03 April 2010
" அங்காடி தெரு " - என் பார்வையில்..!
ரெண்டு நாள் முன்னாடி
" அங்காடி தெரு " படம்
போயிருந்தேன்..
" வெயில் " படம் குடுத்த
வசந்தபாலனோட படம்..!
கண்ணுக்கு குளுமையான
ஒளிப்பதிவு..,
இதமான பின்னணி இசை..,
" அவள் அப்படி ஒன்றும்
அழகில்லை..! "
எத்தனை முறை கேட்டாலும்
அலுக்காத பாடல்..,
நெத்தியடி வசனங்கள்..,
ஜவுளிகடையில் வேலை
செய்யும் பெண்கள்
"சில அத்துமீறல்களை "
அனுமதித்தால் மட்டுமே
தொடர்ந்து வேலை செய்ய
முடியும்.. - இது போன்ற
" கொடுமையான யதார்த்தங்கள்..! "
அஞ்சலியின் நடிப்பு.,
பாண்டியின் நகைச்சுவை..
அஞ்சலி : மேக்கப் போடாமலே
அழகா இருக்காங்க.,
நல்லா நடிக்கறாங்க..,
Hindi-க்கு Try பண்ணலாம்..
நடிக்க தெரிஞ்ச நடிகைக்கு
இங்கே யார் சான்ஸ் குடுப்பா..?
பாண்டி : " கனா காணும் காலங்கள் "
சீரியல்ல இருந்தே நான்
உங்க Fan..,
நீங்க ஒரு ரவுண்டு
வருவீங்க.., வாழ்த்துக்கள்..!
இப்படி படத்தில் நிறைய
Plus இருந்தாலும்..,
ஏனோ படம் என் மனசுக்கு
ஒட்டலை..
என்னை பொறுத்த வரை
" அங்காடி தெரு "
வெறும்
" சாதாரண தெரு..! "
பின் குறிப்பு :
இன்னிக்கு காலைல
என் மனைவி : ஏங்க..,
ஆனந்த விகடன்ல
" அங்காடி தெருக்கு " 47 மார்க்
குடுத்திருக்காங்க..!!!
எனக்கே ஆச்சரியமா தான்
இருந்தது..,
அட விமர்சனம் நல்லா
இருக்கே.. ( படத்தை விட )
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
18 Comments:
பாஸ் இது யூத் க்களுக்கான படம். உங்களை மாதிரி வயசானவங்களுக்கு பிடிக்காது என்ன பண்றது...
ரமேஷ்..,
வயசை பத்தி Comment
அடிச்சது போதும்..!
கொஞ்சம் வெளியே வாங்க..
வேற எதாவது புதுசா
Try பண்ணுங்க..,
என் இனிய வெங்கட்
எல்லொரும் தலைல தூக்கி வச்சி கொண்டாடர
படத்தை பத்தி நீங்க இப்படிஒரு விமர்சனம்
சொல்லி இருக்க கூடாது...இருந்தாலும் சொல்லிட்டிங்க...
ஏன்னா உங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கற
நிறைய பேர் இருக்கோம்...
நான், அனாமிகா, நம்ம ரமேஷ், அனாமிகா துவாரகன்,
& ரசிகன் இன்னும் பல...
அதனால நீங்க எத சொன்னாலும்
ஒரு தடவைக்கு ரெண்டு தடவை
யோசிச்சி சொல்லுங்க...
இது நம்ம ரமேஷ்க்கு,
வணக்கம் தல...
நீங்க இல்லன்னா நம்ம கமெண்ட் Section
ரொம்ப Dullஅ இருக்கும்...கலக்குங்க...
இந்த படம் நம்மல மாதிரி வயசு பசங்களூக்குன்னு
சொல்றிங்க...
ஆனா அந்த மாதிரி Specialஅ எதுவும் இல்லியே தல...
நம்ம வெங்கட் சொன்னது சரிதான் வாத்தியாரே...
மனசோட ஏனோ ஒட்டல...
இத பத்தி நம்ம நண்பர்கள் என்ன சொல்லறாங்கன்னு பார்ப்பொம்...
ரெண்டு அனாமிகாs , பெயரில்லா, மணிவண்ண ராஜ், ரசிகன்..
வாங்க வந்து உங்க கருத்த போடுங்க...
ஜனா..,
பதிவோட தலைப்ப பார்த்தீங்கல்ல
" அங்காடி தெரு - என் பார்வையில் "
Just இது என் Opinion அவ்வளவு
தான்..
படம் பார்த்தவங்க அவங்க
கருத்தை தாராளமா
சொல்லலாம்..!
எனக்கும் சில எண்ணங்கள் உண்டு படத்தைப்பற்றி.
விரைவில் பதிவாக இடுகிறேன்.
உங்கள் பார்வை அருமை.
அக்பர்.,
ஆவலாய் இருக்கேன்..,
உங்க விமர்சனத்தை
படிக்க..!
