சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

10 June 2013

நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு...!!!

அமெரிக்கா போனதுக்கு அப்புறம்
ரொம்ப நாள் கழிச்சி நேத்து தான்
என் ப்ரெண்ட் சங்கர் எனக்கு போன்
பண்ணியிருந்தான்..


" டேய் வெங்கி... என் Wife உன்னோட
ப்ளாக் ரெகுலரா படிப்பாங்க...,
அவங்க உன் Fan-டா...! "

" மச்சி... நீ என்னை கலாய்க்கிற மாதிரி
தெரியுது..! "

" சமத்து... கண்டுபிடிச்சிட்டியே..!  "

" கிர்ர்ர்ர்..... சரி சரி., அதை விடு...
நீ எப்படி மச்சி இருக்கே..? "

" எனக்கென்ன... அமெரிக்கால வேலை.,
டாலர்ல சம்பளம்.. சந்தோஷமா இருக்கேன்..! "

" ஓ.. அப்படியா...? எங்கே உன் Wife Birthday
என்னிக்கு சொல்லு பார்க்கலாம்..? "

" என் Wife Birthday-ஆ...? அது எதுக்கு இப்ப..? "

" விஷயம் இருக்கு.. சொல்லு...! "

" அது.., அது வந்து.. ஆங்... நவம்பர் 22.. "

உடனே Background-ல் அவன் Wife குரல்

" ஏங்க.... என் Birthday ஆக்டோபர் 22..
அது கூட ஞாபகம் இல்லையா..?
போன் பேசிட்டு வாங்க.... அப்புறமா
இருக்கு உங்களுக்கு... "

" ஏன்டா...?? இதுவரைக்கும் நல்லாத்தானே
போயிட்டு இருந்துச்சு...  "

" பொண்டாட்டி Birthday-ஐ  ஞாபகம்
வெச்சிக்காதவனுக்கு ஆப்பு எப்பவும்
ரெடியா இருக்குனு இந்த உலகத்துக்கு
உணர்த்தவே யாம் இந்த திருவிளையாடலை
நடத்தினோம்.....! ஹி., ஹி., ஹி....!!! "

" டேய்ய்ய்ய்ய்... "

டிஸ்கி : இந்த போஸ்ட்டுக்கும் சிம்ரனுக்கும்
என்ன சம்பந்தம்னு யோசிக்கிறவங்களுக்கு...

காலேஜ் படிக்கும் போது வருஷம் தவறாம
April 4-ஆம் தேதி சங்கர் Class-ல எல்லோருக்கும்
சாக்லேட் குடுப்பான்.. ஏன்னா அன்னிக்கு தான்
நம்ம சிம்ரனுக்கு பர்த் டே..

( இதுக்கும் ரெண்டு அடி சேர்த்து வாங்கிக்கடா
மாப்ள... ஹி, ஹி., ஹி....! )

( ஹா., ஹா... மாட்னான்டா...!!! )
.
.

2 Comments:

Madhavan Srinivasagopalan said...

// நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு...!!! //

அத்தான...
அத்வானி ஏன் விலகிட்டாரு ?

vinu said...

imbuttu nallavaraaa neeenga???