01 April 2010
அலைபாயுதே - ( Behind the Scene )
எனக்கு நிறைய Chat Friends.,
அதுல முக்கியமானவங்க
ரேணுகா From Denmark..
ஒரு தடவை..,
ரேணு : நீங்க எப்படி இருப்பீங்க..?
உங்க Photo ஒன்னு அனுப்புங்க..
நான் : " அலைபாயுதே"-ல மாதவன்
பார்த்திருக்கீங்கல்ல... அவரு
என் சாயல்ல தான் இருப்பாரு..
ரேணு : அப்ப சீக்கிரம் Photo Mail பண்ணுங்க..
Photo பார்த்திட்டு அவங்க அடிச்ச
Comment...
" வெங்கட்.., நீங்க மாதவனை விட அழகா
இருக்கீங்க.., பேசாம அலைபாயுதே-ல
நீங்களே Hero-வா நடிச்சி இருக்கலாம்..! "
இப்பதான் நான் ரொம்ப நாள் கட்டி காத்த
Secret-ஐ சொல்ல போறேன்..
Actually மணிரத்னம் சார் முதல்ல
என்னை தான் அலைபாயுதேல Hero-வா
நடிக்க கூப்பிட்டாரு..,
ஆனா நான் தான் " No " சொல்லிட்டேன்..
அதுக்கு ரெண்டு Reasons..
1. அப்ப எனக்கு MCA Final Exams
இருந்தது...,
2. ஷாலினிக்கு என்னை விட
ரெண்டு வயசு அதிகம்..
பின் குறிப்பு :
என்ன Tension ஆயிட்டீங்களா..?
இன்னிக்கு என்ன தேதி..?!!
.
. Tweet
Subscribe to:
Post Comments (Atom)
31 Comments:
ஹீ ஹீ ஹீ
1999: மணிரத்னம்: வெங்கட் அலைபாயுதேன்னு ஒரு படம் எடுக்க போறேன் நீங்கதான் நடிக்கணும்
வெங்கட்: வேண்டாம்
மணி: ஏன் வெங்கட்?
வெங்கட்: ஏன்னா எனக்கு நடிக்க தெரியாது..(சிம்பு ஜோடி நம்பர் ஓனே ஸ்டைல் ல படிங்க)
மணி: உன்னை என்ன ஹீரோ வா நடிக்க வா கூப்டேன். ஷாலினிக்கு அப்பாவா நடிக்க தான் கூப்டேன். ரெண்டு சீன்தான் சீ வா......
என்னதான் பின்னூட்ட கூட்டணி காப்பாத்தும்னாலும், இது Over Confidenceங்க..
இதே rate la போனா அவ்ளோதான். பாத்து.. அப்பப்பவாவது நல்ல பதிவா போடுங்க..
(என்ன Tension ஆயிட்டீங்களா..?இன்னிக்கு என்ன தேதி..?!!.. நல்லா இருக்குனு சொல்லி, நான் fool பண்ணுறேன்னு நினைச்சிடீங்கன்னா..!)
வெங்கட் நீ உண்மையாலுமே மாதவனை விட smartதான்...(இது என் தங்கச்சிக்காக)
இத படிச்சதும் எனக்கு ஒன்னு ஞாபகத்துக்கு வருது...
டேய்... போதும் நிறுத்து அப்படின்னு நீங்க சொல்லறது எனக்கு தெரியுது...
ஆனா நான் சொல்லிட்டுதான் நிப்பேன்...!
நாங்க College படிக்கும்போது எல்லொரயும் ரொம்ப கலாய்ப்போம்...
நம்ம நண்பர் ஒருத்தர் கமல் ரசிகர்.
கமல் செய்யற ஸ்டைல இவரும் செஞ்சி ரொம்ப தொந்தரவு குடுப்பார் ...
ஒரு நாள் அவர ஒட்டரதுன்னு முடிவு பண்ணோம்.
நான் : மச்சி நீ கமல் மாதிரியே இருக்கறடா...
அவன் : (ரொம்ப பெருமிதத்தொட) இத சொல்ல இத்தன நாள் ஆச்சி உனக்கு...
நான் : Sorry da மச்சி... உன்ணோட "Activities" கூட கமல் மாதிரியே இருக்குதுடா...
அவன் : (ரொம்ப சந்தொஷமா) அப்படியா சொல்லுறா...
நான் : அமாண்டா...அப்படியே "குணா" கமல் மாதிரி...
அவன் : (கொஞ்சம் யோசிச்சி) அடிக்க வர... நான் ஒட...
ஒரே JOLLY தான் போங்க...
அதுக்கப்புறம் அவரு கமல் பத்தி பேசவே மாட்டார் (நான் இருந்தா)
வெங்கட் இதுக்கு நம்ம அனாமிகாவும், ரசிகனும் என்ன சொல்லுவாங்கன்னு
நினக்கிறே...
