சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

16 July 2013

டீல் ஈஸ் எ டீல்..!!


( சந்தீப் சாரிடம் லீவ் கேக்கும் ரோஹித் சர்மா..! )

நேத்து BCCI சேர்மேன் சந்தீப் பட்டீல்கிட்ட
இருந்து எனக்கு போன்...

" வெங்கட்... நான் ஒண்ணு கேப்பேன்..
நீ மறுக்க கூடாது.. "

" சார்.. நானே ஒரே ஒரு ப்ளேட்
சிக்கன் பிரியாணி தான் வாங்கிட்டு.... "

" சே., சே.. அதில்ல.. "

" ஹப்பாடா.. அப்ப எதுனா கேளுங்க சார்.. "

" நம்ம டீம்க்கு அடுத்த டூர்ல உன்னை
கேப்டனா போடலாம்னு இருக்கோம்.. '

" Under 19 டீம்கா சார்..? "

" இல்ல... சீனியர் டீம்க்கு..! "

" ஏன் சார்.. திடீர்னு... டோனியே நான்
சொல்லி குடுத்த மாதிரி நல்லாத்தானே
ஆடிட்டு இருக்காரு..! "

" அவருக்கு கொஞ்ச நாள் ரெஸ்ட் வேணுமாம்.. "

" அப்ப இந்த கோழிப்பய இருப்பானே..! "

" கோழி இல்லப்பா... கோலி...! "

" ஆமா நீங்க என்ன எனக்கு தமிழ் இலக்கண
கிளாஸா நடத்திட்டு இருக்கீங்க.. மேட்டர்க்கு
வாங்க சார்..! "

" டோனி, கோலி, ரெய்னா, ஜடேஜா, தவான்.,
ரோஹித், கார்த்திக், விஜய் இப்படி டாப் ப்ளேயர்ஸ்
எல்லாம் ரெஸ்ட் கேக்கறாங்க.. "

" ஆச்சரியமா இருக்கே..! "

" இதுல என்ன ஆச்சரியம்..? "

" இல்ல விஜய்யை எல்லாம் டாப் ப்ளேயர்ஸ்
லிஸ்ட்ல சேர்த்து இருக்கீங்களே.. அதான்.. "

" அதை விடு... நீ கேப்டனா பொறுப்பை
ஏத்துக்கறீயா...? "

" டன்.. ஆனா ஒரு கண்டீசன்..! "

" என்ன..? "

" என் பையனுக்கு Homework நீங்க செஞ்சி
தர்றீங்களா..? "

டொக்..
.
.

3 Comments:

சங்கவி said...

:)))

Umesh Srinivasan said...

அவரு BCCI சேர்மன் கெடையாது, தேர்வுக்குழுத்தலைவர்.

வெங்கட் said...

@ Umaseh.,

// அவரு BCCI சேர்மன் கெடையாது, தேர்வுக்குழுத்தலைவர். //

ஆஹா.. எங்கிட்ட அப்படித்தானே சொன்னாரு... இன்னொரு தரம் அவரு போன் பண்ணட்டும்.. அப்ப வெச்சிக்கிறேன்.. ஹி., ஹி., ஹி...