சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

01 February 2013

ஹே... யார் கிட்ட...!

தீபாவளிக்கு முந்தின நாள் சர்வீஸ்க்கு 
போன என் சிஸ்டம் சரியாகி இப்ப வரும்., 
அப்ப வரும்னு நானும் காத்து கிடந்தது 
தான் மிச்சம்..

எப்ப போன் பண்ணி கேட்டாலும்..

" சனிக்கிழமை ஆபீஸ் லீவு..."

" சர்வீஸ் இன்ஜினியர் டூர் போயிருக்கார்ங்க.."

" Board சென்னை போயிருக்கு.. "

" Board வந்துடுச்சி., ஆனா O.S போடணும்.. "

" Fan சுத்தலை.. புதுசு மாத்தணும்... "

" சிஸ்டம் அடிக்கடி OFF ஆகுது 
SMPS Complaint.. "

இப்படி தினமும் எதாச்சும் சொல்லிட்டு 
இருந்தாங்களே தவிர.., என் சிஸ்டமை 
கண்ணுலயே காட்டலை.. 

கிட்டதட்ட 75 நாள் ஆகிடுச்சு.. 

ஒரு நாள் மதியம் சாப்பிட்டுட்டு 
சேர்ல சாஞ்சிட்டு யோசிச்சிட்டு இருந்தேன்.. 

'டக்'-னு எனக்கு அந்த விஷயம் தோணுச்சி..

ஒருவேளை அப்படி இருக்குமோ..? 

உடனே வண்டியை எடுத்துட்டு சர்வீஸ் 
சென்டர் போனேன்.." டேய் தம்பி... எனக்கு தெரிஞ்சி போச்சு..
என் வளர்ச்சி பிடிக்காத யாரோ தான்
உனக்கு லஞ்சம் குடுத்து எனக்கு சிஸ்டம்
சரிபண்ணி குடுக்க வேணாம்னு சொல்லி
இருக்காங்க...! "

" அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லண்ணா...
Board மறுபடியும் ப்ராப்ளம் பண்ணுது..
சென்னைக்கு அனுப்பி இருக்கேன்.. "

" நீ சொல்றதை எல்லாம் நம்ப என்னை
என்ன கேணப்பையன்னு நினைச்சியா..? "

" இதுவரைக்கும் நான் அப்படி நினைச்சதே
இல்லண்ணா... "

" அப்ப மரியாதையா உண்மையை சொல்லு...
எனக்கு சிஸ்டம் தராம இருக்க உனக்கு
லஞ்சம் குடுத்தது யாரு...?

ஒபாமாவா..? இல்ல பில்கேட்ஸா..? "

" ????!!?!!!!!?!!? "

இதை கேட்டுட்டு அவன் கதறி கதறி
அழுதான்.. ( செஞ்ச தப்பை நினைச்சி
பீல் பண்றான் போல.. )

அந்த பயம் இருக்கோணும்.. யார்கிட்ட..

11 Comments:

சேலம் தேவா said...

அதானே...யாருகிட்ட...Welcome back தல.... :)

Madhavan Srinivasagopalan said...

// எப்ப(!) போன் பண்ணி கேட்டாலும்..

" சனிக்கிழமை ஆபீஸ் லீவு..." //

அதான் ரெண்டு மாசமா எல்லா சனிக்கிழமையும்(நாள் பூரா) உங்க ஃபோன்
பிசியா இருந்திச்சா ?

வெளங்காதவன்™ said...

யோவ்.... கம்பியூட்டர் போட்டி வந்துச்சா? இல்லியா?

வெளங்காதவன்™ said...

பொட்டி

Mohamed Faaique said...

Welcome

நாய் நக்ஸ் said...

வாரும்....இன்னும் மிச்ச சொச்சத்தை சொல்லவும்...

வெங்கட் said...

@ சேலம் தேவா..,

// Welcome back தல.... :) //

இப்படி ப்ளாக்ல போடறதே போதும்..

அதை விட்டுட்டு சேலம் 5 ரோட்ல கட் அவுட் வெக்கறது., அஸ்தம்பட்டில
ப்ளக்ஸ் போர்ட் வெக்கிறது எல்லாம் வேணாம்.. நமக்கு வெளம்பரம் பிடிக்காதுல்ல..

வெங்கட் said...

@ வெளங்காதவன்.,

// யோவ்.... கம்பியூட்டர் போட்டி வந்துச்சா? இல்லியா? //

அந்த பொட்டி வந்ததுக்கு அப்புறம் உதிச்ச மகா காவியம்தான்யா இது....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இனி அந்த பொட்டி வந்தா என்ன, வராட்டி என்ன...........?

விஸ்வநாத் said...

என்னது ஒங்க கம்பிட்டர் ரிப்பேரா ?
தலே பில்கேட்சுக்கு ஒரு போன் போற்றவா ?

அருண் பிரசாத் said...

போச்சா.... ஒரு 3 மாசம் இருந்த நிம்மதி எல்லாம் போச்சா....

(நான் என்னை சொன்னேன்)