Comment எழுதிய அனைவருக்கும்..,
இன்று எங்கள் ஊரில் Powercut.,
அதனால உங்கள் Comment என்
Mobile மூலமாக Publish
செய்யப்படும்.,
அதற்கு Reply மாலை 7 மணிக்கு
மேல்..
( இன்று ஒரு நாள் மட்டும்..
Kindly Adjust )
ஏனுங்க. உங்களுக்கே இது ஓவராக இல்லையா?
ரொம்ப நல்ல ரமேஷோட கடி சூப்பர். இது தேவையா?
அது சரி ஜனா உங்க உறவா? நீங்க இரண்டு பேரும் சேர்ந்தா மத்தவங்க அங்க இருப்பாங்களா ஓடிடுவாங்களான்னு யோசிச்சேன். அது தான் கேட்கிறேன். :))
சில சீன்ஸ் from "அலைபாயாதே!!!"
starring வெங்கட் & மாலினி...
வெங்: நம்ம already தாம்பரம் railway station-ல meet பண்ணிருக்கோமே.. நியாபகமிருக்கா??
மாலு: ம்ம்... அதுக்கப்புறம் தான் நான் தாம்பரம் போறதயே விட்டுட்டேன்
பஸ்ஸில்...
வெங்: உங்க பக்கத்து சீட் காலியாத் தானே இருக்கு...
மாலு: நீங்க உக்காந்தா இந்த சீட்டும் காலியாகிடும்..
வெங்: ஹே... உன் போன் நம்பர் கொடேன்..
மாலு: ம்.. அது Directory-ல இருக்கும்.. பாத்துக்கோ..
வெங்: ஆனா, உன் பேர் தெரியாதே எனக்கு..
மாலு: அதுவும் Directory-லயே இருக்கும்..
வெங்: ???
வெங்: உனக்காக இந்த உலகத்தின் மூலை வரைக்கும் கூட போக தயாராக இருக்கேன்...
மாலு: திரும்பி வந்துட மாட்டியே???
வெங்: சக்தி நான் உன்ன விரும்பலை.
நீ அழகா இருக்கேன்னு நினைக்கலை.ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கே.
யோசிச்சு சொல்லு
மாலு: பயப்படாதே... 'நான்' மனிதர்களை மட்டும் தான் consider பண்றது...
படம் எதிர்பார்த்த மாதிரியே flop...
மணிரத்னம் (மனதிற்குள்): Hollywood-ல hero-வா நடிக்க சான்ஸ் வந்திருக்குன்னு சொன்னானே....
வெங் (மனதிற்குள்): அப்பாடா....King Kong படத்தில தான் hero-னு சொல்லாம மறைச்சாச்சு...
கரண்ட் போயிட்டா சூரியனையே டார்ச் அடிச்சு தான் தேட வேண்டி இருக்குமோ? வெங்கட் ஆளையே காணோம்? இல்ல வேணும்னே ரிப்ளை அடிக்காம இருந்துட்டு ஏழு மணிக்கு மேல April Fool சொல்வாரோ என்னவோ?
அருமை அனாமிகா. நீங்க ஏன் ஒரு புளொக் தொடங்க கூடாது. இவ்ளோ சரக்கு வச்சிருக்கீங்க.
நானும் அதைத் தான் நினைச்சிட்டிருக்கேன் ஜெகன் சார்.
நீங்க வேற அனாமிகா,
இந்த மாதிரி தொடர்ச்சியா யோசிக்குற அளவுக்கு நமக்கு திறமையும் கிடையாது, பொறுமையும் கிடையாது. ஏதோ ஆணி அதிகம் இல்லாததால் timepass பண்ணிட்டு இருக்கேன்.
Comment எழுதிய அனைவருக்கும்..,
ஒரு சின்ன பையனை
இப்படியா போட்டு எடுக்கறது..?!!
மாதவன், ஷாலினி.,
மணிரத்னம்., வெங்கட்
இவங்கள வெச்சி
ஒரு Super கதை..,
சரி.., சரி..,
ஒரு சுமாரான கதை Try
பண்ணி இருக்கானேன்னு
மனசுல ஒரு ஓரமா நினைச்சி
பாத்தீங்களா...!!
வரதராஜுலு..,
நன்றி..
ரமேஷ்..,
நான் : மாதவனோட அப்பா யாரு..?
மணி : நம்ம ரமேஷ் தான்..
நான் : Make-Up Test எடுத்து பார்த்துட்டீங்களா..?
மணி : அதெல்லாம் தேவை இல்ல..,
Make-Up போடாமயே அவரு
மாதவனுக்கு அப்பா மாதிரி தான்
இருக்காரு..!
நான் : ரமேஷ் Feel பண்ண போறாரு..!!
மணி : நீங்க வேற.. மக்கள் Feel
பண்ணாம இருந்தா சரி..!!
பின் குறிப்பு :
உண்மையிலயே உங்க Comment
பார்த்திட்டு என்னால சிரிப்பை
அடக்க முடியல..
Keep it Up
ரசிகன்..,
ஒரு நிமிஷம்
ஆடிபோயிட்டேன்..
