சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

02 March 2010

" குச்சின் டெண்டுல்கர் " - ஒரு அறிமுகம்

















எங்க Friend ஒருத்தன் செல்ல பேரு
" குச்சின் டெண்டுல்கர் "

அன்னிக்கு வேற காலேஜ் கூட
ஒரு Match..

எதிர் டீம் கேப்டன் கிட்ட
நம்ம " குச்சினை " பத்தி
நாலு வார்த்தை இப்படி
Intro குடுத்தோம்..,

1. எங்க டீமோட முதுகெலும்பே
இவன் தான்.

2. இவன் இல்லாம நாங்க எந்த Match-ம்
விளையாட மாட்டோம்.

3. ஆள பாத்து சாதாரணமா எடை
போடாதீங்க. இவனை அவுட்டே
பண்ண முடியாது..

4. இவனை நாங்க செல்லமா
" குச்சின் டெண்டுல்கர்"-ன்னு கூப்பிடுவோம்..

எதிர் டீம் கேப்டன் முகத்துல
அப்ப லேசா கலவரம் தெரிஞ்சது...

ஆனா.., எங்க Bad Luck..
அன்னிக்கு நாங்க மேட்ச்ல
தோத்து போயிட்டோம்..!!

" குச்சின் இருந்துமா தோத்து
போயிட்டீங்கன்னு..? " நீங்க மனசுக்குள்ள
நினைக்கிறது எனக்கு கேக்குது..

என்ன பண்றது... ? அன்னிக்கு Match-ல
குச்சினுக்கு சான்ஸ் குடுக்க முடியல..
( அம்பயரிங் பண்ண, வேற ஆள்
வந்துட்டாங்க...... )

ஹி., ஹி., ஹி...!  நாங்க எப்ப
கிரிக்கெட் விளையாடினாலும்
குச்சின் தான் எங்க  டீம் அம்பயர்..!

டிஸ்கி :
அவன் பார்க்க ஒல்லியா இருப்பான்..
அதனால " குச்சின் டெண்டுல்கர்ன்னு "
கூப்பிடுவோம்...அவ்வளவு தான்.

.
.

9 Comments:

வால்பையன் said...

அந்த குச்சின் நீங்க தானே!

ரசிகன் said...

ம்ம்ம்.. உங்க காலேஜ் டீம்ல அம்பயர் வேற உண்டா? உங்க resume குடுங்க. Dhoni ku forward பண்ணலாம். நாங்கல்லாம் ரொம்ப நல்லவங்க தான்.என்ன சொன்னாலும் தாங்குவோம்தான். அதுக்காக என்ன வேணா சொல்றதா?

வெங்கட் said...

வால்பையன்..,
அந்த குச்சின் நான் இல்லை..

வெங்கட் said...

ரசிகன்..,
நம்ம கொள்கையே.
சொல்லுறதெல்லாம் உண்மையா இருக்கட்டும்.! - அதுக்காக
எல்லா உண்மையையும் சொல்லிடாதீங்க..!

live ipl score said...

ஒ அப்ப உங்க teamல மொத்தம் 12 பேர் விளையாடுவீங்க இல்லையா ?

வெங்கட் said...

Live IPL Score.,
அஹா.. கண்டுபிடிச்சிட்டீங்களே..!

cheena (சீனா) said...

ம்ம்ம்ம் அம்பயர்னா என்ன = தெரிலயே -

வெங்கட் said...

சீனா சார்..,
அம்பயர்னா = நடுவர்
நம்ம ஆளு நடுவரா நின்னா
நமக்கு சாதகமா செயல்படுவாருங்க..

நாடோடித்தோழன் said...

நம்மை போன்றவர்கள் கிரிக்கெட் விளையாடினால்
குச்சின் போன்ற நடுவர் நிச்சயம் அவசியம்..
உங்க டீமோட நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு..