சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!

10 April 2010

Just-ல மிஸ்ஸு..!!
















உலக கோப்பை கிரிக்கெட்
India-ல நடந்துகிட்டு
இருந்த சமயம்..,

எங்க காலேஜ் Ground-ல
எங்க ஜுனியர்ஸ் கிரிக்கெட்
ஆடிட்டு இருந்தாங்க..!

நானும்., என் Friend-ம்
ஓரமா உக்கார்ந்திட்டு
வேடிக்கை பார்த்திட்டு
இருந்தோம்..!

ஏன் தெரியுமா..?!!

Seniors-கூட விளையாடினா..,
பந்து பொறுக்கி போட சொல்லுவாங்க..!

Juniors-கூட விளையாடினா..,
பந்தாலயே போடுவாங்க..!
அதான்...!

அப்ப.., நான் என் Friend-கிட்ட..,

நான் : சே.., இப்படி ஆகும்னு
நான் எதிர்பார்க்கல...,
Just-ல மிஸ்ஸு..!

Friend : ஏன் என்ன ஆச்சு..?

நான் : அந்த விக்கெட் கீப்பருக்கு
பின்னாடி 4 அடி தள்ளி ஒரு
சின்ன குழி தெரியுதா..?

Friend : ஆமா.., தெரியுது..!

நான் : அந்த குழியை
சரி பண்ணுங்கன்னு.,
நம்ம Principal-கிட்ட
படிச்சி., படிச்சி சொன்னேன்..
மனுஷன் கேக்கலை..!

Friend : அதனால என்ன இப்போ..?

நான் : அதனால என்னவா..?
அந்த குழியாலதான்டா
இங்கே நடக்க இருந்த
இந்தியா - பாகிஸ்தான் Match-ஐ
கல்கத்தாவுக்கு மாத்திட்டாங்க..!!

Friend : ??!!!
.
.

17 Comments:

mala said...

உங்க பதிவுகள் எல்லாத்தையும் gap விட மனசில்லாம, ஒரே நாளில் படிச்சி முடிச்சிட்டேன். எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது..

ரசிகன் said...

இன்னைக்கு பதிவு ஏன் இப்ப்படி காய வைக்குது.. ஆங்.. கண்டுபிடிச்சிட்டேன்.. இந்த பதிவ எழுதும்போது நீங்க போட்டிருந்த சட்டை சரி இல்லீங்க்ணா...

( பி.கு ‍இதை மற்ற பதிவு எல்லாம் நல்லாருக்குன்னு சொன்னதா தப்பு தப்பா புரிஞ்க்க கூடாது.. )

(சின்ன Doubt :உட்கார்ந்த்திருக்கற இடத்த விட்டு நகர்ந்தா Tendulkar out ஆகிடுவார்னு நம்புற groupஆ நீங்க.. ? )

அனாமிகா said...

இன்னொரு incident-டும் ஞாபகம் வந்துருச்சு...

எங்க வீட்டு பக்கத்து ground-ல எப்பவும் cricket தான்.. அப்போ நான் மூணாவது படிச்சுட்டு இருந்தேன்.. (இப்போ வரைக்கும் அவ்ளோ தான்)..

ஆசையா போய் என் ப்ரெண்டு கிட்ட கேட்டேன்... "ஏ குமார்.. என்னையும் உங்க team-ல சேர்த்துக்கோடா"
(லூசு)குமார்: உனக்கு கிரிக்கெட் ball எப்படி இருக்கும்னாவது தெரியுமா? நீயெல்லாம் விளையாட வந்துட்டே.. கெளம்பு.. கெளம்பு... காத்து வரட்டும்..

என் feelings-a பாத்து இரக்கப்பட்டு opposite team அண்ணா அவர் team-ல சேர்த்துக்கிட்டார்..

(லூசு)குமார் ball-ஐ போட நான் அடிக்க (ஏதோ luck-ல) பால் பறந்து போய் பக்கத்தில் இருந்த குப்பை கூளங்களுடன் ஐக்கியமாயிருச்சு...

(லூசு)குமார்: இப்போ எப்படி கண்டுபிடிக்குறது??
நான்: உனக்குத் தானே கிரிக்கெட் ball எப்படி இருக்கும்னு தெரியும்.. போய் தேடு...

பின்குறிப்பு:
அந்த ball (லூசு)குமாரோடது... சோ, குமார் reaction என்னன்னு சொல்லவே வேணாம் :(

Ahamed irshad said...

Ooops...........

அனு என்கிற அனாமிகா said...

ஆமாங்க.. பேர மாத்தியாச்சு...for details https://www.blogger.com/comment.g?blogID=154558242198752046&postID=3289411442268675555

ஓகே.. புதுப் பேருல ஒரு classic cricket puzzle.. பழசாவும் இருக்கலாம்...எனக்கு கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரிய வந்தது...

match-ல last 3 balls இருக்கு, ரெண்டு பேட்ஸ்மேனும் 94ல இருக்காங்க.. ரெண்டு பேரும் அவுட் ஆகாம century பொடுறாங்க (and obviously, wins the match).. எப்படி??

ஜெகன் said...

@மாலா:
என்னது நீங்க ஏற்கனவே EAT THAT FROG! புக் படிச்சிட்டிங்களா?

வெங்கட் said...

@ மாலா..,
ரொம்ப நன்றிங்க..,
கேட்கவே ஆனந்தமா இருக்கு..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அனாமிகா //
வெங்கட்டோட சேர்ந்து அவர மாதிரியே ஆகிட்டீங்க.