உங்க ரூட்டே தனி..,
இதை மறுபடியும் Prove
பண்ணிட்டீங்க..!
ஜனா..,
நல்ல வேளையா
அந்த கமல் ரசிகன்
நான் தான்கிற உண்மைய
மறைச்சிட்ட..
இல்லன்னா என் Image Damage
ஆகி இருக்கும்..!
Thanks..
( இப்ப மட்டும் Image
கொடிகட்டியா பறக்குதுன்னு..?
யாரும் குதர்க்கமா
Comment போடக் கூடாது..!! )
அனாமிகா துவாரகன்..,
என்னது இது ஓவரா..?
அப்புறம்
ஜேம்ஸ் கேமரூன்.,
" Titanic " படத்துல
Leonardo Dicaprio-வுக்கு
பதிலா என்னை Hero-வா
நடிக்க கூப்பிட்டாரே..!
அந்த உண்மைய சொன்னா..,
அப்ப என்ன சொல்லுவீங்க..!
அனாமிகா..,
எனனை வாரி இருந்தாலும்
மனசை விட்டு சொல்லுறேன்..
" Suuuuuuuuuuuuper... !!! "
என்னை போட்டு தள்ளனும்னா
மட்டும் எப்படியெல்லாம்
யோசிக்கறாங்கப்பா..!!
ஜெகன்..,
கொஞ்சம் விட்டா
" வெங்கட் Escape-ன்னு "
போலீஸ்ல Complaint
குடுத்திடுவீங்க போல..!
சாட்சிக்கு அனாமிகா துவாரகன்
வேற..,
ரமேஷ் கமெண்டு கலக்கல்.
@ அனாமிகா..
சூப்பர் :))))))))
சென்ஷி & துபாய் ராஜா..,
நம்ம Comment Section-ல
என்னாமா யோசிக்கறாங்க
பார்த்தீங்கல்ல..
பாசக்கார பயபுள்ளங்க..,
என்னை ஓட்டுறதுன்னா
மட்டும் எல்லாம் ஒன்னு
சேர்ந்துக்கும்..!
எல்லாம் சுட்டதுதாங்க... serious-a எடுத்துக்காதீங்க...
நீங்க நிஜமாவே மாதவனை விட நல்லாதான் இருக்கீங்க (April 1st இது ஒரு நன்மை.. உறுத்தல் இல்லாம பொய் சொல்லலாம்)
thanks venkat, அனாமிகா துவாரகன், துபாய் ராஜா
அனாமிகா & ரமேஷ்..,
நேத்து நான் Comment Check
பண்ண இரவு 8 மணிக்கு
மேல ஆயிடிச்சி..,
அதுக்குள்ள என்னோட
நாலு Friends ( Jana உட்பட )
எனக்கு போன் பண்ணி..,
ரமேஷூம்., அனாமிகாவும்
கலக்கியிருக்காங்கன்னு
சொன்னாங்க..
நன்றி வெங்கட், அது ஒண்ணுமில்ல, வெங்கட் கூட பழகுறதுனால இந்த மாதிரி தானா வருது...
ஜனா.. அதுக்கப்புறம் அந்த நண்பர் உங்களை பார்த்தாலே, ராஜ பார்வை, பேசும்பட கமல் மாதிரி நடந்துக்க வச்சிடீங்கன்னு சொல்லுங்க..
ரமேஷ், அனாமிகா... கலக்க்க்க்க்கல்ல்ல்...
பதிவரே.. உங்களுக்கு வர பின்னூட்டங்கள் வச்சே இன்னொரு blog போடலாம். கோகுலத்தில் சந்திரன்... (சூரியனோட வெளிச்சத்தை சந்திரன் பிரமாதமா பிரதிபலிக்கும்ல )
ரமேஷ்..,
நான் காணுறது என்ன கனவா..?
இதை தான்..,
" வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷின்னு "
சொல்லுவாங்க..
வசிஷ்டர் லேசுல யாரையும்
புகழமாட்டாராம்.
ரசிகன்.,
எனக்கும் அதுதான்
தோணுது..!
மாதவன் Range-க்கு
நான் பில்டப் குடுத்தா..,
இவங்க என்னை
கும்பலா சந்துல வெச்சி
கைபுள்ள Range-கில்ல
கும்மறாங்க..
நீங்க மாதவனை விட handsome தான் ....
குறிப்பு :
ஏப்ரல் ரெண்டாம் தேதியும் fool பண்ணலாம் தானே ..
மலேசியா..,
உலகம் முழுக்க நம்ம
புகழ் பரவிடிச்சா.?!!
" குறிப்பு " ( ரொம்ப முக்கியம்..!!! )
கால் வெக்கிற இடமெல்லாம்
கண்ணிவெடி வெக்கறாங்களே..!!
நீ பேசாம எம்சிஏயவ வுட்டுட்டு அலை பாயுதேக்குப் போயிருக்கலாம் - இங்க வந்து எழுதிக்கிட்டி இருக்க மாட்டேல்ல
Post a Comment