வழக்கமா ஆ.வி படிச்சிட்டு பார்க்குற படங்களை, விகடன் பார்வைலயேதான் பார்க்கத் தோணும்.. இந்த தடவை உங்க விமர்சனமும் படிச்சிருக்கேன்.. பார்ப்போம் எது பொருந்துதுன்னு..
ஜனா உங்கள் அன்புக்கு மிக்க நன்றி பாஸ்
ரசிகன்.,
பார்த்திட்டு சொல்லுங்க..,
உங்க பார்வை எப்படி
இருக்குன்னு பார்க்கலாம்..!!
அடிச்சு பிடிச்சு autoல ஏறி கடைசி நிமிஷத்துல ticket வாங்கி ஒரு வழியா படம் பாத்தாச்சு..
என்ன கேட்டா, இது முழுக்க முழுக்க யூத்-களுக்கான படம்-னு தான் சொல்வேன்.. பெரியவங்களுக்கு பிடிக்குமான்னு doubt தான்...
Heroine-காகவே படம் பாக்கலாம்.. என்ன ஒரு அழகு.. நிறைய fans இருக்குறாங்களேன்னு நினைச்சேன்.. but, உண்மை தாங்க.. இவங்க கட்டாயம் bollywod-ல try பண்ணலாம்..
Hero கண்ல ஒரு innocence தெரியுது.. காதலை கண்களால் அற்புதமாய் வெளிப்படுத்துகிறார்.. காதலை heroine-னிடம் சொல்ல நினைத்து சொல்லாமல் விடும் போதெல்லாம் நமக்கே போய் heroine-யிடம் சொல்லிவிடலாமா என்று தோன்றுகிறது..
படம் விறுவிறுப்பாக சென்றாலும் கதை ஒன்றும் பெரிதாக சொல்லிக்கோள்ளும் படியாக இல்லை.. ரொம்ப சாதாரண ரகம் தான்.. பாடல்களும் பரவாயில்லை ரகம் தான்....இயக்குனர் எதையோ try பண்ணி ஏதோ பண்ணியிருக்கிறார்..
படத்தில் எனக்கு பிடித்த இன்னொன்று second hero மாதிரி படம் முழுக்க hero கூடவே வரும் Lancer தான்.. ரொம்ப cute...
பின்குறிப்பு:
ஹி ஹி... அங்காடித் தெரு-வ தூக்கிட்டதால "பையா" பாத்துட்டு வந்தோம் :)
@ஜனா
//ஏன்னா உங்க வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கற
நிறைய பேர் இருக்கோம்...
நான், அனாமிகா, நம்ம ரமேஷ், அனாமிகா துவாரகன்,
& ரசிகன் இன்னும் பல...//
April மாதம் முழுவதும் நீங்க Fools Day கொண்டாடுறீங்களா??
அனாமிகா..,
எப்படிங்க உங்களால மட்டும்
முடியுது...?
படம் முழுக்க வரும் Lancer-ஆ.,?
ஒரு வேளை Screen-ல ஓரமா
இருந்திருக்குமோ..?!!
நாம Center-ல உக்காந்ததால
தெரியலையோன்னு..,
ஒரு வினாடி நினைச்சேன்..
அட.., இது " பையா " பட
விமர்சனமா..!!
அனாமிகா கூறியது...
@ஜனா
April மாதம் முழுவதும் நீங்க Fools Day கொண்டாடுறீங்களா??
இல்லிங்க friend...
கொஞ்சம் புத்திசாலித்தனமா நம்ம வெங்கட்ட
"fool" பண்ணேன்...
நீங்க அத போட்டுகுடுத்துட்டீங்க..
பரவாயில்ல...
நீங்கதான் நாரதர் ஆச்சே...!
உங்க விமர்சனம் ரொம்ப அருமை...
"பையா" படம் கொஞ்சம் நீளமா இருக்குற மாதிரி ஒரு Feeling வருது...
"தமன்னா" உண்மையாவே ஜொலிக்கிற "தங்கம்னா" (Hi...Hi..Hi..)
ஜனா & அனாமிகா..,
பதிவுல
அங்காடி தெரு விமர்சனம்..!
Comment-ல
பையா பட விமர்சனம்..!
ஒரே கல்லுல
ரெண்டு மாங்கா..!
இல்ல.., இல்ல..
ஒரே Ticket--ல
ரெண்டு படம்..!
வரேன்ப்பா - பாத்துட்டு வரேன்ப்பா
இந்த படம் குறித்த என் கருத்துக்கள் அங்காடி தெரு பணியாளர்களும், அசிஸ்டெண்ட் டைரக்டர்களும், ஜூனியர் லாயர்களும் !!
உங்களை போல அந்த படம் என்னையும் பெரிதாக பாதிக்கவில்லை..
எனக்கு அங்காடித்தெரு சில எதிர்மறை கேள்விகளை எழுப்பியுள்ளது..
எனது பதிவிற்கு உங்களை அழைக்கின்றேன்..
http://karuthuchidharal.blogspot.com/
உங்கள் கருத்தை பதிந்ததற்கும் அக்பரை அறிமுகம் செய்ததற்கும் நன்றி..
Post a Comment