சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

17 August 2013

டாலர் vs ரூபா.. ( ஒரு பலே ஐடியா )
மக்கள் தங்ககாசு வாங்கறதை நிறுத்தினா
டாலருக்கு நிகரான இந்தியா ருபா மதிப்பு
சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு இறங்கி 10 ரூபாய்க்கு
போய்டும்னு கொஞ்ச நாள் முன்னாடி
சொன்னாருங்க..

அவரு பெரிய அறிவாளியாச்சே..
( அட கண்ணாடி எல்லாம் போட்டிருக்காருபா.. )
நானும் ஒரு மாசமா தங்ககாசு எதுவும்
வாங்கலை..

( இல்லன்னா டெய்லி நாலஞ்சு வாங்கி
பாக்கெட்ல போட்டுட்டு தான் மறுவேலை...! )

ஆனா இப்ப என்னடான்னா

1 டாலர் = 63 ரூபாயாம்...!!!

இதை கேள்விப்பட்டதும்..

ஷேர் மார்கெட் விழுவுதாம்...,
கப்பல் மிதக்குதாம்..
ஏரோப்ளேன் எல்லாம் பறக்குதாம்.,

ஆத்தாடி...!! இப்ப என்ன தான் சார் பண்றது..?!!

நாம வேணா மக்கள்கிட்ட...

" இனிமே எல்லோரும் இட்லிக்கு
தேங்கா சட்னி சாப்பிடறதை நிறுத்திட்டு.,
தக்காளி சட்னி சாப்பிடுங்க "-னு சொல்லி
எதாவது இம்ப்ரூவ்மெண்ட் தெரியுதான்னு
டிரை பண்ணி பாக்கலாமா சார்..?!!
.
.

4 Comments:

மதுரைநண்பன் said...

போங்க பாஸ் உங்கள யாரோ ஏமாத்திட்டாங்க.மதுரையில அழகர் கோவில ஒரு டாலர் 10ரூபாய்தான் அதுவும் கயரோட.........

சேக்காளி said...

//போங்க பாஸ் உங்கள யாரோ ஏமாத்திட்டாங்க.மதுரையில அழகர் கோவில ஒரு டாலர் 10ரூபாய்தான் அதுவும்//
யாத்தாடி

வெங்கட் said...

// போங்க பாஸ் உங்கள யாரோ ஏமாத்திட்டாங்க.மதுரையில அழகர் கோவில ஒரு டாலர் 10ரூபாய்தான் அதுவும் கயரோட......... //

அடங் கொன்னியா... இது தெரியாம
தான் அவரு டி.வில வந்து கண்ணாடியை
கழட்டி கழட்டி பேசிட்டு இருக்காரா..?

டேய் சண்முகம்.. போட்ரா போனை..

rajasundar said...

அதான் தமிழ் நாட்டுல மழை பெய்யுது