சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

24 April 2010

Wife கேட்ட கேள்வி..!!


















நேத்து Night மணி 7.50.

Tv-ல ஒரு Quiz Programme
நேரடி ஒளிபரப்பு
ஓடிட்டு இருந்தது..

நான் 20 நிமிஷமா
அந்த Programme-ல கலந்துக்க
போன் Try பண்ணிட்டு
இருந்தேன்..
But லைன் கிடைக்கல..

அப்போ என் மனைவி
சாப்பிட கூப்பிட்டாங்க..

நான் : கொஞ்சம் Wait பண்ணு..
போன் Try பண்ணிட்டு
இருக்கேன்ல..,

மனைவி : சாப்பிட்டுட்டு போயி
அப்புறமா தான் Try
பண்ணுங்களேன்..

நான் : அதுக்குள்ள Programme
முடிஞ்சிடுமே..!!

மனைவி : எப்படியும் லைன்
கிடைக்க போறதில்ல., அதை
8 மணிக்கு பண்ணினா என்ன..?
8.30 மணிக்கு பண்ணினா என்ன..?



ஹாய் வெங்கட் :
-------------------

(சுதா, Malaysia )
" வாழ்க்கை '-ன்னா என்ன..?

அது சிவாஜி - அம்பிகா
நடிச்ச படம்..!


இன்று ஒரு தகவல் :
---------------------

உங்க Lover உங்களுக்கு
அனுப்பற Romantic Msg
எல்லாம் பார்த்து
சந்தோஷப்படறீங்களா..?

STOP..!!

அவங்களுக்கு அதை யார்
அனுப்பி இருப்பாங்கன்னு
யோசிச்சி பார்த்தீங்களா..?

( நாராயணா..! நாராயணா..! )
.
.

18 Comments:

நானானி said...

//8 மணிக்கு பண்ணினா என்ன..?
8.30 மணிக்கு பண்ணினா என்ன..?//

என்ன ஒரு லகுவான லாவகமான பதில். அவங்க புரிஞ்சு வச்சிருப்பது உங்களையா...டிவி ப்ரோக்ராமையா?

Aba said...

//அவங்களுக்கு அதை யார் அனுப்பி இருப்பாங்கன்னு யோசிச்சி பார்த்தீங்களா..?//

ஏனப்பா குடும்பத்துல கொலைவெறிய தூண்டி விடறே?

//அவங்களுக்கு அதை யார் அனுப்பி இருப்பாங்கன்னு யோசிச்சி பார்த்தீங்களா..?//

அதவிட முக்கியம் அந்த மெசஜ நாம யாருக்கு பார்வர்ட் பண்ணப் போறோம் அப்பிடிங்கிறது தான்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அது சரி Quiz Program க்கு நீங்க ஏன் போன் பண்ணினீங்க? லாஜிக் இடிக்குதே? நெல்லுகுத்துற இடத்துல ஈ க்கு என்ன வேலை?

உமர் | Umar said...

எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் என்று 8 மணிக்கு கேட்பார்களே, அந்த நிகழ்ச்சியா?

வெங்கட் said...

நானானி.,
// அவங்க புரிஞ்சு வச்சிருப்பது
உங்களையா.? டிவி ப்ரோக்ராமையா..? //

என்னைதான்..

அப்படியே லைன் கிடைச்சாலும்
ரெண்டு கேள்விக்கு மேல
பதில் சொல்ல மாட்டேன்னும்
அவங்களுக்கு தெரியும்..

வெங்கட் said...

கரிகாலன்..

// அதவிட முக்கியம் அந்த மெசஜ
நாம யாருக்கு பார்வர்ட் பண்ணப்
போறோம் அப்பிடிங்கிறது தான்! //

இது சூப்பரு..
இந்த மாதிரி உங்ககிட்ட
நிறைய எதிர்பார்க்கிறேன்..!

அனு said...

நீங்க ரொம்ப நல்லவருங்க..

எவ்வளவு குடுத்தாலும் வாங்கிக்கறீங்க.. அதிலும், வலிக்கவே வலிக்காத மாதிரி அதைப் பத்தி போஸ்ட்-டும் போடுறீங்க பாருங்க.. அங்க நிக்குறீங்க நீங்க...

உண்மைய சொல்லுங்க நீங்க Quiz Programகா போன் பண்ணுனீங்க.. பெப்சி உமாவுக்கு தானே போன் செஞ்சீங்க.. அவங்க கேக்குற கேள்விக்கே பிட் அடிக்குற ஆளுங்க நம்ம.. நம்ம இந்த மாதிரி போஸ்ட் எல்லாம் போடலாமா?

சரி உங்களுக்கு அங்க லைன் கிடைக்காட்டி என்ன.. நான் கேக்குறேன் கேள்வி, பதில் சொல்லுங்க..
1. அக்டோபர் புரட்சி எந்த மாதம் கொண்டாடப் படுது?
2. Panama Hats எந்த நாட்டில் தயாரிக்கப் படுது?

ஹிஹி.. கரெக்ட்டா சொன்னா வழக்கம் போல ஒரு ஸ்வீட் உங்க inboxக்கு அனுப்பப்படும் (அந்த ஸ்வீட் என்னன்னு நான் சொல்லனும்னு அவசியமில்லைனு நினைக்கிறேன்)

வெங்கட் said...

@ ரமேஷ்.,

என்னை பார்த்து இப்படி
சொல்லிட்டீங்க..!

