சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

11 February 2013

ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்..!

அப்ப நான் ப்ளஸ் ஒன் படிச்சிட்டு
இருந்தேன்..

10-வது வரை பாய்ஸ் ஸ்கூலா
இருக்குற எங்க ஸ்கூல்..
+1, +2-ல மட்டும் Co-Ed..

அப்ப எங்க க்ளாஸ்லயும்
14 பொண்ணுங்க படிச்சாங்க..


ஒரு ஆறுமாசம் ஓடியிருக்கும்..

ஒரு நாள் கிரவுண்ட்ல நானும்.,
" பிதோகரஸ் தியரம் புகழ் " ஆனந்தும்
பேசிட்டு இருந்தோம்.

அப்ப எங்க ப்ரண்டு மோகன்
மூச்சு வாங்க ஓடி வந்தான்..

" டேய் உங்களுக்கு விஷயம் தெரியுமா.? "

" என்னடா விஷயம்..? "

" அடுத்த வருஷத்துல இருந்து +1, +2-க்கு
பொண்ணுகளை சேர்த்தறது இல்லன்னு
முடிவு பண்ணி இருக்காங்களாம்டா..! "

இதை கேட்டதும் ஆனந்த் ஷாக் ஆகி....

" யார்ரா இப்படி முடிவு பண்ணினது..? "

" எல்லாம் நம்ம மேனேஜ்மெண்ட்தான்.! "

" அடப்பாவிகளா..? "

" பீல் பண்ணாதடா..,  நம்ம க்ளாஸ்ல
பொண்ணுங்க இருக்காங்கல்ல.... "

"  அட ஏன்டா நீ வேற..,  இதை போன வருஷமே
பண்ணியிருந்தா.. க்ளாஸ்ல பொம்பள புள்ளங்க
முன்னால எல்லாம் நாம அடி வாங்கி
அசிங்கப்படாம இருந்திருப்போம்ல..! "

( அட ஆமால்ல...!!! ஹி., ஹி., ஹி...! )

ஒவ்வொரு மனுஷனுக்கும்
ஒவ்வொரு பீலிங்...!!
.
.

5 Comments:

விஸ்வநாத் said...

// ஒரு ஆறுமாசம் ஓடியிருக்கும்

ஒரு மாசமா ஆறு மாசமா ? தெளிவா சொல்லுங்க நண்பா

விஸ்வநாத் said...

// அட ஆமால்ல..

ஆமா வா ? இல்லியா ? தெளிவா சொல்லுங்க நண்பா

வெளங்காதவன்™ said...

deng u

si va said...

ஏதோ லவ் ஸ்டோரி இன்னு நினச்சு படிச்சா எனக்கு இப்படி பல்பு காட்டிட்டிங்களே நண்பா


எனது தளம்
சிவாவின் கற்றதும் பெற்றதும்

தமிழானவன் said...

ஹா ஹா ஹா