரி 14 தேதி காலையில 
10 மணிக்கு வந்துடு... நாம ரெண்டு 
பேரும் தான் போறோம்.. "

" நானுமா.... எனக்கு வேலை இருக்குமே..! "

" நான் உன் நண்பன்டா.. எனக்காக இந்த 
சின்ன உதவி பண்ண மாட்டியா..? "

( சென்டிமெண்டா பேசிபுட்டானே...! )

" சரி., சரி வர்றேன்.."

இதோ நானும் இப்ப கிளம்பிட்டேன்.. 

எங்க Plan படி...

நாங்க ரெண்டு பேருமா சேலம் போயி....
இன்னிக்கு தான் மார்கெட்டுக்கு வர்ற 
இந்த புது போனை வாங்க போறோமே...


டாடா... பை., பை...!


4 Comments:

சேலம் தேவா said...

பிப்ரவரி 14 அன்னிக்கும் ஏப்ரல் 1 மாதிரி நம்மள ஏமாத்தறதே வேலையாப்போச்சு... :)

Madhavan Srinivasagopalan said...

// பூமி வேகமா சுத்துது.. //

ஸ்பீட் பிரேக்கர் போடலாமா ?

பெசொவி said...

hihi!

Easy (EZ) Editorial Calendar said...

ஹி....ஹி......ரொம்ப அருமை.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)