சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

06 May 2013

அழகு பையனும்., Lervia சோப்பும்..!நேத்து மதியம்..

என் ப்ரெண்ட் சுரேஷ் கடையில....

" டேய்... Yardley சோப் இருக்கா..? "

" Yardley-ஆ..? யார்க்குடா..? "

" எனக்குத் தான்.. வெயில் ஓவரா
அடிக்குதுல.. என் அழகு முகம் கறுத்து
போச்சு...! "

" த்தூ... கறுத்து போச்சாம்... இல்லன்னா
மட்டும் அப்படியே லியனர்டோ டிக்காப்ரியோ
மாதிரி கலரா இருப்பாப்ல..! "

" டிக்காப்ரியோ தெரியும்... நம்ம பயதான்..
அமெரிக்கால இருக்கான்.. அதாரு லியனர்டோ..? "

" டேய்.. போதும்... நிறுத்து..! "

" சரி., சரி.. என் முகம் அப்படியே பளபளன்னு
ஜொலிக்கணும்.. அதுக்கு.... "

" ப்ளீச்சிங் பவுடர் இருக்கு.. ஒரு பாக்கெட்
தரவா..? "

" ஸ்டுப்பிட்... நான்சென்ஸ்... உன்கிட்ட
Yardley சோப் இருக்கா..? இல்லையா..? "

" இருக்கு.. இருக்கு.. டென்ஷன் ஆகாதே..! "

" அப்ப சரி.., உங்கப்பா கணக்குல எழுதிட்டு..
ஹி., ஹி., சாரி.. எங்கப்பா கணக்குல எழுதிட்டு
ரெண்டு குடு..! "

" வேற Imported சோப்பு கூட இருக்கு
பார்க்கறியா..? "

" வேறயா.. டேய் டேய் காட்றா..
நான் Yardley., Camay , Dove தவிர
வேற Imported சோப் பாத்ததேயில்ல..! "

" அப்ப ஒரு செகண்ட் Wait பண்ணு..! "

உள்ளே போனவன்... கையில எடுத்துட்டு
வந்தது.. ஒரு " Yardley " & ஒரு " Lervia "

" இந்தா பாரு...! "

Lervia சோப்பை வாங்கி பார்த்தேன்..
" Made in Indonesia " போட்டு இருந்தது...

" ஆமா இது ரெண்டுல நான் எதை
வாங்கிக்கட்டும்..? "

" Yardley வேணாம்.. Lervia எடுத்துக்க..? "

" ஓ... இதுக்கு எதாவது ஸ்பெஷல்
காரணம் இருக்கா..? "

" ஆமா... இந்த சோப் தான் என்கிட்ட
2 வருஷமா விக்காம இருக்கு...! "

" அட நாயே..! "
.
.

4 Comments:

s suresh said...

ஹா! ஹா! நல்ல காமெடியா இருக்கே! ஆமா சோப்பு வாங்கீனீங்களா இல்லையா?

Madhavan Srinivasagopalan said...

Where is 'like' button ?

Sakthi Dasan said...

தங்களின் இந்த பதிப்பு மிகவும் அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://www.tamilkalanchiyam.com வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.
இப்படிக்கு
தமிழ் களஞ்சியம்

சரண்யா said...

ha ha.........nice