சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

27 February 2015

பாம்பின் கால்.....!!!


இன்னிக்கு மதியம் 12.30 மணிக்கு
என் ப்ரெண்ட் ஆனந்த் போன்
பண்ணியிருந்தான்...

கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்..

அப்ப பேக்ரவுண்ட்ல ஆனந்த் அம்மா
வாய்ஸ் கேட்டது...

" டேய்.. லஞ்ச்க்கு வர்ரீயான்னு அம்மா
கேக்கறாங்க.. "

" என்னடா ஸ்பெஷல்..? "

" வஞ்சிர மீன்.. "

" இல்ல வரலைடா.. "

" தேங்க்ஸ்-டா.. சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்..
எங்கே வர்றேன்னு சொல்லிடுவியோன்னு
பயந்துட்டே இருந்தேன்... "

" ஓ.. சரி மச்சி.....!!! "

( அடுத்த 5-வது நிமிஷம் ஆனந்த் வீட்டு
முன்னாடி போயி நின்னது என் பைக்கு..

என்னை பாத்ததும் பையன் ஷாக் ஆகிட்டான்..)

" என்னடா வரலைன்னு சொன்னே..?!! "

"  நானும் ஒரு பேச்சுக்கு தான் மச்சி
வரலைனு சொன்னேன்.. "

" ஏன்டா.. ஏன்..? "

" வர்றேன்னு சொன்னா.. பெரிய பீசை
எல்லாம் நீ பதுக்கி வெச்சிடுவேல்ல...
அதான்... ஹி., ஹி., ஹி...!!! "

# பாம்பின் கால்.....!!!
.
.

2 Comments:

Umesh Srinivasan said...

இ.பொ.பே.பி.எ.

Madhavan Srinivasagopalan said...

ஐயைய... இந்த அண்ணன் 'Non-vegetarian' ஆளு போல..