சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

06 March 2015

கணித புலிக்குட்டி..!!


" அப்பா கோகுல் Cheating பண்றான்பா..!! "

" இல்லப்பா.. அண்ணன் தான் Cheating
பண்றான்...!! "

நான் பெத்த கண்மணிகள் ரெண்டும்
கண்ணு மண்ணு தெரியாம சண்டை
போட்டுட்டு இருந்ததுக...

( ஆஹா.. பஞ்சாயத்து தலைவருக்கு
மறுபடியும் வேலையா...?!! )

" டேய்.. டேய்... நிறுத்துங்கடா.. என்னடா
உங்க பிரச்னை..?! "

சூர்யா ஆரம்பிச்சான்...

" அப்பா.. மேத்ஸ் எக்ஸாம்ல ஜாஸ்தி மார்க்
எடுக்கறவங்களுக்கு தோத்தவங்க உண்டியல்
இருந்து பணம் எடுத்து Dairy Milk வாங்கி
தரணும்னு " போட்டி வெச்சோம்லப்பா....

( ஹி., ஹி., ஹி.. கணித புலிக்குட்டிகள்..!! )

" ஆமா..!! அதுக்கென்ன..? "

" இப்ப கோகுல் பணம் தர மாட்டேன்னு
சொல்றான்..! "

" எங்கே மார்க் குடுங்க பார்க்கலாம்.!! "

பேப்பர் எடுத்துட்டு வந்தாங்க...

சூர்யா 50-க்கு 40 மார்க்..
கோகுல் 20-க்கு 10 மார்க்..

" டேய் கோகுல்... அண்ணன் தான் வின்னர்..
Dairy Milk வாங்கி குடுத்துடு...!! "

" இதை நான் ஒத்துக்க மாட்டேன்.. "

" ஏன்டா..? நீதானே கம்மி மார்க்கு.? "

" ஹே அதெப்படி... அண்ணனும் 10 மார்க் கம்மி..,
நானும் 10 மார்க் கம்மி.. அப்ப ஈக்குவல் தானே..?!! "

( அட ஆமா.. இவன் சொல்றது கரெக்ட் தானே..?!
அப்புறம் ஏன் அவன் Cheating-னு சொல்றான்..?!!

எங்கடா என் கால்குலேட்டரு..!?! )
.
.