04 March 2010
எங்ககிட்டயே English-ல பீட்டரா..?
[ *** பீட்டர் விடறது = English-ல
பேசறதால தன்னை
அறிவாளின்னு நம்பறது.. ]
உங்ககிட்ட யாரவது
English-ல பீட்டர் விட்டா
நீங்க என்ன பண்ணுவீங்க..?
நாங்களா இருந்தா
" அர்னால்டு ஸ்வார்சனேகர் "
இதுக்கு என்ன Spelling-ன்னு..?
கேட்போம்.
English-ல பேசறவனெல்லாம்
அறிவாளின்னா..
London-ல பிச்சை எடுக்கிறவங்கூட
அறிவாளி தான்..
English ஒரு மொழி தானே
தவிர.,
அது அறிவு அல்ல..!
காந்திஜி., நேருஜி., நேதாஜி
இவங்கள்லாம் English-ல
பேசுனாங்க.., - அது
English-காரனுக்கு புரியணுமேன்னு..,
அதுல ஒரு Logic இருந்தது..
இப்ப..,
நமக்குள்ளயே English-ல
பேசிக்கிறோமே இதுல
எதாவது Logic இருக்கா..?
யோசிங்க..,
பின் குறிப்பு :
" ARNOLD SCHWARZENEGGER "
இது தான் அவர்
பெயரோட Spelling.
ரொம்ப சிம்பிளா இருக்கே..!!!??
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
20 Comments:
ARNOLD SCHWARZENEGGER "
இது தான் அவர்
பெயரோட Spelling.
ok ippa ithuku enna neega arivaalinu nampanuma
ok nampiten
வருக காயத்ரி..,
விடிய விடிய
" திருவிளையாடல் " படம் பார்த்துட்டு..,
விடிஞ்சி
" பார்வதிக்கு., பரமசிவன்
Cousin Brother-ஆன்னு
கேட்கிற கதையால்ல இருக்கு இது..
Hi Venkat:
I came across your blog while searching for my name on internet. Though I couldn't understand the blog's language, I was happy to see my name in it! Thanks for this. If possible, could you reply me with the English translation of this post? (Juz curious)
I noticed one more thing in your comments section: You cannot use the phrase "Cousin Brother".
"பரமசிவன் Cousin Brother-ஆன்னு கேட்கிற கதையா"..
The right usage is only "Cousin". Please visit http://www.perfectyourenglish.com/grammar/nouns-common-errors.htm
Wish you all luck!
Dear Arnold,
Thanks for Your correction. I won't repeat the same mistake in future. :-)
இன்றய சூல்நிலையில் ஆங்கிலம் கலக்காமல் பேசுவது என்பது சொற்ப்பமே..நிறைய வார்த்தைகள்..அல்லது வாக்கியங்கள் சேர்த்துதான் பேசுகிறோம்..இது தவிர்க்கமுடியாதது...படித்தவர்கல் மத்தியில் பேசும்போதுதானே பேசுகிறோம்..படியாதவர்களிடம் இல்லை அல்லவா..fluent...ஆக பேசுபவர்கள்...பேசட்டுமே...அது அவர்களின் வசதிக்கு..எப்படியோ ஆங்கிலம் இல்லாமல் நம்மால் employment opportunity...யை பெறமுடியுமா......பீத்தலுக்காக பேசுவர்களை வேண்டுமென்றால் கூறலாம்..மத்தப்படி இதில் என்ன தப்பு...
generally, cousin... என்பதை நாம் பிறறுக்கு உறவை தெளிவு படுத்தவே சcousin brother...என்று கூறுகிறோம்.. அப்படி usage.....இல்லை என்றாலும்...ஒரு தெளிவுக்குத்தான்..இல்லை என்றால் அணர்த்தமாகிவிடும்..அண்ணன் தம்பி உறவை மாமன் மச்சானாக புரிய இடமுண்டு அல்லவா..
பெயரில்லா..,
நான் ஆங்கிலம் பேசுவதை
எதிர்ப்பவனல்ல...
ஆங்கிலம் பேசுவதால்.,
தன்னை அறிவாளி என்று
நினைத்துக்கொள்வதை தான்
நான் பேசியுள்ளேன்..
( அதை தான் " பீட்டர் " என்று
கூறியுள்ளேன். )
இந்த பதிவே பீட்டர் விடுவதை
பற்றி தானே..!
Venkat!
The false prestige of speaking in English is pervasive only among the people where English is poorly taught. I mean, student struggle hard to attain proficiency in spoken and written varieties of English. English, in India, helps one stand in good stead in job prospects. This has made it a language desparately to be sought after.
So,young people desiring to speak English and, after getting it, trying to flaunt it, is quite understandable and an unavoidable human foible.