Unknown said...

என்ன விசாரிச்ச/விசாரிக்க முயற்சித்த/விசாரிக்க நினைத்த/
எல்லொருக்கும் வணக்கம் / நன்றிங்க...

நம்ம குடும்பம் ஊருக்கு வந்ததால கொஞ்சம் "BUSY"

இனிமே நாம கலாய்க்கலாம்...

என்னோட "Comments" Last Two Blogsல போயி பாருங்க...

Unknown said...

மாலா...
'"Welcome Aboard"
இனிமே நீங்க சிரிச்சிகிட்டே இருப்பீங்க...

ரசிகன்...

//சின்ன Doubt :உட்கார்ந்த்திருக்கற
இடத்த விட்டு நகர்ந்தா Tendulkar
out ஆகிடுவார்னு நம்புற groupஆ நீங்க.. ? //

இல்லீங்க... Tendulkar நின்ன இடத்த விட்டு நகர்ந்தா தான்
out ஆவார்...(Stumping)...
(நீங்க மட்டும் தான் மொக்க போடுவீங்களோ)...

வெங்கட்...
மறுபடியும் 2 பேரா... (அனாமிகா, அனு என்கிற அனாமிகா)
என்னப்பா இது...நான் யாருக்கு பதில் சொல்ல...
யாருக்கு சொன்னாலும் நம்ம AD (Anamika Dwarakan)
நான் Route பொடுறேன்னு சொல்லுவாங்க...
என்ன பண்றது...(pls advice)

"அவுங்க"
//match-ல last 3 balls இருக்கு, ரெண்டு பேட்ஸ்மேனும்
94ல இருக்காங்க ரெண்டு பேரும் அவுட் ஆகாம
century பொடுறாங்க (and obviously, wins the match).. எப்படி??//

Wrong Question, Winning score to be mentioned.

Last 3 Balls, 7 runs to win. ரெண்டு பேட்ஸ்மேனும்
94ல இருக்காங்க ரெண்டு பேரும் அவுட் ஆகாம
century பொடுறாங்க (and obviously, wins the match).. எப்படி??//

இதுக்கு Answer வெங்கட் சொல்லுவார்...
(ஏன்னா அவருதான் ப்ளாக் ஒனர்)

ஜெகன்...
அந்த EAT THAT FROG"புக்"கோட "Author"
வெங்கட்தான்ங்கறத நான் இங்க சொல்லிக்க
ஆசப்படறேன்...

ரமேஷ் தல...
வெங்கட்டோட சேர்ந்தா புத்தசாலிதான்
ஆவாங்க...
ஆனா இவிங்க பாவம்
கொடுத்துவச்சது அவ்வளவுதான்...

வெங்கட் said...

@ ஜனா..,
ரொம்ப நன்றிபா..!
எல்லாருக்கும் பதில்
சொன்னதுக்கு..!

வெங்கட் said...

@அனு.,
அந்த கேள்விக்கு விடை
இதுதான்.
அந்த Batsmen Venkat & Jana

1st Ball : ஜனா ஒரு Four அடிக்கிறார்.,

2nd Ball : மூணு ரன் ஓடுறோம்..,
அதுல ஒரு ரன் Short.,
So இப்போ Count-க்கு
ரெண்டு ரன் தான்..
ஆனா., இப்ப Batting வெங்கட்..

3rd Ball : இதை நான் சொல்லணுமா..?
கடைசி Ball-ல Hero என்ன
பண்ணுவாருன்னு தெரியாது..?
Six-தான்.., ( Ground-ஐ தாண்டி பந்து விழுவுது.. )

So Jana 100*
Venkat 100*

அனு என்கிற அனாமிகா said...

@ரமேஷ்

என் கூட சேர்ந்ததுக்கப்புறம் தான் வெங்கட் இப்படி ஆனார்.. சரித்திரத்தை மாத்திடாதீங்க...

@jana

ஹிஹி... கொஞ்சம் miss ஆகிடுச்சு... கேள்வி எப்படி இருந்தா என்னங்க.. பதில் கரெக்டாங்றது தானே முக்கியம்...

Brain Tracy-க்கு தமிழ் தெரியாதுன்றதுக்காக இப்படியா???

வெங்கட் said...

@ அனு.,
ஆமாம்பா..,
இவங்ககூட சேர்ந்ததுக்கப்புறம்
தான் நான் இப்படி ஆனேன்..
அதுக்கு முன்னாடி நல்லாத்தான்
இருந்தேன்..!

Anonymous said...

(இப்போ வரைக்கும் அவ்ளோ தான்)..

still not,completed 3rd

அனு என்கிற அனாமிகா said...

@பெயரில்லா

//still not,completed 3rd??//

ஆமாங்க... மூணாங் கிளாசுக்கு மேல நீ படிக்க ஒண்ணும் இல்லன்னு வீட்டுக்கு அனுப்பி விட்டுட்டாங்க...

வேலை வெட்டி இல்லாம இருக்கும் போது, blog-ல comment போட்டா காசு தருவாங்கன்னு கேள்விப்பட்டேன்.. அதான், இந்த வேலை பாத்துட்டு இருக்கேன்..

cheena (சீனா) said...

சரி சரி - அந்தக் குழிய மூடினாங்களா இல்லைய அ- எல்லா மேச்சும் மத்த ஊருக்கே போயிகீட்டு இருக்கு - ஜஸ்ட் மிஸ்ஸூ