நான் MCA படிக்கும் போது
" சிந்தனையில் மேம்பட்டவர்கள்
ஆண்களா..? பெண்களான்னு..? "
எங்களுக்கு ஒரு பட்டிமன்றம்
நடந்தது..
நான் " பெண்களேங்கிற " Side-ல
பேசினேன்..
எனக்கு முன்னாடி ஆண்கள் Side-ல
பேசினவருக்கு நான் குடுத்த
Counter Attack பத்தி தான் இந்த பதிவு..,
முதல்ல இருக்கிறது அவரு பேசியது..
அடுத்தது நான் பேசியது..
No :1
பட்டி மன்ற தலைப்பை பாருங்க.,
" சிந்தனையில் மேம்பட்டவர்கள்
ஆண்களா..? பெண்களா..? "
இந்த தலைப்புல
முதல்ல " ஆண்கள் " இருக்கு..
ரெண்டாவதா தான் " பெண்கள் " இருக்கு..
இதுலயிருந்தே தெரியலையா
ஆண்கள்தான் மேம்பட்டவர்கள்னு..
என் பதில் :
இது கொஞ்சம் Too Much-ஆ இருக்கே..!!?
சரி உங்க வழிக்கே வர்றோம்..
ஒண்ணு பெருசா..? ரெண்டு பெருசா..?
No : 2
நியூட்டன்., எடிசன்.., காந்தி.., நேரு..,
இவங்கல்லாம் எவ்வளோ
பெரிய சிந்தனைவாதிங்க..
என் பதில் :
நல்லா கவனிச்சீங்களா மகா ஜனங்களே..!
சிந்தனைவாதிங்கன்னு அவங்க சொன்ன
எல்லோருமே 1960-க்கு முன்னாடி
இருந்தவங்க.. இப்ப இருக்கிற ஆண்கள்ல
சிந்தனைவாதி யாரும் இல்லைன்னு
அவங்களே ஒத்துகிட்டாங்க..
No 3 :
+2-ல பொண்ணுங்க அதிக மார்க்
எடுக்கறாங்கன்னா.., அதுக்கு காரணம்
வீட்டுல உக்கார்ந்து மாங்கு., மாங்குன்னு
மனப்பாடம் பண்ணுறாங்க..
அவங்களுக்கு வேற வேலை இல்ல.,
என் பதில் :
நீ என்ன Part Time-ல இந்தியாவோட
ஜனாதிபதியாவா இருக்கே..?
நீயும் உக்கார்ந்து படி..!
பொறாமை பிடிச்ச பசங்க..!
ஆனா.., நம்ம பையன் Exam Hall-ல
உக்கார்ந்துகிட்டு சிந்திப்பான் பாருங்க..
என்னமோ இவன் தான் புதுசா
ஒரு Formula கண்டுபிடிக்க போற மாதிரி...
இப்படி Counter Attack அமைஞ்சது..
என் Speech இனிமே தான் வரும்
அதுலயும் நிறைய Same Side கோல்
போட்டு இருப்ப்பேன்..
இன்னும் 10 வருஷத்தில இந்த
மாதிரி Topic அவசியமே இருக்காது..
பெண்கள் தான் புத்திசாலின்னு
எல்லோருக்குமே தெரிஞ்சி போயிடும்னு
கடைசியில சொல்லி இருப்பேன்..
நடுவர் சமமான தீர்ப்பு குடுத்தார்..,
ஆனா அதுக்கு அப்புறம்..,
எங்க காலேஜ் பொண்ணுங்க
என்னை பார்த்தா பாசமா சிரிச்சாங்க..!
என் Friends தான் முறைச்சிக்கிட்டே
திரிஞ்சாங்க..
( அந்த வருஷ Semester Exam-ல எனக்கு
Internal Marks வாரி வழங்கப்பட்டது.
அது தனி கதை ஹி., ஹி..! )
.
.
Tweet
11 Comments:
இருந்தாலும் கல்லூரியில் மிகவும் தைரியமாகத்தான் சுற்றியுள்ளீர்கள்..,
சுரேஷ்..,
என்ன பயம்..?
நமக்கு தான் தாய்குலத்தோட
ஆதரவு இருக்கே..
நல்ல அட்டாக்...
அமுதா மேடம்..,
உங்க பாராட்டுக்கு நன்றி..
அப்படியே தமிஷ்ல Vote
போட்டிருந்தீங்கன்னா..,
சந்தோஷம்..
No 1:மன்னன் படம் அப்பவே பார்த்துடீங்க போல..
No2:கடைசியா வெங்கட் ன்னு சேத்து சொல்லி இருக்கலாம் உங்க நண்பர்(மேடை ஏறிட்டு பொய் சொல்ல பயந்தா எப்படி?)
No 3: நீங்க விஜயகாந்த் கு அண்ணன் போல.. (ஏன்னா அவரு சின்ன கவுண்டர். நீங்க பெரிய counter ரால்ல இருக்கீங்க. )Really Superb..
ஓஒ பட்டிமன்றப் பேச்சாளரா - அது சரி நல்வாழ்த்துகள்
எட்டாம் கிளாஸ் பாஸ் - பத்தாம் கிளாஸ் பெயிலு - எது பெரிசு
ரசிகன்.,
No.1: மன்னன் பட Dialogue தான்,
அதை சரியான இடத்தில் Use
பண்ணி இருக்கோம்ல..
No 2 : இதுக்கு பேரு தான்
Same Side Goal
No 3 : நன்றி..
சீனா..,
பட்டிமன்ற பேச்சாளர் இல்ல..
College-ல போட்டிகள்ல பேசுறதோட சரி..
அட.., இந்த Topic கூட
நல்லா இருக்கே..
ஒரு பட்டிமன்றம் வெச்சுக்கலாமா..?
very nice frnd... keep it up...
நல்ல பதில்கள் நண்பா..
யாரோ ஒரு பொண்ணு எழுதி தந்திருப்பா இப்படி
எல்லாம் பேச சொல்லி. அதை அப்படியே
வாசிச்சு காட்டிட்டு அதில என்ன இருக்குது
என்பது விளங்காம பேசிட்டு நல்ல பிள்ளை
மாதிரி வலை பதிவிலை போட்டா உண்மை
ஆகிடுமா? அந்த எழுதி தந்தவா நல்லா இருக்கணும்.
என் வலை பக்கமும் வாங்க.
Post a Comment