At the same time, where English is a ready and easy means of communication in all fora, there wont be such eagerness in flaunting one's ability. Just like you, a Tamilian, speaking Tamil with fellow Tamils, never with the intention of flaunting your ability to communicate in your mother tongue.
Take me as an example. I have been writing and speaking English for many decades. I had my schooling through the medium of Tamil. English was my bugbear for a long, long time, even in college. To speak and write in it was my long labour always with failure. Then, I began to get the language inch by inch, and friends commented favoruably, I became proud of it and somewhat tried to flaunt my skills. I used to talk English with artistry just to attract my friends of both sexes, - and you guessed it right! - the opposite sex!
Was I to be held guilty of misdemeanour for that? I think not.
Decades passed. Although I cant now claim to have attained near proficiency, yet I can say, English does not bother me at all; nor do I ever feel proud of speaking or writing in it. IT IS JUST A HANDY TOOL OF COMMUNICATION TO ME!!
Time changes our attitudes, I think, Venkat.
Dear Peyarillaa..,
I understand your feelings and accept your valuable points..
English-ல பேசறவனெல்லாம்
அறிவாளின்னா..
London-ல பிச்சை எடுக்கிறவங்கூட
அறிவாளி தான்..
அருமையாக கூறி உள்ளீர்கள்.. இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா.. அது ஒரு மொழி...நம் தமிழ் மக்கள் மும்பையில் வசிப்பவர்கள் இந்தி பேசவில்லையா...அனால் அறிவுக்கும் ஆங்கில மொழிக்கும் சம்பந்தமிருப்பதாகப்படவில்லை..vij
நன்றி விஜய்..,
மிக அருமையாக
கூறியுள்ளீர்கள்.
bava nee Arnold Schwarzenegger 'ku spelling oru 10 varusathukku munnadiye en kitta kettu irukinga nan apa mulichitu irundhappo... nane solrennu solli "Arnold schwabcdef---wxyz" nu sonnadhu dhan gnabagam varudhu...
Krish..,
Great பாவா..,
இன்னுமா அதை நியாபகம்
வெச்சு இருக்கே..
இப்பகூட அவர் பெயருக்கு
Spelling Net-ல பார்த்து தான்
எழுதினேன்..
உங்கிட்ட சொன்னது தான்
Original பீஸ்...
//இப்ப..,
நமக்குள்ளயே English-ல
பேசிக்கிறோமே இதுல
எதாவது Logic இருக்கா..?//
கன்னா பின்னான்னு வழிமொழிகிறேன்
Sun Glass வாங்கினாலே 4 நாள் billலோட திரியற ஆளுங்க... கஷ்டபட்டு கத்துகிட்ட english i கடை விரிக்காமயா இருப்பாங்க..
சரி Mr.Krish.. abcd... xyz nu சொன்னாரா இல்ல .. all 26 letters m சொன்னாரா
நசரேயன்..
கன்னா பின்னான்னு வழிமொழிஞ்சாலும்..
உங்ககிட்ட ஒரு நேர்மை இருக்கு.,
அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..!!
ரசிகன்..,
இனிமே எந்த பொருள்
வாங்கினாலும் முதல்ல
Bill-ஐ கிழிச்சிடுங்க..,
பந்தா காட்டுறதுன்னு
முடிவு பண்ணிட்டா..,
அப்புறம் பில்லு இருக்கப்படாது..
500 ரூபா பொருளை
1000 ரூபான்னு சொல்லி தான்
பந்தா காட்டணும்..
விட்டா நீங்க பந்தாவோட
மதிப்பையே காலி
பண்ணிடுவீங்க போல..
hello Mr.rasigan..
En machan venkat'ku Arnold pear mulusa sollatheriyalnalum abcd 26 letter'um correct'a sollitaru
Oh... ! தப்பான Example சொல்லிட்டேனா.. சரி i'll put it this way... " Areoplane la போயிட்டு வந்தா 4 நாள் security tag remove பண்ணாம திரியற ஆளுங்க" கஷ்டபட்டு கத்துகிட்ட english i கடை விரிக்காமயா இருப்பாங்க.. ok va boss??
ம்ம்ம் என்ன சொல்றது - மொக்கலேந்து சீரியஸூக்கு பிரமோட் ஆகி இருக்கு - சரி
நோ கமெண்ட்ஸ் - பீட்டர் உதார் வுட்றது தபபுதான் ஆனா ஆங்கிலம் பேசாம பருப்பு வேகாதுப்பு
சீனா சார்..,
நீங்க சொல்லுறது சரிதான் சார்.
இது College Days-ல அடிச்ச
லூட்டி..
Post a Comment