இந்தியாவுல
ரெண்டே ரெண்டு அறிவாளி..

ஒன்னு G.D.நாயுடு..,
இன்னொன்னு யார்னு நான்
சொல்ல மாட்டேன்.,
ஏன்னா எனக்கு விளம்பரம்
பிடிக்காது...

அனு said...

//" வாழ்க்கை '-ன்னா என்ன..?

அது சிவாஜி - அம்பிகா
நடிச்ச படம்..!
//
உங்க காலத்துல வந்த படத்தை பத்தியே நினைச்சுட்டு இருக்காதீங்க.. வாழ்க்கையில கொஞ்சம் updatedஆ இருங்கப்பு.. 'வாழ்க்கை'ன்றது ஒரு சீரியல் பேரு.. உங்க முதியோர் கல்வி க்ளாஸ்-ல இதெல்லாம் discuss பன்றதில்லையா?? (நீங்க அங்க ஆசிரியர்னு சொல்லி சமாளிக்குறது எல்லாம் old technique)

//அவங்களுக்கு அதை யார்
அனுப்பி இருப்பாங்கன்னு
யோசிச்சி பார்த்தீங்களா..?

( நாராயணா..! நாராயணா..! )//

கலிகாலம் முத்திப் போச்சு.. வேறென்ன சொல்ல..

வெங்கட் said...

@ கும்மி,
// எட்டுக்கால் பூச்சிக்கு
எத்தனை கால் கேட்பார்களே //

இவ்ளோ கஷ்டமான
கேள்வியெல்லாம் கேட்பாங்களா..?
ஆமா எட்டுக்கால் பூச்சிக்கு
எத்தனை கால்..?
ஏழா...? ஒன்பதா..?

மாலா said...

பதிவு :
நீங்க இப்படி இருக்க யார்
காரணம்னு இப்ப எனக்கு
தெரிஞ்சி போச்சி..!

ஹாய் வெங்கட் :
நல்லவேளை அது
பானுபிரியா - வேணு அரவிந்த்
நடிச்ச நாடகம்னு சொல்லாம
போனீங்க..

இன்று ஒரு தகவல் :
நீங்களும் உங்க Wife-க்கு
நிறைய Romantic Msg
அனுப்புவீங்களாமே..!!!

( நாராயணா..! நாராயணா..! )

Chitra said...

வாழ்க்கை - இவ்வளவு எளிமையாக யாரும் இது வரை, இப்படி விளக்கி சொன்னதில்லை. ஆசிரம பணிகள் எப்படி போய்க்கிட்டு இருக்கு?
ஹா,ஹா,ஹா,ஹா.....

Anonymous said...

//8 மணிக்கு பண்ணினா என்ன..?
8.30 மணிக்கு பண்ணினா என்ன..?//

ha ha.


//அவங்களுக்கு அதை யார் அனுப்பி இருப்பாங்கன்னு யோசிச்சி பார்த்தீங்களா..?//

You too??!!??

வெங்கட் said...

@ அனு

// நீங்க ரொம்ப நல்லவருங்க.. //

உங்க Comment-ல இந்த ஒரு
Line எனக்கு ரொம்ப பிடிச்சி
இருக்கு..

// அவங்க கேக்குற கேள்விக்கே
பிட் அடிக்குற ஆளுங்க நம்ம..
நம்ம இந்த மாதிரி போஸ்ட்
எல்லாம் போடலாமா.? //

// உங்க முதியோர் கல்வி க்ளாஸ்-ல
இதெல்லாம் discuss பன்றதில்லையா?? //

நல்லா கவனிங்க மக்களே..!
பிட் அடிக்கும் போது " நம்ம "
கிளாஸ் வரும்போது " உங்க "

ஏன்னா இவங்க என் பக்கத்து சீட்..,
அங்கே என்னை பார்த்து பிட்
அடிச்சதால இவங்களுக்கு
முதியோர் கல்வியில இருந்து
T.C குடுத்து துரத்திட்டாங்க..

வெங்கட் said...

@ மாலா

// நீங்க இப்படி இருக்க யார்
காரணம்னு இப்ப எனக்கு
தெரிஞ்சி போச்சி..! //

என் மனைவியா..?
அவங்க அப்படி இருக்க யார்
காரணம்னு யோசிச்சி பார்த்தீங்களா..?

// நீங்களும் உங்க Wife-க்கு
நிறைய Romantic Msg
அனுப்புவீங்களாமே..!!! //

கொஞ்சம் விட்டா
எல்லா " ஆப்பையும் "
என் Account-லயே Deposit
பண்ணிடுவீங்க போல..

வெங்கட் said...

@ சித்ரா..,

// ஆசிரம பணிகள் எப்படி
போய்க்கிட்டு இருக்கு..? //

பக்தையே..!
எங்க ரெண்டு நாளா ஆசிரமம்
பக்கமே உங்களை காணோம்..? :-)

Chitra said...

Usually, Saturday and Sunday are off-duty :-)

cheena (சீனா) said...

அன்பின் வெங்கட்

நானானி வந்து மொத ஆளா கமெண்டிருக்காங்க - பாராட்டி இருக்காங்க - நீ பெரிய ஆளாயிட்டேயா

அனு சித்ரா வழக்கம் போல கலக்கறாங்க

நச்சுனு ப்தில் 8 - 8:30 ---- ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள் வெங்கட்
நட்புடன் சீனா